மருத்துத்வதுறையில் தொழிற்நுட்பம்

மருத்துவத் துறையில் தொழிற்நுட்பத்தின் பங்கு என்றால் நாம் மருத்துவமனையின் அன்றாட நிகழ்வில் இருந்து எடுத்துக்கொள்வோம். முன்பெல்லாம் ஒரு நபர் மருத்துவமனைக்கு வருகிறார் என்றால் நாம் அவரின் தகவல்களை தாள்களில் சேகரித்து பத்திரப்படுத்தி வைத்து கோப்பாக பாதுகாத்து வரவேண்டிய நிலை இருந்தது. அது மிகவும் கடிமானதாகவும் இருந்தது. ஆனால் தற்போது தொழிற்நுட்பத்தின் வளர்ச்சியின் மூலம் ஒரு நபர் மருத்துவமனைக்கு வருகின்ற அவருடைய தகவல்களை நாம் கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டால் அதை நாம் எங்கிருந்து வேண்டுமானாலும் அவற்றைப் பார்.த்துக் கொள்ளலாம்.  தாள்களில் , கோப்புகளாக சேகரிக்கும்  நிலையில் மருத்துவமனையோ, நோயாளியோ ஒருவரின் ஆவணங்களை நீண்ட காலம் பாதுகாத்து வைத்தல் என்பது மிகவும் சிரமமான விஷயமாக இருந்துவந்தது.

 ஆனால் தற்போதைய தொழிற்நுட்ப வளர்ச்சியின் மூலமாக மருத்துவமனைகளில் ஒரு நோயாளி பற்றிய தகவல்களை ஒரு முறை கணினியில் பதிவேற்றம் செய்துவிட்டால் அதை நாம் எந்த காலத்தில் வேண்டுமானாலும் உபயோகித்துகொள்ளலாம். அது போன்று தான் ஒரு நோயாளி முதல் முறை மருத்துவரை அணுகும்போது மருத்துவர் பரிசோதித்து மருந்துச்சீட்டு தருவார். அந்த நோயாளி மீண்டும் அந்த மருத்துவரை அணுகும் பொழுது முன் தந்த மருந்துச்சீட்டுகளை எடுத்துவர வேண்டும். மீண்டும் அந்த மருத்துவர் நோயாளியை பரிசோதித்து மீண்டும் ஒரு சீட்டை தருவார். இப்படியாக அந்த நோயாளி தனக்கு குணமாகும் வரை அந்த சீட்டுகளை பாதுகாத்துவர வேண்டும். ஆனால் தற்போது அந்த மருத்துவரோ, நோயாளியோ இப்படியான நிலையின்றி பல செயலிகளின் உதவியோடு நோயாளியின் அன்றைய நாள் முதலான தகவல்களை அறிந்துகொள்ள முடியும். . ஆனால் தற்போது மருத்துவர் நோயாளிக்கான மருந்துகள் என்னவென்று மருந்துகத்திற்க்கு செயலியின் மூலம் தகவல் அனுப்பிவிடுவார்கள். அந்த தகவலில் நோயாளிக்கான மருந்து, அது மருந்தகத்தில் எந்த இடத்தில் உள்ளது என்றவரையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கும். இந்த நிலையில் எந்த குழப்பமும், சச்சரவும் இன்றி தெளிவாகவும், எளிமையாகவும் வேலை முடிந்து விடும். மருந்துகளை வாங்கிச் சென்ற நோயாளிகள் அதை உபயோக்கும் பொழுது ஒரு பெரும் குழப்பம் ஏற்படும் அதாவது முன்பு மருத்துவர் மருந்துகளை சீட்டில் எழுதி தருவார் அது மருந்தக ஊழியருக்கு, இல்லை மருத்துவம் படித்தவர்களுக்கு புரியும். நோயாளிக்கு மருந்துகளை உபயோகிக்கும் போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் சிரமமான நிலை நீடிக்கும். ஆனால் தற்போது கணினியின் மூலமாக வரும் மருத்துசீட்டுகளால். படிக்க தெரிந்தவர்கள் யாராயினும் மருந்து அட்டையில் இருக்கும் பெயரை பார்த்து உபயோகித்துக் கொள்ளலாம்.  அதே போல் தற்போது அறுவை சிகிச்சைகளில்  நிறைய புதுப்பிக்கப்பட்ட தொழிற்நுட்ப கருவிகள் மருத்துவத்துறையில் வந்துவிட்டது. அதை பயன்படுத்தி எந்த பாதிப்பும் இன்றி நாம் சிசிக்சை செய்துவிடலாம். எடுத்துக்காட்டாக நாம் இன்று நிறைய நபர்கள் சந்திக்கும் கல் பிரச்சனையே எடுத்துகொள்வோம். முன்பெல்லாம் சின்னதாக ஏதேனும் பிரச்சனை என்றால் அதை குணமாக ஒரு பெரிய அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது ஆனால் தற்போது கிளர்கதிர்(laser) தொழிற்நுட்பத்தின் மூலம் குணமாக்கிவிடலாம். இது உடல் ரீதியாகவும், நேரத்தையும் நோயாளிகளுக்கு பாரத்தைக் குறைத்துவிடுகிறது. இது போன்று தான் எல்லா துறைகளில் தொழிற்நுட்பத்தின் பங்கு பெரும் பலத்தை அதிகரித்துள்ளது. அதிலும் எங்கள் துறையில் முன்பு காது கேளாத ஒரு நபருக்கு காது கேட்க FM போன்று ஒரு கருவி பொருத்த வேண்டும் அதை அவர்கள் செல்லுமிடமெல்லாம் கொண்டு செல்ல சிறிது கடினமாகவும், அதை உபயோகப்படுத்தும் போது அவர்கள் ஒருவகை குறையுள்ளவர்களாக மற்றவர்கள் பார்க்கும் நிலை இருந்தது ஆனால் தற்போது தொழிற்நுட்பத்தின் மெருகேற்றலில் நாம் உபயோகிக்கும் bluetooth  கருவிகள் போன்ற வடிவிலும்,  bluetooth-ன் மூலமாக அவர்களுக்கு கேட்கும் அளவிற்கு கருவிகள் மெருகேற்றம்  அடைந்திருக்கிறது.  இதனால் அவர்களுக்கும் எந்த ஏற்றத்தாழ்வு நிலையின்றி மற்ற மனிதர்களை போன்று சகஜமாக இருக்க முடிகிறது. இது தொழிற்நுட்பத்தின் மகிழ்வுகள்.

  • தற்போதைய நிலையில் மருத்துவத் துறையில் தொழிற்நுட்பம் என்ற பார்வை என்பது கொரோனகாலத்திற்குப் பிறகு பெரும் நிலையில் உள்ளது. கொரோனா காலத்தில் நோயாளிகள் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பார்ப்பது என்ற நிலை பெரும் மலையாக இருந்தது. இந்த நிலைகளில் மருத்துவர்கள் இணையவழியில் நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்கள். தற்போதும் அது தொடர்ந்து வருகின்றது. இதைத் தொடர்ந்து வெளிநாடுகளில் இருக்கும் சிறப்பு மருத்துவர்களின் ஆசோசனைகளையும் எளிதில் பெற்றுக்கொள முடிகிறது. வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டிற்க்கு சிகிச்சைக்கு வருவர்களும் இணையவழியின் மூலம் பயனடைகின்றனர். நாம் மருத்துவத்துறையில்  தொழிற்நுட்பம் என்று மிகவும் எளிமையாகவும் அனுபவமாகவும் சொல்ல வேண்டுமென்றால் கொரோனா காலத்தில் நம் வீடுகளில் நாம் அனைவரும் உபயோகித்த pulse oximeter, thermometer, oxygen cylinders மற்றும் பல கருவிகள். கொரோனா காலத்திற்க்கு முன்பு இவை அனைத்தும் மருத்துவமணைகளில் ஆப்ரேஷன் தியேட்டர்களில் பெரியதாக இருக்கும் அதை  மருத்துவம் படித்தவர்கள் மட்டும் உபயோகிக்கவும், கையாளவும் முடியும் என்ற நிலையில் இருந்தன. ஆனால் தற்போது அதை ஒரு சிறுகருவியாக மாற்றி  படிக்க தெரிந்தவர்கள் யாராயினும் உபயோகிக்க முடியும் என்பதே ஒருவகை தொழிற்நுட்ப வளர்ச்சியும் கொரோனாவின் அனுபவமும். இதைப் போல கொரோனா காலத்திலும் , அதற்கு பின்பும் மருந்துகள் வாங்குவது என்பது சுலபமாக உள்ளது நாம் ஒரு மருந்தகத்திற்கு(pharmacy) நமது மருத்துவர் பரிந்துதுரை சீட்டை வாட்ஸப்பில்(what’s app) அனுப்பிவிட்டால் அந்த மருந்தகமே(pharmacy) அந்த மருந்துகளை நம் வீட்டிற்கு அனுப்பிவிடுகிறார்கள்(Door delivery). இது பெரும்பாலும் இதய நோய் உள்ளவர்களுக்கும், வயதானர்வகளுக்கும்  பயனுள்ளாதாக இருக்கிறது.  அதைபோலவே தற்போதைய சூழலில் விபத்துகளில் ஒருவருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறது. உதாரணமாக ஒருவருக்கு ஒரு கால் முட்டிக்கு கீழாக பெரும்பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அவற்றை அகற்றி செயற்கை கால் பொருத்தப்படுகிறது. அப்படியாக பல முன்ன்னேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. குழந்தை பிறப்பில் இருந்து முதுமை காக்கும் வரை மருத்துவத்துறையில் தினம் தினம் தொழிற்நுட்பத்தின் வளர்ச்சி நீண்டுகொண்டே இருக்கிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *