2002 ஆம் ஆண்டு முதல் குழந்தை நலனுக்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட வேர்கள் அறக்கட்டளை. குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களைப் பொதுக் கல்வித் திட்டத்தில் சேர்ப்பதற்கும் நாங்கள் எங்கள் வேலையைத் தொடங்கினோம். குழந்தைத் தொழிலாளர்களுக்காக இரவு நேரப் பள்ளிகளைத் தொடங்கி, குழந்தைகளைத் திரட்டி, அவர்களை வழக்கமான பள்ளியில் சேர்க்க திருவிழாக்கள் நடத்தினோம். ஆரம்பத்தில் 12 குழந்தைத் தொழிலாளர்களை கொத்தடிமைகளாக இருந்து விடுவித்து, அவர்களின் பள்ளிப் படிப்பை முடிக்க உதவியது. இதுவரை 60 குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டு, அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்து நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளில் பணிபுரிந்து, ஆண்டுதோறும் 700-1700 கிராமப்புற மாணவர்கள் கல்விக்காக உதவுகிறார்கள்.
எங்கள் பணி, முக்கியமாக கிராமப்புற குழந்தைகளிடையே மன ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் இடைநிற்றலைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. ஆரோக்கியமான சமுதாயத்திற்கு, தடைகளைத் தாண்டி சமநிலையான வாழ்க்கையை நடத்தக்கூடிய மனநலம் நிறைந்த குழந்தைகள் தேவை. மதிப்பெண்களால் மதிப்பிடப்படாமல், அறிவால் மதிப்பிடப்படும் கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வெர்கல் செயல்படுகிறது. இலவச கல்வி உதவி மையங்கள், கல்வி உதவிகள் விநியோகம், இளம் பருவத்தினருக்கான வாழ்க்கை திறன் முகாம்கள் நடத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆலோசனை மையத்தை நடத்துதல் போன்றவற்றின் மூலம் நாங்கள் குழந்தைகளிடையே பணியாற்றுகிறோம். எங்களின் மிகப்பெரிய செல்வம் நல்ல நினைவுகள், குழந்தைப் பருவத்தை நினைவுகளால் நிரப்புவதற்காக நாங்கள் சுற்றுப்பயணங்களை ஏற்பாடு செய்கிறோம், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த நிகழ்ச்சிகளை நடத்துகிறோம், ஒவ்வொரு நாளும் அவர்களுடன் பேசுகிறோம், எங்கள் கல்வி ஆதரவு மையங்கள் வழியாக அறிவியலைத் தேடுகிறோம். மாற்றுத் திரைப்படங்கள் திரையிடப்பட்டு விவாதிக்கப்படும் 3 நாட்கள் குடியிருப்பு முகாமை நாங்கள் ஏற்பாடு செய்கிறோம். அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அதிகரிக்க புத்தக வாசிப்பு நடத்தப்பட்டது. விவசாயம் மற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை அறிய கதை சொல்லுதல், ஓவியம் வரைதல், விளையாட்டுப் பட்டறைகள், கிராமப் பயணம். மரம் வளர்ப்பதிலும், தாவரங்களின் மருத்துவ குணம் மற்றும் இயற்கை உணவின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதிலும் அவர்களை ஈடுபடுத்துகிறோம்.
