ஓடிடியும் சமூக பார்வையும்

எவை எல்லாம் நமக்கு கடினமானதாக இருந்திருந்ததோ அவை எல்லாம் சுலபமாக்கியிருக்கிறது காலம். என்ன அதற்கான காத்திருப்பை மட்டும் வழங்கினால் போதுமானதாக இருக்கிறது. சிறு வயதில் டிவிக்காக ஏங்கிய காலம் கடந்து இப்போது  டிவியைக் கடந்து நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். உள்ளங்கையில்  உலகம் என்ற சொல்லின் ஒட்டுமொத்த பொருளையும் உணரும் அல்லது அனுபவிக்கும் தன்மையில் இருக்கிறோம். 

 டிவியில் சீரியல்கள் பார்ப்பது, உலகத் திரைப்படங்களை தேடித்தேடி பெருநகரங்களுக்கு சென்று பார்ப்பது அல்லது உலக திரைப்பட விழாக்களுக்கு சென்று பார்ப்பதும் சில சமயம் பதிவிரக்கம் செய்வது அல்லது விசிடி / டிவிடி கேசட்டுக்களை வாங்கிப் பார்ப்பது என்று இருந்த சூழலில் இருந்து இன்று OTT தளங்கள் வழியாக உலகின் எந்த பகுதியில் வெளிவரும் படத்தையும் இந்த ஓடிடி தளத்தில் பார்க்கமுடிகிறது. 

அதிலும் கொரோனா பேரிடர்காலத்தில் உலகமே முடங்கிக்கிடந்த சூழலில் பூதாகரமாக வளர்ந்தது இந்த ஓடிடித்தளம், அதிலும் குறிப்பாக நீண்ட இணையத்தொடர்களின் வருகையும் அதன் புதுவித வடிவமும் வெகுவாக ரசிகர்களை கவர்ந்திழுத்திருக்கிறது. வரலாற்று ஆவணத்தொடர்கள், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு வெளிவந்து கவனம் பெற்ற தொடர்கள். கதை தேர்வுகள், திரைத்தொழில்நுட்பம், வணிகரீதியான படைப்புகள் கலை அம்சம் கொண்ட தொடர்கள், மாய எதார்த்தவாத தொடர்கள், எதார்த்தவாத தொடர்கள், அரசியல் தொடர்கள், சுற்றுச்சூழல் குறித்தான தொடர்கள், தன்வரலாற்று ஆவணங்கள் என இன்னும் பல வகைமைகளை உள்ளடக்கிய தொடர்கள் ஈர்ப்புடையதாக இருக்கின்றன.

புதிதாகத் திரைத்துறையை நோக்கி வருபவர்களுக்கான விசிடிங்க்  கார்டாகவும் ஓடிடித்தளம் இருக்கிறது என்ற ஒரு பார்வையும் கவனிக்க வேண்டியவை. 

The Data Sciences Division of Dentsu Aegis Network (DAN) ஆய்வின் படி இந்தியாவில் இளைஞர்கள் 49%  ஒரு நாளில் இரண்டில் இருந்து மூன்று மணி நேரம் ஓடிடித்தளத்தில் செலவழிக்கின்றனர். அதேசமயம் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் இருந்து ஓடிடித்தளத்தில் கணக்கு வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையின் மூலம் தெரிய வருகிறது. இதன் மூலமாக தற்போதைய இளைஞர்கள் தொலைக்காட்சியை பெருவாரியாக தவிர்த்திருப்பதை அறிய முடிகிறது. 

ஒரு இணையத்தொடரினை அதன்  பல அத்தியாயங்களை ஒரே அமர்வில் பார்க்கிறார்கள் என்பதையும் அறியமுடிகிறது.  இதன் தொடர் வடிவம் மேலும் மேலும் இளைஞர்களை ஈர்க்கிறது. குறிப்பாக மொபைல் மற்றும் மடிக்கணினிகளில் இருந்து பார்த்துக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கிறது. இந்த நிலை ஒருவிதமான அடிக்க்ஷன் தன்மைக்கு இட்டுச் செல்கிறது.  அதிக நேரம் இணையத்தொடர்களைப் பார்ப்பதால் மனச்சோர்வு, கல்வி இழப்பு மற்றும் உடல் ஆரோக்கிய சீர்குலைவு ஆகியவற்றிற்கு இட்டுச்செல்கிறது. 

குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் திரைப்படங்கள் மற்றும் OTT ஆகியவற்றிலிருந்து பாடல்கள், உரையாடல்கள், அணுகுமுறை, ஒழுக்கம் போன்றவற்றைக் கற்றுக்கொள்வதை பொதுவாகக் காணலாம்.

இது அவர்களின் நடத்தையை மாற்றுகிறது. பெற்றோர்கள் தங்கள் மீது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள் அல்லது உள்ளடக்கங்களை விரும்புகின்றனர். குழந்தைகள் இந்த தளங்களில் உள்ள உள்ளடக்கத்தில் வெறுப்பு, தவறான மொழி, அநாகரிகம், வேற்றுமை உணர்வு  ஆகிய எதிர்மறை செயல்களுக்கும் வழிவகுக்கலாம். வன்முறை தொடர்களை அடிக்கடி பார்ப்பது ஆக்கிரமிப்பு நோக்கி அவர்களின் நடத்தையை மாற்றலாம்.

குறைவான உடற்பயிற்சி, குறைவான உடல் செயல்பாடுகள், கண்கள் பாதிப்பும் தூக்கமின்மையும்  இவற்றால் ஏற்படலாம் என்ற பார்வையும் ஆய்வறிக்கையில் முன்வைக்கப்படுகிறது. 

இந்திய சந்தையில்  OTT தளங்களில் அதிக வாடிக்கையாளர்கள் இருப்பதால்  அவற்றில் அதிக அளவில் முதலீடு செய்கின்றன. தி எகனாமிக் டைம்ஸ் -2020 அறிக்கையின் படி  2023 ஆம் ஆண்டிற்குள் இந்தியா 907 மில்லியனுக்கும் அதிகமான எண்ணிக்கையில் இணைய பயனர்களைக் கொண்டிருக்கும். ரிலையன்ஸ் ஜியோ இலவச டேட்டா பயன்பாடு வெளியீடு இந்த OTT இயங்குதளங்களின் வளர்ச்சிக்கு ஒரு ஊக்கியாக செயல்பட்டது.

இந்தியாவில் 9 வயதிற்கும் 17 வயதிற்கும்  இடைப்பட்ட இளைஞர்களில் 60% பேர்  ஒரு நாளில் சமூக ஊடகங்கள் அல்லது கேமிங் தளங்களில் தினமும் மூன்று மணிநேரத்திற்கு மேல் செலவிடுகின்றனர். மாதாந்திர செலவில் கிட்டத்தட்ட பொழுதுபோக்குக்காக 14% நேரத்தை செலவிடுகிறது. 

ஒரு தொழில்நுட்பத்தை சரியாக கையால வேண்டும். இணையத்தொடர்களின் வழியாக பல அரிய வரலாற்று விடயங்களை அறிந்திட முடிகிறது.  உதாரணமாக உயிரியல் பரிணமாக் கொள்கை, பெரும் தலைவர்களின் வாழ்க்கை என இன்னும் செல்லும் படியான பல தொடர்கள் இருக்கிறது. நம் கையில் ஒரு கத்தி இருக்கிறது, அவற்றை வைத்து நாம் பழங்களை வெட்டி ருசிக்க போகிறோமா? இல்லை …. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version