நிலத்தை நேசிப்போம் குப்பையை கட்டுப்படுத்துவோம்

அழகு நிறைந்த இந்த உலகம் அழிந்து வருகிறது. இன்றைய நவீன உலகில் மனிதன் எவ்வளவோ முன்னேறி வருகிறான். ஆனால் அதனுடன் சேர்ந்து வளர்ந்து வருவது தான் இந்த குப்பை பிரச்சனை. உலகம் முழுவதும் சுற்றுப்புறச் சூழல் மனித நலனைப் பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக குப்பை  முக்கிய இடத்தை வகிக்கின்றது.                               

                  நாம் அன்றாட வாழ்வில் உற்பத்தி செய்யப்படும் குப்பைகள், அவற்றின் தவறான நிர்வாகம் இயற்கைக்கும், மக்களுக்கும், சுற்றுப்புற சூழளுக்கும் மிகப்பெரும் தீங்கு  விளைவிக்கின்றது என்றால் அது மிகையாகாது.

          குப்பைத்தொட்டியாய்  மாறிகொண்டிருக்கிறது  உலகம். சுமார் ஒரு நாளைக்கு 1.3தொடக்கம் 2.1 பில்லியன் மெட்ரிக்டன்  திடக்கழிவுகள் உருவாக்கின்றன. ஆனால், இதில் 11%மட்டுமே  மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறதது. சராசரியாக ஒரு மனிதன் 0.74kg குப்பையை உருவாக்கின்றார். இதில் பிளாஸ்டிக் போத்தல்கள், பாலித்தீன், அலுமினியம், கண்ணாடி, காகிதம், வீட்டுச்சமையலறைக் கழிவுகள்,துணிவகைகள் இப்படி கூறிக்கொண்டே போகலாம் இன்று நாம் பயன்படுத்திவிட்டு வீசும் பிளாஸ்டிக் நிலத்தோடு மங்குவதற்கு சுமார் 500 ஆண்டுகள் ஆகும், என ஆய்வாளர்கள்  கூறுகிருன்றனர் இவ்வாறே எல்லா கழிவுகளும் பாதிப்பை தான் தருகின்றது.

எத்தனையோ மெட்ரிக்டன் கடலிலும், நீர் நிலைகளிலும் சர்வசாதாரணமாகவே கொட்டப்படுகின்றது. மனிதன் எந்த  குற்ற உணர்ச்சியும் இன்றி கடந்து செல்கிறான். இதன்  பாதிப்பை சிறிதேனும் உணர்வானாகின் தன்  கையால் வீசப்படும் காகிதத்தை கண்டும் அச்சப்படுவான்.கழிவுகளை உணவாகவும் நினைத்து உண்கின்ற கடல் வாழ் உயிரினங்களின்  அழிவுகளை  பார்க்கும் போது மனிதன் எவ்வளவு கேவலமானவன்  என்று தோன்றத்தான் செய்கிறது. கடல் வாழ் அறிய வகை  உயிரினங்கள் அழிந்து வருகின்றது. கடலில் கொட்டப்படுகின்ற குப்பைகளுக்கு என்னதான் நடக்கிறது என்று சிந்திக்கின்றோமா? இல்லையே!

பசுமைக் கழிவுகளை சரியாக நிர்வாகிக்கபடாத போது வெளியேறும் தீவிர சூடான வாயு குளோபல் வாமிங் அதிகரிக்கிறது, கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை போடுவதனால் பாலித்தீன்களை விலங்குகள் உணவாக   உண்ணுகின்றன. கண்ணாடி பொருட்கள்  உடைந்து  யானை போன்ற மிருகங்களின்  உடற்பாகங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றன. இவ்வாறான நிலைமைகள் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக்காலமாக   நடந்து வருகின்றது.இந்தியாவில் 2030குள் உலகிலே அதிகளவிலான மின் கழிவுகள் (E waste) உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது கவலைக்குறிய விடயமே.

அடுத்தது நினைத்தாலே பயம் வருகின்றது. தவறான கழிவு மேலாண்மையினால் நீர் நிலைகளில் மட்டுமல்ல நிலத்தடி நீர் கூட மாசு  அடைக்கிறது.  இந்நிலை தொடர்ந்து போனால் சும்மாவே நீர்தட்டுப்பா டான இவ்வுலகம் நீர் என்று விஷத்தையே  குடிக்க நேரிடும் என்றால்  அது மிகையாகாது. குப்பைகளை எரிப்பதனால் வெளியேறும் புகை  மற்றும் இரசாயண வாயுக்கள் காற்றின் தூய்மையை அழிக்கின்றது, சுவாசம் சம்பந்தமான தீவிர நோய்களை உண்டாக்கின்றன

       இவ்வாறாக குப்பைகளில் சரியான நிர்வாகம் இல்லாமையால் எத்தனையோ பாதிப்புகள் கூறியதை விடவும் கூறாமல் விடுபட்டவை அதிகம் எனலாம்.குற்றம்  கூறுவது இலகு,  அதற்கான தீர்வை கூறுவது தான் கடினம் என்பர். ஆனால் நாம் சில தீர்வுளை  தரலாம்.நம் கைகளால் வீசப்படுகின்ற குப்பைகளின் பின் விளைவுகளை உணர்வதே  இதை தடுப்பதற்கான  முதற்படி எனலாம்.

