நீரின்றி அமையாது உலகு ; உணவெனப்படுவது  நிலத்தோடு நீரே

எப் 5 பசுமை தொண்டு நிறுவனம் (f5 Green.org) 2015இல், பல்வேறுபட்ட துறைகளில் நிபுணத்துவம் கொண்ட, ஒத்த கருத்தையும், இலக்கையும் உடைய நண்பர்களால், (நிறுவனஇயக்குனர் – செல்வி.அனிதா அவர்கள்) சென்னையில் துவங்கப்பட்டது. 

கடந்த எட்டு ஆண்டுகளாக, சுற்றுசூழல் பாதுகாப்பு, நிலைத்தன்மையுடைய மானாவாரி விவசாயம், நஞ்சில்லா நல்லுணவு ஆகிய துறைகளில் பங்காற்றி வருகிறது.

துறை சார்ந்த வல்லுநர்களை கொண்டு உள்ளூர் சமூகத்தினரின் (திருவண்ணாமலை) மேம்பாட்டிற்கான தனித்துவமான பயிற்சி பட்டறைகள், பல்வேறு துறை சார்ந்த செயல்/திறன் மேம்பாட்டு பட்டறைகள், குழந்தைகளுக்கான (உணவு, விதைபந்து, தயாரித்தல், விவசாயத்தை பற்றி ஒரு அறிமுகம்) பயிற்சிபட்டறைகள், அறிவுசார் கலந்துரையாடல்கள் நடத்துதல் போன்ற பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறது.

மேலும், ஐம்பூதங்களின் (நீர், நிலம், ஆகாயம், கற்று, நெருப்பு) சமன்பாடு மக்களின் நிலைத்த நல்வாழ்க்கைக்கு எவ்வளவு அவசியம் என்பதனையும், அதற்கு நிலைத்த விவசாயம் எங்கனம் துணை புரிகிறது என்பதனையம், பல வகையான  விழிப்புணர்வு பிரச்சாரங்களின் (காட்சிப்படுத்தும் படங்கள், பொம்மலாட்ட கதை வடிவம், புத்தக கண்காட்சிகளில் பங்கெடுப்பு.) மூலம் தொடர்ந்து பொது மக்களிடம் சேர்த்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக “வெங்சன் என்டர்ப்ரைசஸ்: என்னும் தனியார்  நிறுவனத்துடன் இணைந்து அதன் நிறுவனரும் எப் 5 பசுமை அறக்கட்டளையின் வழிகாட்டியாகவும் செயல்பட்டுவரும் திரு.வி.பி.ராஜ் அவர்களால் வடிவமைக்கப்பட்ட”பண்ணையில் இருந்து பண்ணைக்கு” (Farm to Farm) என்னும் திட்டத்தில் ஒரு அங்கமாக செயல்பட்டு, அதன் மூலம் விவசாயிகளையும், நுகர்வோரையும் இணைக்கும் பாலமாக செயல்படுகிறது.

பிரச்சாரம் & செயல்பாடுகள்:

15.03.2015 – பூவுலகு நண்பர்கள் என்னும் அம்மைப்பு “ஜானகி எம்.ஜி.ஆர் கலை கல்லூரியில் நடத்திய “பொழுதுகள் ஆறு” – சிறுதானிய உணவு திருவிழாவில் பங்கேற்று நஞ்சில்லா நல் உணவின் அவசியம் குறித்து  “பசி” என்னும்  தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரம்.

23.05.2015 – Safe Food Alliance (பாதுகாப்பான உணவு கூட்டணி) குழுமம் சென்னையில் நடத்திய உணவு திருவிழாவில் பாரம்பரிய விதைகளை பாதுகாக்க வேண்டியதின் அவசியம், மரபணு மாற்றப்பட்ட விதைகளின் தீமைகள் ஆகியவற்றை பற்றி “விதைகள்” என்னும் தலைப்பில் சித்திரங்களின் வாயிலாக விழிப்புணர்வு பிரச்சாரம்.

07.06.2015 – சென்னை கடலோர சுத்தம் (Chennai Coastal Clean Up) அமைப்பு நடத்திய சென்னை பெசன்ட் நகரில் உள்ள எல்லியட்ஸ் கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வில் இணைந்து செயல்பட்டு, இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவர்க்கும் நெகிழிகளின் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி,  அதற்கு மாற்றாக மண்கோப்பைகளை அளித்தது.

2015 & 2016 – சென்னை புத்தகக்கண்காட்சியில் பங்கேற்று, சித்திரங்கள் மூலம் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் & நிலைத்த விவசாயம் சார்ந்த புத்தகவிற்பனை.

டிசம்பர்2015 – சென்னை வெள்ள நிவாரண பணியில் ஈடுபட்டு, மீனவர்களின் உதவியோடு, படகுகளின் மூலம்  பொதுமக்களை மீட்கும் பணி, பால் & உணவு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

26.10.2016 – சென்னை “க” உயிர்ம உணவகத்தின் மாடியில் – திடக்கழிவு மேலாண்மை மற்றும் நகரங்களில் மாடிதோட்டம் – பயிற்சிப்பட்டறை – 26.01.2017 – தற்சார்பு வேளாண்பள்ளி, திருவண்ணாமலை – தொடக்கவிழா சில தவிர்க்க முடியாத காரணங்களால் இம்மயற்சி கைவிடப்பட்டது

2017 – சு. கீழ்நாச்சிப்பட்டு, திருவண்ணாமலையில் “வான்சிறப்பு” அறிவுமையம்  உள்கட்டமைப்பு பணிதுவக்கம். அகல உழுவதினும் ஆழ உழுவ தேசிறப்பு, என்னும் சொலவடைக் கேற்ப, தங்களது களப்பணிக்காக வெங்சன் நிறுவனத்துடன் இணைந்து திருவண்ணாமலையில் உள்ள சு.கீழ்நாச்சிப்பட்டு என்னும் கிராமத்தைதேர்வு செய்து, தன்முனைப்புடன் தங்கள் பணியினை செவ்வனே தொடர்ந்து வருகிறது. ஒரு முன்மாதிரிவரைவு திட்டத்தை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.  

2019 மார்ச் – வான்சிறப்பு மையத்திற்கு ஜெர்மனி கீல் பல்கலைகழகத்தில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர் (சுற்றுச்சூழல் & நிலைத்த விவசாயம்) யூடித் அவர்களின் வருகை.

2019 – சென்னை மரீனா கடற்கரையில் சிலம்பு பயிற்சி. 2020 – சிட்டு குருவிகளை பாதுகாக்கும் பிரச்சார நிகழ்வு நடத்தப்பட்டது.

2021 (நவம்பர் 3 & 4) – “சென்னையின் உணவு அமைப்பில் நிலைத்த மாற்றத்தை உருவாக்க தேவையான வேளாண்சூழியல்” என்னும் தலைப்பில் தான் செய்யும் ஆராய்ச்சிக்கான தகவல்களை திரட்டுவதற்காக ஜெர்மனியிலிருந்து வந்ததிரு .பீட்டர் அவர்களுடன் வான்சிறப்பு மையத்தில் உரையாடல் மற்றும் களங்களில் உள்ளூர் விவசாயிகளுடன் சந்திப்பு.  

2022 முதல் திருவண்ணாமலையை மையமாக கொண்டு, வான்சிறப்பு வளாகத்தில் எப் 5 பசுமை அறக்கட்டளையாக செயல்பாட்டை தொடர்கிறது.

2022 (செப்டம்பர் 19 & 20) – சென்னை இந்திய தொழில்நுட்ப கல்லூரியில் அமைந்துள்ள இந்திய ஜெர்மனி நிலைத்தன்மை மையம் மூலமாக ஜெர்மனியின் ஆச்சென் பல்கலைக்கழக மாணவர்கள் பேராசிரியர். மார்டினா அவர்களின் தலைமையில் வான்சிறப்பு மையத்தில், கிராமப்புற விவசாயம் மற்றும் உணவுமுறை பற்றி  அறிதலுக்கான உரையாடல் & விவசாயிகளுடன் நேர்காணல் நடைபெற்றது.

