வன ரட்சிக்

          தேன் காடு என்கிற மலை கிராம பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்கள், அவர்களது ஒரு முக்கியமான கொண்டாட்ட நாளில், அவரவர் பாரம்பரிய உடை அணிகலன் எல்லாம் அணிந்து ஆனந்த கலியுடன் அந்த ராத்திரி சாம கால சடங்கு பூஜையை தன் குல தெய்வமான வனரட்சிக்காக ஆராவாரத்துடன் கொண்டாட ஊரே ஒன்று கூடி சென்றனர். 

ஊர் எல்லையில் ஒரு பெரிய அடர்ந்த குகைக்கு நடுவே வன ரட்சிக்கு பெரிய உருவ சிலை வடிக்கபட்டிருந்தது. மெலிந்த பெண் உருவம், சிவப்பு நிற புடவை அணிவித்திருந்தது, கோர முகமும் கூர் பற்களும் மற்றும் தலையில் காஷ்மீர் மான் போன்ற பிளவுகள் பட்ட கொம்பும் உடையவள் வனரட்சி, அவளுக்கு முன்னால் ஒரு சிரிய கிணறு வெட்டி அதில் அக்னி ஜுவாலையாய் திகுதிகுவென எரிய நெருப்பு மூட்டப்பட்டிருந்தது, நாம் குகை சுவற்றுக்கு ஓரமாய் ஒளிந்துக் கொண்டு பார்க்கலாம். அந்த அக்னி ஜுவாலையின் தீயும் புகையும், நம் கண் நாசி உறுத்தி எரிச்சலடைய செய்யும். அப்படிப்பட்ட குகையில் அந்த பழங்குடியின மக்கள் தங்கள் சடங்கு சம்பிரதாயங்களை செய்து வழிப்பட்டு மகிழ்ந்தனர், குகை நுழைவு வாயிலை அடைத்து விட்டனர், பின் எல்லோரும் கையில் ஏதோ பச்சயம் வைத்திருக்கின்றனர், அது என்ன?? கொஞ்சம் உத்து பார்க்கலாம், அது விஷம்!!

அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர், புன்னகைத்தனர், பருகினர், கைக்கோர்த்து வட்டமாக நின்றுக்கு கொண்டனர், அனைவருக்கும் முன்னால் தக தகவென எரியும் அக்னி கிணற்றுக்குள் முதலில் அந்த மூத்த குல மூதாட்டி விழுந்தாள் பின் அனைவரும் பிரவேசித்தனர். அந்த குகைக்கு மாற்றுப்பாதை ஒன்றுண்டு, ஒரு பெரிய ஆலமரத்து விருட்சம் அதன் அடியில் ஓநாய் புகுமளவு பொந்து, அங்கிருந்து அந்த கோர உருவ சிவப்பு புடவை பெண் தலைவிரி கோலமாக மான் கொம்புடைய வனரட்சி, தனது கை கால் அனைத்தையும் ஊன்றி நடந்து வெளியே வந்து காடே அலர கதறுகிறாள், இப்படியாக துவங்குகிறது ஓடிடி தளத்தில் வெளியான “இன்ஸ்பெக்டர் ரிஷி”.

யார் இந்த பழங்குடியின மக்கள், வனரட்சி என்பவள் உண்மைதானா? இங்கே நடக்கும் தொடர் கொலைக்கும் ரட்சிக்கும் தொடர்பு இருக்குகிறதா?  இதையெல்லாம் ஆராய்ந்து ஆய்வு நடத்தி, தனது புலன் விசாரனையில், இந்த காட்டின் மர்மங்கள் என்ன, என்பதனை கண்டறிந்தாரா நமது இன்ஸ்பக்டர் ரிஷி என்பதை பற்றி பத்து தொடராக தொகுத்து வழங்கி இருக்கிறார் ஜெ.எஸ்.நந்தினி.

கதை அதன் போக்கில் சுவாரஸ்யம் குற்றாத வகையில், பலதரபட்ட மக்களை, அவர்களின் பிரதி பிம்பமாக உணர்த்துகிறது, ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட கதையுடன் ஒருவர் மற்றொருவருடன் பயணிக்கும் கதையினை ரெண்டவது கட்டமாகவும், திருப்புமுனைகளுக்கான மூன்றாம் கட்ட இணை கதைகளை கையாண்டிருக்க கூடிய விதம் பாராட்டுதற்குறியது. 

பின் குறிப்பு: சில சலிப்பு தட்டும் காட்சியங்களும் இங்குண்டு, அவை நறுக்கப்பட்டிருந்தால் நச்சென்று எட்டு தொடர்களுக்குளே முடிந்திருக்கக் கூடும், ஒரு உதாரணமாக ஆணாக தன்னை உணர்ந்து பெண்ணாக வாழும் போலிஸ் சித்திராவின் காதல் கதை, அதற்கு அவ்வளவு நீளம் தேவைபடவில்லை கதையின் போக்கை கெடுக்க வேண்டும் என்றே நந்தினி சதி செய்திருப்பாறோ? என எண்ணத் தோன்றுகிறது. LGBTQ-வை சப்போர்ட் செய்யலாம் தவறில்லை, அது அவரவர் சுதந்திரம், இங்கு திணித்தது போல் உணர்வு, அவை காட்சிப் படுத்தாவிட்டாலும் அவை கதையை எந்த விதத்திலும் பாதிக்கப்போவதாய் என்னால் சொல்ல முடியவில்லை. அந்த காட்சிகள் தேவையற்ற ஆணிதான். (சாரி டைரக்டர் மேடம் உங்களால நானும் இந்த ஒரு பத்திக்காக கதை களம் விட்டு வெளியேறிவிட்டேன் வாசகர்களும் மன்னிக்கவும்), இப்போது கட்டுரைக்குப் போகலாம். 

