கற்றலை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும்.

இந்தியக் கல்வியாளர் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர் சுகேத் மித்ரா (Sugata Mitra) அவர்களின், “Hole in the Wall Experiment” மூலம் மிகவும் பரவலாக அறியப்படுகிறார். இந்த ஆய்வின் மூலம், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குழந்தைகளின் தன்னிச்சையான கற்றல் திறனை ஆராய்ந்தார். இவருடைய முயற்சிகள், குறிப்பாக கிராமப்புறங்கள் மற்றும் வறுமை பாதித்த பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு கற்றல் வசதிகளை ஏற்படுத்த மிகுந்த மாற்றங்களை நிகழ்த்தியிருக்கிறார். 

2013 ஆம் ஆண்டு சுகேத் மித்ரா அவர்களுக்கு கற்றலின் திட்டத்திற்காக விருது வழங்கப்பட்டது. அவருடைய திட்டத்தை அவர் செய்து பார்த்த ஆராய்ச்சிகளின் மூலம் நமக்கு தெளிவாக விளக்குகிறார். அவருடைய திட்டத்தை கூறுவதற்கு முன் தற்போது நம்முடைய பள்ளிகளில் இருக்கும் கல்வி முறையானது எங்கிருந்து வந்தது? என்பதை ஒருகதையின் மூலமாக தெளிவுபடுத்துகிறார். இது சுமார் 300 வருடங்களுக்கு முன்பு மிகப்பெரிய சாம்ராஜ்யங்களில் ஒன்றான பிரிட்டிஷாரிடம் இருந்து வந்தது.

 ஒரு காலத்தில் தொலைபேசியோ கணினிகளோ இல்லாத காலங்களில் வெறும் காகிதத்தில் எழுதப்பட்ட கோப்புகளை கொண்டே கப்பலில் பயணம் செய்து மிக அற்புதமாக மனிதர்களால் ஆன உலகளாவிய கணினியை உருவாக்கினர்கள். அதை நாம் அதிகாரத்துவ நிர்வாக இயந்திரம் என்கிறோம். இதனை இயக்க அதிக மக்கள் தேவை, அதிக மக்களை உருவாக்க அவர்கள் மற்றொரு இயந்திரத்தை உருவாக்கினர். அதுதான் பள்ளி, பள்ளிகளால் உருவாக்கப்படும் அம்மனிதர்கள் அதிகாரத்துவ நிர்வாக இயந்திரத்தின் ஒரு பகுதியாக செயல்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மூன்று விஷயங்கள் நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும் அவை 

  • நல்ல கையெழுத்து இருக்க வேண்டும் ஏனென்றால் அனைத்து கோப்புகளும் கையால் எழுதப்பட்டது.
  • நன்றாக வாசிக்கும் திறன் இருக்க வேண்டும்.
  • நன்றாக கூட்டல் கழித்தல் பெருக்கல் மற்றும் வகுத்தல் போன்ற கணக்குகள் போடத் தெரிந்திருக்க வேண்டும்.

  அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான எண்ணத்தை உடையவர்களாக இருந்தார்கள். ஒருவரை நியூசிலாந்திலிருந்து கனடாவிற்கு அனுப்பினாலும் உடனடியாக வேலை செய்யத் தொடங்கி விடுவர். விக்டோரியங்கள் சிறந்த பொறியாளர்கள் அவர்கள் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கினர். அது இன்றும் நம்முடன் உள்ளது. இயந்திரத்தனமாக தொடர்ந்து வேலை செய்ய ஒரே ஒத்த மனது உடையவர்களை உருவாக்குவது என்பது இனி வரும் காலங்களில் இயலாது அந்த சாம்ராஜ்யம் அப்போதே முடிந்தது.

