மக்களின் பிரதிநிதியாக ஒப்பற்ற ஒரு தலைவர் நிச்சயம் களமாடுதல் வேண்டும்.
ஆணவப் படுகொலையில் ஒரு சாமானிய தந்தையின் குரலாகவும்,
வலியாகவும் உரக்க ஒலித்ததும் அதுவே.
அவன் நம்மில் ஒருவராகவும்,
தன்னலமற்றவறாகவும்,
ஜாதியற்றவறாகவும்,
தலித்துக்களின் கனவுகளை நினைவாக்க
ஒருவன் இருத்தல் அவர் அரசியலில் என்றும் இன்றியமையாதவராகவே என்றென்றும் மக்களின் மனங்களில் நிறைந்தே இருப்பார்.
சிலம்பினைப் படித்தோமே,
அரசியல் பிழைப்புக்கு அறம் கூற்றாகும்.
நிகழ்கால தேவைக்கு அவரைப்போலவே ஒப்பிலா ஒருவரையே நாடுகின்றனர்.
அவனுடைய இயல்புடையதாக கவிஞர் யாழன் ஆதி அவர்களின் வரிகளுடனே..
📖ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம்.
ஒவ்வொரு நொடியும் ஒரு களம்.
📖போராடுவதற்கென வடிவமைக்கப்பட்டது தான் வாழ்க்கை.
யாருக்கென்ன கவலை;
என்பதுதான் உன் கவலை.
📖அன்னையின் கைகளில் வாங்கி
அன்பின் கைகளில் வழங்கிய
வரலாற்றின் வாய்க்கால் நீ.
📖நீதான் எல்லார் மனநிலையையும் சரி செய்த சமூக மருத்துவன்;
சிலநேரங்களில் உன் அமைதி
ஒருவகைப் புரட்சி.
📖அது எத்தனை பேரை
பேச வைத்தது;
எத்தனைப் பேரை வாயடைத்துப் போய்
இன்னும் பேசுவதற்கு பொருளின்றி தவிக்கிறார்கள்…
📖அறிவின் வரலாற்றில் நாம் தொடக்க காலத்திலிருந்தே மன்னர்கள் தான்.
📖புத்தர்
திருவள்ளூவர் அயோத்திதாசர்
அம்பேத்கர்
என தொடரும் பட்டியலில் நீதான் நிகழ்காலம்
பாடப்புத்தகத்தில் தொடங்கிய உன் படிப்பு
மேடையேறும் கடைசிநொடிவரை தொடர்கிறது
யாருக்கு இருக்கிறது இங்கே இவ்வாற்றல்?
📖நீ வாசிக்கிறாய்
அவர்களே அதை அடாத செயல் என்கிறார்கள்.
📖கோலப்பாதையில் அலையும் சிற்றெரும்பின் துறுதுறுப்பில்
உன் அலைச்சல்.
📖யாருமே மிதிக்காத சாணித் தெருக்களை
நீ மிதித்துதான் விடுதலை வாங்கித் தருகிறாய்;
ஆதிமனிதனின் ஆணிவேராய் உன் கால்கள்,
அவர்கள் தாகம் தணிக்க கடும்பாறைகளையும் வெட்டி மேய்கின்றன.
📖பச்சையமற்ற அவர்கள் வாழ்வை
உன் பயணங்களே ஒளிச்சேர்க்கை செய்ய வைக்கின்றன,
சாலையோரங்களில் சிலநேரங்களில்
சப்பனிட்டுச் நீ சாப்பிடும் அழகே ஒர்
உழைப்போவியம்.
📖நாடாளுமன்றத்தை தூங்கும் அரங்கமாக
ஆக்கியவர் மத்தியில் அதை
மக்கள் மன்றமாக மாற்றுகின்றன உன் விவாத பொருட்கள்.
📖கொல்லப்பட்டச் சிறுமிகளின் குடும்ப ஆறுதல் நீ
அவர்கள் யாராயிருந்தால் என்ன
நீதானே தந்தமையின் தத்துவம்
குடியுரிமை திருத்த மசோதாவை எதிர்த்து முதல் குரலோன் நீ…
📖நீ பேசாப் பொருளில்லை
அமைப்பாய்த் திரள்வோம் என எழுதினாய்
எல்லோருக்குமானக் கட்சி
அறிவியல் அது
அன்றியும் அவர்கள் உன்னைச் சாதி தலைவரெனவே பேசுகிறார்கள்
ஜாதியற்றவன் நாமென அறியாது.
📖கல்வியைப் பேராயுதமாக்கிய வீரன் நீ
அறிவாளர் அம்பேத்கர்போல் படிப்பின் தீவிரம்
எப்போதும் உன்பசியாய்.
நன்றியுடன்
திரு.விஜய் முனியா…
நூல்:நெடுநல்வாடன்
நூல் ஆசிரியர்:யாழன் ஆதி
வெளியிடு:அறம் பதிப்பகம்
பக்கங்கள்:48
விலை:60/-