வன ரட்சி

வன ரட்சியின் உருவத்தை முன்பே வருணித்துவிட்டோம், அவளை பற்றின இன்ன சில குறிப்புகள் காணலாம், அவள் ஒரு வன தேவதை என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம், ஆனால் தேவதை என்பதனால் சாதுவாக இருப்பவள் என்றோ வரங்கள் அல்லி வழங்குபவள் என்றோ நினைக்க வேண்டாம், அவளது ஒரே குறிக்கோள் காட்டைக் காப்பது, தவறு செய்பவனை கண்டால், தனது ஆக்ரோஷம் மொத்தம் கொட்டி தீர்பவள், இடையே யார் வந்தாலும் அழித்து விடுவாள்.

சாத்தானின் வேடம் பூண்டு தன் இலக்கான காட்டை ரட்சிப்பதே ரட்சி போன்ற உப தேவதைகளின் வேலை, இவர்களுக்கு பூமியிலும் சுகம் கிடைக்கப்படவில்லை சொர்கத்திலும் இடம் கிடைக்கப்படவில்லை. என்கிற (கட்டு)கதைகளை மூளையின் ஒரு ஓரத்தில் வைத்துக்கொள்வோம்.

முக்கியக் கதாபாத்திரங்கள்

கதையின் நாயகன் ரிஷி, சி.பி.சி.ஐ.டியில் புலன் விசாரனை அதிகாரி, எதையும் மாறுபட்ட கோணத்தில் அணுகக் கூடியவன், ஒரு துப்பாக்கிச் சூட்டு விபத்தில் தனது ஒரு கண்ணையும் காதலியையும் இழந்து விட்டு அவளது பிசாசு நினைவுகளுடன்(ஹலிசினேஷனுடன்) வாழ்கிறான், அப்படி அவன் மனநலம் பாதிக்கபட்டப் போதிலும் அவன் தனது நுண்ணறிவுப் பங்களிப்பை காவல் துறைக்குத்   தந்துக் கடமையாற்றிக் கொண்டிருப்பதால், சிறப்பு பரிந்துரையின் பேரில் தேன் காட்டின் கொலை வழக்கை கண்டறிய களம் இறங்கி இருக்கிறார் ரிஷி.

ஐய்யனார், தனது உயரதிகாரியின் பணிநிறைவுக்கு பின் தனக்குதான் இன்ஸ்பெக்டர் பதவி வரப்போகிறத்து என்கின்ற நிலையில், ரிஷி வந்ததும் உயர் பதவி கிடைக்காத விரக்திக்கும், அவனது 80 வயது பாட்டி இறந்து போனதுக்கும் அவனது காதல் மனைவியின் அஷ்டம சனிதான் காரணம் என வீட்டார் சொல் கேட்டு மூட நம்பிக்கைகளில் மூழ்கி போயும், மனைவியின் மீது உள்ள காதலையும் விட முடியாமலும் தவிக்கிறான். மீண்டும் அவளுடன் ஒன்று சேர அவளுக்கு தோஷ பரிகாரங்கள் செய்திட என்ணுகிறான். வனரட்சியை அமானுஷ்யமாக கருதும் புலனாய்வாளராக இருக்கும் ஒரே போலிஸ் அதிகாரி இவன்.

சித்திரா, இணை புலனாய்வு அதிகாரி தன்னை ஒரு ஆணாகவே உணர்ந்து உருவத்தில் பெண்ணாகவும் ஐயனார் இழுத்த புகையை இவள் விடும் அளவுக்கு நண்பனுக்கு நண்பியாகவும் தைரியத்தின் உருவமாக எந்த சவால்களையும் எதிர்கொள்பவளாகவும், தனது கல்லூரி தோழியை காதலித்து அவள் விடுப்புக்கு இவள் வீட்டுக்கு புடவையுடன் வந்த போது அதை பிடிக்காமல் அணிந்து அங்கே முத்தம் கொடுத்து மாட்டி அழுது பிரிந்து மீண்டும் நட்பு தொடர்ந்து, பின் வேலையில் தன்னை முழுவதும் அர்ப்பணித்துக் கொள்வாள்.

சத்தியா, ஃபாரஸ்ட் ரேஞ்ஜர், பாலக்காட்டிலிருந்து வந்த இயற்கை ஆர்வலர், யானை குருவிகளுக்கு தன் எண்ணத்தை உணர்த்தி பேசும் அளவு வல்லுனன், இந்த பெரிய காட்டை தன் சிரைமேற் சுமந்து பாதுகாக்கிறான், ராஜ நாகத்துக்கு தாகமெடுத்ததை உணர்ந்து தண்ணீர் கொடுப்பான், வன விலங்கை கடத்துபவர்களை பிடிக்க முற்படுகையில் மாட்டிக் கொண்டு உயிரையும் விடும் அளவுக்கு அடிவாங்கிய பின்னும் “புலிக் குட்டி குழந்தை மாதிரி” என கூறி கதறி அழுது நம் நெஞ்சை உருக்குகிறான், வன ரட்சியை நம்பாத இரண்டாவது ஆள் இவன்.

கேத்தி என்கிற கேத்திரின், தனது பாலிய காலத்தை அனாதை இல்லத்தில் கழித்து கற்று தேறி ஆசிரியையாகி பின் காட்டின் காவல் துறை அதிகாரி பணிகிடைத்து தேன் காட்டுக்கு வந்தவள், வன ரட்சியை இரண்டு முறை நேரில் பார்த்ததற்கு கதைக்கு முக்கிய அணிகளனாகி பின் ரிஷிக்கு காட்டு பயணங்களுக்காக உதவியாளராக சேர்ந்து, பிறகு அவனுக்கு தெரியாமலே அவனது நினைவில் வாழ்ந்துக் கொண்டிருக்க கூடிய அகோர பிசாசினி காதலியை தன் மூலிகை தேனீரால் விரட்டி அடித்து, அவள் இடத்துக்கு இவள் ரிஷியின் வாழ்க்கைக்குள் வந்தவள். முதல் முறை ரட்சியை பார்த்ததை எவரிடத்தும் ஒப்புக் கொள்ளவில்லை பிறகு இரண்டாவது முறை பாதிக்கபட்டதை ஒப்புக்கொண்டாள்.

இர்பான் சத்தியாவுக்கு அண்ணன் மாதிரி, சத்தியாவின் துணை அதிகாரி ஆன போதிலும் இர்பான் சொல்லும் சில அறிவுரைகளை சத்தியா கேட்டுக் கொள்வான் சத்தியா இட்ட வேலைகளை இர்பான் தட்டாமல் செய்வான். இர்பான் சத்தியாவின் அப்பா வன அதிகாரியாய் இருந்தப் போதிலிருந்தே இருவருக்கும் அறிமுகம் இருந்து, சத்தியாவின் அப்பாவுக்கு அவன் வளர்ப்பு மகன் என்கிற உண்மை இர்பானுக்கு மட்டுமே தெரியும். விலங்கு கடத்தும் கும்பலிடம் சத்தியாவுடன் சேர்ந்து மாட்டிக் கொண்டு இறந்து போய்விடுவார்.

நாடகக் கலைஞர் செல்வி, அவள் கைவினைப் பொருட்கள் செய்து விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறாள், ஊர் தலைவரின் மகள், அவளது நாடகத்துக்கு முட்டுகட்டைப் போட்டு கையாளாக ஒருவனக்கு கல்யாணம் செய்து வைத்ததால் வீட்டில் சண்டைப் போட்டு தனியாக இருக்கிறாள், வன ரட்சியின் உருவ பொம்மை இவளிடம் மட்டுமே கிடைக்கும், இவள்தான் வன ரட்சியோ என்கிற சந்தேகம் ஆரம்பத்தில் வந்து போகும்.

யமூனா, சித்த மருத்துவரின் மகள், அவளும் சித்த மருத்துவர்தான் ஐய்யனாரின் துரதஷ்ட மனைவி, அவனை நம்பி வீட்டை உதறி மணம் முடித்து பின் ஐய்யனார் பெற்றோர்களால் ஜாதகப் பிழையை காட்டி விரட்டியடிக்கப்பட்டு, மீண்டும் அப்பாவிடமே தஞ்சம் கொண்டவள், அப்பா சேர்த்துக் கொண்டாலும் முகம் காட்டிப் பேசிய பாடில்லை, கானக பழங்குடியின மக்களையும் அவர்களது மருத்துவ குறிப்புகளை அறிந்தவள், இவளது அப்பவின் ஆய்வுக் கட்டுரைகளில் கானகர்கள் தேன் காட்டின் மூலிகைகள் நிறைந்து இருக்கும்.

பிறகு, பிறகென்ன உண்மையா பொய்யா என்று புரியாமலே தொடர் நெடுக வரும் வனரட்சியும் ஒரு முக்கிய கதாப்பாதிரம் தான்.

முதல் கொலை

முதல் கொலை, ராபர்ட் வன விலங்கு புகைப்பட கலைஞர், ஒரு நாள் இரவில் ராபர்ட், அதிகாரிகளின் துணையின்றி அவர்களிடத்தில் முறையே எந்த அனுமதியும் பெறாமல் நடுராத்திரி காட்டில் புகைப்படம் எடுக்கச் சென்றான், மறு நாள் காலையில் அங்கே ரோந்து வந்த திருநங்கை ஃபில்ட் ஆஃப்பிஸர் புனிதா அங்கே கடத்தப்பட்ட மரங்களைக் கணக்கெடுக்க சென்ற போது அந்த இறந்த பிரேதத்தைக் கண்டார், ஒரு பெரிய மரத்தின் விருட்சத்தில் பொருத்தப்பட்டிருந்தது. பிறகு ஐய்யனாருக்கும் சித்ராவுக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தேவையான குறிப்புகள் ஆதாரங்களை சேகரித்து கொண்டு க்ரைம் சீனை ஸ்பொட் செய்து போன பிறகு ஹிரோ என்ட்ரி, ரிஷி வந்தான். அந்த க்ரைம் சீனைப் பற்றிய இருவரின் அணுகுமுறைக் கேட்டு தெரிந்து பின் புலன்விசாரனையை துவங்குகிறான்.

