1. ஒரு ஓவியராக இருந்து எப்படி பறவைகள் குறித்து ஆர்வமும் அது தொடர்பாக இயங்கணும் என்ற எண்ணம் எப்படி வந்தது…?
சைன்போர்ட் ஆர்டிஸ்டாக இருந்தகாலத்தில் தலைவர்களையோ அல்லது நடிகர்களையோ வரையும் போது மிகைப்படுத்தி வரையவேண்டியதிருக்கும் காண்டிரஸ்ட் கலரையும் கூட்டவோ குறைக்கவோ முடியும். ஆனால் பறவைகள், விலங்குகளை வரையும் போது வித்தியாசத்தை உணர முடிந்தது.
பறவைகளை உன்னிப்பா பார்த்து வரைய வேண்டியிருக்கும். அறிவியலோடு தொடர்புடைய ஓவியம் என்பதால் பறவையின் அளவையும் கருத்தில் கொள்ள வேண்டும்.இவ்வேலையில், இப்பகுதியில் இருக்கற பறவைகளை ஆவணப்படுத்துவது. அப்படி ஆவணப்படுத்தும்போது பறவையோட வண்ணத்த அதல இருக்கற மாரி அப்படியே கொடுக்கணும். உதாரணத்திற்கு, கதிர் குருவி இது இந்தியா முழுக்க 32 வகையாக உள்ளது. அதன் புற தோற்றத்தில் ஒரே மாரி தான் இருக்கும். ஆனாலும் ரொம்ப சின்ன சின்ன வித்தியாசங்கள் காணப்படும். அவற்றை நாம் அப்படியே கொண்டு வரணும். இப்படி சின்ன சின்னதா இருக்கிற வேறுபாடுகளை எல்லாம்கவனிச்சு நம்ம வரைய வேண்டியிருக்கறப்ப புறத்தோற்றத்தில் காணப்படும் வித்தியாசம் என்னை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.
அதன் பிறகு தான் நாம் வாழற பகுதியில் எந்த மாதிரியான பறவைகள் இருக்கு என்று கவனிக்க ஆரம்பித்தேன் எப்போதோ படித்த புத்தகம்.(அதன் பெயர் சரியான நினைவு இல்ல).
சுற்றுச்சூழல் என்பது எங்கேயோ அமேசான்லையோ அல்லது வெளிபிரதேசங்களில் இருக்கிற காடுகளைப் பற்றி புரிந்துக் கொள்வதில்லை என்ற புரிதலுக்கு வந்தேன்.
நாம் வாழறபகுதியிலிருந்து தொடங்குவது தான் சரியான சூழல் புரிதலுக்கு இட்டுச்செல்லும். அதன் அடிப்படையில் இங்கு இருக்கிற விலங்குகள், பறவைகள், மரங்கள் எல்லாவற்றையுமே பார்க்க, கவனிக்க ஆரம்பிக்கணும்.
பொதுவா காடு என்றாலே பாலாறும் தேனாறும் ஓடுவதாக பார்க்கப்படுது. காடுகளில் முதலில் எத்தனை வகை இருக்கு என்பத புரிஞ்சிக்கணும். காடு என்பது பயிரிடப்படாத ஒரு தன் இயல்பான நிலம், அவை புதர்காடுகள், தரிசுநிலக்காடுகள், இலையுதிர்க்காடுகள், மழைக்காடுகள், சதுப்புநிலக்காடுகள் என பல வகையாக வேறுபட்டுக் காணப்படுகிறது.
2.பறவை பார்த்தலுக்கான தேடலில், கற்றுக்கொண்டது ?
ஏற்கனவே பறவை சார்ந்து செயல்படறவங்க சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கறவங்ககிட்ட இருந்து கத்துகறது அதன்பிறகு இங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதிகளை சென்று பார்ப்பது கவனிப்பது.
பொதுவாக 50 வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் இங்க கிராமத்தில் இருக்கற பெரியவர்கள் அதிகபட்சமா பயணப்பட்ட இடமாக பார்த்தால். திருப்பதியோ, வேளாங்கண்ணியோ, தென் மாவட்டங்கள் பக்கத்துல பழனி வரைக்கும் போய் இருக்கலாம்.
அவர்கள் அதிகமா புழங்கற அவங்க பகுதியில் இருக்கிற ஒரு காட்டுல ஒரு செடியோ இல்ல, ஒரு பூவோ, அது எப்ப காய் காய்க்கும். அது எப்ப பூ பூக்கும்… அந்த காய் எப்ப பழமா மாறும்…. அதை எந்த பறவை சாப்பிடும். இல்லை, எந்த விலங்கு சாப்பிடும். அப்படின்ற ஒரு புரிதல் அவர்களுடைய வாழ்வியல் வாழ்க்கையோட அறிவியல் அனுபவமாக இருக்கும். அவர்கள் கிட்ட போய் அமேசான்காட்டில் என்ன இருக்கு? ஆஸ்திரேலியா காட்டில் என்ன இருக்கு? அது உனக்கு ஏன் தெரியல? அப்படின்னு நம்ம கேட்க முடியாது.
வருஷம் முழுக்க அவரோட பகுதியில தான் இருக்காரு அந்த இடத்துல தான் அவர் புழங்குறாரு. அதை சுத்தி இருக்கிற உயிரினங்களை அவர் பார்க்கிறார், அத கவனிக்கிறாரு, அத பத்தி தான் அவருக்கு தெரியும். அந்த மாதிரி தான் நாம் வாழ்ற பகுதியில என்னென்ன இருக்குஅப்படின்னு நம்ம தெரிஞ்சுகிட்டு அதை இந்தப் பகுதியுடைய நிலவியலாக என்ன இருக்கு? என்ற புரிதலுக்கு வரலாம். அதன்பிறகு துறைசார்ந்த வல்லுனர்களிடம் இருந்தும் பல வற்றை அறிந்துக்கொண்டேன்.
3. பறவைகளின் பெயர்கள் அவற்றின் அறிவியல், வட்டார பெயர்கள், பொது பெயர்கள் இவற்றின் பின்னணி குறித்து?
பறவையின் மீது ஒரு ஆர்வம்வருகிறது அதற்கு அப்புறம் பறவையை போய் பார்க்கிறோம். அப்படின்னு நாம் நகர்ந்தோம் இப்போஒரு பறவைக்கு ஒரு பெயர் இருக்கும் இல்ல, அந்த பேரு எப்படி வைக்கிறது. அறிவியல் முறைப்படிபார்த்தால் பறவைகளின் பண்புகளின் அடிப்படையில் பெயர் வைக்கிறாங்க. அதே மாதிரி நம்ம ஒவ்வொரு நிலப்பகுதியிலும் அங்க வாழ்கிற மக்கள் பறவைகளுக்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். அது வட்டார பெயராக இருக்கும் இப்போது ஒரு பறவையுடைய வடிவம் அதனுடைய வாழ்விடம் அதனுடைய இனப்பெருக்கம் இந்த மாதிரி அதோட தன்மைய வச்சு ஒரு பெயர் இருக்கலாம். ஆரம்பத்தில் துறை சார்ந்த நபர்கள் எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க ஒவ்வொருபறவையும் என்ன குடும்பம், என்ன வகை என்ற அடிப்படையில் எப்படி பிரித்து பார்ப்பது என்று சொல்லிக் கொடுத்தாங்க.
அதேபோல் தனிப்பட்ட முறையில் தொழில் மட்டுமல்லாமல் இதில் ஒரு மனநிம்மதி நிறைந்த ஒரு பணியா போயிட்டு இருக்கு. இப்பநான் ஓவியராக அறியப்படுறேன் அதே சமயத்துல பறவைகள் அப்படின்றது வெறும் பறவை மட்டும் கிடையாது ஒரு பறவை ஒரு மரத்தோடதொடர்புடையதா இந்த சூழலுடைய எல்லா உயிரினங்களோடும் தொடர்புடைய ஒரு உயிராக அது இருக்கு.
ஒரு மைனாவுக்கு தன்னுடைய பெயர் மைனா என்று தெரியாது அப்பஒரு பறவையுடைய பண்புகளை வச்சு தான் நம்ம அந்த பெயரை வைக்கிறோம். எனக்கு முன்னாடி இந்த துறையில இருந்த பலபேர் மூலமாக நிறையவிஷயத்தை நான் கத்துக்கிட்டேன் ஒரு பறவையோட அறிவியல் பெயர் என்று ஒரு பெயர் சொல்றாங்க அந்தபேரு ஏன் அதுக்கு வச்சாங்க என்ன காரணத்துக்காக வச்சாங்க அப்படி என்ற ஒரு கேள்வியும் அதுல வருது அதே மாதிரி ஒரு பகுதியில ஒரு குறிப்பிட்ட மக்கள் ஒரு பறவையை ஒரு பெயரிட்டுகூப்பிடுறாங்க அது ஒரு தலைமுறையில் இருந்து இன்னொரு தலைமுறைக்கு அந்த பேரு கடத்தப்படுதா.?ஆனா இப்ப இருக்குற காலகட்டத்துல அதெல்லாம்மீறி நிறைய பறவைகள் உடைய பெயர்கள் இன்னும் எளிய மக்களிடம் புழக்கத்தில் இருக்கிறது.
ஒவ்வொரு ஊரா போயிட்டு அங்க இருக்கிற மக்களிடம் பேசும்போது அந்த பறவையுடைய பெயர்கள் நமக்கு தெரிய வருது. அவர்கள் பெயர்வைப்பதில் ரொம்ப முக்கியமா பாத்தீங்கன்னா அந்த ஒரு பறவையுடைய அலகும் கால்களும் ரொம்பமுக்கியமாக கவனிக்கப்படுது அத வச்சு நம்ம அதனுடைய வாழ்வியலையும் அதனுடைய உணவு முறையும்நம்ம எளிமையாக புரிஞ்சிக்க முடியும் மரங்கொத்திக்கு அலகு கூர்மையா இருக்கும் தேன் சிட்டுக்கு அலகு ரொம்ப நீளமா மெல்லியதா இருக்கும் இரைஉண்ணும் பறவைகளுக்கு அலகு நீண்டு பருத்து இருக்கும் அதேபோல கால்களும் மிக முக்கியமான ஒரு அடையாளம். அதை வச்சு நம்ம அதனுடைய வாழ்விடத்த தெரிஞ்சிக்கலாம் இப்ப நீர் நிலைகளை பாத்தீங்கன்னா தண்ணிக்கு உள்ள இருக்குற பறவைகள் இருக்கு, தண்ணிக்கு மேல கரையோட இருக்கிற பறவைகள் இருக்கு இப்ப இதுஎல்லாமே நம்ம புரிஞ்சுக்கணும்னா அதனுடைய கால்களின் அமைப்பு மாறும் அதைவைத்து நம்மளால அத புரிஞ்சிக்க முடியும்.
எப்பவுமே நீரில் நீந்திக்கொண்டிருக்கிற மாதிரியான பறவைகளின் கால்களின் விரல்களில் ஜவ்வுடன் இணைக்கப்பட்டிருக்கும்,அல்லி தாமரை ஓனான்தண்டு இந்த மாதிரியான தாவரத்தின் இலையின் மீது நடக்கக்கூடிய பறவைகள் அந்த ஜவ்வு மாதிரியானஅமைப்பு இருக்காது
பறவையின் கால்கள் இப்படியாகதன்னியல்பா அதோட அது வாழ்கின்ற சூழலுக்கு ஏத்த மாதிரி கால் விரல்கள் நீளமா, தட்டையா,ரொம்ப குட்டியா இருக்கும் அதனுடைய கால் விரல்நகங்கள் ரொம்பநீளமா, குட்டியா இருக்கும்.இப்படிஅவற்றின்வாழ்வியல் சூழலுக்கு ஏற்றாற் போல் அதனுடைய கால்களின் அமைப்பு பரிணமித்திருக்கு.
நான் பறவை ஆர்வலனா மாறிட்டேன்எனக்கு ஆர்வம் இருக்கு ஒரு பறவையை பாக்குறேன். அந்த பறவையோட பேர் என்னன்னு கேட்கிறேன்அந்த பேர் வந்து முன்னுக்கு பின்னும் முரணாஇருக்கு தென்மாவட்டங்களில் ஒரு மாதிரி இருக்கு, வட மாவட்டங்களில் ஒரு மாதிரி இருக்கு,இதற்கு நடுவுல அறிவியல்பெயர் வேறு. இதை மீறி எனக்குள்ளாக எழும் ஆர்வம் எனக்கு முன்னாடி இருக்கிறவங்க இதை சொல்லி தராங்க. ஒரு பறவையுடையஅலகு, அலகின் வடிவமும் அதனுடைய கால்களுடைய வடிமும் அதனுடைய இறக்கைகளுடைய வடிவமும் அவைபறக்கிற விதமும் அது உணவு உட்கொள்கிற விதம்.அவை எந்த மாதிரியான இடத்தில் வாழ்கிறதுஎன்ற தன்மை இது எல்லாத்தையும் கவனிக்க வைக்குது. இதன் மூலமாகநாம் ஒரு தெளிவுக்கு வரமுடியுது. இதுக்கு வட்டார ரீதியாகஅறிவியல் ரீதியாகஅவற்றின் பெயர்இருக்கு அப்படின்ற ஒரு புரிதலுக்கு நம்மளால வர முடியாது.
ஒரு பறவையின் வட்டார பெயர், பொது பெயர், அறிவியல் பெயர், சங்க இலக்கியத்தில் அந்தபறவையின் பெயர் என்பதாக தெரிஞ்சுக்க முடியுது. இதுக்கு பெருசா எனக்கு உதவியா இருந்ததுக.ரத்னம்,சு.தியோடர்பாஸ்கரன்,மா. கிருஷ்ணன் இவர்கள் எழுதிய நூல்கள் எல்லாம் தேடிபடிக்க ஆரம்பிச்சேன். இது மட்டுமில்லாமல் இது சார்ந்து இயங்கும் சலீம் அலி சென்டர் மாதிரியானஇடங்களின் தொடர்பு நமக்கு நிறைய விஷயங்களை கற்றுத் தந்தது.
ஒரு பறவையுடைய அலகின் தன்மை,தரை மட்டத்திலிருந்து அதனுடைய கால் உயரம், அது பறக்கும் விதம் ரொம்ப தாழ்ந்து எழுந்துபறக்குதா,நேரா பறக்குதா.. தனித்து இருக்கா… இணையோடு இருக்கா… குழுவா இருக்கா… அது கூடு கட்டும் தன்மை…இவை எல்லாத்தையும்நாம் கள ஆய்வு புத்தகத்தோட ஒப்பிட்டு பார்த்து,நாம் கவனிப்பதை ஒரு நோட்டில் எழுதி வைப்பது, என்பதாக மட்டும் இல்லாமல் பறவை சார்ந்து ஆராய்ச்சியில்இயங்கிக் கொண்டிருக்கிற பல்வேறு தளங்களில் குறிப்பாக “மக்கள் அறிவியல் திட்டம்” மற்றும்ORNITHOLOGYஆய்வாளர்கள், பறவைகள் வலசை வரும் பாதையை ஆராய்ச்சி செய்பவர்களுடன்கலந்துஆலோசிப்பதுமுக்கியம்.
வெள்ளை கனி, ORIENTAL WHITE EYE, என்ற பெயரில் அழைக்கப்படும் பறவைதென்மாவட்டங்களில் கண்ணாடிக்குருவினு சொல்வாங்க சிலநேரங்களில் முரண்பட்டு இது வெள்ளை கனி தான் என்று சொல்வார்கள். கண்ணை சுற்றியிருக்கிற ஒரு வெளிர்நிறவட்டம் அவற்றைத்தான் இரண்டு பகுதி மக்களும் பார்த்துஅதற்கான பெயரை வைத்திருக்காங்க ஒருத்தவங்க கண்ண சுத்தி வெள்ளையா இருப்பதாகவும்மற்றோருவர்கண்ண சுத்தி கண்ணாடி போல்இருக்குனு சொல்றாங்க ஒருவகையில் இரண்டும் சரியான பார்வைதான்.
அதேபோல கொண்ட குருவினு ஒன்னுஇருக்கு நெடுங்காவடி பக்கம் ஆடுமேய்க்கும் ஒரு தம்பி கிட்ட அதபத்தி கேட்கும் போது தளபாகட்டுக் குருவினு சொல்றாங்க, அந்த பறவையின் மேல்இருக்கும் அமைப்பு அப்படி இருப்பதால் அப்படியான பெயரை அவர்கள் வைத்திருக்கின்றனர். அதுவும்கவனிப்புத்தான். இப்படி நிறைய பெயர்கள் இருப்பது வளம்தானே தவிர குழப்பமில்லை அதேபோலஅன்றில் என்ற பெயரில் சங்க இலக்கியத்தில் சொல்ல பட்ட பறவை தற்போது புள்ளி மூக்கு வாத்துனுசொல்றோம்.அருவாள் மூக்கனைசங்க இலக்கியத்தில் அன்றில் பறவைனு சொல்றாங்க சில இடத்தில் கொடுவா மூக்கனு சொல்றாங்க,NIGHTJAR “இராக்குருவி”“சாக்குரு”வினு சொல்றாங்க.ஒரு சில ஊர்ல “கப்பு காடனு” சொல்றாங்க ஏங்க… இதுக்கு…. இந்த….. பேருனு…. கேட்டா? இது “கப்பு கப்புனு” பறக்கும்னு சொல்றாங்கஅதனால் இதுக்கு இந்த பேரு.
ஒரு வகையில தென் மாவட்டம் மனிதர்கள் பறவைகளை பார்த்திருக்காங்கஅதை கவனிச்சுருக்காங்க அதனுடைய பண்பு நலன்களை இல்லாததோட வடிவ ரீதியான, அவங்களுக்கு புரிந்தஒரு தன்மையில் அந்த பறவைகளுக்கு அவங்க பேர் வச்சிருக்காங்க இது சரி தப்புன்னு நம்மவிவாதிப்பதைதவிர்த்துஅவங்களுடைய வட்டார தன்மையோட அது புரிந்து போற ஒரு சூழ்நிலைஇருக்கு. இப்ப நம்ம அறிவியல் ரீதியா நம்ப ஒரு பறவையை பார்த்து அதனுடைய வடிவம் பண்புஇது எல்லாத்தையும் வச்சு நம்மளும் பெயரைவைக்கிறோம்.
வட்டாரரீதியாமரபார்ந்ததகவல்களைநாம்கடத்தவேண்டும்.உதாரணத்திற்கு, எனக்கு தெரிந்த தகவலை நான் அடுத்த தலைமுறைக்கு.. இல்ல… வேற ஒருத்தவங்களுக்குநான் கடத்தனும். இது ஒரு பெரிய ரகசியம்எல்லாம்இல்லை.. நிறைய தகவல்கள் எல்லாம் ஒரு ஆளோட முடிஞ்சு போற மாதிரியான ஒரு சூழல் வந்துருச்சுஅதனால எனக்கு தெரிஞ்ச தகவலை நான் இன்னொருத்தவங்களுக்கு சொல்லணும் அவர் இன்னொருத்தவங்களுக்குசொல்லணும் அப்படி பண்ணிருந்தாங்கன்னா இன்னைக்கு நிறைய பறவைகளின் பெயரும் அதோட வாழ்வியல் முறையும் மரங்களுடைய பெயரும் தன்மையும் அதோடமருத்துவ குணங்களும் நமக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும். அது ஒரு தலைமுறைல இருந்து இன்னொருதலைமுறைக்கு அந்த தகவல்கள் அதாவது பயனுள்ள தகவல்கள் அப்படியே பரிமாற்றப்பட்டுஇருக்கும்.
உதாரணத்திற்கு,வேடியப்பனூரில் போட்டோ எடுத்துட்டு இருந்தேன் அப்ப அந்த பகுதிய சேர்ந்த ஒருத்தர் கிட்ட ஒரு பறவையை காண்பித்து அதன் பெயர் என்னவென்று கேட்ட போது “எழால்” என்று சொன்னார். பொதுவாக அந்த பறவையை “வல்லூறு” என்ற பெயரில் சொல்வார்கள். வல்லூறில் நிறைய வகை இருக்கு.இதன்பொது பெயர் தான் “வல்லூறு” ஆனால் இவர் “எழால்”ன்னு சொன்னது ஆச்சரியமா இருந்தது. அதன் பிறகு க.ரத்னம்எழுதிய“தமிழ்ச் செவ்வியல்இலக்கியத்தில் பறவைகள்” என்ற புத்தகத்தைப்பார்க்கும் போது “எழால்” என்ற பெயரை அவர் குறிப்பிட்டிருந்தார் அதுவும் சங்க இலக்கியத்தின் பாடலை மேற்கோள் காண்பித்து குறிப்பிட்டிருந்தார் “எழால்” என்ற பெயரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் அந்த ஊரிலே இருப்பவர் பறவைகள் துறைசார்ந்த நபருமில்லை அதை விட முக்கியமா அவர் இலக்கியவாதியுமில்லை ஏதோ அவர் தேவைக்கான பள்ளிப்படிப்பை படித்தவராகதெரிகிறது.
அப்ப இந்த எழால் என்ற பெயர் படிப்படியாக பல தலைமுறை கடந்து இப்பவரைக்கும் கடந்து வந்திருக்கு.இதன்மூலம் ஒன்னமட்டும்நாம தெரிஞ்சகனும் நமக்கு தெரிஞ்ச நல் தகவலை பலருக்கும் நாம கடத்தனும். ஒருசிலர் தெரிஞ்சாகூட சொல்லாமல்தனக்குள்ளாகவே வச்சிகறதஒரு மேதாவித்தனமா நினைக்கிறாங்க. இந்த வட்டார பெயர்கள் குறித்து தேடும்போது நிறைய வியப்பானவிடயங்கள் நடந்திருக்கு. ஒருமுறை செங்கத்து ஏரியில் குளிச்சிட்டு இருந்த ஒருத்தர்கிட்டஇருந்து வித்தியாசமான ஒரு தகவல் கிடைச்சது. இந்த “சாமக்கோழி” சினிமாவில்கூட சாமக்கோழி கூவுதுனு பாட்டுல்லாம் கூட வந்திருக்குமே அதபத்தின தகவல் தான். நான் போட்டோ எடுக்கறத பார்த்தவர்என்கிட்ட பேச்சிக் கொடுக்க ஆரம்பிச்சாரு அப்ப அவரே உங்களுக்கு “சாமக்குருவி”தெரியுமானுகேட்டாரு நான் தெரியாதுனு சொன்னேன் கருச்சான் தான் அதுனு சொன்னாரு அதிகாலையில் வந்துஅது சத்தம் எழுப்பும் சினிமாவில்பாட்டு சுவாரசியத்துக்காக “சாமக்கோழினு” எழுதியிருக்கலாம் அது சாமக்குருவிதான். இந்த மாரி நிறைய வட்டாரபெயர் தொடர்பா நிறைய விசியம் இருக்கு அதேபோல மூடநம்பிக்கையாவும் சில பெயர்கள் இருக்குஆனால் அறிவியல் ரீதியா அணுகுவது தான் தற்போது ஏற்புடையதா இருக்கும்.
4.வலசை பற்றி சில வார்த்தைகள் அதிலும் குறிப்பா அந்த வார்த்தை ஒரு இலக்கிய வார்த்தையாக மாரியது பற்றி?
வலசை என்பது பறவைக்கு மட்டுமில்லஒரு காலத்தில் நமக்கும் தான் இருந்தது இடப்பெயர்வு உணவுக்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும்இடம்பெர்வது தான் வலசை. பட்டாம்பூச்சிக்கூட வலசை போகும். வலசையிலே வகைகள் உண்டு INTERNATIONALMIGRATION மேல் இருந்து கீழாக வருதல் ரஷ்யா, சைபீரியா, ஜப்பான், யூரோப்பா, ஆப்ரிக்காவில் இருந்து சிலது யூரோப்புக்கும் சில வாத்துகள் ஆப்ரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு வருவதா சொல்றாங்க தென் இந்தியா வலசையில் இங்கிருந்து மேல செல்வது அங்கிருந்துஇங்க வருவது தான் ஒருசில பறவைகள் இங்க வந்து கூடுகட்டும். ஒருசிலது கூடுகட்டாம வந்துமட்டும்போவது.இது இல்லாம LOCALMIGRATION வகையில் ஜவ்வாது பகுதியில் இருந்து இங்க வருது. இப்படி நிறைய தகவல்கள் பறவைகள் பற்றி இருக்கு முதலில் நம்மை சுற்றி இருக்கிற பறவைகளை கவனித்தாலே அதன் வழியாக பறவையினை நாம் புரிந்து கொள்ள முடியும். பறவைகள் இந்த சூழலில் இருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கம்.
நேர்காணல் : தளபதி சல்மான்.
Excellebt wweb sote yoou have goot here.. It’s difvicult
to find excellet writing like youres nowadays. I reeally appreciate individuals like you!
Taake care!!