 ஒரே மாதிரியான எண்ணங்களை உருவாக்கக்கூடிய அந்தத் திட்டத்தை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம். இப்பொழுது நமக்கு தெரிந்திருக்கும் பள்ளிகளின் கற்றல் முறையானது காலாவதியான முறையாகும். இப்பொழுது உள்ள கல்வி முறை தவறானது அல்ல அது சிறந்த முறையில் உருவாக்கப்பட்டது. இருப்பினும் அது பழைய முறை இனி நமக்கு தேவை இல்லை என்பதே சுகேத் மித்ரா அவர்களின் கருத்து. 

இந்த நவீன உலகத்தில் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டது. யாரும் கைகளில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. கணக்குப் போட வேண்டிய அவசியம் இல்லை. அனைத்தும் கணினியின் உதவியோடு முடிக்கப்படுகிறது. நமது எதிர்காலத்தில் எந்த மாதிரியான வேலைகள் இருக்கும் என்பதை கணிக்க இயலாத ஒன்று. இப்பொழுதே சிலர் எப்பொழுது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்பவர்களை காண முடிகின்றது. அதற்கேற்றாற் போல் தற்போதைய பள்ளிகள் எப்படி மாணவர்களை உருவாக்கப் போகிறார்கள். சுகேத் மித்ரா அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு சில மாணவர்களுக்கு கணினி சார்ந்த வகுப்புகளை எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பணிபுரிந்த இடத்திற்கு மிக அருகில் ஒரு கிராமப்புறம் இருந்தது. அங்குள்ள குழந்தைகள் எப்படி கணினி கற்பார்கள் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அப்பொழுது சில பணக்காரர்கள் அவர்களின் வீடுகளில் கணினி மற்றும் இணைய வசதி இருக்கும். அவர்கள் தங்களது குழந்தைகளை மிகவும் பெருமையாகவும் அறிவாளிகள் எனவும் கூறுவார்கள். அது எப்படி பணக்கார வீட்டு குழந்தைகள் மட்டும் அறிவாளிகளாகவும் புத்திசாலிகளாகவும் இருக்க முடியும். 

ஏழைகள் என்ன தவறு செய்தார்கள் என தோன்றியதன் விளைவாக அவருடைய அலுவலகத்திற்கு முன்புள்ள சுவற்றில் ஒரு துளை இட்டு அதில் ஒரு கணினியைப் பொருத்தி அங்கு என்ன நடக்கிறது என்பதை கவனித்தார். அங்குள்ள குழந்தைகளுக்கு கணினி என்றால் என்னவென்றே தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. இணையமும் தெரியாது. அங்குள்ள குழந்தைகள் ஓடிவந்து அவரிடம் இது என்ன என்று கேட்டனர். இவர் தெரியாது என பதிலளித்தார். அதற்கு குழந்தைகள் இதை ஏன் இங்கே வைத்தீர்கள் என்று கேட்டனர். அதற்கு சும்மா என்று பதில் சொன்னார். மீண்டும் அக்குழந்தைகள் நாங்கள் அதனை தொடலாமா என்று கேட்டதற்கு உங்களுக்கு விருப்பம் இருந்தால் பாருங்கள் என்று கூறி சென்று விட்டார். சுமார் 8 மணி நேரம் கழித்து குழந்தைகள் தானாகவே கணினியின் இணையத்தில் உலாவிக் கொண்டிருந்தனர்.

 இது எப்படி சாத்தியம் என தன்னுடன் பணிபுரிந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, அவருடன் வேலை செய்தவர் உங்களின் மாணவர்கள் யாராவது இதை உபயோகிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்திருக்கலாம் என்று கூறினார். அதன் பிறகு எந்த பொறியாளர்களும் நடமாட்டம் இல்லாத ஒரு கிராமப் பகுதிக்கு சுமார் 300 மைல்கள் கடந்து டெல்லியில் இதே மாதிரி ஒரு கணினியை வைத்துவிட்டு இரண்டு மாதங்கள் கழித்துச் சென்று பார்த்த பொழுது அந்த கணினியில் குழந்தைகள் தானாகவே இயக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி இன்னும் வேகமாக இயங்கக் கூடிய processor மற்றும் mouse வேண்டும் என்றனர். அதற்கு சுகதமித்ரா அவர்கள் இவற்றையெல்லாம் நீங்கள் எங்கு கற்றுக் கொண்டீர்கள் எப்படி கற்றுக் கொண்டீர்கள்? என கேட்டதற்கு அவர்கள் அந்த கணினி ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதால் நாங்கள் ஆங்கிலத்தை  முதலில் கற்றுக் கொண்டு இதனை இயக்குகிறோம் என்று கூறினர்.

