பெண் – பெண்ணின் உடல் அரசியல்

யாவரும் உடலால் ஆனவர்கள். மனதால் ஆனவர்கள். உடலுக்காக மனம், மனதிற்காக உடலும் என்னவெல்லாம் செய்யக்கூடும்? காதல் என்றும், காமம் என்றும் பின்னப்பெற்ற உடலும் மனமும் எப்படியெல்லாம் அன்பும் ஆசையும் வன்மமும் அதிகாரமும் படைத்துக் கொள்கிறது?! அனைத்தும் பெண்ணின் உடலினை மையப்படுத்தி!

 பார்க்கப்போனால் பெண்ணின் உடல் பெண்ணுக்கானது அன்று, இப்பொது சமுதாயத்திற்கானது. ” எப்படி உட்காரா பாரு, லிப்ஸ்டிக் பாத்தியா, அவ ஓனியே போடாம வரா பாறேன், பிரா வெளிய தெரியுதுன்னு” சொல்ற நாம, ஆம்பளைக்கு ஜட்டி தெரிஞ்சாலும் பரவால்ல, குடிச்சிட்டு கூப்புற விழுந்து, அலங்கோலமா இருந்தாலும் பரவால்ல. ஆனா பொண்ணுங்க அலங்காரத்தோடு இருந்தாலும் தப்பு,அலங்கோலமா இருந்தாலும் தப்பு.” அப்படியாக இவை அனைத்தையும் எழுதாமலே இமயம் தனது எழுத்துக்களில் சொல்லியிருக்கிறார்.

 கணவனை இழந்த கமலா இரண்டு பெண் குழந்தைகளுடன் இச்சமுதாயத்தில் எப்படி வாழ நேரிடுகிறது. அவள் மேல் காதல் கொண்ட பட்டதாரி இளைஞனின் வாழ்க்கை என்னவாயிருக்கிறது. காதல் காதலாக மட்டுமே இருந்து விடுவதில்லை, காமமும் காமமாக மட்டுமே இருந்து விடுவதில்லை. காதல் தரும் அவஸ்தைகளும் காதல் தரும் சௌகரியமும் யாரினால் தரவியலும்? சௌகரியம் உடலுக்கு மட்டுமே, அவஸ்தை மனதிற்கு மட்டுமே என்றும் எப்படி நிர்ணயிப்பது? என தனது வாழ்வினை சட்டைப் பையில் வைத்துக் கொண்டு கமலாவிடம் தொலைத்து தேடுபவனாய் எல்லோராலும் பார்க்கப்பட்டாலும், சட்டையை கமலாவிடம் உள்ளதாய் இருக்கும் இளைஞன் தனது வாழ்வினை கமலாவிடம் ஒப்படைத்த பின், அகலாய் இயற்றிய தீ காடுகளையும் கொளுத்தும் என்பது அறியாது எரியும் பொருட்டு அவ்விளைஞன் வைத்திருந்த தீ என்னவாயிற்று?

பெண்களுக்கான சமூகம் என்ன? கமலாவின் பெண் குழந்தைகளின் மனவோட்டம் என்ன? இதில் அவளுக்கான வாழ்வு என்ன ?அவளுடைய மனது என்ன? சமூகம் இதை கேட்பதும் இல்லை. இதில் இமயமும் சொல்லவில்லை. மனதை அலைக்கழிய வைத்துள்ளார். நாமாய் சிந்திப்போமா? துவங்கினால் எனக்கு கொஞ்சம் வெட்கமாகத்தான் இருக்கிறது. 
நீங்கள் வாசித்து சிந்தியுங்கள்!

வாசியுங்கள், இப்படியாக உங்கள் கதெ என்னவாகும்,எப்படி இருக்க வேண்டும், என்று இமைத்துடன் பேசுங்கள்!

புத்தகம் – எங் கதெ
எழுத்தாளர் – இமயம்
வகைமை – புதினம்
பக்கங்கள் – 111
பதிப்பகம் – கிரியா
ஆண்டு – 2015
விலை – 135 ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version