1) எங்கள் அம்மாக்கள் மாறுபட்டவர்கள் எனும் முடியும் கவிதையில் அடர்த்தி அதிகம்.
2) மலக்குழி மரணம் கவிதைக்கு எழுத்தாசிரியர் மீது வழக்குகள் பதியப்பட்டது என்னும் செய்தியே அக்கவிதையின் அழகை பறைசாற்றுகிறது.( நான் மிகவும் ரசித்த கவிதைகளில் ஒன்று)
3) சில கவிதையில் நாட்டார் தெய்வ வழிபாடுகள் பற்றி கூறப்படுகிறது. இன்று வரை அது உயிர்போடு இருப்பதும் பெரும் தெய்வங்களுடன் சேராமல் இருப்பதும் ஒரு வகையில் நல்லதாகவே தோன்றுகிறது. அதை வழிபடும் முறைகளில் உள்ள அசைவ வாசனைகளை சொற்களின் வழியே ஆசிரியர் நமக்குள்ளும் கடத்துகிறார்.( எ. கா. எறிசோறு கவிதை )
4) கருப்பு தெய்வங்களின் கருணையும் சமத்துவமும் தவழ்கிறது.
5) “வாத்தியாருக்கும் டீச்சருக்கும் என்றுமே புரிந்ததே இல்லை இந்தியாவிற்கும் அரபு தேசத்திற்கும் இடைப்பட்ட தூரம் ” எனும் கவிதையில் ஒவ்வொரு வெளிநாடு வாழ் தம்பதியினருக்கும் இருக்கும் பரிதவிப்பு கூறப்படுகிறது.
6) “எனது அருமை ஆப்பிரிக்க சகோதரனே” எனும் கவிதையில் வண்ணத்தில் ஏற்பட்ட மாறுபாட்டிற்கும் வர்ணத்தில் ஏற்பட்ட மாறுபாட்டிற்கும் உள்ள வேறுபாடுகள் எடைபோட்டு பார்க்கப்படுகிறது.
7) “அரசு தந்த ரெண்டரை சென்ட்டில் ஒரு சென்டில் வீடு போக மிச்சமிருக்கும் சொச்சத்தில் நான் எப்படி தூக்கி நிறுத்துவது அல்லது நான் எதற்கு தூக்கி நிறுத்த வேண்டும் இந்தியாவின் முதுகெலும்பை” – இவ் வரிகளின் ஆழம் ஐ.டி வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயத்தில் சாதிக்கும் பட்டதாரிக்கு புரிய வாய்ப்பில்லை. இது நிதர்சனமும் கூட.
8) “உன் ஊரில் ஆறு, மலையோ இல்லாததால் விவசாயம் பொய்த்ததோ என நண்பன் கேட்டான். இல்லை நாங்கள் இப்போது பண்ணைக்கில்லை என மகிழ்ச்சியாய் பதிலளிக்கிறேன்” – பல தலைமுறைகள் தாண்டிய சுதந்திரத்தை ஆசிரியர் அழகாக பதிவு செய்துள்ளார்.
9) “அப்படி என்னதான் இருந்து விடப் போகிறது மாட்டு ஈரலில் இல்லாதது ஆப்பிளில்” – காதல் விளையாட்டும் காம விளையாட்டும் இக்கவிதைகளில் நிரம்பியுள்ளது. (படித்து மகிழ்வுறுங்கள் )
10) “தலையீத்துப் பிள்ளையின் சுருட்டை முடியைத் தடவி கொடுத்து தனித்துக்கொண்டாள் ஓரளவு ஆங்காரத்தை” – சாதிய கட்டுப்பாட்டாளர்களுக்கான கவிதை (முழு கவிதையும் படித்தால் தான் புரியும் 😇)
ஊர் பந்திகளில் கலர் மட்டும் வாங்கி சாப்பிடுவோர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆதலால் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.
மேலே உள்ள வரிகளில் குறிக்கப்பட்டுள்ளவை மட்டுமே கவிதை வரிகள். ஒவ்வொன்றும் நெடும் கவிதைகள் அவற்றில் ஒன்று அல்லது இரண்டு வரிகளை மட்டுமே குறிக்க முடிந்தது. முழுக்கவிதையும் படித்து மூழ்கி சுவையுங்கள்.
காதல்,காமம், ஏக்கம்,ஏற்றத்தாழ்வு,இரக்கம் சமத்துவம், நட்பு,ஆண்மை,பெண்மை, வழிபாடு என பல சுவைகள் பொதிந்துள்ளன.
இந்த நூலின் ஆசிரியர் ப.விடுதலை சிகப்பியின் இயற்பெயர் விக்னேஸ்வரன். இத்தொகுப்பில் உள்ள கவிதைகளைப் போலவே அவரின் இயற்பெயரும் கூட அழகாக உள்ளது. 🥰
நூலாசிரியர் -பா விடுதலை சிகப்பி
நூல் -எறிசோறு
பக்கம்- 80