   முதன்முதலாக தானாகவே கற்றல் என்ற வார்த்தையை குழந்தைகளிடம் இருந்து கேட்டு ஆச்சரியமடைந்தார். இவ்வுலகில் பல்வேறு நாடுகளிலும் இதே ஆராய்ச்சியை செய்து தாமாகவே கற்றல் முறையை கண்டறிந்தார். அனைத்து குழந்தைகளும் தாமாகவே கற்றுக் கொண்டன அதன் பிறகு சுகேத் மித்ரா அவர்கள் அடுத்த ஆய்வின் வேறு பிற முயற்சி செய்தார். எடுத்துக்காட்டாக ஆங்கில உச்சரிப்பு வார்த்தைகளை வைத்தார் தென்னிந்தியாவில் ஒரு பகுதியை சேர்ந்த மக்களிடம் நீங்கள் கூறுவதை அது சரியாக அச்சிடும் வரை நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள் என்றார் தற்போது அந்த ஊரில் ஒரு பெண் நல்ல சரளமாக ஆங்கிலத்தில் பேச கற்றுக்கொண்டு ஒரு கால் சென்டரில் நல்ல வேலை செய்கிறார்.

 வருங்காலங்களில் நாம் பள்ளிக்கு செல்லும் தேவை இருக்காது எந்த தகவல் வேண்டுமென்றாலும் சில நொடிகளில் தெரிந்து கொள்ள இயலும் அறிதல் என்ற உணர்வே நம்மை குரங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

 ஊக்குவித்தல் என்பது ஒரு சாவி நமது மூளையானது நடு புரணியில் அதிர்வை உணரும்போது வேலை செய்வதை நிறுத்திக் கொள்கின்றன அதுபோல தண்டனை மற்றும் தேர்வு ஆகியவை அச்சுறுத்தல் செயலாகவே காணப்படுகிறது. நாம் நம் குழந்தைகளை அச்சுறுத்தி அவர்களின் மூளை வேலை செய்வதை நிறுத்திய பிறகு, நாம் அனைத்து குழந்தைகளுக்கும் வேலை செய்.. வேலை செய்… என்று கூறுகிறோம், நாம் அவர்கள் கூறியபடி வாழ்ந்தால் தேர்ச்சி அடைந்தவர்கள். ஒருவேளை அப்படி இல்லை என்றால் நாம் தோல்வி அடைந்தவர்கள். இத்தகைய திட்டமும் அமைப்போம் முன்பொரு காலத்தில் தேவைப்பட்டிருந்தது ஆனால் அந்த காலம் எப்பொழுதே முடிவடைந்து விட்டது. நமது படைப்பாற்றலுக்கு என்னவாகிவிட்டது, நாம் அதனை திருப்பிக் கொண்டு வர வேண்டும் அச்சுறுத்தலை மாற்றி மகிழ்ச்சியாக கொண்டு வர வேண்டும் கற்றலை மகிழ்ச்சியாக செய்ய வேண்டும். 

தென்னிந்தியாவை சேர்ந்த ஒரு பகுதியில் குழந்தைகள் அனைவரும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை சென்று பார்த்த போதும் ஜீரோ மதிப்பெண்களே பெற்றுக் கொண்டிருந்தனர். பிறகு அவர்களுடன் விளையாடும் ஒரு 21 வயது பெண்ணிடம் நீ குழந்தைகளுடன் இரு, அவர்களை உற்சாகப்படுத்து, அவர்கள் எது செய்தாலும் நீங்கள் நன்றாக செய்கிறீர்கள் என்று உற்சாகப்படுத்து, என்று அறிவுரை கூறிய  அடுத்த இரண்டு மாதம் கழித்து சென்ற போது அக்குழந்தைகள் சுமார் 50% அளவிற்கு மதிப்பெண்கள் அதிகப் பெற்றனர். இதன் மூலமாக மித்ரா அவர்கள் குழந்தைகளுக்கு உற்சாகப்படுத்துவதின் மூலமாகவும் ஊக்குவிப்பதின் மூலமாகவும் தாமாகவே கற்றல் முறையை இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என எண்ணி இம்முறையைக் கையாண்டார்.

 நாம் ஒருவேளை கல்வியை சுயமாக கற்க அனுமதித்தால் அக்கல்வி கற்றல் தானாகவே நிகழும் இது கற்றலை நடத்துவதை பற்றியது அல்ல கற்றலை நடக்க விடுவது. எந்த ஒரு வீட்டிலும் சுய ஒழுங்கமைக்கப்பட்ட சூழல் (Self organized learning environment) மிக அவசியமாகிறது. இதன் மூலமாக குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே கூட கற்க இயலும் (broadband+ collaboration +encouragement=self organised learning environment) அதுமட்டுமின்றி அவரது ஆராய்ச்சிகளின் முடிவில் ஒரு குழந்தைக்கு ஒரு கணினி என்பதனை விட நான்கு குழந்தைகள் ஒன்றாக சேர்ந்து ஒரு கணினியை உபயோகித்து கற்கும் பொழுது அவர்களிடம் கற்கும் ஆர்வம் அதிகரித்திருப்பதாக அவரது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். நமது எதிர்காலத்திற்கான கல்வி முறையானது தாமாகவே  கணினி வழி கற்றல் ஆகும்.

தொழில்நுட்பத்தின் மூலம், குறிப்பாக இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களை, குழந்தைகள் தாமாகவே கற்றுக் கொள்ள முடியும் என்பதற்கான ஆதாரத்தை மித்ரா வழங்கினார். குழந்தைகளின் ஆர்வமும் கேள்வியும் சிறந்த ஆசிரியராக அமையும். குழந்தைகள், சந்தேகம் மற்றும் ஆர்வத்தின் மூலம் தங்களின் அறிவை மேம்படுத்துகிறார்கள்.

ஆசிரியர்களின் முறைவழி கற்றலுக்கு மாற்றாக, மித்ரா குழந்தைகள் சுதந்திரமாக கற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்க முக்கியத்துவம் அளித்தார். குழந்தைகள் அவர்களின் சுற்றுப்புற சூழலைப் பயன்படுத்தி அறிவைப் பெற முடியும்” என்பதை உலகளாவிய கல்வியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. குழந்தைகள் குழுவாக இணைந்து, கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை தேடுவதற்கான திறனைப் பெறுகின்றனர்.  ஆசிரியர்களின் கடுமையான கட்டுப்பாடுகளைத் தவிர்த்து, குழந்தைகள் அவர்களுடைய சொந்த முடிவுகளைக் கொண்டு கற்றலுக்கான சூழலை உருவாக்குகின்றனர். உலகின் ஏழை மற்றும் தொழில்நுட்ப வசதியற்ற பகுதிகளில் “School in the Cloud” திட்டத்தை முன்மொழிந்தார். இது இணைய தளம், தொலை கல்வி, மற்றும் தன்னிச்சையான கற்றல் சூழல் ஆகியவற்றின் வழியாக கற்றலை மேம்படுத்துகிறது.சுகேத் மித்ரா உருவாக்கிய தன்னிச்சை கற்றல் முறை, கல்வித் துறையில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்நுட்பத்தின் மூலம் கல்வியினை அனைவருக்கும் அடையக் கூடியதாக மாற்றும் அவரது முயற்சிகள், வறுமை பாதித்த மற்றும் இயல்பான பள்ளிகளுக்கு அணுகாத குழந்தைகளுக்கு ஒரு புதிய கற்றல் வடிவத்தை வழங்குகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *