
1: திருமதி …… Corporation தூய்மை பணியாளர் (பணி அனுபவம் – 18 ஆண்டு)
கேள்: உங்கள் ஒரு நாளின் பணி எப்படி இருக்கும்?
பதில்: காலையிலேயே 5 மணிக்கு எழுந்து வந்துவிடவேண்டும். தெரு முழுவதும் குப்பைகளை சேகரிக்க வேண்டும். சில நேரங்களில் மழையில் கூட வேலை செய்ய வேண்டியிருக்கும்.
கேள்: இந்தப் பணியில் முக்கியமான சவால்கள் என்ன?
பதில்: பசிக்கு நடுவிலும் குப்பை அகற்றவேண்டும். சில நேரங்களில் மாஸ்க், கையுறை பற்றாகுறை இருக்கும். சில நேரம் பிளாஸ்டிக்குள்ள இறந்த விலங்குகளும் இருக்கும் – அதெல்லாம் எடுக்கும்போது வாந்தி வரும். ஒரு மாதிரி கொமட்டலா இருக்கும்.
கேள்: சமூகத்திடம் உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
பதில்: பெருசா ஒன்னும்மில்லை நாங்களும் மனுஷங்கதான. . ஒருமுறை எங்களை பார்த்து “நன்றி” சொன்னாலும் சந்தோஷமா இருக்கும்.
*********
2: திரு …..;. – தனியார் தூய்மைத் தொழிலாளி (பணி அனுபவம் – 7 ஆண்டு)
கேள்: இந்த வேலையை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?
பதில்: வேறு வேலை கிடைக்கல. குடும்பம் இருக்கிறது. அதோட தின சம்பளம் கிடைக்கும் என்பதால்தான் வந்தேன். அப்படியே 7 வருஷம் ஓடிடுச்சி
கேள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி?
பதில்: பெரும்பாலான நேரங்களில் கொடுப்பாங்க ஆன அது நாங்க செய்யுற வேலைக்கு பத்தாது. அதனால நாங்களே கடையில் வாங்கிக்குவோம். அவசரத்துக்குனு பாதுகாப்பு இல்லாம செஞ்சிட்டு . சில பெருக்கு தொற்று வியாதி வந்திருக்கு.
கேள்: உங்கள் குழந்தைகளுக்கான கனவு என்ன?
பதில்: நான் தான் இப்படி வந்துட்ட ஆன என் பிள்ளைகள் என் மாதிரி வேலை செய்யக்கூடாது. அவங்க நல்ல படிச்சு பெரிய ஆளா வரனும்
******
3.திருமதி – வயது 39, இரண்டாவது தலைமுறை தூய்மை பணியாளர்
கேள்: பெண்களுக்கு இந்த வேலை எவ்வளவு கடினமாக இருக்கிறது?
பதில்: என்னதான் பெண்கள் வேலை செய்தாலும் இதை ஒரு வேலையாவே மதிக்கமாட்டாங்க. எப்பவும் அழுகு / கலிச்ஜு பெண்களாகவே பார்ப்பாங்க. எங்க வீட்டுக்காரர் கூட ஒருபோதும் எங்களை மதிக்க மாட்டாங்க. எங்களுக்கு ஒரு வாடகை வீடு கிடைக்குறதே கஷ்டம். அதுல மூன்று குழந்தைகளைப் வழக்கனும். அதற்கெல்லாம் இந்தச் சம்பளம் பத்தல..
கேள்: இந்த வேலை தவிர வேறு வாய்ப்புகள் இருந்தால்…?
பதில்: நிச்சயமாகவே இதைவிட்டுவிடுவேன். ஆனா கொஞ்ச படிச்சி இருக்கனும் என்னாலதான் படிக்க முடியவில்லை. அதனால தான் குழந்தைகள் படிக்கணும் அப்படிங்குறதுக்காக இந்த வேலைய செய்யுற..
*****
4 திரு …… நகராட்சி தூய்மை பணியாளர்,
கேள்: உங்கள் ஒரு நாள் வேலை எப்போது தொடங்குகிறது?
பதில்: காலையிலே 4:30க்கு எழுந்துட்டு, 5:15க்கு ஸ்டாண்டுக்கு போயிடணும். அங்க வண்டி வரும். 6 மணிக்கு வேலை தொடங்கணும். தெருவுல குப்பை எடுத்துட்டு, தெருத்தெருவா போகணும்.
கேள்: நீங்கள் தினமும் எவ்வளவு நேரம் வேலை செய்கிறீர்கள்?
பதில்: ஒரு 7 மணி நேரமாவது வேலை செய்யணும். சனி, ஞாயிறு கூட லீவு இல்ல. வருஷத்துல 10 நாளாவது லீவு கிடைச்சா பெரிய விஷயம்.
கேள்: பாதுகாப்பு உபகரணங்கள் (safety gears) தரப்படுகிறதா?
பதில்: சில சமயம் மட்டும்தான் கையுறை (gloves), மாஸ்க் தருவாங்க. பெரும்பாலும் அதுவும் பத்தாது நாங்க வாங்கிக்கணும். என்னதான் மாஸ்க்கு கிலவுஸ் போட்டாலும் நாற்றம் இருக்கும். அதுலாம் ரொம்ப, கஸ்டம்தான் சொல்ல முடியாது.
கேள்: வேலை செய்யும் போது என்னவெல்லாம் சவால்கள் இருக்கின்றன?