ராபர்ட் இருதயம் செயலிழந்து இறந்திருக்கிறான். ஆனால் இரத்தப் பரிசோதனையின் எந்த விஷமும் கலந்திருப்பதாய் தெரியவில்லை, அவனை சுற்றி சிலந்தி, பட்டுப் பூச்சி கட்டுவது போல அவ்வளவு பெரிய இழை கூடு கட்டப்பட்டிருந்து. அது செயற்கையான கூடும் அல்ல, இயற்கையாக பூச்சியின் எச்சத்தால் கட்டப்பட்டவைதான், பிரேதம் கிடந்த மரத்தை சுற்றி விஷம் நிறைந்த மஞ்சள் அரளிப் பூ காண முடிகிறது. ஆனால் மூன்று மைல் தொலைவில் அரளிச் செடி கிடையாது.

ராபர்ட் சென்றுவந்த இடத்தில் எல்லாம் விசாரனையை மீண்டும் நடத்துகையில் புதிய துப்பாக அப்துல் மாட்டிக் கொண்டான். முதலில் மறுத்தும் பின் ஒப்புக் கொண்டான், ராபர்ட் தினமும் உணவுக்காக செல்கிற ஓட்டலில் ஊழியன் அப்துல், ராபர்ட்டை இறுதியாக பார்த்தது அப்துல்தான், ராபர்ட்டுக்கு அந்த இரவுக்கான உணவை கொண்டு சென்றிருந்தான். திடிரென வித்தியாசமான மிருக சத்தம் கேட்டதும், திரும்பிப் பார்த்தால் “வனரட்சி”. ஓடி வந்துவிட்டதாகவும் ராபர்ட் மாட்டிக் கொண்டதாகவும் வாக்குமூலம் கொடுக்கிறான். வனரட்சியை பார்த்ததாக நமக்கு கிடைக்கும் முதல் சாட்சி அப்துல் தான். 

இப்படி கொலையின் அனாட்டமி இயற்கையாக நடந்ததா? இல்லை திட்டமிட்டு நடந்த சதியா குழுவாக சேர்ந்து கொலை செய்து வன ரட்சி மீது பழி போடுகிறார்களா? இல்லை வன ரட்சியே இதை செய்தாளா? என பல தரப்பட்ட கோணத்தில் புலன் விசாரணை நகர்கிறது. மக்களில் சிலர் பார்த்ததாக சொல்கின்றனர், பல ஆய்வாளர்கள் கட்டுரைகளை வெளியிட்டுருக்கின்றனர். சடங்கு சம்பிரதாயங்க்கள் நம்பும் ஐய்யனாருக்கு திக்கென்றே இருக்கிறது. ஆனால் ரிஷி இதை கொலை என்ற கண்ணோட்டதில் மட்டுமே அணுகுகிறான்.

இது போல் இதற்கு முன் நடந்ததா! என கண்டறிய முற்பட்ட போது, ஐந்து வருடங்களுக்கு முன் லாரி ஓட்டுனர் பாலா இதே போல இறந்திருகிறார். ஆனால் அவனுக்கு நடந்தது விபத்து, பாலா லாரியின் கண்ணாடி உடைத்துக் கொண்டு மரக்கிளையில் செருகி இறந்து பின் அதே போல பூச்சிகளால் கட்டப்பட்ட கூடுக்குள் இருந்தான். அவன் நெஞ்சு வலியால் இறக்கவில்லை,ஓட்டுனரின் மனைவியின் இடம் விசாரிக்கையில் “அவன் இறப்பது கொஞ்ச நாள் முன் வரை எதையோ கண்டு பயந்ததாகவும் அவனை ரட்சி இம்சித்ததாய் புலம்பியதாகவும் சொல்கிறாள். 

இது நிச்சயம் ஒரு தொடர் கொலையாகக் இருக்கக் கூடும் என்கிற ஐயம் ரிஷிக்கு  தோன்றுகிறது.

இரண்டாவது கொலை

     தேன் காட்டின் கிராமப்புற இடங்களில் சரியான சாலை வசதி இல்லாத காரணத்தால் அங்கிருந்து டவுன் செல்ல போக்குவரத்து வசதி சரிவர இல்லை. அதனால் காலையில் நேரமே பிரவசகால பரிசோதனைக்கு டவுனில் உள்ள சுகாதர மையத்துக்கு சென்ற சங்கீதா அங்கே டோக்கன் தாமதமானதால் பரிசோதனை முடித்து வீடு திரும்ப நேரமாகிப் போனது, சங்கீதாவுக்கு துணையாக தனது அக்கா மகள் அழைத்து சென்றிருந்தாள்.

வரும் போது… “வயித்து புள்ளகாரி தனியா இந்த நேரத்துல வரலாமாம்மா கையில இரும்பாவது வெச்சிக்கோ ரட்சி வயித்து புள்ளகாரிய பாத்தா விடமாட்டா புள்ளய எடுத்துக்குவா” என்கிறாள் என்பதை தாண்டிய மூதாட்டி ஒருத்தி. பயம் தொற்றிக் கொண்டவளாய் அவளை கடந்து, அக்கா மகளை அவளது வீட்டில் கொண்டு போய்விட்ட பின்னே தனியாக அங்கே கையில் கிடைத்த இரும்பை கொண்டு வீடு நோக்கி செல்கிறாள் சங்கீதா.  கிழவியின் வார்த்தை மனதில் ரீங்காரம் அடிக்க தன்னந்தனியாக அந்த காட்டு பாதையில் நடந்து செல்கையில் வினோத உணர்வு ஏற்பட திரும்பிப் பார்த்தாள் பின்னால் மரக்கிளையில் ரட்சி.

பதறியடித்து ஓட்டமும் நடையுமாக வீடடைந்தாள், கணவன் ஏகாம்பரம் மது அருந்திவிட்டு நிம்மதியாக உறங்கி கொண்டிருகிறான், ரட்சியின் சலங்கை வீட்டுக்கு வெளியே ஒலித்துக் கொண்டிருந்தது. கடவுளை கும்பிட்டு ரட்சியை போக சொல்லி கெஞ்சிக் கொண்டிருந்த சமயத்தில் யாரோ ஓட்டின் மீது ஏறி ஏகம்பரத்தின் அரையில் குதித்து உள் தாழிட்டதை உணர்ந்த சங்கீதா உடனே உளக்கை எடுத்து ஓங்கி அடித்து உடைப்பதற்குள் ஏகாம்பரத்தை தூக்கி சென்று விட்டார்கள். சங்கீதா மயக்கம் போட்டால், பிறகு ஏகாம்பரத்துக்கு முன்னால் வனரட்சி. 

மறுநாள் காலையில் ரிஷி, ஐய்யனார் சித்திரா, லோக்கல் போலிஸ், பிறகு வனத்துறையினர் எல்லோரும் ஒன்று சேர்ந்து மோப்ப நாய்கள் கொண்டு ஏகாம்பரத்தை காப்பற்ற முயற்சிக்கும் போது விலங்கு பறவை எல்லாம் கலந்து கத்தும் சத்தம் ஒலித்தது நாய்கள் பயந்தன.சத்தம் வந்த பாதை நோக்கி ரிஷி சென்றான். பார்த்தால் அதே கொலையின் அனாட்டமியில் ஏகாம்பரம் இறந்திருந்தான்.

ஏகாம்பரம் ஒரு ரோடு காண்ட்ராக்ட்டர் ஆவார். காட்டில் இருபத்தி ஐந்து கிலோ மீட்டர்கள் ரோடுப் போட டெண்டர் எடுத்திருப்பான், பாவம் இப்போது சடலமாய் கிடக்கிறான்.

உடனே பிரேத பரிசோதனைக்கு கொண்டுப்போய் பார்த்தார்கள் அங்கே ஏகாம்பரத்தின் வாயில் இருந்து மொத்தமாக லட்ச கணக்கான பூச்சிகள் வெளி வந்தன, அந்த பூச்சியை, பூச்சிகள் ஆராய்ச்சி செய்யும் நிபுனரிடம் தொடர்புக் கொண்டு பார்த்தார்கள், இது ப்ரேயிங்க் மாண்டீஸ் எங்கிற பூச்சி வகையை சேர்ந்த வெட்டு கிளி இனம் எனவும் பிணத்தின் மீது இவைதான் கூடு கட்டியது இவைதான் என்பதும் உறுதியாகிறது. 

பூச்சியை விலங்கு பறவைப் போல பயிற்சியளிக்க முடியாது, பிறகு எப்படி அவை பிணத்தின் மேல் சரியாக வந்து கூடுகட்டுகின்றன என ஐய்யனார் கேட்கயில் சில படங்களை உதாரணம் காட்டி அப்படியும் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றாள் சித்திரா, ஆனால் படம் என்பது கட்டுபாட்டு சூழலில் எடுக்கக் கூடியது. அது அங்கு சாத்தியம்தான், ஆனால் வெட்டவெளியில் சாத்தியம் இல்லை என்கிறார் ஆராய்ச்சியாளர், பின் ரிஷி ஏதேனும் வாசனைக்கு அவை வினையாற்றுகினவா? எனக் கேட்டான். ஆராய்ச்சியாளர் அதை சோதித்துச் சொல்கிறேன் என்றார்.

மூன்றாம் கொலை

            ரத்தினம், டீ எஸ்டேட் முதலாளி கடந்த இரண்டு தினங்களாக யாரோ தனக்கு பில்லி சூனியம் வைத்ததாக எண்ணி தனது மகளின் விளையாட்டு பொம்மையான ரட்சி உருவத்தைக் கண்டு அஞ்சி தீயிட்டு எரிப்பான், அதற்கு பரிகாரம் செய்திடவும் திட்டமிடுவான், இதை ரட்சி மரக்கிளையில் நின்று பார்த்துக் கொண்டிருக்கும், மறுநாள் அலுவலக வேலையை முடித்து விட்டு சாயங்காலம் தாமதமாக கிளம்ப காரில் அமர்ந்து தன் மனைவியிடம் பூஜைப் பொருட்கள் வேண்டுமென பற்றி கேட்டு அறிகிற வேலையில் ரட்சி வந்தாள், தூக்கிக் கொண்டுப் போனாள், மறு நாள் காலையில் ரிஷியின் குழு வந்து பார்த்தனர் அதே அனாட்டமியில் இறந்து கிடந்தார் ரத்தினம்.

கொலை செய்த நோக்கம் பிடிபடவில்லை இறந்த யாருக்கும் ஒருவருக்கு ஒருவர் சம்மந்தப்பட்டவர் இல்லை, இவர்களை இணைக்கும் மையப் புள்ளி தெரியவில்லை. 