மாணவர்களின் வருகை;
மாணவர்கள் பாதியிலேயே நின்றாலும் படிக்க ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் வேர்கள் கல்வி அறக்கட்டளையில் சேர்ந்தனர். 40 மாணவ, மாணவிகளிலிருந்து 60 ஆக உயர்ந்து கொண்டே இருந்தது குழந்தை தொழிலாளியாக இருந்தவர்களை மீட்டு பள்ளிக்கு செல்ல வைத்தனர். தாட்டி தோப்பு, ஆலடிதோப்பு, மடம் தெரு, பிள்ளையார் பாளையம், நாரயண பாளையம் என இந்த பகுதியில் மட்டும் 60 மாணவ மாணவிகளை குழந்தை தொழிலிலிருந்து மீட்டு அக்குழந்தைகளின் மீது வாங்கிய கடனை அடைத்து குழந்தைகளை பள்ளிக்கு சென்று படிக்க வழிவகுத்தனர். 60 மாணவ மாணவிகளுக்கு அவர்களின் இல்லத்திற்கு அருகாமையில் கல்வி உறுதுணை மையங்கள் நடத்தினர். மொத்தமாக 6 மையங்களை நடத்தி வந்தனர். இவ்வகையான மையங்களில் மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் தன்னார்வலர்களுக்கு ஊக்க தொகையாக மாதந்தோறும் ரூபாய் 500 வழங்கப்பட்டது. மாணவ மாணவிகள் அவர்களுக்குள்ளே மாற்றி மாற்றி கற்பிக்க ஆரம்பித்தனர். பன்னிரெண்டாம் பயிலும் மாணவிகள் தனக்கு கீழ் வகுப்பில் பயிலும் மாணவ மாணவிகள் கல்வி கற்பித்தனர்.
கல்வி சுற்றுலா:
வெறும் படிக்கும் இடமாக இல்லாமல் கல்வி உறுதுணை மையம் மாணவர்களின் கருத்துரிமை இடமாக மாறத்தொடங்கியது வீட்டை மறந்து படிப்பது மட்டுமே நோக்கமாக மாணவ மாணவிகளுக்கு மனதில் ஏற்பட்டது. இப்படி மகிழ்ச்சியாக நடைப்பெற்று வந்த கல்வி உறுதுணை மையங்களில் மாணவ மாணவிகள் இடையே புத்தகங்களில் வரும் இடங்களை நேரில் பார்ப்பது என்ற புதிய யோசனை தோன்றியது. இதனை கவனித்து கொண்டிருந்த வேர்கள் கல்வி அறக்கட்டளை ஆண்டுக்கு ஒரு முறை மாணவ மாணவிகளை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து சென்றது. (பாண்டிச்சேரி, சென்னை, செஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, ஏலகிரி மற்றும் பல நூலகங்கள், அருங்காட்சியங்கள், பறவைகள் சரணாலயம். விலங்கு சரணாலயங்கள்,) இச்சுற்றுலாவில் மாணவ மாணவிகள் அனைவரும் தனது வீட்டிலிருக்கும் பிரச்சனைகளை மறந்து தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசி மகிழ்ந்தனர். சுற்றுலா முடிந்து வினாவிடை நடக்கும் அது அவர்கள் கவனிக்கும் திறன் கற்றல் திறன் ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக அமைந்தது.
உண்டு உறைவிடம் முகாம்;
சுற்றுலா மற்றுமின்றி மாணவ மாணவிகளுடன் உரையாடல் சூழல் ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுக்கு ஒரு முறை மூன்று நாட்களுக்கு உண்டு உறைவிடம் முகாம் நடத்தியது இந்த முகாமில் மாணவ மாணவிகளுக்கு வாழ்க்கை திறன் தன்னம்பிக்கை, சுய சார்பு, சிரமங்களை தீர்வுகாணும் விதம், சுயமாக முடிவெடுத்தல் வளர்இளம் பருவத்தினர்க்கான ஆலோசனைகள் ஆங்கில மொழி, தொடர்புதிறன் விளையாட்டுகள்மாற்றுச் சிந்தனை குறும்படங்களை அறிமுக படுத்துதல் பொது நூல்களை வாசித்தல், வாசித்த நூல்களை மாணவ மாணவிகளுக்கு இடையே விவாதித்தல் விமர்சிக்கும் திறன், வாழ்க்கையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது போன்ற பலவகையான செயல்பாடுகளை செய்தனர் தன் வீட்டையும் பள்ளியையும் மறக்க வைத்து புதிய செயல்களை மாணவ, மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தனர். தன் திறன் வெளிபடுத்தும் வாய்ப்புகளை வழங்கினர். பல் வேறு எழுத்தாளர்கள் அறிஞர்கள் அறிவியல் நிபுணர்கள் உளவியல் நிபுணர்கள் ஆகியோரை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். இன்றும் பல்வேறு மாணவர்கள் தன் முகாம் நாட்களை மகிழ்ச்சியுடன் பகிர்ந்துக் கொள்கின்றனர்.
மாணவர்களின் கல்வி பற்றிய புரிதல்;
2005ம் ஆண்டில் இருங்காட்டுக் கோட்டை அருகே நிறைய தொழிற்சாலைகள் உருவாகின. அந்த தொழிற்சாலையில் பணிபுரிவதற்காக எட்டாம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கினர். அப்பொழுது தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6000 வழங்கப்பட்டது, அதனால் படிக்க வேண்டும் என்ற எண்ணமும் மாணவரிடம் அதிகரித்தது. இதற்கு முன்னர் ஒரு குடும்பத்தின் மாதவருமானமாக ரூ.1000 முதல் ரூ.2000 வரை மட்டுமே இருந்தது. ஆனால் தொழிற்சாலையில் மூன்று மடங்கு ஊதியம். அப்பொழுதுதான் சில மாணவர்களுக்கு கல்வியின் மதிப்பை அறிந்து படிக்க ஆரம்பித்தனர். நிறைய மாணவர்கள் படிக்க வேண்டும் என்ற ஆர்வமுடன் வந்தவர்களுக்கு வேர்கள் கல்வி அறக்கட்டளை உதவியது.
2006 ஆம் ஆண்டுக்கு பிறகு படிக்க செல்லும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வந்தது. பின்பு 2010ஆம் ஆண்டில் வேர்கள் கல்வி அறக்கட்டளை பள்ளிக்கு பாதியில் நின்று விடுபவர்களை கவனிக்க ஆரம்பித்தனர். விவரங்களை அறிந்துக் கொண்டு அவர்கள் வீடுகளுக்கு சென்று ஆலோசனை வழங்கி மீண்டும் பள்ளிக்கு சென்று படிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
வேர்களின் ஆலோசனை மற்றும் நோக்கம்;
எப்பொழுதும் வேர்களின் ஒரு முக்கிய நோக்கமாக இருப்பது மாணவ மாணவிகளின் மதிப்பெண்களை பார்க்காமல் அவர்களின் படிக்கும் ஆர்வத்தை மட்டுமே பார்க்கின்றனர். ஏனென்றால் ஒரு சில இடங்களில் மதிப்பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் சிலர் படிப்பதனை நிறுத்து விட்டு வேலைக்கு செல்கின்றனர்கள் இதனால் மாணவ மாணவிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
வேர்களின் பொது செயல்கள்;
- 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேர்கள் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் வழங்கி துணை நின்றனர்
- 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 6ல் ஏற்பட்ட வர்தா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வகையான நிவாரண பொருட்கள் வழங்கினர்.
- 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட கொரனோ தொற்று காலங்களிலும் பல குடும்பங்களுக்கு மளிகை பொருட்களை வழங்கினர். தமிழக அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேர்கள் தன்னார்வலர்கள் இணைந்து பணியாற்றினர். ஆசிரியர்களாகவும், பயிற்றுநர்களாகவும்
வேர்களில் தொடக்கம் முதல் இன்று வரை செய்து கொண்டிருப்பவை;
ஆண்டு தோறும் கல்லூரிக் கட்டணம், பள்ளிக் கட்டணம், புத்தகம், நோட், புத்தகப்பை, சீருடை என மாணவர்கள் பெறுவதற்கான படிவம் மே முதல் வாரத்தில் வழங்கப்பட்டு அந்த படிவத்தில் அளிக்கும் மாணவ மாணவிகளின் விவரங்களை வேர்களின் தன்னார்வலர்கள் ஒவ்வொரு மாணவ மாணவிகளின் இல்லத்திற்கு சென்று படிவங்களில் அளிக்கப்பட்டிருக்கும் விவரங்களை சரிபார்த்த பின்னர் ஜூன் முதல் வாரத்தில் மாணவ மாணவிகளின் கல்விக்கான தேவைகளை பூர்த்திச் செய்கின்றனர். இதுமட்டுமின்றி அனைத்து பண்டிகைகளிலும் LOITARITICU மாணவிகளுக்கு புத்தாடைகளையும் வழங்கி வருகின்றனர். பண்டிகை நேரங்களில் பழங்குடியினர்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்று அவர்களுக்கும் இனிப்பு மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டு பண்டிகையை கொண்டாடுகின்றனர். வேர்கள் கல்வி அறக்கட்டளையின் பெயரினை இந்திய சட்டத்தின் படி 2007 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.
வேர்களில் தற்போதைய செயல்கள்;
வேர்களின் தொடக்கத்தில் மாணவ மாணவிகள் அனைவரும் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டு தற்போது மாணவ மாணவிகள் கல்வியும் தாண்டி மாணவ மாணவிகள் விரும்பும் செயல்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. இதில் சிவா என்ற மாணவனுக்கு குறும்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் கண்ணன் என்ற மாணவனுக்கு திரைப்படத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்கி உள்ளது. இது மட்டும் இன்றி திரைத்துறையில் உள்ளவர்களிடம் உரையாடுவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது இதில் குறிப்பாக பூபடத்தில் நடித்த பூ இராமு என்ற கலைஞரிடமும் மற்றும் பல்வேறு எழுத்தாளர்களிடமும் உரையாடுவதற்கான சூழ்நிலையும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.
2012 ஆம் ஆண்டில் ஜனவரி 26 அன்று வேர்கள் அலுவலகத்தில் நூலகம் பேசுது என்ற பெயரில் நூலகம் துவங்கப்பட்டது மாணவர்கள் தன்னார்வலர்கள் பாடப் புத்தகத்தை தவிர்த்து பொது அறிவுகளை வளர்த்துக் கொள்வதற்காகவே வேர்கள் அறக்கட்டளையில் இந்நூலகம் வைக்கப்பட்டுள்ளது. இதில் 1000 புத்தகங்களுடன் துவக்கப்பட்டு இன்று 2500ம் மேற்பட்ட புத்தகங்களும் உள்ளன வேர்கள் மையத்தில் பயின்று வரும் மாணவர்கள் வாரந்தோறும் ஏதேனும் ஒரு பொது அறிவு புத்தகத்தையோ அல்லது கதை புத்தகத்தையும் படித்து அவர்கள் உணர்ந்த உணர்வுகளை வெளிப்படுத்துகின்றனர். ஒவ்வொரு வருடமும் 400 முதல் 500 வரை மாணவி மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள், கல்வி உதவித் தொகை வழங்குவதோடு கல்வி உறுதுணை மையமும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது. வருடந்தோறும் கல்வி சுற்றுலா, வாசிப்பு முகாம் நடத்துவதன் மூலம் மாணவர்களுடன் தொடர்ந்து உரையாடல் மற்றும் அவர்களுக்கான உளநல ஆலோசனை நடந்து வருகிறது. மாணவர்கள் எந்த வேறுபாடுயின்றி ஒருவருக்கு ஒருவர் மதிக்கவும் சமூக நலன் குறித்து சிந்திக்கவும் தன் திறமைகளை மேம்படுத்தி கொள்ளவும் பல்வேறு நிகழ்வுகளும்வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றது. தங்களுக்குள் சகோதரத்துவதை வளர்த்துக் கொண்டு அனைவரும் இணைந்து பொது நல நோக்கோடும் அறிவியல் மனப்பான்மை உடனும் வேர்கள் கல்வி அறக்கட்டளையை ஒரு இயக்கமாக தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.
பதிவுக்கு நன்றி
Supper Supper Madam