பதில்: பாம்பு, எலி, கழிவுகள், சில நேரம் உடைந்த கண்ணாடி துண்டுகள் எல்லாம் குப்பையில இருக்கும். அதை எடுக்கும்போது கையை கிழுச்சிகிட்டு ரத்தம் வரும். சில நேரம் ஜனங்க குப்பையை நேர்ல வீசுறாங்க – நம்ம மேலே கூடபடும். ஏன் அப்படி பன்றீங்கனு கேக்க முடியாது.
கேள்: நீங்கள் எதிர்பார்ப்பது என்ன?
பதில்: ஒரு ஒரு தெருவுக்கு ஒரு நேரம் இருக்கு அந்த நேரத்துல அவங்களை குப்பைய கொண்டுவந்து வெளியே கொடுக்கலாம் ஆன அப்படி பன்னமாட்டாங்க. நாங்களே வந்து அம்மா குப்பை வண்டி வந்து இருக்குனு சொன்னாலும் ரொம்ப நேரம் கழிச்சி தான் கொண்டு வருவாங்க. நாங்களும் மனிதர்கள்தான். நாங்க செய்யுற வேலையால தான இந்த ஊரு சுத்தமா இருக்கு. ஒரு ‘நன்றி’ சொல்லுறாங்களா. என்னவோ பெரிய விசயம் மாதிரி இருக்குது. ஆனா ஒண்ணு இந்த ஊரு சுத்தமா இருக்க நான் தான் காரணம் அப்படினு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு அதுவே போதும்.
******
5: திருமதி – பெண்கள் தூய்மை பணியாளர்.
பணி அனுபவம்: 12 ஆண்டுகள்
குடும்பம்: கணவர் வேலை இல்லாமல் இருக்கிறார், மூன்று பிள்ளைகள்
கேள்: பெண்களுக்கு இந்த வேலை எப்படி இருக்கு?
பதில்: ரொம்ப கஷ்டம். காலை 5:30க்கு வீட்டில இருந்து கிளம்பணும். குழந்தைகளுக்கு நானே சமைச்சி அனுப்பனும். தெருவுல குப்பையை சேர்த்து அள்ளி தூக்கணும். நம்ம சொல்லமுடியாத அளவுக்கு உடம்பு எல்லாம் நோவும்.
கேள்: பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளதா?
பதில்: பெருசா இல்லங்க. கிலவுசு, மாஸ்க்கு அவ்வளவு தான் . எட்டாத இடத்தில் கழிவுப் பைகள் இருக்கும்போது அத தூக்க எந்த மிஷினும் கிடியாது அதனால நாங்களே தோள்ல தூக்கணும். அப்படி ஒரு முறை எட்டி தூக்கும் போது கழிவுநீர் ஓடையில சரிக்கி விழுந்த்துட்ட. எப்படி நிறைய நடக்கும். இப்படி தான் எங்க பாதுக்காப்பு இருக்கு……
கேள்: உங்கள் பிள்ளைகளுக்கான கனவு என்ன ?
பதில்: என் குடுப்பத்தில இந்த வேலை பாக்குற கடைசி ஆள் நானாதன் இருக்கனும். என் புள்ளை நிறைய படிக்கனுமுனு சொல்லும். அத நல்ல படிக்கவச்சி ஆளாக்கனும். அதுக்காக இந்த வேலைய இன்னும் பத்து இருபது வருஷம் கூட செய்வேன்.
கேள்: மக்களிடம் உங்களுடைய எதிர்பார்ப்பு என்ன?
பதில்: எங்களைப் பார்த்து முகம் சுழிக்காம இருந்தா போதும். நாங்க வேலைக்கு வராம இருந்தா, அவர்கள் வீடு வாசலும் எப்படி இருக்குமுனு ஒரு நிமிசம் யோசிச்சா போதும்.
*******
6: திரு …. (வயது: 29) – தனியார் கழிவுநீர் தொட்டிப் பணியாளர்
பணி அனுபவம்: 5 ஆண்டுகள்
குடும்பம்: ஒற்றை நிலை குடும்பம் – தாயாருடன்
கேள்: இந்த வேலையை எப்படி தொடங்கினீர்கள்?
பதில்: பத்தாம் வகுப்பு முடியல. வேலை தேடி வந்தேன். ஓர் நண்பன் சொன்னதால்தான் இந்த வேலைக்குள்ள வந்தேன். நாளை ஒன்றுக்கு 700 கொடுக்றாங்க.
கேள்: எதற்கெல்லாம் ஆபத்துகள் ஏற்படுகிறது?
பதில்: septic tankக்குள்ள இறங்கும்போது கொஞ்ச நேரத்துலய மூச்சு அடைச்சுரும். ஒருநாள் அப்படிதான் மூச்சி அடச்சி மூழ்கிட்டேன். அப்புறம் கயிறுகட்டி தூக்கி எடுத்தாங்க. அதுக்கு கூட ஒரு மிஷின் கிடையாது. என்ன ஆனாலும் . காப்பீடு கூட கிடையாது.கேள்: ஏன் இந்த வேலையிலேயே தொடர்கிறீர்கள்?
பதில்: வேற வழியே இல்ல. ஏன ஒரே நாளைக்கு ₹700 கிடைக்கிறது. அது குடும்பத்துக்கு முக்கியம். ஆனால் நாளை என்ன நடக்கும் என்று தெரிந்தே தான் இதை செய்யுறோம்.