ஒசூர் அன்புக்கரங்கள்

பல்வேறு தனியார் நிறுவன தொழிலாளர்களின்  சிறிய குழுமுயற்சியில் 1995ஆம் ஆண்டு  ஜூன் மாதத்தில் அன்புக்கரங்கள் அமைப்பு தொடங்கப்பட்டது. ஆதரவற்ற இல்லங்களுக்கு உதவுவது  உயர்கல்வி படிக்க வசதியில்லாதவர்களுக்கு உதவுவது,  சுயதொழில் முனைப்பை ஊக்கப்படுத்துவது அவர்களுக்குத்  தேவையானவற்றை  ஏற்படுத்தித் தருவது என சின்னச்  சின்னதாக துவங்கி 1999 ஆம் ஆண்டு “ஒசூர் அன்புக்கரங்கள்”  அறக்கட்டளை என்ற பெயரில்  முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறோம்.

அரசு பள்ளி மாணவர்கள் கல்வி தொடர தேவையானவை வழங்கிக்கொண்டிருக்கிறோம்  இன்றுவரையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட  பள்ளிகளுக்கு இலவச  நோட்டுப் புத்தகங்கள், சீரூடைகள் வழங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல் உயர்கல்விக்காக  பயில போதிய வசதி இல்லாத   250 மாணவர்களுக்கு  கல்வி நிதி பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது.  அவற்றில் 5 பெண்பிள்ளைகளின் பட்டப்படிப்பை முழுமையாக முடிப்பதற்கான செலவை அறக்கட்டளையின் சார்பில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இன்றுவரையில் இதன்மூலமாக ஊக்கம்பெற்று  5 பெண்களும் உயர் பதவிகளில் செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள் அவர்களில் செல்வி.உதயகீர்த்திகா  தேனியை சேர்ந்தவர் விண்வெளி ஆராய்ச்சி மாணவியாக வெளிநாடு சென்று கல்வி பயின்று வருகிறார் என்பது குறிப்பிடத் தகுந்தது. இரண்டு ஆதரவற்ற பெண்குழந்தைகளை வளர்த்து திருமணம் செய்துவைக்கப்பட்டு இரண்டு குழந்தைகளுடன் குடும்பமாகி வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

\C:\Users\RAM\Desktop\anpu karangal\17218592_264460837339519_830414308116104642_o.jpg

எந்த பிடிமானமும் அற்ற மனநிலையை உடைத்து குடும்பப்  பற்றுடன் வாழ்வை அணுகும் தன்மையைக்  கட்டமைத்துள்ளோம் என்பதில் மகிழ்கிறோம் எங்களின் பணிக்குக்  கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். கல்வி பொருளாதர சுயமுன்னேற்றத்திற்கு இணையாக இரத்த தானத்தையும் பார்க்கிறோம் அந்த வகையில்        ” உதிரம்” என்ற பெயரில் தன்னார்வ இரத்தக்கொடை அமைப்பு  2004  ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு….

ஒசூரின் அரசு மருத்துவனையில்  பிரசவத்திற்கு வருகைதருகின்ற கிராமத்து கர்ப்பிணிப் பெண்களின் இரத்த சோகை நீக்க இதுவரை இரத்தம் வழங்கப்பட்டுவருகிறது… இளைஞர்களிடம் இரத்தம் வழங்கும் விழிப்புணர்வு நிகழ்வாக  19 ஆண்டுகளாக மேதின இரத்தக் கொடைமுகாம் 4 மாவட்ட இரத்த வங்கிகள் பங்களிப்பில் நடைபெற்றுவருகிறது… ஒவ்வொரு ஆண்டும் ஓசூரின் வளர்ச்சிக்கு உழைக்கும் நகர சுகாதார பணியாளர்கள்.. போக்குவரத்து தன்னார்வலர்கள்…

நீர்நிலைகள் சுத்தம் செய்பவர்கள் கலை இலக்கிய விழா குழுவினர் புத்தக திருவிழா குழுவினர் ஓசூரின் எரிவாயுதகன பணியாளர்கள்..என அனைத்து சமூக தரப்பு மக்களையும் அழைத்து மரியாதை செலுத்துகிறோம்.இதுவரை 12000 இரத்தக் கொடையாளர்கள் அறக்கட்டளை வழியாக இரத்தக்கொடை வழங்கி இருக்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக இரத்தம் வழங்கும் இரத்தக் கொடையாளர்களுக்கு மரக்கன்றுகள் புத்தகங்கள் வழங்கிவருகிறோம். ஓசூரில் பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெறுகின்ற இரத்தக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற உதிரம் தன்னார்வலர்கள் தன்னார்வபணிகளை செய்துவருகிறோம்.

விழி என்னும் கண்கொடை அமைப்பின் வழியாக இதுவரை 25 பேரின் கண்கள் இயற்கை எய்திய மனிதர்களிடம் இருந்து கொடையாக பெறப்பட்டு. 100 விழியற்றமனிதர்களுக்கு பார்வை பெறப்பட்டுள்ளது. 

குட்டியானைகள் அமைப்பு வழியாக  2012 ஆம் ஆண்டு முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி அடிப்படை  பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.. 

குட்டியானைகள்  மழலைகளின்  மாண்டிசோரிவீடு  2017ல் தொடங்கப்பட்டு… இலவசமாக ஓசூரின் நிச்சயமற்ற தினசரி உழைப்பு தொழிலாளர்களின்  குழந்தைகளுக்கு.. தமிழ் வழி மாண்டிசோரி* பள்ளி நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது…பெண்களுக்காக. கட்டணம் இல்லா தையல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது… ஒசூரை சுற்றி இதுவரை 16000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது… ஆயிரம் மரங்களின் வளர்ச்சியை நேரடியாக கண்டுள்ளோம்.. தஞ்சை புயலால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறிய கிராமமக்களுக்கு நிவாரண பொருட்கள் மற்றும் 200 விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் கோவிட் பெருந்தொற்றுகாலத்தில் 1000 ற்கும மேற்பட்ட வடஇந்திய தொழிலாளர்கள்… நாடோடி மக்கள்.. பழங்குடி மக்களுக்கான உணவுப்பொருட்கள்  வழங்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு 2021ஆம் ஆண்டின் இரண்டாம் ஆம் அலை பெருந்தொற்றுகாலத்தில் 250 நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதிபங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள்… பொதுமக்கள் மற்றும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் வழியாகவும் நிதி சேமிக்கிறோம்…

சகமனிதனின் வலியை சுமக்கிறபோது. .நீயும் தாயாகிறாய்..என்கிற அறிஞனின் சொல்லை எளிதாக கடக்க முடியாமல் பயணிக்கிறோம்…

கல்வியும் மருத்துவமும் மனிதனின் அடிப்படை உரிமை

…இவை வியாபாரபொருள் அல்ல… என்கிற உணர்வு செயல்படகாரணமாக இருக்கிறது.

சகமனிதன் மீதான வேறுபாடுகளற்ற பேரன்பே எல்லா அறங்களிலும் தலைசிறந்தது…. என்கிற… தத்துவ பார்வை எங்களை இயக்கிக் கொண்டிருக்கிறது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version