தொடரும் பயணம்.

அமெரிக்காவில் இருப்பது சுவாரஸ்யமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இந்தியாவில் நான் செய்யாத அனுபவிக்காத விஷயங்களை ஆராய்வது அமெரிக்காவில் சாத்தியமாகிறது. ஆனால் இந்தியாவின் மீது சில தளர்வுகள் இருக்கின்றன. முதலில் நான் பிறந்த இடம் அதுதான் அங்குள்ள உணவு எனக்கு ஆச்சரியம் தரக்கூடியதாக இருக்கிறது. இந்த உணவை அமெரிக்காவில் உங்களால் பெற முடியாது.

 சில சமயங்களில் எனக்கு தோன்றும் இரண்டு நாடுமே இரண்டிலுமே சிறந்ததாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று. அமெரிக்காவில் வாழ்வதற்கு முன்னால் நான் வேறு சில நாடுகளான சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங் போன்ற நாடுகளில் வாழ்ந்திருக்கிறேன். கடைசியாக அமெரிக்காவினுடைய மிச்சிகன் மாகாணத்திற்கு  இடம்பெயர்ந்து வந்தோம். அங்கு  அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று பேர் வசதியாக வாழக்கூடிய ஏற்ற இடம் கிடைத்தது.  உடன் அங்கு ஏஞ்சல் எலிமெண்டரி என்ற பள்ளியில் சேர விரும்பினேன் அங்கு நிறைய நண்பர்களையும் உருவாக்கினேன். மிச்சிகனில் ஒரு ஆண்டு கூட முடியாத நிலையில் அடுத்த ஒரு அழகான நகரமான டெக்ஸாஸிற்கு நாங்கள் குடியேறினோம்.

 அங்கு ஹைலெண்ட்ஸ் பள்ளியில் சேர்ந்து பயில ஆரம்பித்தேன், இங்கிருக்கக் கூடிய காலநிலை என்பது மிச்சிகனை விட வேறு மாதிரி இருந்தது. இங்கே பல்வேறான நினைவுகளையும் ஏற்படுத்திக் கொண்டேன். இங்கும் பள்ளி அந்த அளவுக்கு ஒன்றும் மோசமில்லை மீண்டும் அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இப்பொழுது சவுத் டகோட்டாவிற்கு இடம்பெயர்ந்தும் இங்குதான் என்னுடைய உண்மையான நண்பர்களை நான் கிடைக்கப்பெற்றேன். என் வாழ்வின் மிக மகிழ்ச்சியான சிறந்த நாட்களை நான் இங்கு இருந்து தான்  பெற்றேன். நிறைய நெருங்கிய நண்பர்களை உருவாக்கிக் கொண்டேன். ஒரு ஆண்டு முடிவுக்கு வந்தது மீண்டும் சவுத் டகோட்டாவில் இருந்து டெக்ஸாஸ் திரும்பினோம்.

 டெக்ஸாஸில்தான் இப்பொழுது வாழ்ந்து வருகிறோம். இப்பொழுது இங்கே ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன். மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். சொல்லப்போனால் இங்கிருந்து மீண்டும் எங்காவது செல்வோமா இல்லையா என்பது நிச்சயமில்லை. ஆனால் இங்கே நிம்மதியாக இருக்கிறோம்.

மீண்டும் எங்காவது இடம் மாற விரும்பினால் அது இந்தியாவாக தான் இருக்கும் ஏனெனில் நான் பிறந்த இடம்.

 5 ஆண்டுகள் கழிந்து விட்டன அங்கிருந்து வந்து இந்தியாவில் என்ன எதிர்பார்ப்பது? இப்ப இங்கே இருப்பது போல் அங்கு இருக்க முடியுமா? அப்படியான  பயம் எனக்கு உள்ளது. அடுத்ததாக என்னுடைய ஆளுமையில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதால் என்னால் அங்கே நண்பர்களை உருவாக்க முடியுமா? அதுக்கேற்றவாறு என்னை மாற்றிக் கொள்ள முடியுமா? என யோசிக்கிறேன், இதில் பயனுள்ளதாக நான் நினைப்பது நான் இந்தியாவிற்கு சென்றால் என்னுடைய குடும்பத்தோடு இருக்க முடியும், நல்ல சுவையான உணவுகளை உட்கொள்ள முடியும், நிறைய பண்டிகைகளைக் கொண்டாட முடியும். மிக அமைதியாக வாழ முடியும். என பல்வேறு விஷயங்களை சொல்ல முடியும்.

 மோசமான விஷயமாக நினைப்பது என்னால் திரும்பி பழைய நிலைக்கு இருக்க முடியுமா? முடியாதா? மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? முடியாதா? என்கிற மன குழப்பமே நிலவுகிறது.

 எங்கே இருப்பது என்று நான் தேர்வு செய்தால் நான் அமெரிக்காவில் தான் தேர்வு செய்வேன். நான் முழுவதுமாக தயாரான பின்பு வேண்டுமானால் நான் இந்தியா திரும்புவேன். இப்பொழுதும் என்னால் ஒரு முழுமையான ஒரு பதிலை தேர்ந்தெடுக்க முடியவில்லை.

 நான் பல இடங்களுக்குச் சென்று இருக்கிறேன் ஆனால் சில சமயங்களில் எனது விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது எனக்கு கடினமாக இருக்கிறது. சில இடங்களில் எனக்கு நினைவில் இல்லை அதாவது நான் மறந்து போன நினைவுகள் அங்கே செல்ல விரும்புவதற்கான வாய்ப்புகள் மிக குறைவாகவே இருக்கிறது. எங்கே செல்வது என ஒரு குழப்பம் எனக்கு நீடித்துக் கொண்டிருக்கிறது. எனவே என்னுடைய வெளிநாட்டு வாழ்க்கை பற்றியும் என்னுடைய எண்ணத்தைப் பற்றியும் உங்களோடு பகிர்ந்துக் கொள்வதில் மகிழ்கிறேன். 

நன்றி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version