இந்தியளவில் சுமார் 22 வகைகளும், தென்னிந்தியாவில் சுமார் 8 வகையான சின்னான்களும் (Bulbuls) கண்டறியப்பட்டுள்ளன. மஞ்சள் தொண்டை சின்னான் (Yellow-throated Bulbul) தென்னிந்தியாவில் மட்டும் காணப்படு¡u\]. உலகளவில் அழிந்து வரக்கூடிய பறவைகளில் ஒன்றாக (Vulnerable) மஞ்சள் தொண்டை சின்னானும் உள்ளது. இந்த வகை பறவை தென்னிந்தியாவில் சுமார் 80-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுவாக காணப்பட்டாலும் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தே காணப்படுகிறது. மஞ்சள் தொண்டை சின்னான் (Pycnonotus xantholaemus) முதன் முதலில் 1845-ல் நெல்லூரில் (ஆந்திர பிரதேசம்) பிரிட்டிஷ் பறவையியலாளர் டி.சி.ஜெர்டான் (T.C.Jerdon) அவர்களால் கண்டறியப்பட்டது. இவை தென்னிந்தியாவிலுள்ள கர்நாடகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டிலுள்ள கிழக்கு மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் காணப்படுகின்றன. இவை கடல் மட்டத்திலிருந்து 300 முதல் 1800 மீட்டர் உயரமான பாறைகளையுடைய முட்புதர் மற்றும் இலையுதிர் காடுகளில் வசிக்கும் தன்மை உடையவை.
மஞ்சள் தொண்டை சின்னான் தமிழ்நாட்டில் உள்ள முதுமலை (நீலகிரி), சிறுவாணி மலை, அனுவாவி சுப்பிரமணியர் கோயில் மலை மற்றும் குரங்கு அருவி – ஆழியார் அணை (கோயம்பத்தூர்), வள்ளிமலை, ஏலகிரி மற்றும் சாத்கர் மலை (வேலூர்), சித்தேரி, ஏற்காடு, கொல்லிமலை மற்றும் சங்ககிரி (சேலம்), திம்பம் – சத்தியமங்கலம் (ஈரோடு), கொடைக்கானல் (திண்டுக்கல்), மேகமலை மற்றும் போடி மெட்டு (தேனி), பர்வதமலை (திருவண்ணாமலை), செஞ்சி (விழுப்புரம்) இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
பச்சை நிறத் தலை, தொண்டை, கீழ்வால் இறக்கை இறகுகள் மற்றும் மஞ்சள் நிற வால் முனையைக் கொண்டிருக்கும் ‘மஞ்சள் தொண்டை சின்னான்கள்’ பார்ப்பதற்கு வெண் புருவ சின்னான் போல் கூச்ச சுபாவம் உடையவைகளாகக் காணப்படுகின்றன. இருப்பினும், மஞ்சள் தொண்டை சின்னான்கள் சுறுசுறுப்பான செயல்பாடுகளினால் வேறுபடுகின்றன.மஞ்சள் தொண்டை சின்னான்கள் பச்சை பஞ்சுருட்டான்கள் அல்லது தரைப் பச்சைக்கிளிப் (Bee-eater) போல வேகமாகச் செயல்பட்டு மரங்கள் மற்றும் குகைகளில் காணப்படும் பூச்சிகளை வேட்டையாடுகின்றன.
மஞ்சள் தொண்டை சின்னான்கள் பெர்ரி பழங்களையும் மற்றும் பூச்சிகளையும் விரும்பி உண்ணுகின்றன. நாகணவாய், காக்கை, தையல்கார குருவி, கதிர் குருவி, மின்சிட்டு, கீச்சான், சிவப்பு மீசை சின்னான், சின்னான் மற்றும் வெண்புருவ சின்னான் உடன் சேர்ந்து இரைதேடும் பண்பைப் பெற்றுள்ளன. சிலநேரங்களில் குரங்குகள் விட்டு சென்ற வாழைப்பழங்களையும் உண்கின்றன. மற்ற பெரும்பாலான பறவைகள் போன்று நீர்க்குட்டைகளில் தண்ணீர் குடிப்பதும், குளிக்கவும் செய்கின்றன.