ரிஷியின் குழு ரத்தனத்தின் வீட்டுக்கு சென்ற போது அந்த பாதி எரிந்த ரட்சியின் பொம்மையை ரத்தினத்தின் மகள் புதைக்க குழி தோண்டியதை ரிஷி பார்த்து எடுத்துக் கொண்டான். அந்த பொம்மை குறித்து ஆராயும்போது செல்வி அகப்பட்டாள். செல்விதான் அந்த பொம்மையை ரத்தினத்தின் மகளுக்கு கொடுத்திருகிறாள். வீட்டை பரிசோதித்ததில் பழைய இரும்பு ட்ரங்க் பெட்டி கிடைத்தது, திறந்து பார்த்தால் ரட்சியின் உடை அணிகளன்கள், மொத்த கதையும் அவளை நோக்கி பாய்ந்தது, அவள்தான் இந்த தொடர்கொலைக்கு காரணம் ரட்சி வேடமிட்டு கொலைகள் அறங்கேற்றுகிறாள் என்றானது, விசாரித்ததில் இது ரட்சியின் உடைதான் எனவும் தானே செய்ததாகவும் சொல்லி இது கொலை செய்ய நெய்ததல்ல ஊரில் அரங்கேறப் போகும் ரட்சி நாடக்கத்துக்கானது என்கிறாள் செல்வி. 

அது உண்மையா என்று அவளது நாடக குழுவில் சென்று விசாரித்தனர், அது உண்மைதான், மேலும் செல்வி ஊர்த்தலைவரின் பெண் எனவும், வீட்டில் நடந்த மனஸ்தாபத்தால் பிரிந்து வாழ்கிறாள் என்பதும் தெரிய வருகிறது.

அடுத்து வனத்தில் ஆங்காங்கே விலங்குகள் பறவைகள் எல்லாம் ஒரு புறம் அழித்து, யானைத் தந்தம், புலியின் தோல் மற்றும் பல், மான் கொம்பு மற்றும் பலதரப்பட்ட உயர்வகை மரங்களை கடத்திக் கொண்டிருக்கும் சேகர் நான்காவது கொலை, சேம் அனட்டாமி.

இப்படி ஏதோ ஒரு வகையில் காட்டையும் அங்குள்ள விலங்குகளையும் தன்  ஆதாயத்துக்காக அழித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இறந்துப் போகிறார்கள் அனைத்து கொலைக்கும் இந்த ஒற்றுமை இருப்பதை மையமாக கொண்டு தனது புலன் விசாரனை தொடர்கிறான் ரிஷி.

கானகர்கள்

       கானக பழங்குடியினர் இயற்கையோடு இயற்கையாக அதன் போகிலே வாழ்ந்துக் கொண்டிருக்க கூடிய அறிவியலில் முன்னோடியாவர். தனக்கு பசிக்கும்போது மட்டும் தேவையானவற்றை வேட்டையாடி மத்த எல்லா விலங்குகள் மீதும் கருனையும் அரவனைப்பும் கொண்டு பேணிக் காத்தனர்.

அவர்கள் தொகுத்த சித்த குறிப்புகள் இக்கால மக்களிடத்தில் கூட இல்லை, எந்த நோய்கு எந்த மூலிகை சரியாக இருக்கும், எந்த ரசாயன மூலிகை உயிர் குடிக்கும் எந்த மூலிகையை எப்போது சேகரிக்க வேண்டும் எங்கிற எல்லா இயற்கை அறிவும் உள்ளவர்கள்.

அவர்கள் வாழும் பகுதியில் பல கனிம வளங்கள் இருப்பதை அரிந்த அரசாங்கம், அவர்களுக்கு பணம், வேலை, தங்கும் வசதி வேறு இடத்தில் தருகிறோம் இங்கே இடம்விட்டு புலம் பெயற பல முறை அறிவுருத்தியும் அவர்கள் கேட்காததால். 

அவர்கள் மீது விலங்கு வதை குற்றம், கடத்தல், திருட்டுப் போன்ற பல பொய்க் கேஸ் போட்டார்கள். காட்டை காக்க வேறு வழி இல்லாததால் வனரட்சியை உயிர்பிக்க தனது உயிரை நரபலிக்கொடுத்து வனரட்சி முன்னால்    உள்ள அக்னியில் பிரவேசித்து மாய்ந்துப் போனார்கள்.

ஒட்டுமொத்த கதையும் ஒரு புள்ளியில் இனைகிறது

 நாம் முன்பே கணித்ததுப் போல காட்டை நேசிகிறவர்கள்தான் காட்டை அழிப்பவர்களை கொல்கிறார்கள்.

அப்துல், அவனை புலன் விசாரனை செய்தப் போதுதான் முதன்முதலில் ரட்சி பற்றி சொன்னான். அவனை தனது ரேடாரில் வைத்து பின்தொடர்ததில் செல்விக்கும் அப்துலுக்கும் ஏதோ தொடர்பு இருகிறது எங்கிறதை கண்டரிந்தான் ரிஷி.

கேத்ரீன் ரிஷியின் பிசாசினி காதலியை பயன்படுத்தி ரட்சி தன்னையும் கொல்ல வந்ததாக நாடகமாடுகிறாள், ஆனால் அவன் ஏற்க வில்லை எனக்கு இருப்பது ஹலுசினேஷன் தான், உன்னை பயமுருத்த யாரோ சதி செய்திருகிறார்கள் என்பதை தெளிவாக சொன்னதாள் அவளுக்கு முதல் தோல்வி, பின் என்ன? காதல் வலையை பின்னி விட்டாள் பின் பூச்சி வலையில் மாட்டி விடலாம் என முடிவெடுத்தாள், அவளது பிறந்த நாளன்று அவனை கவர்ந்து முத்தம் கொடுகிறாள் அவர்கள் தங்கி இருக்கும் அறையின் உள்ளே சத்தம் கேட்கிறது ரிஷி உள்ளே சென்று பார்த்தான் பரன் மேலே அதே அனாட்டாமியில் வன துறை மேளாலர் டி.ஃப்.ஓ மல்லிகா இறந்து கிடக்கிறாள்.

சந்தேகம் வலுப் பெற்றது கொலையாளிகல் தூரத்தில் இல்லை நம் கண் முன்னே இருக்கிறார்கள் யாரெல்லாம் இங்கே எளிதாக வந்து போக முடியும், நம்மை திசை திருப்ப முடியும், சாட்சிகளை மாற்ற முடியும், இப்படி பட்டக் கோணத்தில் யோசித்து பார்த்தான், கேத்தி வளர்ந்த ஆஸ்ரமத்திற்கு சென்றான் அங்கே முகப்பில் ஒரு புகை படம் இருந்து, அதில் கேத்தி செல்வி சத்தியா எல்லொரும் இருந்தார்கள், முன்பொருமுறை அந்த குகையின் மாற்று பாதையை கண்டறிந்து மரப் பொந்திலிருந்து வெளி வந்துப் பார்திருக்கிறான், அதை வைத்து கானக பழங்குடியினர் எல்லோரும் இறக்க வில்லை அங்கிருந்து சில சிறுவர்கள் குழந்தைகள் தப்பியிருக்க கூடும் என்று அனுமானித்திருந்தான். அது உண்மையாகிற மாதிரி அங்கே அந்த படத்தில் உள்ள குழந்தைகள் இருந்தனர், அனைவரையும் தத்தெடுக்கப்பட்டதை உணர்ந்தான்.

அதை உறுதி செய்ய ஊர் தலைவரிடம் சென்றான், அவர்தான் இந்த குழந்தைகளை காப்பாற்றி    ஆஸ்ரமத்தில் சேர்த்து யாருக்கும் தெரியாமல் இவர்களை ரகசியமாக பார்த்துக் கொல்லும் படி மதர் லீனாவிடம் சொல்லியிருப்பதை கண்டறிகிறான்.

பின் ஐய்யனார் அவன் மனைவி யமுனா சித்திரா இவர்களை அழைத்து அவனது ஆய்வுகளை பகிர்ந்துக் கொள்கிறான், அந்த பெரும் குகைக்குள் இருக்கும் ஓவியங்களில் கானகர் வரைந்த மூலிகை குறிப்புகள் கிடைக்கின்றன, அவற்றை யமூனா ஆராய்ந்து அவர்கள் பயன் படுத்துகிற விஷமும் அதற்கு மாற்று மருந்தும் அறிந்து ரிஷி ஐய்யனார் சித்திராவுக்கு கொடுத்தனுபிகிறாள் யமூனா, 

அவர்கள் மூவரும் செல்வி அப்துலை தேடி கிடக்கவில்லை, தொலைப்பேசியின் அலை வரிசைக் கொண்டுப் போய் பார்த்தால் அங்கே பழைய கட்டிடத்தின் உள்ளே விஷ வாய்வு பொருத்தப் பட்ட சிலிண்டர் உள்ளது அந்த ப்ரேயிங்க் மாண்டீஸ் பூச்சிகளும் சேகரித்து அடக்க பட்டிருந்தது.

ஒரு முழு சிலிண்டர் இங்கிறுந்து எடுத்தை உணர்ந்த ரிஷி அங்கே காட்டுக்குள் கனிமவள சுரண்ட மைனிங் வேலை நடக்கிறது அங்கே இவர்கள் சென்றிருக்கக் கூடும் என அனுமானித்து சென்றால் அங்கே, ரட்சி நாடகம் தொடங்கி இருக்கிறது, உள்ளே உள்ள தொழிலாளர்களை கொல்ல திட்டம், அதை தடுக்க சென்ற ரிஷியின் மீது விஷம் தெளிக்க பட்டு மருத்துப் போக செய்தனர், அந்த நேரத்தில் கானகர்களை வில்லனாகியாக்க வேண்டும் எங்கிற முடிவெடுத்துவிட்டார் ஜெ.எஸ். நந்தினி.

ரிஷியை முந்தின நாளில் கட்டியனைத்து முத்தம் கொடுத்த கேத்திதான் இப்போது ரிஷிக்கு விஷம் தெளிக்கிறாள், கண் இருண்டு செருகும் வேலையிலும் மக்கள் பாவம் விட்டுடிடு அவர்கள் அப்பாவி என சத்தியாவிடம் கெஞ்சுகிறான், கேத்தி பூச்சிகளுக்கான பிரத்தியேக ஃப்ரமோன் வாசனை திரவித்தை தெளிக்கிறாள் இதை முன்னரே ஒரு வகை மரத்தில் கிடைக்கிற ஃபரமோங்களால் பூச்சிகள் இயக்கபடுகின்றன என்பதை ரிஷிக்கு அந்த ஆராய்சியாளர் சொல்லியிருக்கிறார், அவை ரிஷி மீது வந்தமர்ந்ததும் கூடு கட்டத் தொடங்கிற்று. அப்போது சத்தியா காட்டையும் மிருகங்களையும் அழிக்க நினைக்கும் எல்லோரும் சாகப் பட வேண்டியவர்கள் என்பான்.

