காலம் காலமாக அடிமை சமூகமாகவும் உழைக்கும் சமூகமாகவே இன்று வரை இருந்து வந்துள்ளனர். காலத்திற்கு ஏற்ப சிற்சில மாற்றங்கள்…
ஆற்றங்கரை குழாயடியாக, அடுப்பு gas stove ஆக….
மாற்றங்கள் இடங்களிலும் பொருள்களிலுமே தவிர்த்து பெண்ணின் உழைப்பில் இல்லை
ஆணும் பெண்ணும் இருவருக்குமே படைக்கப்பட்டவர்கள் என்றாலும் ஆணுக்கு பெண்ணே என்ற பதம் இன்று வரை வஞ்சக சிந்தனைகளால் பெண்ணின் சிந்தனையை இறுக கட்டி உள்ளது
அதனை வரலாற்றின் ரீதியில் பல தலைவர்கள் பல சிந்தனைகள் உடைத்து அவிழ்க்க முற்பட்டதில் இன்று அந்த முடிச்சுகள் சற்று விலகி உள்ளது சில முடிச்சுகள் அறுபட்டுள்ளது எனினும் இன்றும் பல அடிமை முடிச்சுகளால் பெண்கள் தையப்பட்டுள்ளார்கள் என்பதே நிதர்சனம்.
இன்று வரையும் பெண்கள் முடிச்சுக்களை அவிழ்க்க முடியாமலும் அவிழ்க்கும் நேரம் அதை இன்னும் இறுக கட்டும் ஆண் ஆதிக்க சமூகம் இருந்து கொண்டே வருகிறது. ஆம் முடிச்சுகளை நாம் அவிழ்க்க வழிவகை செய்து நம்முடன் உரையாடும் புத்தகமே துப்பட்டா போடுங்க தோழி*
அனுபவங்கள் என்பது வயது ஒத்தது .அன்று பெண்ணாக பிறந்து விட்டாலே ஓடி ஆட துவங்கும் போது நம்மை இச்சமுதாயம் சாதி ,மதம் ,இனம் எனும் கருத்துக்களால் இயேசுநாதரை அறைந்ததைப் போல அறைந்து வைத்துள்ளது. விசேஷம் என்னவெனில் இதைப் போன்ற பிற்போக்குத்தனமான ஆணிகளால் அறையப்பட்ட பெண்ணினம் அறையப்பட்டவர்களுக்காகவே வாழ்ந்து மடிய வேண்டும் என்பது பெண்களின் கட்டாயம்.
ஆக இப் புத்தகத்தின் ஊடே ஒவ்வொரு பெண்ணும் தன்னை பொறுத்திக்கொள்ளும் அளவு கட்டுரைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கண்ணாடி தாண்டி கணினி வரை பெண்கள் வந்திருந்தாலும் கணினி உலகிலும் இச்சமூகம் பெண்களுக்கான ஒரு பிற்போக்கு கண்ணாடியை தயாரித்து வைத்துள்ளது நம்மை நாம் அதில் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று. அவ்வாறான கண்ணாடியை என்னிடமும் மாட்டி வைத்துள்ளனர். அது நம்மை உடைக்கும் கண்ணாடி இதைப் போன்ற புத்தகங்கள் வாசித்து நாம் அந்த கண்ணாடியை உடைக்க வேண்டும்.
குழம்பு கொதிக்கிறது என்று பார்த்தது போதும் நம்மை நாம் புரிந்து கொள்ள புத்தகங்கள் வேண்டும். கரண்டி தூக்கி எறிந்து பேனா எடுப்போம் எல்லோரும் ஒன்று சேர்ந்து அடிமைத்தனம் உடைப்போம்.
புத்தகத்தின் மூலம் எனக்கு எழுந்த சில அதிர்வலைகள்.
துப்பட்டா போடுங்க தோழி எவ்வளவு எளிதான வாக்கியம்! ஆனால் அதன் பின் இருக்கும் வலி வேதனை குற்ற உணர்வு பெண்களுக்கு மட்டுமே. பெண்ணின் மார்பகங்களில் ஏன் இத்தனை அடக்குமுறை விவாதம் இத்தனை கருத்து. பால் ஊட்டுவது இவை தாண்டி மார்பு என்பது பெண் உடலில் உள்ள உறுப்பு தானே! அதைப் பார்த்தால் ஆண்களுக்கு ஆசை வரும் அதை மூடாவிட்டால் பெண்களுக்கு பங்கம் வரும் என்பதால் அதனை இறைவன் எதற்கு கொடுக்க வேண்டும்.
பெண்ணின் ஆடைக்கும், அவளுக்கும் இச்சமூகத்தில் நடக்கும் அத்துமீறல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை அப்படி இருக்குமேயானால் என் கேள்வி.
பெண்ணின் மார்பு என்றாலே ஆண்களுக்கு மோகம் வரும் எனில் அவர்களது வீட்டின் பெண்கள் மீது ஏன் வரவில்லை?
இது போட்டா போடுவதால் தவறு கிடையாது என்றால் 60 வயது கிழவிக்கும் ஐந்து மாத குழந்தைக்கு புர்கா அணியும் பெண்களுக்கும் ஏன் தவறு நடக்கிறது?
சில உடல் பிரச்சினைகள் காரணமாக சில சமயம் மார்பு வீங்கிவிடும் வலி இருக்கும் இதற்குப் பெண் என்ன செய்வாள்? பருவம் வந்ததும் வளரும்போது மார்பு வலிக்கும் எத்தனை ஆண்கள் இதை அறிவார்?
அப்படி என் உடல் தான் பிரச்சனை என்றால் நான் ஏன் என் மார்பை அறுத்துக் கொள்ளக் கூடாது?
என் கண்களையும் என் வார்த்தையிலும் வராத காதல் என் மார்பையும் இடையேயும் பார்த்து வருமானால் அது எப்படி காதல் ஆகும்.
மார்பகங்கள் சிறிதாக இருக்கு என்பதால் என் பாட்டி என் அம்மாவை மருமகளாக வேண்டாம் என்றாராம். இதென்ன நியாயம்?
பேருந்தில் என் பின்னால் உரசுபவரிடம் எப்படி சொல்வது நான் துப்பட்டா போட்டுக் கொண்டுதான் உள்ளேன் என்று. பெண்ணை விட ஆணுக்கு பெண் உடல் மீது ஆசையும் தேவையும் அதிகம் என்றால் ஆண்களுக்கு அதை படைத்திருக்கலாம் என் உடல் மேல் என் வெறுப்பு கோபமாக மாறி விட என்றேனும் என் மார்பை நான் அறுத்து இருந்தாலும் ஆச்சரியம் இல்லை.
துப்பட்டா போட்டுவிட்டு வெளியே போ சொல்லும் என் அம்மாவிடம் போட்டு சென்றும் என்னை ஒருவன் தவறாக தொட்டான் என்று எப்படி சொல்வேன்?
உடையை அணிந்தும் அதில் துருத்தி கொண்டு தெரியும் மார்பு என் தவறா?
பொதுவெளியில் குழந்தை பால் உண்ணும் மார்பை பார்த்து ஒருவனுக்கு மோகம் வரும் எனில் அவன் எப்படி மனிதனாக இருக்க முடியும். பெண்ணும் ஆணும் சமம் என்று சொல்லும் இன்றைய சமுதாயம் தான் பெண்களுக்கு தெரியாமல் அவர்களை பல வழிகளில் அடிமைகளாக வாழ வழி வகுக்கின்றன.
புகுந்த வீட்டிலும் சமுதாயமும் அவளை குடும்ப பெண்ணாக சித்தரிப்பது வேறு கருத்து மற்றொரு பக்கம் சொந்த வீட்டினரும் பெற்றோருமே குறிப்பிட்ட செயல்களை செய்தால் மட்டுமே நீ குடும்பப் பெண் என்று மூளை சலவை தொடங்குகிறது. உதாரணத்திற்கு நீ பெண் பிள்ளை காலையில எழுவதுதான் அழகு, வீட்டு வேலையை இழுத்துப் போட்டு செய்யணும் பெரியவர்களிடம் பண்பா நடந்துகிட்டா தான் அழகு. பொட்ட புள்ளைக்கு அடக்கமா சுடிதார் போட்டு மேல ஷால் போடணும் இதில் ஆரம்பம் ஆவது தான் இந்த குடும்பப் பெண் எனும் மூளைச்சலவை.
தெரியாத்தனமா வீட்டில் யாரேனும் எதிர்த்து கேள்வி கேட்டு விட்டால் அவ்வளவுதான் வாயை அடக்கி பேசு, இப்படி வாயடிச்சா போற எடத்துல எப்படி பொழைப்ப? என்று அம்மாவே கூறுவாள்.
பெண்ணாகவே பிறந்து இருக்கலாம் என சொல்லும் ஒவ்வொரு ஆணும் ஏதோ ஒரு வகையில் பெண்ணை இழிவு படுத்துவார்கள் தான்
பெண் இப்படி தான் வாழ வேண்டும் இல்லையெனில் அசிங்கம் என எங்களை ஒருவர் எப்போது வழி நடத்துகிறார்கள் எங்களை போன்ற வாழ்க்கையை நீங்கள் ஒருபோதும் வாழ வேண்டாம் என்பதே கசக்கும் உண்மை.
ஆண்களின் வேலையை ஆண்களே செய்து கொள்ளலாம் அதேபோல் ஒரு பெண்ணின் வேலையையும் அவளை செய்து கொள்ளலாம் என்று பெண் என்றால் இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும் ஆண்கள் இல்லை எல்லாம் இதையெல்லாம் தெரிந்து கொள்ள அவசியமில்லை என்ற ஒரு கீழ்த்தரமான விவாதம் மறைக்கின்ற அன்றே இந்த குடும்பப் பெண் என்று பெண்கள் மீது வைக்கப்படும் சுமை குறையும் என்பதே இந்த கருத்து.
பெண்களின் ஆடை முதல் அவள் கருவறை வரை ஆதிக்கத்தை காட்டும் சமூகம் அவளை தூற்றுவதில் ஆச்சரியம் இல்லை
எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் எப்போது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு எடுப்பது இந்த சமூகம் தான் ஒரு பெண் இருப்பது வயது தாண்டிவிட்டால் போதும் அவளது பெற்றோர் சும்மா இருந்தாலும் சமூகம் அவளது சுற்றமும் அமைதியாக
ஒரு பெண் திருமணத்திற்கு முன்பு கருவுற்றால் வாழ தகுதி இல்லாதவள் என்று கூறும் அதே சமூகம் தான் கல்யாணத்திற்கு பின் பெண் குழந்தை பெறவில்லை எனில் அவளை மலடி என்ன தூற்றுகிறது so … கல்யாணம் என்ற வார்த்தைக்கு பொருள் மாறுபடுகிறது இரு மனம் திருமணம் என்பது பொருள் ஆனால் இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண்ணின் கற்பை அபகரிக்கவும் அவள் வாழ்க்கை அவள் விருப்பம் இன்றி மாற்றி அமைக்கவும் அவளது விருப்ப பொருட்களை திருமணம் என்ற ஆசையை போட்டு மூடவே உதவுகிறது.
திருமணம் ஆனாலே பெண்ணை தொடும் உரிமை கிடைத்துவிட்டது என நினைக்கும் ஆண்களே marriage is not a licence to touch without her permission… இதைப் பெற்றோரும் ஆண்களும் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரு பெண் பயணம் கொள்ளும் போது உடன் இருப்பவர் அவளது குடும்பத்தை பற்றி கேள்வி எழுப்புவது சரிதான் ஆனால் அதே ஒரு ஆண் போகும் போது உன் மனைவி குழந்தை இவர்கள் எல்லாம் நீ இல்லாமல் வீட்டை எப்படி நடத்துவார்கள் என்று ஏன் கேள்வி எழுவதில்லை
Simple வீடு என்பது பெண்களுக்கு மட்டுமே உள்ள பொருள் என்று ஆண்கள் மூளைச்சலவை செய்து விட்டார்கள்
என்னதான் குடும்பத்தின் பொருளாதாரத்தில் ஆண்களே பெரும் பங்கு எடுத்துக் கொண்டாலும் குடும்ப சுமை என்பது பெண்களின் முதுகிலேயே ஏற்றி விடப்பட்டுள்ளது.
அவளுக்கென ஒரு சின்ன மிட்டாய் வாங்கினாலும் ஐயோ பிள்ளைகள் அம்மா ஏதாச்சும் வாங்கிட்டு வருவாங்கன்னு எதிர்பார்க்குமே என்று அவள் குடும்பத்தையே யோசிப்பாள் எவ்வளவு பொதுநலமாக இருந்
College trip, office tour, Friends meetup என அறிய சந்தர்ப்பம் வெளியே செல்ல வீட்டில் கேட்டா வீட்டில் இவ்ளோ வேலை கிடைக்க அக்காவுக்கு சீமந்தம் இருக்கு பாட்டிக்கு செக்கப் இருக்கு இதுதான முக்கியம் இதெல்லாம் விட்டுட்டு ஊர் சுத்த போறேன்னு சொல்ற
சுயநலவாதி என்று பெயர் மட்டுமே மிஞ்சுகிறது பெண்களின் சாபம்.
பெண்களுக்காக ஆண்கள் பேசும் சமத்துவம் ஒரு வகையில் அழகு என்பது போல பெண்களும் பேசுவோம் இப்ப புத்தகம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஆண்களும் வாசியுங்கள் தோழர்களே..!!