பல நாடுகளில் இதற்கான  தீர்வுகளை மேற்கொள்வது மகிழ்ச்சியை தருகிறது. உதாரணமாக ஜெர்மன்   6 வகையான குப்பை பிரிவுகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என சட்டம் உள்ளது, ஸ்விடனில் குப்பைகளை எரித்து மின்சாரம் செய்கின்றார்கள் (waste to energy technology ) இலங்கையில் கிளீன் ஸ்ரீலங்கா என்ற பெயரில் நாட்டின் கடலோர பகுதிகள், பாடசாலைகள் போன்றவற்றை சுத்தம் செய்தல், ஜப்பான் mottainai கலாச்சாரம் எதையும் வீணாடிக்காதே என்ற கொள்கையின்அடிப்படையில் குப்பையை குறைக்கின்றது, சீனாவில்  பழைய பிளாஸ்டிக் போத்தல்களை கொண்டு கைவினை அலங்கார பொருட்களை உற்பத்தி செய்து குப்பையில் வர்த்த்கத்தை ஆரம்பிக்கின்றது, இன்னும் பல நாடுகளில் பல வேலைத்திட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது.

குப்பை குப்பையல்ல அது புதிய வாழ்க்கையின் தொடக்கம். குப்பை முகாமைத்துவத்தை பாடசாலைகளில் இருந்தே காண முயற்சிப்பது  சாலச்சிறந்தது.நிலத்தை நேசிப்போம்  குப்பைகளை கட்டுப்படுத்துவோம் என்னும்  பல வேலைத்திட்டங்களை  கொண்டு வருதல், பாடசாலைக்குள் பிளாஸ்டிக் பைகள், போத்தல்களுக்கு தடை விதித்தல், வாரம் அல்லது மாதம் ஒரு முறை வீடு, சுற்றுப்புற சூழலை  சுத்தம்  செய்து அது சார்ந்த படங்களை மாணவர்கள் சுய ஒழுக்க பதிவேட்டில் பதிவிடல், வாரம் ஒருமுறையேனும்  குப்பை மேலாண்மை பற்றி சொல்லிக்கொடுத்தல், குப்பை என்பதும் அதை  சுத்தம் செய்வதும் என்பது ஒரு சாரார்  சார்ந்தது அல்ல, அது எமது உயிரியல் கடமை என்பதை  மாணவர்களிடயே உணர வைத்தல், பிறந்ததிலிருந்து பொருத்தப்படும் தொப்புள் கிளிப்பில் தொடங்கி முதியவராய் இறக்கும் போது  போடும் மாலை வரைக்கும் நம் அன்றாட வாழ்வில் குப்பை நம்மோடு பயணிக்கின்றது எனவே குப்பைகளை பிரித்தறிதல் என்பது 3 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை அறிந்திருக்க வேண்டிய ஒன்றாகும். 

பிளாஸ்டிக் போத்தல்களில்  செடிகளை வளர்த்தல், சமையலறை கழிவுகளைக்  கொண்டு உரம், உயிரியல் வாயு போன்றவற்றை தயாரித்தல். 

மாற்றீடுகளை கொண்டு வருதல் உதாரணமாக பிளாஸ்டிக் பைகளுக்கு  பதிலாக துணிப்பைகளைக் கொண்டு வருதல். இதன் போது பிளாஸ்டிக் பயன்பாடும் குறைகிறது, பழைய துணிவகைகள் குப்பையாய் போவதும் தடுக்கப்படுகிறது. மாத்தியோசி என்ற கொள்கையின் கீழ் நாம் வீசும் பொருட்களையெல்லாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இன்றைய தொழிநுட்பத்தை பயன்படுத்தி அறிந்துக் கொண்டு செயற்படலாம், ஏன் பல தொழில் வல்லுனர்களையே உருவாக்கும் மீள்சுழற்சி என்பதில் ஐயமில்லை.

யூஸ் &த்ரோவ் என்று நாம் பெருமையாக கருதும் கலாச்சாரத்தை விட்டொழிக்க வேண்டும். நம் கைகளே நம் கண்ணை குத்துவது போல, நம் கைகளால் வீசப்படும் பிளாஸ்டிக், இன்னும் அபாயமான பொருட்கள் உணவுச்சங்கிலி மூலம் நம்மை அறியாமலே உட்கொள்வதுதான் கொடுமையின் உச்சம் ஆகும்.

குப்பைகளும், அதன் பின் விளைவுகளையும்  நம் எல்லோரும் அறிந்த விடயமே. தெரிந்தும் நாம் குப்பை முகாமைத்துவம்  செய்யாமல் இருப்பதுதான் மடமையிலும் மடமை. ஏன் இக்கட்டுரையை படிக்கும் போது கூட ஏதோ ஒரு குப்பையை  எங்கோ வீசிக்கொண்டு தான் இருப்போம்.

எண்ணித்துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு  என்ற குரலுக்கு ஒப்ப குப்பை முகாமைத்துவம் செய்வோம். எம் எதிர்கால சந்ததியினருக்கு குப்பைத்திடல் மலைகளை காட்டாமல் பசுமையான மரங்களையும், மலைத்தொடர்களையும்  காட்டமுயற்சிப்போம்.

பசுமைப் பாதுகாப்பு ஒவ்வொரு மனிதனுடைய மூச்சையும் பாதுகாக்கிறது. குப்பை என்பது வெறும் கழிவல்ல, அது  ஒரு வாய்ப்பு அதை சரியாக கையாளும்  திறமை நமக்குள் இருக்கின்றது. இச்சிறப்பிதழ் ஒரு  விழிப்புணர்வை  உருவாக்கும் வித்தாக அமையட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version