அப்போ சங்கீதாவின் குழந்தை என்ன பாவம் செய்தது, நீங்கள் பயமுருத்தியதில் அவள் பதறி ஒன்றும் அறியாத ஜீவன் இறந்தே என்று கேட்பான் ரிஷி அதற்கு சத்தியா அது ஒரு விபத்து ரட்சிதான் இதை செய்கிறாள் என்பதற்கு நாங்கள் ஒரு ஆதாரம் விடிவோம் அதில் அவள் பாதிக்க பட்டால் அவளவுதான் என்று சொல்லி வில்லன் ப்ரோ மாக்ஸ் ஆகிறான் சத்தியா, இறகிற தருனத்தில் அல்டிமெட் ஹிரோயிசம் ரிஷிக்கு செல்வி ரட்சி வேடத்தில் வந்தாள், எல்லோரும் மக்களை கொல்ல புறப்பட்டனர், இனி காட்டை யாராவது அழிக்க முற்பட்டால் ரட்சி வருவாள் எங்கிற பயம் இருக்கனும் என சத்தியா சொல்லி செல்வான். 

ரிஷிதான் மாத்து மருந்து வைத்திருகின்றானே, அனைவரையும் காப்பாற்ற மீண்டு வந்து உயிர்பெற்று சத்தியாவுடன் சண்டைக்கு செல்வான் அங்கே ண்டக்கும் விபத்தில் சத்தியா இறந்துப் போகிறான், கேத்தி செல்வி அப்துல் ரத்தினத்தில் தம்பி மற்றும் ஒரு பெண், ஐய்யனார் சித்திராவிடம் பிடிபடுகிறார்கள். கேத்தியும் ரிஷியும் அவர்களின் கசத்துப் போன காதலை பார்த்துக் கொள்கிறார்கள்.

முடிவுரை

ஒரு பழங்க்குடியின அழிவை எந்த வகையில் நியாயம் செய்வதென தெரிய வில்லை, அதற்காக அவர்கள் பழி உணர்வு சாதரன பொது மக்களையும் கொல்ல முற்பபட்டுவதாய் சித்தரித்தது கதைக்கு ஒத்துப் போகாத்ததாக தோன்றுகிறது, கதையின் ஹிரோ ரிஷி நல்லவனாயிருப்பினும் அவன் பின்னால் செல்வ சுரண்டல் பேர் வழிகளை காப்பாற்றவதே அவன் இலக்காக இருக்கிறது, அதை எப்படி இங்கே ஏற்றுக் கொள்ள முடியும்.

இங்கே வெகு ஜன மக்களை பயன் படுத்தி நாட்டின் நன்மைக்கென ஒரு கூட்டத்தை ஒழிக்க நடக்கும் நாடகம் நூறுவருடங்க்களுக்கு மேலாக உலகில் பல்வேறு இடங்களில் நடந்துக் கொண்டுதான் இருகிறது. இவை சரி செய்ய உலகமே ஒன்று கூடி திருந்த வேண்டும்.

இல்லையேல் உலகம் இன்னும் ஆயிரம் வருடம் உயிரோடு இருக்கும் என ஆய்வு சொன்னால், ஐந்நூராம் ஆண்டே சூரியனுக்கு நிகரான தீக் கொல்லி ஆகக் கூடும் இந்த பூமி.

இறுதியாக வனரட்சி உண்மைதானா என்று பார்க்கலாம், சத்தியா அவனது கூட்டாளிகளை திரட்டி இந்தக் கொலை நாடகத்தை நடத்த இரண்டு வருடங்கள் முன்பே ஒன்று கூடியிருக்கிறார்கள், அப்படியானால் ஐந்து வருடத்துக்கு முன் கொல்லப்பட்ட பாலா இந்த கடத்தல் கும்பலுக்கு வேலை பார்த்து இறந்தவந்தான் அது எப்படி என்று ரிஷி கேட்க, அது நிஜமாகவே விபத்தாக இருக்கலாம் அவர்மீது பூச்சிகள் கூடுகட்டியதை, அறிந்த சத்யா அதையே தனது கொலை தொடர்களுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்பாள் சித்திரா இந்த கூற்றை ஆமோதிப்பாள் யமூனா, ஐய்யனார் அது நிஜ ரட்சி செய்ததாக கூட இருக்கலாம் என்பான்.

இந்த கொலைகளை ரட்சி செய்யவில்லை இதற்கு பின்னால் எதோ ஒரு கும்பல் இருப்பதை ரிஷி எப்படி அத்தனை ஆணித்தரமாக நம்பினான் என்றால், இந்த மொத்தக் கதையில் ரட்சியை உண்மையாக பார்த்தது ரிஷிதான்.

ஒரு நாள் ரட்சி அவனை பெரிய மரத்தின் அடியில் அலரி செடி நடுவில் வைத்து பயமுறுத்தியது மயங்கினான், எழுந்து பார்த்தால் தன் அறைக்கு வெளியே நந்தவனத்தில் கிடந்தான் அங்கிறுந்தே அவன் புலனாய்வு வலுப்பெற்றது.

சத்தியா சொல்லியதுப் போல “காட்டை அழிக்க நினைத்தால் வன ரட்சி வருவாள் என்கிற பயம் தோன்றும்”, அங்கே வனரட்சி குகைக்கு நடவே சுவர் மீதேறுகிறாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *