கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் கி. ரா. அவர்கள், எழுத்துலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்.

         

      உயிரோட்டமுள்ள கதை மந்தார்களால் நம்மை வாசிப்பிற்குள் வசியப்படுத்தி விடுவார்.

      இதில் வரும் பறவைகளைப் பற்றிய குறிப்புகளைக் கொண்டே புது புது பறவைகளை கண்டு அவைகளோடு பழகிய அனுபவத்தை பெறலாம்.

       பறவைகள் எழுப்பும் பலவித ஒலிகளை பற்றி படிக்கும் போது அப்படியே அந்த ஒலிகள் நம் காதுகளில் கேட்கும்.

         மைனாக்கள் மனிதர்கள் போல ஒலி எழுப்பும் என்பதை இந்த கதையில் படித்தே தெரிந்து கொண்டேன்.

           இந்த கதையில் வரும் வெங்கடேசுவாகவே, நான், என்னை நினைத்து கொண்டு உருகி உருகி இந்த கதையை வாசித்தேன்.

     இதில் வரும் திருவேதி நாயக்கர், மறக்க முடியாத ஒரு கதா பாத்திரம்.

      வெங்கடேசு, அசோக், செந்தில் வேல் போன்ற இணைப் பிரியாத நண்பர்கள் ( நட்புகள்) இப்பொழுதெல்லாம் யாருக்கும் அமைவதில்லை.

     குஞ்சுப் பறவைகளை தாய் பறவையிடமிருந்து பிரித்ததனால் தான், தன் தாயும் இறந்து விட்டாளோ என்று வெங்கடேசு நினைக்கும் போது நம் கண்களிலும் நீர்க் கோர்க்கும்.

     விதவிதமான தபால்தலைகளை சேகரித்து வைப்பது என்பது ஒரு வகையான பொழுது போக்கு என்றால், வெங்கடேசுக்கு பலவித பறவைகளின் வகை வகையான முட்டைகளை சேகரிப்பது ஒரு பொழுது போக்கு. 

        இதில் வரும் மாடு மேய்க்கும் சிறுவன் வடிவேலுவின் செயல்கள்/  பாடல்கள் நெஞ்சை தொட்டு செல்லும்.

      இறுதியில் படிப்பதற்காக வெளியூருக்கு  செல்ல, பெட்டிப் படுக்கைகளுடன் கிளம்பும் வெங்கடேசு, தன் நண்பர்களைப் பிரிந்து, திருவேதி நாயக்கரைப் பிரிந்து, சேகரித்து வைத்த முட்டைகளைப் பிரிந்து, பாட்டி யைப் பிரிந்து ஒரு அந்நிய இடத்திற்குப் போகிறான் என்பதை " எங்கோ ஒரு நாற்றங்களில் பிறந்து வளர்ந்த ஒரு பயிரை எங்கோ ஒரு இடத்துக்கு நடுவதற்குக் கொண்டு போகிறார்கள்" என எழுதி

யதார்த்ததைப் புரிய வைத்திருப்பார், கி. ரா.

மொத்தத்தில் படிப்பவரின் நெஞ்சத்தின் நினைவுகளில் நீங்கா இடம் பிடிக்கும் கி. ரா. வின் இந்த பிஞ்சுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version