இதுவரையில் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்தில் மஞ்சள் தொண்டை சின்னான்கள் மே முதல் ஆகஸ்ட் வரையில் இனப்பெருக்கம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஏற்காடு மலையில் மஞ்சள் தொண்டை சின்னான்கள் கூடுகட்ட குச்சிகளை சேகரிப்பது மார்ச் மாதத்தில் என அறியப்பட்டுள்ளது. இவற்றின் கூடுகள் மற்ற சின்னான்களின் கூடுகளை போல் இருந்தாலும் தரைக்கு அருகில் இருப்பதாகவும் ,இவற்றின் இனப்பெருக்கக் காலம் 31 முதல் 41 நாட்கள் எனவும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதுவரையில் கூடுகளை கட்டவும், பராமரிப்பதிலும் இணையாக இல்லாமல் ஒரே பறவை மட்டும் செயலாற்றுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
நான் மயிலாடுதுறையில் AuTSôR×Wm YûLV\ô A\dLhPû[ கல்லூரியில் (A.V.C College,Mayiladuthurai) 2009-ல் வனஉயிரியல் (Wildlife Biology) சேர்ந்த பின்னர் எனது வகுப்பு நண்பன் அனுகுல் (Anukul) மூலம் எனக்கு பம்பாய் இயற்கை வரலாற்று கழகம் (Bombay Natural History Society) 2006-இல் வெளியிட்ட ஆய்வு கட்டுரை (Journal) எனக்கு கிடைத்தது. அதில் மஞ்சள் தொண்டை சின்னான் பற்றி சுப்பிரமணியா, பிரசாத் மற்றும் கார்த்திகேயன் எழுதிய கட்டுரை எனது ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதில் முக்கியமாக செஞ்சி மலையில் 1980-களில் டி.கே. ராவ் (T.Konneri Rao) சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் (Madras Naturalists Society) அவர்களால் முதல் முதலில் கண்டறியப்பட்டது. பின்னர் மஞ்சள் தொண்டை சின்னான் மற்றும் செஞ்சி பற்றிய பல முக்கிய தகவல்களை கே.வ.சுதாகர் (K.V.Sudhakar) சென்னை இயற்கை ஆர்வலர்கள் சங்கம் (Madras Naturalists Society) அளித்தார்.
நான் முதல் முதலாக செஞ்சி மலைக்கு டிசம்பர் 25,2009-இல் சென்றேன்.அங்கு இராஜகிரி மலை (ராஜா கோட்டை) மற்றும் கிருஷ்ணகிரி மலை (ராணி கோட்டை) மிகவும் பிரபலமானவை.நான் மக்கள் அதிகம் செல்லாத சக்கிலி துர்கம் அல்லது சங்கிலி துர்கம் (Sakkilidurg) மலைக்கு மஞ்சள் தொண்டை சின்னான் தேடி கொண்டிருந்தேன்.
காûX முதலே சின்னான்களின் சத்தத்தை என்னால் கேட்க முடிந்தாலும் மஞ்சள் தொண்டை சின்னானைப் பார்க்க முடியவில்லை. பின்னர் மதியம் 2 மணியளவில் தெளிவாக பைனாகுலர் மூலம் மஞ்சள் தொண்டை சின்னான் பாறை மேல் உட்கார்ந்து இருந்ததை தெளிவாக பார்த்தேன். எனது ஆய்வில் ஜோடியாகவே உள்ள இவை கல் அத்தி,அரசமரம்,ஆலமரம்,கள்ளிச் செடி மற்றும் இலந்தை மரங்களையும் அவற்றின் கனிகளை விரும்பி உண்ணுவதையும் குறிப்பிட்டுள்ளேன்.
வெயில் நேரங்களில் மஞ்சள் தொண்டை சின்னான் ஜோடியாக வரும் இவற்றில் ஒன்று மட்டும் சிறிய நீரோடையில் குளியல் செய்யும் மற்றொன்று மரக்கிளையில் அமர்ந்து இருக்கும். சில சமயங்களில் இவை காட்டை ஒட்டிய வயல் வெளி அருகில் உள்ள கருவேலமரங்களிலும் காணப்படும்.
எனது ஆய்வில் மஞ்சள் தொண்டை சின்னான் சாத்கர் மலை, வள்ளிமலை மற்றும் ஏலகிரி மலை (வேலூர்),பர்வதமலை (திருவண்ணாமலை)மற்றும் செஞ்சி (விழுப்புரம்) இடங்களில் பொதுவாக காணப்பட்டாலும் அவைகளுக்கு மனித CûPëß,மற்றும் கால்நடை மேய்ச்சலினால் இடையூறு ஏற்படுவதைப் பதிவு செய்தேன்.
கால்நடை மேய்ச்சல், விறகு எடுத்தல், மனித இடையுறு, காட்டுத் தீ மற்றும் குவாரிகளால் மஞ்சள் தொண்டை சின்னான்களின் வாழிடங்கள் மிகுந்த அபாய நிலையில் உள்ளன. கர்நாடகாவில் மஞ்சள் தொண்டை சின்னான்களின் வாழிடமாக அறியப்பட்டுள்ள சுமார் 46 முக்கிய இடங்களில் ஆறு இடங்களில் தற்போது இவை காணப்படுவதில்லை. இதற்கு மரங்களை அதிகமாக வெட்டுதலும் மற்றும் குவாரிகளும் தான் முக்கிய காரணிகளாக உள்ளன.
தென் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் இவை அறியப்பட்டாலும், பல அறியப்படாத இடங்கள் உள்ளன. தென்னிந்தியாவில் உள்ள பாதுக்கப்பட்ட இடங்களான, வனவிலங்கு காப்பிடங்கள் (Wildlife Sanctuary), கோடை வாழிடம் (Holiday Destination) மற்றும் மலைக் கோயில் பகுதிகளில் (Hill Temples) காணப்படுகின்றன. மஞ்சள் தொண்டை சின்னான்களில் (Isolated Population) சில தனிமைப்படுத்தப்பட்ட மலைப்பகுதிகளில் உள்ளதால், இவற்றின் வாழ்வு சிக்கல் நிறைந்ததாகவும் காணப்படுகின்றது.
Nicely written