கத்தார் துள்ளல் பறையிசைக் குழு.

தமிழர்களின் ஆதி கலையான இந்த பறையாட்டம்  தமிழகத்தோடு நின்றுவிடாமல் உலகெங்கும் பரவ வேண்டும் என்கிற ஒரே நோக்கத்தோடு கத்தாரில் ஆரம்பிக்கப் பட்டதே இவர்களின் “துள்ளல் பறை இசைக்குழு”. மிகக் குறைந்த அளவு நபர்களை இணைத்து, பறை இசைக்  கற்றுக் கொடுத்து, சிறு குழுவாக்கி கத்தாரில் பறை இசையை பரவச் செய்ததில் மும்பரமாக இயங்க்குகிறோம்.  

2018ல் ஒரு சிறு குழுவாக திறந்தவெளி மைதானத்தில் பயில ஆரம்பித்து, இன்று இருபதுக்கும் மேற்பட்டவர்களோடு பெருங்குழுவாக இணைந்து பயின்றும், பயிற்றுவித்தும் வருகிறோம்.  இக்குழுவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பயின்று வருகிறார்கள். அதோடு மட்டுமில்லாமல் இவர்கள் குழுவில் தமிழர்கள் மட்டுமின்றி பிற மொழி மக்களும் ஆர்வத்தோடு வந்து பறை இசையை கற்றுக் கொள்கிறனர்.

பறை இசைக்கவும் இணைந்து ஆடவும் மட்டுமின்றி பறையின் அரசியலையும் அதன் வரலாற்றையும் சாதி எதிர்ப்பு, ஏற்றத்தாழ்வு பாகுபாடுகள் குறித்த விழிப்புணர்வு அரசியலோடும் கற்றுக் கொடுக்கப்படுகிறது.  நான் (நிர்மல்) ஒருங்கிணைப்பாளராக இக்குழுவை வழி நடத்திக்கொண்டிருக்கிறேன். எனக்குத் தோள் கொடுத்து அணியை திறம்பட நடத்திச் செல்லுவதில் திரு .தட்சினா மூர்த்தி, திரு.முருகன், திரு.மகேஷ்வரன், திருமதி.பிரியா , மற்றும் திரு.கார்த்திக் சரன், விக்கி, மிருதுளா, சபரி, சாய் சித்தார்த் ஆகியவர்கள் உதவுகிறார்கள்.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பறை இசையை எந்தவொரு கட்டணமும் இன்றி ,  இலவசமாக, வெற்றிகரமாக பயிற்றுவித்து வருகிறோம். துள்ளல் பறை குழு. அதோடு மட்டுமல்லாமல் நூற்றுக்கும் மேலாக பறை இசைக் கருவியை இந்தியாவில் இருந்து தருவித்திருக்கிறது. குறிப்பாக, செயற்கை நெகிழி பறை பயன்பாட்டை தவிர்த்து பாரம்பரியமான முறையில் பறை செய்பவர்களிடம் இருந்து மட்டுமே பறை வாங்குவது என்கிறக் கொள்கையோடு பயணித்து வருகிறது துள்ளல் பறை.

பறை இசையை கற்றுக் கொடுப்பதோடு அல்லாமல் அதை கத்தாரில் பல இடங்களில் இசைக்கவும் செய்திருக்கிறார்கள். இக் குழுவில் பறை பயின்ற மாணவ, மாணவிகள் மூலம் இப்போது கத்தார் பள்ளி மேடைகளிலும் பறை இசை ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. என்பதை மிகப் பெருமையோடு இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.  கத்தாரில் பறை இசையை முழங்கச் செய்த சில இடங்கள் கீழ் வருமாறு…

1) IAAF 2019 துவக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்கள் முன்னிலையில் பறையிசைத்து பெருமிதம் அடைந்தார்கள்.

2) Museum of Islamic Art உள் வளாகத்தில் பறையிசைத்து மகிழ்ந்து, மக்களையும் மகிழ்வித்துள்ளார்கள்.

3)Passage of India நிகழ்வுகளிலும் பங்கேற்று பறையிசைத்துள்ளார்கள்.

4) ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நடத்திய கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு குழந்தைகளுக்கான மாபெரும் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்கள்.

5)கத்தார் தமிழர் சங்கம் மேடைகளில் பல முறை மக்கள் ஆர்ப்பரிக்க பறையை ஒலிக்கச் செய்துள்ளார்கள்.

6) வருடந்தோறும் பொங்கல் விழாக்களில் இவர்களின் “துள்ளல் பறை இசைக் குழு” தவறாமல் பங்கேற்றுள்ளது.

7)இதுமட்டுமல்லாமல் பல்வேறு பொது மேடைகளில் இவர்களின் பறையிசையும், நடனமும் அரங்கேறியதோடு மட்டுமல்லாமல், பல மேடைகளில் கத்தாருக்கான இந்திய தூதரால் பாராட்டப்பட்டுள்ளது இவர்கள் குழு.

எல்லாவற்றிற்கும் மேலாக கோவிட் காலங்களில் உதவியின்றி தவித்த பல கிராமத்து கலைங்கர்களுக்கு, நிதி திரட்டி, பொருளாதார உதவியையும் செய்துள்ளது இவர்கள் குழு.  இப்படி, கத்தாரில் பல இடங்களில் பறையை முழங்கச் செய்து பறை இசை மூலம் நம் தமிழர்களை  எல்லா வேறுபாடுகளையும் கடந்து இணைக்கும் முயற்சியை கத்தாரிலிருந்து குழுவாகச் சீயல்பட்டு வருகிறோம். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version