இந்திய – ஜெர்மனிஉரையாடல்கள்IGD (Indo-German Dialogues)

1.2017 (மார்ச் : 09 – 11) – சென்னையில் பசுமையான நகர்ப்புற நடைமுறைகள் பற்றிய இந்திய – ஜெர்மனி அறிவு-சார் உரையாடல் நிகழ்வில் பங்கேற்பு.

2.2018 (நவம்பர் : 08 – 10) – “நிலைத்த வளர்ச்சியை உருவாக்குவதற்கான கல்வி, கற்றல், பயிற்சி, மற்றும் விழிப்புணர்ச்சி ”என்னும் தலைப்பில் ஜெர்மனி நாட்டின் ப்ரிபேர்க் நகரில் நடைபெற்ற இந்திய – ஜெர்மனிஅறிவு-சார் உரையாடல் நிகழ்வில் பங்கேற்பு.

3. 2019 (டிசம்பர் : 5 – 7): “வாழ்வதற்கான சூழலை சேர்ந்து உருவாக்குதல்” என்னும் தலைப்பில் புனேநகரத்தில் பாரதீய வித்யா பீத் கல்லூரியில் நடைபெற்ற இந்திய ஜெர்மனி அறிவு-சார் உரையாடலில் பங்கேற்பு.

4. 2020 (நவம்பர் 26 & 27 ;  டிசம்பர் 3 & 4) “நிலைத் தன்மை மாற்றத்தில் மனிதனின் பங்களிப்பு, உள்முக ஆரோக்கியம் & நல்வாழ்வு” என்னும் தலைப்பில் நடைபெற்ற மெய்நிகர் இந்திய ஜெர்மனி அறிவு-சார் உரையாடலில் பங்கேற்பு. 2021 & 2022 – கொரோனா தொற்று நோயால் உலகம் முழுவதும் ஏற்பட்ட சூழல் காரணமாக இந்திய ஜெர்மனி உரையாடல் நடைபெறவில்லை

2023 (அக்டோபர் : 13 – 15) – “உள்ளூர் முக்கியத்துவம்” (லோக்கலிட்டி மாட்டேர்ஸ்) என்னும் தலைப்பில் திருவண்ணாமலை வான்சிறப்பு மையத்தில், ஜெர்மனி அறிவு-சார் உரையாடலை இணைந்து நடத்தி, தனதுபங்களிப்பை செய்தது. இத்தகைய உரையாடல்கள் மூலம் இரு நாட்டினருக்கிடையே உள்ள வெற்றிகரமான, நிரூபிக்கப்பட்ட மாதிரிகளை அறிந்து, செயல்படுத்த இயலும். மேலும் மேல்படிப்பிற்கான மாணவர்கள் பரிமாற்றத்திற்கு வழி வகுக்கும்.

இவற்றுடன், “சூழல் பொருளாதார” அடிப்படையிலான பொருள் உற்பத்தியையும் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம், காலநிலை மாற்றத்திற்கான காரணிகளை சிறிதளவேனும் குறைப்பதற்கான முயற்சியில் பெரும் பங்களிக்கிறது. இணைந்து செயல்பட விருப்பமுள்ள, ஒத்த கருத்து கொண்டவர்களை இம்மையம் வரவேற்கிறது.

அன்றாடசெயல்கள்:

விவசாயிகளுக்கு குறைத்த வாடகையில் உழவுக்கான டிராக்டர் போன்ற கருவிகளை கொடுப்பதன் மூலம் ஆதரவளிக்கிறது.   வான்சிறப்பு மையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து, அவர்களது பேச்சுதிறன் மேம்பாடு, நிலைத்த விவசாயம் பற்றிய செயல்முறை கற்றலுக்கான வாய்ப்புகளையும் அளிக்கிறது. ஒருங்கிணைந்த பண்ணையின் அவசியத்தை வலியுறுத்தும் முகமாக நாட்டுமாடுகள், கோழிவளர்ப்பு, காய்கறி மற்றும் காலத்திற் கேற்ற பயிர்களை சுழற்சிமுறையில் பயிர் செய்தல், குப்பைகளை பிரித்து உரமாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருகிறது.

வலைதளம்: www.f5green.org

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version