உயிரோடு இருக்கும் போது நான் அதை தொடுகிறேன்
நான் இறந்தால் அவை என்னைத் தொட்டுக்கொள்ளும்
மண்புழு ..!
–சுல்தான் அகமது இஸ்மாயில்
குறிப்பு: சுல்தான் அகமது இஸ்மாயில், மண்ணியல் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர். பல்வேறு பகுதிகளில் கிடைக்கும் மண்புழுக்களைப் பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில் நுட்பங்களை மையமாகக் கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக்குவதிலும் இவரின் பங்களிப்பு அளப்பரியது.
விலங்கியல் துறையில் தாம் மேற்கொண்ட மண்ணின் சூழலியல் மற்றும் கழிவு மேலாண்மையில் மண்புழுக்களின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்கு 2001 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் அறிவியலுக்கான Doctor of Science பட்டத்தைப் பெற்றார். இவர் சென்னையில் இயங்கும் சுற்றுச்சூழலியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
குழந்தைகளுக்கான ஒரு நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைக்காக இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன் இணைந்து, மண்புழு உரம் தயாரித்தலுக்கான கட்டகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். மேலும் இவர் தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைக்காக சென்னையிலுள்ள 50 பள்ளிகளில் மண்புழு உரம் தயாரித்தல் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். இது மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 200க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் சார்ந்த பல விரிவுரைகளை வழங்கியுள்ளார். தற்போது இவர் பினாங்கின் நுகர்வோர் சங்கத்துடன் (CAP) இணைந்து மலேஷியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் கரிம வேளாண்மை செய்யும் விவசாயிகள் இடையே கரிம வேளாண்மை , உயிர் தொழில் நுட்பவியல் மற்றும் கழிவு மேலாண்மை போன்றவை குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
மண்புழுவின் எதிர்ப்பு அழற்சி பண்புகள், பீனியல் சீட்டேவின் கட்டமைப்பு மற்றும் மின் உயிர் ஒளிர்வுத் தன்மை ஆகியவைகளிலும் இவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார். தமிழ் நாட்டு அரசின் மாநில திட்டக்குழு உறுப்பினர்
1.பள்ளிப்படிப்பை முடித்த பிறகு கல்லூரியில் இருந்தே இந்த துறை தான் தேர்வு செய்யணும் என்ற தீர்மானம் எப்பொழுது உங்களுக்கு ஏற்பட்டது? அல்லது சிறு வயதிலிருந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கவேண்டும் என்ற ஒரு கனவு உங்களுக்குள் இருந்ததா?
2. கல்விப்புலத்திலும் ஆய்வுத்தளத்திலும் இயங்கும் பேராசிரியர்கள் அதற்குள்ளாகவே இயங்கும் போது உங்களால் மட்டும் எப்படி அதைத்தாண்டி மக்களிடம் வந்து இயங்க முடிந்தது? எவை உங்களை உந்தித்தள்ளியது?
3. தற்போதைய சூழலில் காலநிலை மாற்றம் ஏற்படுத்தும் தலையாய பிரச்சனையாக நீங்கள் எவற்றை பார்க்கிறிங்க?
4. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு பரவலாக சென்றுள்ளதா? குறிப்பாக கல்விப்புலத்திலே அவை வெறும் பாடமாக மட்டும் தான் பார்க்கப்படுகிறதா?
5. கல்விப்புலம், மக்கள் களப்பணி, அரசு இயந்திரம் இந்த மூன்று வெவ்வேறு புள்ளியில் இருக்கும் இவற்றை எப்படி அணுகி பயணம் செய்றீங்க?
6.பொதுவாக பல ஆய்வுகள் வெறும் ஏடுகளுடனே முடிந்துவிடுகிறது. அந்த ஆய்வுகள் பயன்பாட்டிற்கு ஏன் வருவதில்லை? அதில் உள்ள சிக்கல்கள் எவை?
7. சுற்றுச்சூழல் தொடர்பாக நாம் செய்ய வேண்டியது?
பின் குறிப்பு: திரு. சுல்தான் அகமது இஸ்மாயில் அவர்களுடனான உரையாடலில் சுற்றுச்சூழல் மட்டும் அல்லாமல் கல்வி, ஆய்வுப்புலம், குழந்தை வளர்ப்பு என்ற பலதளங்களில் இருக்கும் பிரச்சனைகளை தொட்டு அதற்கான தீர்வை முன்வைத்துச் செல்கிறது. நம்மை நாம் முறையாக நிர்வகிக்க வேண்டும். நம்மிலிருந்தே மாற்றம் துவங்கட்டும்.
🙏🏼
Well explained and if everyone follows then we can save our EARTH 🌍
This makes myself to become humble and grateful to dr sultan sir a living legend for sharing his excellent but practical means of living