
கேள்: உங்களின் கல்வி கற்கும் முறை, கல்விச் சூழல் எப்படி இருந்தது? அவற்றில் இன்றைய மாணவர்கள் இழந்தவை என்ன?
என் காலத்தில் பள்ளி கல்லூரி, இரண்டிலுமே கற்றலுக்கானச் சுதந்திரம் இருந்தது. நிறைய மன்றங்கள் இருந்தன. தமிழ் மன்றம், அறிவியல் மன்றம் என ஒரு ஆரோக்கியமான சூழல் இருந்தது. அந்த மன்றங்களில் நாங்களே ஆர்வத்துடன் ஈடுபட்டு பல புதிய சிந்தனைகளை, செய்திகளை அறிந்துகொண்டோம். இந்த ஆர்வம் தான் கற்றலுக்கான அடிப்படை. தாமாகக் கற்றுக் கொள்வது தானே கற்றல்! அது எங்களுக்குக் கிடைத்த, நாங்கள் அனுபவித்தச் சுதந்திரம்.
கேள்: ஒரு வகையில் Self learning என்று சொல்லலாமா?
இல்லை. Self learning என்றால் வேறு அர்த்தம். இன்று சந்தையில் பல marketing terms உருவாகி இருக்கு.
Self learning என்றால் home learning, home schooling. வீட்டிலேயே பாடம் படிப்பது, இதை பற்றி நான் சொல்லவில்லை. பள்ளிக்கூடம் என்பது மிக முக்கியமான தளம். Most very important, அன்றைக்கும் important, இன்றைக்கும் important.
ஒருவர் தன்னுடைய வாழ்க்கைத் திறனை மேம்படுத்திக் கொள்ள பள்ளிச் சூழல் அவசியம். School உள்ளே ஒரு குழந்தை வர்றது not only for literacy and numeracy, அது தான் இன்னைக்கு இருக்குற சிக்கலே “School is not a place for measuring literacy and numeracy alone. Child enters the school to become a better human, to grow into a good human. அதற்குண்டான space கொடுக்கிற இடத்துக்கு பேர் தான் பள்ளி. So, the school becomes a place for learning, அதாவது, கற்றலுக்காக இடம் தான் பள்ளிக் கூடம்.
அப்போ, to learn and grow into a good human, what are the qualities that I should apply? கல்வி கற்கவும், நல்ல மனிதராக வளர்ந்து முன்னேற வேண்டும் என்றால், அதற்கான சூழல் எப்படி இருக்க வேண்டும்? கற்றல் என்பது ஓய்வான மற்றும் அமைதியான சூழ்நிலையில்தான் சாத்தியமாகும். You can learn only when you are at leisure.
Leisurely என்றால் என்ன அர்த்தம், உங்க மனசு இலகுவாக இருக்கணும் , இருக்கிற சூழல் அதாவது learning environment என்ற இடத்தில், there should not be any stress. Pressure இருக்கக் கூடாது. Threat இருக்கக் கூடாது. Stress இருக்கக் கூடாது. பரிட்சை என்ற Examination itself is a trick. அந்த trickதான் இன்னைக்கு stress ஆ மாறுது pressure கொடுக்குது.
So, அந்த பரிட்சை முறை தாண்டி, beyond the literacy and numeracy, we learnt several things, so அதற்கான space ரொம்ப அதிகமா இருக்கும்.
வாய்ப்பு இருந்த பள்ளிகள், வாய்ப்பு இல்லாத பள்ளிகள் என்று அந்த காலக்கட்டத்திலேயே இருந்தது. வாய்ப்பு இல்லாத பள்ளிகளில் படிக்கின்ற குழந்தைகளுக்கு சவால்கள் அதிகம். அந்த குழந்தைகள் எல்லாம் அந்த சவால்களை எதிர்கொண்டு வந்தாங்க.
ரெண்டாவது வந்து Parents. First generationஐ பள்ளிக்கூடத்துக்கு அனுப்பும் பொழுது அப்போ பள்ளிகளில் எதை படிக்கப் போறாங்க என்று பெற்றோர்களுக்கேத் தெரியாது. பிள்ளைகள் படிக்கணும்றதை தவற parentsக்கு வேற எதுவும் தெரியாது .
என் புள்ள படிக்கனும்! அவ்ளோதான். ஆனால் இன்றைய சூழல் எடுத்துக்கிட்டீங்கனா , சமூகத் தளங்களின் ஊடுருவல் என்ற பெயரில் – அது உண்மையிலேயே சமூகம் சார்ந்து இருக்கா? சமூகத்தோடு தொடர்பில் இருக்கிறதா, சமூகத்தில் நடக்கின்ற விஷயத்த பத்திதான் பேசுதான்னு கூட எனக்குத் தெரில. ஆனால் சமூக ஊடுருவல் என்ற பெயரில் ஏதாவது ஒரு செய்தியை பரப்பிகிட்டு இருக்கு, அந்த ஏதோ ஒரு செய்தி, ஏதோ ஒரு தாக்கத்தை ஏற்படுத்திகிட்டே இருக்கு. அந்த செய்திகளை verify பண்ணவே முடியல. இப்போது உதாரணத்துக்கு print media என்று சொன்னிங்கன்னா ஒரு அளவுக்கு accountability அங்க இருக்கு.
உங்களுக்கு வந்து எந்த அளவுக்கு freedom இருக்குன்னு சொல்றோமோ அதே அளவுக்கு accountability இருக்கனும். அதாவது நம்பகத்தன்மை இருக்கனும். ஆனா social media ல accountability எங்க இருக்கு? So Xன்ற face la நீங்க பாட்டுக்கு tweet ஒன்று போட்டு போயிட்டே இருக்கலாம், உங்க tweet எந்த மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் யாருக்கும் தெரியாது.
ஆனா ஒரு மிகப்பெரிய மோசமான தாக்கத்தை அது ஏற்படுத்தும். so, இதுனால பெற்றோர்களும் பாதிக்கப்படுறாங்க மாணவர்களும் பாதிக்கப்படுறாங்க. இயல்பாகவே ஒரு indigenous (இயல்பான, original) knowledge நமக்கு இருக்கு. இல்லைங்களா!
அந்த indigenous knowledge பயன்படுத்தி அதில் இருந்து புதிய விஷயங்கள் வருவதற்கான வாய்ப்புகள் (space) சுருங்கி இன்னைக்கு எல்லாமே tutor பண்ணனும் என்ற நிர்பந்தத்துக்கு students போய்ட்டாங்க, students are forced to undergo what is extended for them.
கேள்: : ஆக, இந்த media லயும் ஒருவகை திணிப்புதான் நடக்குது இல்லைங்களா?
Media nu திருப்பியும் எதையுமே we cannot generalize. பொதுப்படையா சொல்ல முடியாது இல்லையா? Infact, there are news which creates a impact. இன்னைக்கு government உடைய attitude எப்படி இருக்கு? ‘ஒன்றாம் வகுப்பில் இருந்து 12ம் வகுப்பு வரைக்கும் Biology படிச்ச உங்களுக்கு, Biologyயில் அறிவு இருந்தது என்று ஏற்றுக் கொள்ளவே மாடேன். நான் வந்து National Eligibility Cum Entrance Test என்று சொல்லப்படும் NEET நடத்துவேன். அந்த NEETல நீ score எடுத்தால் மட்டுமே, நீ Biology படிச்சதா அர்த்தம் இல்லன்னு கிடையாதுனு’ சொல்றீங்க. அந்த NEETல வந்து multiple choice question இருக்கு. குறிப்பிட்ட விடையை குறிப்பிட்ட நேரத்துக்குள்ள எழுதனும். இவ்வாறானக் காரணத்துக்காக I am forced to go to the coaching centre. So, you are replacing the class room learning by coaching center. The coaching centers are replacing the class room learning. அப்போ class room learningல இருக்கக் கூடிய அந்த freedom coaching centerல இருக்காது. Coaching is different from teaching; this is the challenge that current students are facing.
கேள்வி: சார் நீங்க படிக்கிற காலத்துல எல்லாம் இந்த மன்றங்கள் இருந்தாகக் குறிப்பிட்டீங்க. அங்கே மாணவர்கள் மத்தியில் அரசியல் விவாதங்கள் நடக்குமா? மாணவர்கள் ஆர்வத்துடன் இருந்தார்களா? மாணவர்கள் அரசியலை எப்படிப் பார்த்தார்கள்?
மாணவர்கள் அரசியல் விவாதித்தால் மட்டுமே, நாட்டில் ஜனநாயகம் இருக்கிறது என்று பொருள். மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது என்று ஒரு நாட்டில், ஒரு பள்ளிக்கூடத்தில், ஒரு கல்லூரியில் சொன்னாலோ, ஒரு அமைச்சர் அல்லது , அரசு சொன்னால், அதிகாரி சொன்னால், அந்த நாட்டில் ஜனநாயகம் இல்லை என்று பொருள். அரசு தவறு செய்கிறது, அதிகாரி தவறு செய்கிறார் என்று அர்த்தம். ஏன்னா இந்த மாணவர்கள் தான் வளர்ந்த பிறகு வாக்களிக்கப் போறாங்க.
கேள்: ஆமாம்.. கண்டிப்பா.
Vote போடப் போறது அவங்க தான். அடுத்த தலைமுறை candidate ஆக நிற்கப் போவதும் அவங்க தான். அவங்களுக்கான இந்த ஜனநாயக பயிற்சியை எங்கே எடுத்துக் கொள்வார்கள் ?ஒரு நாட்டில், விவசாய நிலத்தை எடுத்து தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்த ஒரு சட்டத்தை கொண்டு வராங்க, அல்லது தொழில் வளர்ச்சியை கொண்டு வரும் திட்டம் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தொழில் வளர்ச்சிக்கு என்ன தேவை? Optimum utilization என்று ஒரு concept இருக்கு. Judicial utilization என்று ஒரு concept இருக்கு! அப்படின்னா ஒரு நிலத்தை பல்வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்று சொன்னால் அந்த நிலத்தில் எது ரொம்ப முக்கியமான காரியமோ அதற்கு மட்டும் தானே பயன்படுத்த முடியும்.
‘நிலத்துக்கு கீழ தங்கம் இருக்கு’ என்று ஒருவர் சொல்ல, ‘அதே நிலத்துலதான் நான் விளைச்சல் செய்ய வேண்டும்’ என்று வேறொருவர் கேட்டால், எதற்கு முக்கியத்துவம் கொடுப்போம்? உணவுக்கு முக்கியத்துவமா இல்ல தங்கத்தை வெட்டி எடுக்குறதுக்கு முக்கியத்துவமா?
கேள்வி: கண்டிப்பா உணவுக்கு தான்.
பதில்: அப்போ இது யாரால் விவாதிக்க முடியும் social science படிப்பவர்கள், history, geography, political science என்று class room la படிப்பவர்களால் தான் இதை விவாதிக்க முடியும். So government ஓட politics, அரசியலை critical ஆக ஆராய்ந்து discuss பன்ற எடதுக்கு பேரு தான் School, College, University . இதைப் பன்னக்கூடாதுன்னு சொன்னா, அது பள்ளியும் கிடயாது கல்லூரியும் கிடயாது பல்கலைக்கழகமும் கிடயாது.
கேள்வி: புதிய கல்விக் கொள்கை பற்றிய உங்கள் பார்வை ?
கல்வி என்ற ஒன்றை பேசாத ஒரு ஆவணத்திற்கு தேசிய கல்விக் கொள்கை 2020 என்று பெயர் வைத்துக் கொண்டிருக்கின்ற ஒரே நாடு, இந்தியாவாக தான் இருக்கும். இந்த ஆவணத்தை, 66 பக்க ஆவணத்தை நீங்கள் படித்திருந்தால், “இந்தப் பக்கத்தில் கல்வியை வரைமுறை செய்திருக்கிறார்களே…. கல்வி என்றால் இப்படித்தான் இருக்கும் என்று சொல்லி இருக்காங்களே…” என்று நீங்கள் சொன்னால், நான் கற்றுக் கொள்கிறேன். நான் பார்த்த வரையில் கல்வியைப் பற்றி எதையுமே அதில் பேசவில்லை.
கல்விக்கும் அந்த ஆவணத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த ஆவணத்தைப் பொறுத்தவரையில், அது இரண்டே இரண்டு காரியத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டது.
முதல் காரியம் என்னவென்றால், அந்த ஆவணத்தின் நோக்கம், இந்தியா என்பது, it is a multicultural nation. பண்முக பண்பாடு கொண்ட ஒரு நாடு. நான் படிக்கிற காலத்தில் இருந்து இன்றைய தேதி வரையில் வகுப்பறைக்குள் வரக்கூடிய மாணவர்களில், ஒருவர் கருவாட்டு குழம்பு கொண்டு வருவார், மீன் குழம்பு எடுத்துக் கொண்டு வருபவரும் இருப்பார், தயிர் சாதம் சாப்பிடுபவர்களும் இருப்பார்கள், பருப்பு சாதம் சாப்பிடுபவர்களும் இருப்பார்கள், ஐயப்ப பக்தர்கள் இருப்பாங்க, ஐயப்பன் கோயிலுக்கு போகும்போது மாலை எல்லாம் போட்டு தான் வருவாங்க. சில நாட்களில் அம்மா ஏதோ வேண்டுதல் பண்ணி ஒரு அஞ்சு ரூபாய் மஞ்ச துணில சுத்தி கையில் கட்டி அனுப்புவாங்க. அப்போ அஞ்சு பைசா, ரெண்டு பைசா ஒரு பைசா எல்லாம் கட்டி அனுப்புவாங்க. இந்த காலத்தில் அஞ்சு ரூபாய் இரண்டு ரூபாய் கட்டி அனுப்புறாங்கன்னு வச்சுக்கோங்க, ஒரு வேண்டுதலுக்காக கையில் இருக்கும். ஒரு நாளோ அல்லது இரண்டு நாளோ கழிச்சு அந்த பணத்தை உண்டியலில் போடுவார்கள்.
இது வேண்டுதலுக்காக கட்டுவது. ஜாதிக்கான அடையாளம் அல்ல. வேண்டுதலுக்காக கட்டுவது என்பது வேறு, ஜாதி அடையாளத்திற்காக கட்டுவது வேறு. கடவுள் நம்பிக்கைக்காக செய்யும் விஷயங்கள் வேற, ஜாதி என்ற பாகுபாட்டை கொண்ட சமூக நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக செய்வது என்பது வேற, so இது ரெண்டையும் வித்தியாசப்படுத்தி பார்க்க வேண்டியது அவசியம்.
நாங்கள் படித்த காலத்தில் ஜாதிகள் இல்லை. நாங்கள் படித்த காலத்தில் ஒருவர் இஸ்லாம் சமூகத்தை சார்ந்தவராக இருக்கலாம், கிறிஸ்துவ சமயத்தை சார்ந்தவனாக இருக்கலாம் கடவுள் நம்பிக்கை இல்லாதவனாக இருக்கலாம், ஆனால் ஒரு குழந்தையுடைய அம்மா அல்லது பாட்டி, regular ஆக பள்ளிக்கு வந்து சாப்பாடு கொண்டு வரும்போது, உன் நண்பனுக்கு என்ன ஆச்சுன்னு விசாரிப்பாங்க. அவன் வீட்டில் ஏதோ பிரச்சனையாம் அதனால் சோகமாக இருக்கிறான் என்று சொன்னால், இவர்கள் உடனே வேண்டி கயிறு கட்டி விடுவார்கள். அவர்களின் கையில் அவனுடைய மதத்தில் கயிறு கட்ட அனுமதி இல்லை என்றால், தன் குழந்தைக்கு கையில் கயிறு கட்டி விடுவார்கள். அவனுடைய நண்பனுக்காக அந்த பிரச்சனை தீருவதற்காக இவன் கையில் கயிறு கட்டி இருக்கும். அது நம்பிக்கையின் அடிப்படையில் கட்டுவது.
அவ்வாறு கயிறு கட்டுவதனால் பிரச்சனை தீருமா இல்லையா என்று விவாதத்திற்கு நான் செல்லவில்லை. ஆனால் அந்தப் பாட்டி வைத்திருந்த அன்பு தான் முக்கியம். அந்த குழந்தையும் தன் குழந்தையாகப் பார்த்தார்கள். அதைப் பார்த்து வளரும் குழந்தைகள் மத்த எல்லார்கிட்டயும் நம்ம அன்பு செலுத்தணும் எல்லாரையும் சமமாக நடத்தணும், என்ற பண்புடன் வளர்வதற்கான வாய்ப்பு இருந்தது.
ஆனால் இன்றைக்கு என்ன புதிய பிரச்சனை என்றால், ஜாதிக் கயிறு கட்டுவதில் பிரச்சனை வந்து இருக்கு. ஜாதி கயிறு கட்டக்கூடாது என்று சொல்வதற்கும் மத அடையாளம் கூடாது என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. யாரும் இங்கே மத அடையாளம் கூடாது என்று சொல்வதில்லை. அது அவரவர்களின் நம்பிக்கை என்று சொல்கிறோம். இது வந்து பாகுபாடு கொண்ட சமூக நடவடிக்கையாகும். இந்திய அரசின் சட்டக் கூறு 17 ன் படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும்.
இரண்டாவது கடவுளுக்கே ஜாதி பிடிக்காது, ஏன்னா நந்தனை ‘உள்ள வா’ என்று கூப்பிட்டு நந்தனார் ஆக்கியவர் சிவபெருமாள், நாயன்மாராகவே ஆகிட்டாரு. வேட்டுவனாக இருந்தவர் கண்ணப்பர். அவர் வேட்டையாடி வந்து கொடுத்த மாமிச உணவை சிவன் சாப்பிடிருக்கிறாரே. நான் vegetarian, மாமிசம் சாப்பிட மாட்டேன் என்று சிவன் சொல்லவே இல்லையே! ஏற்றுக் கொண்டார் அல்லவா, அப்பொழுது கடவுளே இவர்களையும் ஒன்றாக பார்க்கிறார் என்றால் நீ சாதியின் ரீதியாக பாகுபடுத்தினால் நீ சிவனுக்கு எதிராக விஷ்ணுவுக்கு எதிராக செயல்படுகிறாய் என்று தானே அர்த்தம், பன்றி அவதாரமும் எடுத்திருக்கிறார் சிங்க அவதாரமும் எடுத்திருக்கிறார் என்ற பொழுது பன்றியையும் சிங்கத்தையும் வெவ்வேறு திறன் கொண்டதாக பார்க்கிறார் அவர், இதற்கு மணலைத் தோண்டி உள்ளே செல்வதற்கான திறன் இருக்கிறது. சிங்கத்திற்கு வேறு திறன் இருக்கிறது. இரண்டுமே என் படைப்புதான். நான் பன்றியாகவும் தோன்றுவேன் சிங்கமாகவும் தோன்றுவேன், என்பது தான் தத்துவம். அங்கே ஜாதியைக் கடைப்பிடித்தால் கடவுளுக்கே விரோதம். ஜாதியை கடைப்பிடித்தால் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் விரோதமானது, அறிவியலுக்கும் அது பொருந்தாது. இதை மாணவர்கள் உணரனும். அந்த சிக்கல் இன்னைக்கு கூடுதலாக சேர்ந்து போயிருக்கு. ஒரு சமத்துவமான சமூகத்துக்கு ஜாதி இடைஞ்சல் என்று உணர்தல் வேண்டும். அடுத்த தலைமுறைக்காவது ஜாதி இல்லாத, ஜாதியை ஒழித்து, ஒரு சமூக சமத்துவத்தை, அரசியலமைப்புச் சட்டம் விரும்புவதைப் போல் ஏற்படுத்த முடியும்.
நீங்க கேட்ட கேள்வி தேசிய கல்விக் கொள்கை பற்றியது. ஒரு பன்முக பண்பாடு கொண்ட இந்தியாவுல பண்பாட்டில் ஒரு கூறாக கல்வி இருக்கிறது என்றால் கற்றல் செயல்பாடும் பலவிதமாக இருக்கும். ஐரோப்பாவில் பிரான்ஸ் காரன் French culture படி தான் அங்க learning நடக்கும். இங்கிலாந்துக்கும் பிரான்ஸ்க்கும் நடுவுல ஒரு இங்கிலீஷ் channal தான்.
இங்கிலீஷ் channel வந்து இந்தப் பக்கம் dive அடிச்சா அந்தப் பக்கம் கரை சேருவோம். அவ்வளவு சின்ன நீர் கால்வாய் தான். அந்த இங்கிலீஷ் channel தான் இரண்டு நாடுகளையும் பிரிக்குது. அப்படி இருந்தும் கூட உங்களுக்கு பிரான்ஸ் ஓட கலாச்சாரம் வேற, England கலாச்சாரம் வேறாக இருக்கும். இரண்டு இடங்களிலிலும் ஒரே மாதிரி நடக்காது. United Kingdom உடைய ஒரு பகுதியாக இருக்கக்கூடிய அயர்லாந்துல அவங்க ஐரிஷ்ன்னு சொல்றதுல பெருமைப்படுறாங்க. Scotlandல் ,we are Scotts ன்னு சொல்லுவாங்க. அவங்க இங்கிலீஷ்ன்னு சொல்லிக்க மாட்டாங்க. English culture is different from Scottish culture, English and Scottish culture is different from Irish culture. இது எல்லாமே மொத்தமா United Kingdomல இருக்கிறவங்க தான்.
அப்படி இருக்கும் பொழுது, இந்தியா என்பது ஒரு vast sub continent. இந்திய கலாச்சாரம் எப்படி உருவானது ? Because of the land form, because of the climatic condition, நாகாலாந்தில் இருக்கிறவங்க, மணிபூரில் இருக்குறவங்க, மிசோராமில் இருக்கிறவங்களோட கற்றல் (learning process) முறையும், தேன்னிந்தியா, central India ல இருக்கிறவங்க கற்றல் முறையும் வெவ்வேறா தான் இருக்கும். ஆனால் இவங்க என்ன செய்ய நினைக்கிறாங்கன்னா , இந்த பன்முகப் பண்பாட்டை ஒழித்து, ஒற்றை பண்பாட்டு தேசமாக மாற்றக்கூடிய ஒரு சூழ்ச்சியாகத் தான் இந்த தேசிய கல்விக் கொள்கை 2020 இருக்கு.
They want to make it as a monocultural nation. Not nationality. Different nationality சேர்ந்து தான் இந்தியா எனும் நாடு. இப்போ அது கிடையாது. அதாவது One India என்று சொல்லும்போது there will be one culture, so, monoculture nation ஆக மாற்றுவது. அதற்கான எதிர்பார்ப்புகள் என்னவென்றால், Government school நடத்தினாலோ கல்லூரி நடத்தினாலோ இது சாத்தியப்படாது. ஏனென்றால் அரசாங்கம் என்பது secular, மதச்சார்பற்றது. ஆக, வணிகமயமாக்கலின் மூலம் (through commercialization), திணையாட்சியுரிமை( cummunilizationஐ) கொண்டு வரப்பார்க்கிறார்கள். முழு கல்வி திட்டத்தையும் தனியார் மயமாக்கும் முயற்சி தான் இது.
பள்ளிக்குள் வந்தால் தானே மாணவன் ஆசிரியர் இடையே கருத்துப் பரிமாற்றம் நடைபெறும். இந்த கருத்து பரிமாற்றத்தில் தான் மாணவர்கள் அரசியல் உட்பட பலவற்றை கற்றுக்கொள்ள முடியும். The will become aware of various factors. இந்த space இல்லாம பண்ணும் செயல் தான் online வகுப்புகள். இதை அதிகமா ஊக்கப்படுத்தி வர்றாங்க.
அடுத்து, பள்ளியிலிருந்து கல்லூரிவரை கல்வியை சுருக்குறாங்க. It is nothing but literacy skill, numerical skill and vocational skill . வொகேஷனல் ஸ்கில் என்று தமிழ்ல மொழி பெயர்க்கும் பொழுது ‘தொழில் கல்வி’ என்று வரும். professional education என்றால் தொழில் கல்வி, technical education என்றால் தொழில்நுட்ப கல்வி, vocational skill – vocation என்றால் வேலை, skill என்றால் திறன். Vocational skill என்றால் வேலைத்திறன். அப்போ எட்டாம் class முடிகிறதுக்கு முன்னாடியே என்ன எதிர் பாக்குறீங்கன்னா, குழந்தைக்கு வந்து வேலைத்திறன் இருக்கணும்னு எதிர்பார்க்கிறீங்க, அப்போ அந்த குழந்தைக்கு மூணு திறந்தான். எழுதிப் படிக்கத் தெரியணும், எண்கள் (numbers work) தெரியணும், அப்புறம் ஏதாவது ஒரு வேலை செய்ற திறன் கொடுத்துடனும். அப்போ மறைமுகமாக ஒரு skilled labor force create பண்ணிக்கிட்டே இருக்காங்க. This is for market exploitation. இதுல who will be scapegoat, பலியாடு யாரு என்பது தான் கேள்வி. நிச்சயமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகம் தான. இயல்பா அதுதான நடக்கும். ஆனா நீங்க பழிய யார் மேல போடுவீங்க குழந்தை மேல தானே போடுவீங்க, ‘நா வாய்ப்பு கொடுத்தேனே… நீ வரல நான் என்ன பண்றது’ என்ற பிரச்னை திசைமாறும்.
ஒரு பள்ளிக்கூடத்தில் எதற்கு மா Vocational skill? நான் 18 வயசுக்கு மேலே தான் major, இல்லையா! Major ஆன பிறகு தானே நான் வேலையைப் பற்றியோ vocation பற்றியோ பேசணும், ஏன் வேலையைப் பற்றி இப்பவே பேசுறீங்க!
அப்போ இது campus இல்லாத கல்வி. வேறும் enrollment தான் இருக்கும். அப்ப நீங்க கல்லூரியில் சேரனும்னா common university entrance test எழுதி மதிப்பெண்கள் வாங்க வேண்டும். அதனால தான் அவங்க என்ன சொல்றாங்க, மேல்நிலைப்பள்ளியில் படிக்காததை கூட, இளங்கலை (undergraduate) ல படிக்கலாம்னு சொல்றாங்க. Undergraduate ல படிக்காததை கூட முதுகலை படிக்கும் போது படிக்கலாம்னு சொல்றாங்க. ஒன்றுக்கு ஒன்று தொடர்பே கிடையாது. ஒவ்வொன்னுக்கும் தனித்தனியா நுழைவுத் தேர்வுகள் வேறு எழுதனும். பிறகு நான் ஒண்ணாம் class ல இருந்து 12-ம் class வரைக்கும் ஏன் படிக்கணும்! நான் நேரா பயிற்சி பேற்று அந்த score வாங்கி நான் நேரடியாகப் போலாமே.
இன்றைய சந்தை எந்த வகையில் எல்லாம் கொள்ளையடிக்க முடியுமோ கொள்ளை அடிக்க அனுமதிக்கிறார்கள். எந்த வகையில் எல்லாம் குழந்தைகளை அச்சுறுத்த முடியுமோ அச்சுறுத்திட்டு வர்றாங்க. இதனால வர்ற மன அழுத்தத்தை தாங்க முடியாமல் மாணவனே schoola விட்டு ஓடுறான் . இதுதான் தேசிய கல்விக் கொள்கை 2020.
இதுவரைக்கும் 1968 ன் மீது விமர்சனம் இருந்தது. 86ல் விமர்சனம் இருந்தது. 98ல் விமர்சனம் இருந்தது. ஆனா ஒட்டுமொத்த கொள்கைகளையும் நிராகரிக்க வேண்டும் என்று யாருமே இதுவரை சொன்னதில்லை. கடந்த 75 வருஷத்துல முதல் முதலில் நிராகரிப்ப்பு என்ற சொல் எதற்கு பயன்படுத்தப்பட்டது என்றால் இந்த National Education Policy 2020க்கு தான். வேற எதுக்கும் சொல்லல. அதுவும் இந்தியா முழுக்க காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரைக்கும் இந்த பக்கம் அருணாச்சலப் பிரதேசம் தொடங்கி குஜராத் வரைக்கும் எல்லா பல்கலைக்கழகங்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்த்தார்கள். அதற்கு ஒரே காரணம், it is not as per the vision of the constitution of India.
கேள்வி : தமிழகக் கல்விச் சூழல் இப்போ எப்படி இருக்கு இதனுடைய வளர்ச்சி குறித்து?
தமிழகம் வந்து இந்தியாவின் ஒரு மாநிலம் என்பது மறுக்க முடியாது. இந்தியால Indian administrative service officers, அதாவது IAS officers, அவர்களை எல்லாம் Union Public Service Commission தானே தேர்வு செய்யறாங்க. அப்போ Union government அவர்களை பிரதிநிதித்துவம் (deputation) செய்யவாய்ப்பு உண்டு. அவர்களுக்கு நேரடியாக கட்டளைகளைப் (direct instructions) பிறப்பிக்க வாய்ப்பு இருக்கு. We are tuned. Most of the IAS officers are forced as ambassadors of the Union Government in the State. அது தான் நமக்கான மிகப்பெரிய சவால்.
ஒரு மாநிலத்தினுடைய IAS officers, அம்மாநிலத்தின் உரிமையை மற்றும் தேவைகளை அறிந்து, அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்ன நினைக்குதோ அந்தத் திட்டத்தை மின்னிலைப் படுத்த முடியாமல் போகிறது. What ever needs the Union government has, அவங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொடுக்கணும். அதற்குத் தகுந்த மாதிரி மாநிலத்தில் இருக்கும் மந்திரிகளை convince செய்து மாற்ற வேண்டும். இதுதான் உங்க role என்று, ஒரு தூதுவராக (ambassador levelக்கு) கொண்டு வந்து நிறுத்துறாங்க. இந்த சவாலை எல்லா மாநிலங்களும் கடந்த 10 வருட காலமாக எதிர்கொண்டு சமாளித்து வருகின்றன. பிற மாநிலங்களில் என்னெல்லாம் பிரச்சனை இருக்குமோ அதே பிரச்சனை தான் தமிழ்நாட்டுல இருக்கு.
கேள்வி: ஆசிரியர், மாணவர், பெற்றோர் இவர்களுடைய இணைப்பு எப்படி இருக்கணும்? எப்படி இருக்குன்னு நீங்க நினைக்கிறீங்க?
எப்பவும் இருக்குற மாதிரி தாங்க. இதுல வந்து ஆசிரியர், மாணவர், பெற்றோர் என்று வரும்போது, பெற்றோர் பிள்ளைகளை எப்படி பார்க்கிறார்களோ அந்த மாதிரி தான் தன் பிள்ளைக்குப் பாடம் நடத்துற டீச்சரையும் பாக்குறாங்க. எல்லாமே அவரவருடைய நடத்தையில் தான் இருக்கு. ஒரு ஆசிரியர் தவறு செய்தால் அந்த காலத்திலும் கண்டிக்கத்தான் செய்தார்கள், இந்த காலத்திலும் கண்டுக்க தான் செய்றாங்க. அதனால அந்த உறவுகள் ஒன்றும் பெருசா சிதைந்து போச்சு, மாறிப்போச்சு என்று சொல்ல முடியாது.
அதே மாதிரி குழந்தைகள் ஆசிரியர்களை மதிப்பதும் மதிக்காமல் போவதும் பெற்றோர்களிடமிருந்து கற்றுக்கொள்வது தானே.மதிப்பு என்பது இயல்பாக வரவேண்டும். வீட்டில் பெரியவர்களிடத்தில் குழந்தைகள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள். பிறரை மதிக்க நீங்கள் கற்றுக் கொடுத்தால் நான் உங்களையும் மதிப்பேன். உங்களிடமிருந்து இருந்து நான் கற்றுக் கொள்ளும் பொழுது உங்கள் மீது மதிப்பு என்பது இயல்பாக வரும். நான் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை நீங்கள் கொடுக்கலன்னா உங்களை மதிக்கிறதுக்கான வாய்ப்பும் மரியாதையும் வராது. என் மீதும் என் சூழ்நிலை உணரக்கூடிய பக்குவமும் உங்களுக்கு இருந்தால் உங்கள் மேல் எனக்கு மரியாதை அதிகமா இருக்கும். இல்லையென்றால் உங்கள் மீது மரியாதை இருக்காது அவ்ளோதான். அந்தந்த நபரின் தனிப்பட்ட நிலையிலிருந்து இதை பார்க்க வேண்டும்.
கேள்வி: இனி வரும் காலங்கள்ள கல்வி எப்படி இருக்கும் சார் AI உடைய தாக்கம் ரொம்பவே அதிகமா பெருகிட்டு வருது இனி education அப்படின்றது AI உடன் சேர்ந்து எப்படி இருக்கும்?
அதாவது இனிமே சோறு வந்து மனுஷன் கையால சாப்பிட மாட்டான், பல்லால கடிச்சு சாப்பிட மாட்டான், மனிதனுக்கு உடலுக்குள்ள குடல் இருக்காது மனிதனுடைய மண்டைக்குள்ள மூளை இருக்காது அப்படின்னு நீங்க சொன்னாதான் AI உடைய தாக்கத்தைப் பற்றியே பேசணும். மனிதனுக்கு இதயம் வேலை பண்ணிட்டு இருக்கு. Blood circulate ஆகுது. மூளை வேலை செய்யுது என்ற நிலையில், மனுஷன் தான் தீர்மானிக்க முடியும். ஒரு robo எப்படி இயங்கனுன்னு மனுஷன் தான் தீர்மானிக்க முடியுமே தவிர robo போய் மனுஷனை ஒண்ணுமே செய்ய முடியாது.
ஒரு டாக்டர் கிட்ட போனா, அதிலும் கூட ஒரு NEET process la வந்த doctorக்கும் மேல்நிலை பள்ளி முடிச்சு அந்த மதிப்பெண் ஒட. அந்த experience ஓட வந்த மருத்துவருக்கும் வித்தியாசம் இருக்கு. இதை கோவிட் காலத்தில் கூட பார்த்தோம்.
நீங்க corporate hospitals உள்ள போனீங்கன்னா, எவ்ளோ பெரிய corporateஆ இருக்காங்களொ அதுக்கு தகுந்த மாதிரி டாக்டர் உங்களைத் தொடமாட்டார். டாக்டர் உங்கள நேராக கூட பார்க்க மாட்டார. டாக்டர் நீங்க சொல்றதை மட்டும் கேட்பாரு. உடனே பரிசோதனைக்கு எழுதி கொடுத்துடுவாரு. போய் நீங்க எல்லாம் பண்ண பிறகு திரும்பவும் டாக்டரிடம் வந்தால் மீண்டும் reports மட்டும் தான் பார்ப்பாரு. அவர் பாட்டுக்கு மருந்து எழுதி கொடுத்துட்டு போயிட்டே இருப்பார். இந்த மருந்து வேலை செய்யலைன்னா வேற மாதிரி test எடுப்பாரு. இப்படி மூணு நாலு test பண்ணி மூணு மாசம் கழிச்சு அப்புறமா சொல்லுவாரு ‘இது எதுவுமே கிடையாது வேற ஏதோ ஒண்ணு இருக்கு’ என்று. ஆனால் ஒரு natural knowledge இருக்கக்கூடிய டாக்டர் higher secondary zoology ஒழுங்கா படிச்சு botony ஒழுங்கா படிச்சு அதுல இருந்து நல்ல மதிப்பெண்கள் வாங்கி MBBS படிச்சு மக்களோட கஷ்டத்தை புரிஞ்ச டாக்டர், இப்படி செய்ய மாட்டார். வயிற்றில் வலி என்று சொன்னால், உடனே அவர் என்ன கேட்பார், ‘நேத்து என்ன சாப்டீங்க’ என்று ஆரம்பிப்பார். ‘நேத்து என்ன வேலை செஞ்ச, எவ்வளவு நேரம் தூங்கினே’ என்று கேட்பார்.
ஆக, அந்த வலியின் காரணம் எதனால வந்தது, உணவு காரணமா வேறு ஏதாவது இருக்கா அப்படின்னு பரிசோதனை செய்து என்ன பிரச்சனை என்று கண்டுபிடிப்பார்.
சமீபத்தில் நடந்த சம்பவம் இது. உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஒரு டெஸ்ட் எடுத்து மருத்துவர் மாத்திரை கொடுக்கிறார். ஆனால் அந்த நோய் சரியாகல்லை வலி இருக்கு, இன்னொரு டாக்டர் கிட்ட போய் கேக்குறாங்க அந்த டாக்டர் இவரிடம், ‘நீ எவ்வளவு நாளா என்ன சாப்பிட்டுட்டு இருக்கே?’ என்று விசாரித்தார். அவர் தனியாக வசித்து வருகிறார். அவரே ஏதோ சமைத்து சாப்பிடும் நிலையில், nutrient deficiency, உடலில் சத்து குறைவாக இருப்பதாக கண்டுபிடித்து, மாத்திரை கொடுத்திருக்கிறார்.
30 நாள் சாப்பிட்ட பிறகு குணமாகி இப்போ நல்லாயிருக்கார். அதனால artificial intelligence எல்லாம் வந்து ஒன்னும் பண்ண முடியாது அவ்வளவுதான்.
கேள்வி: கல்வி சார்ந்த புத்தகங்கள் பரிந்துரை செய்ய கேட்டால் எந்த புத்தகங்களைச் சொல்லுவீங்க Sir?
கல்வி சார்ந்த புத்தகங்களைப் பற்றிப் பேசும்போது, இரண்டு விஷயங்கள் இருக்கு. கல்வினா என்னனு தெரிஞ்சுக்கணும், கல்வி முறை என்னவென்று தெரிஞ்சுக்கணும். ஒரு இலக்கிய (literature) வாசிப்பா, அல்லது ஒரு philosophy படிக்கப் போறோமா, இல்ல எந்த மாதிரி interest ஒட படிக்க போறோம் என்பது முக்கியம்.
பொதுவாக கல்வி, கல்வி வளர்ச்சி பற்றி படிக்கணும்னா மகாத்மா ஜோதி ராவ் பூலே (Mahathma Jothi Rao Phule) உடைய எழுத்துக்கள் ரொம்ப முக்கியமானது. Paulo Freire புத்தகங்கள் முக்கியமானது. ரஷிய தத்துவவாதி ஜெலோட்ஸ்கியை வாசிக்க வேண்டும். சிங்காரவேலருடைய கல்வி சிந்தனைகள் ரொம்ப முக்கியமானது.
கல்வி பற்றி புரிந்து கொள்வதற்கு இதெல்லாம் வந்து கண்டிப்பாக contribute பண்ண உதவும். கல்வி என்றால் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கறதுக்கு குழந்தைகளிடம் ஆர்வத்தை தூண்டவும் interest create பண்ணவும் நிறைய புத்தகங்கள் இருக்கு. இதெல்லாம் வந்து அறிவியல் சார்ந்த சிந்தனைகளை (scientific temperament) குழந்தைங்க மனசுல விதைக்கிறதுக்கு உதவும். அப்படிப்பட்ட புத்தகங்களைப் படிக்க வைக்கணும். குறிப்பா Origin of species பற்றி Darwin எழுதியது ரொம்ப முக்கியம். கொடுத்தது, Einstein philosophy.
அதேபோல், சிவி ராமன் உடைய physics தான் நம்ம பள்ளி புத்தகத்தில் படிக்கிறோம். நாம் சிவி ராமன் உடைய வாழ்க்கை வேற, physics வேற, அவருடைய philosophy வேற. அவருடைய வாழ்க்கையை யாரும் படிக்கல. சிவி ராமன் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவருடைய உடலை வந்து புதைக்கச் சொன்னாரு, எரிக்கச் சொல்லல. சிவி ராமன் சடங்கே பண்ண கூடாதுன்னு சொன்னார். இந்த மாதிரி சிவி ராமன் கிட்ட இருந்து கத்துக்க கூடிய விஷயங்கள் நிறைய இருக்கு. இந்த மாதிரி scientist ஓட observations, scientist contribution மட்டும் படிக்காமல் scientist உடைய personal life scientist how he became a scientist என்ற பிற விஷயங்களையும் சேர்த்து அவங்களுடைய philosophyயும் சேர்த்து படிச்சாங்கன்னு சொன்னா that will help the students also to become a scientist.
கேள்வி: கடைசி கேள்வி உங்களுக்கு பிடித்த ஆசிரியர், உங்களுடைய இந்த அளவுக்கு வளர்ச்சிக்கு உதவிய ஒரு அடிப்படையாய் இருந்த ஆசிரியர் அப்படின்னா நீங்க யாரெல்லாம் சொல்லுவீங்க sir?
பலர் வந்து contribute பண்ணி இருக்காங்க. ஒருத்தருன்னு கிடையாது, நேரடியாக பள்ளியில் பாடம் நடத்தின ஆசிரியர்கள் இருக்காங்க. அதைத் தாண்டி கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். யாருக்குமே வந்து அவங்க அப்பா அம்மாதான் முதல் ஆசிரியர். அவங்கதான் முதல் insipring personality. அவங்க கிட்ட இருந்து தான் inspire ஆக முடியும். அப்படிதான் நான் என்னோட life பார்க்கிறேன்.
கேள்வி: sir புழுதி online magazineகாக நீங்கள் சொல்ல விரும்பும் ஏதாவது ஒரு சில வார்த்தைகள்!
எல்லாரும் மகிழ்ச்சியா இருக்கக்கூடிய சமூகத்தில்தான் நானும் மகிழ்ச்சியாக இருக்க முடியும், சமூகம் முழுக்க கொந்தளிப்பில் இருக்கும் போது ஒரு தனி மனிதன் மட்டும் மகிழ்ச்சியா இருந்திட முடியாது. Gaza ல நடக்கிறதும் Ukraine ல நடக்கிறதும் இரண்டும் ஒரே மாதிரியான போர் கிடையாது. Ukraineக்கும் Soviet Unionக்கும் இடையில் நடக்கிறதுக்கு பெயர் போர், ஆனால் Gaza ல நடக்குறதுக்கு பேர் இன அழிப்பு. இந்த மாதிரியான அடிப்படை வேறுபாடுகளை மக்கள் புரிந்து கொள்ளனும்.Communal harmony in different faith- பல கடவுள்களை வழிபடறவங்க ஒத்துமையா இருங்க. எந்த கடவுளை வேணா வழிபட்டுக்கோங்க. ஆனா, ஒற்றுமையா இருங்கன்னு சொல்றதுக்கு காரணம், கடவுள் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார். அதனால் கடவுள் நம்பிக்கை இருந்தா இருந்துட்டு போகட்டும் இல்லேன்னாலும் பரவால்ல.
ஆனா எல்லாரும் ஒற்றுமையா இருங்கப்பானு சொல்ல முடியும். ஆனால், பல்வேறு ஜாதிகள் சார்ந்தவங்க ஒற்றுமையாக இருங்கன்னு சொல்ல முடியாது. ஏன்ன ஜாதி என்பது படிநிலை. அது மேலும் கீழும் இருக்கு, இப்ப படிநிலையில நான் கீழ இருக்கேனா மேல இருக்கேனான்றத வச்சி தான் நீங்க எப்படி ஜாதியை பார்க்கிறீர்கள் என்று சொல்ல முடியும், அதனால ஜாதின்னு வந்துட்டா ஜாதி ஒழிப்பு தான் தேவை. அப்போ தான் அங்கு communal harmony இருக்கும். பல ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒண்ணா இருக்காங்கன்னு சொல்றதுக்கு வாய்ப்பே கிடையாது.
இந்த மாதிரியான விஷயங்களைப் புரிந்து கொள்ளனும். Fraternity இல்லாம there cannot be equality, without equality liberty is meaningless, if liberty has to be meaningful, then there should be equality. சகோதரத்துவம் இல்லாமல் சமத்துவம் இல்லை சமத்துவம் இல்லாமல் சுதந்திரம் இல்லை எனவே நாம் எல்லோருமே சுதந்திர மனிதராக வாழனும்னு நினைச்சா நம்ம எல்லாருமே சகோதரத்துவம் கடைப்பிடிக்கணும் அந்த சகோதரத்துவத்திற்கு ஜாதி ஒரு பெரிய தடையா இருக்கும்போது அந்த ஜாதியை ஒழிப்பதற்கான முயற்சியை நாம் எல்லாரும் சேர்ந்து செய்யணும்.