ஏழைகளை அதிகளவில் பாதிக்கும் பருவநிலை மாற்றம்

கடல் மட்டம் உயர்கிறது, பனிப்பாறைகள் உருகுகிறது. வெப்பநிலை உயர்கிறது. இன்னும் பல பயமூட்டும் தகவல்களை சில அறிவியல் வார்த்தைகளுடன் சேர்த்து சொன்னாலும், இதில் பாதிப்புக்கு உள்ளாவது கடைக்கோடி எளிய மக்கள் தான். காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழு (IPCC- Intergovernmental Panel on Climate Change) வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி இந்த சூழல் நெருக்கடிக்கு மனிதன் தான் காரணம். ஆம் மனிதன் தான் காரணம். அதை யாராலும்  மறுக்கமுடியாது. ஆனால் அந்த மனிதன் யார் என்பது தான் இங்கே கேள்வி.

எந்த வித இயற்கைச் சுரண்டலிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாத எளிய மனிதர்களும், இயற்கையை தெய்வமாக வணங்கும் மக்களும் சேர்ந்து தான் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கடல் மட்ட உயர்வு போன்ற படிப்படியான மாற்றங்கள் மற்றும் அதிகரித்த வெப்பநிலையின் விளைவுகள் கடின மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக காலநிலை மண்டலங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

வறட்சி, புயல், வெள்ளம், நிலச்சரிவு, அதிகப்படியான வெயில் குறித்த நிச்சயமற்ற கணிப்புகளில் நேரடியாக எளிய மக்கள் தான் பாதிக்கிறனர். கூடுதலாக அதன் விளைவுகளை,  வரவிருக்கும் பல தலைமுறைகளின் தலைவிதியை மாற்றும். இதற்கான  சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் ஏழைகள் மீதே அப்பாதிப்பு நிகழும். காலநிலை மாற்றம் குடிநீருக்கான அணுகலை மேலும் நெருக்கடிக்குள் அழுத்தும், ஏழைகளின் ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கும். ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் பல நாடுகளில் உணவுப்பாற்றாக்குறை ஏற்படலாம். பயிர் விளைச்சலும் பாதிக்கப்படும். பஞ்சத்தை அச்சுறுத்தும், அல்லது கடலோரப் பகுதிகளில் நிலப்பரப்பு இழப்பும்  இடப்பெயர்வும் ஏற்படலாம் சிறு / பெரு  பொருளாதாரச் செலவுகள் உயரும். இத்தனை பயமூட்டும் அம்சங்களும் நடக்க வாய்ப்பிருக்கா என்று கேட்டால்? ஆம் நடந்திருக்கிறது.  பெருவெள்ளத்தில்  முழுவீடும் மூழ்கி நிர்கதியாக உணவின்றி தவிப்பவர்கள் சாமானியர்கள் தான்.

  பொருளாதார பின்னணியும் அத்தகைய  நெறுக்கடிக்கு காரணம் என்று சொன்னாலும், சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வும் இயற்கைமேலாண்மையும் மக்களிடையே சென்றடைய வேண்டும். அதற்கு உலக அளவின் கூட்டமைப்புக்கள் தீவிரம் காட்டுகின்றன.  காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டின் முடிவுகளின் மூலம் (UNFCCC- United Nations Framework Convention on Climate Change), ஏழை மக்களின் தகவமைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைச் சமாளிக்க ஏழை நாடுகள் (குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள்). ஆயினும்கூட, வறுமைக் குறைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் வலுவான கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றனர். ஆனால் அவை செயலாக்கம் பெறுமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

உலகப் பொருளாதார மன்றம் (world economic forum) அனுமானித்திருக்கும் பாதிப்புக்கள்:

உலகளவில், 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல், உலகளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான மலேரியாவை ஏற்படுத்தக்கூடும் அல்லது ஆபத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையில் 5% அதிகரிப்பு ஏற்படலாம்.  நீர்ப் பற்றாக்குறை நீரின் தரம் மற்றும் தூய்மையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் வயிற்றுப்போக்கு மிகவும் பொதுவானதாக மாறும். 2030ஆம் ஆண்டில், 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் வயிற்றுப்போக்கு தொடர்பான இறப்புகள் 48,000 அதிகமாக இருக்கும் என்று  உலகளாவிய சுகாதார பாதுகாப்பு (UHC-universal health coverage) கணித்திருக்கிறது.

உணவு உற்பத்தியில் ஏற்படும் மாற்றங்களினால், அதிக விலைகொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும்  மற்றும் கிராமப்புற வருமானங்களில் ஏற்படும் மாற்றங்களால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள், இதன் விளைவாக விவசாய உற்பத்தித்திறன் மீதான தாக்கங்கள் மற்றும் நீண்ட கால காலநிலை போக்குகளில் படிப்படியாக ஏற்படும் மாற்றங்கள், அடிக்கடி மற்றும் கடுமையான இயற்கைப் பேரழிவுகளால் விலைவாசிகள் உயரும்,  2030 ஆம் ஆண்டில் 4.5 மடங்கு அதிகமாகவும், 2050 ஆம் ஆண்டில் 25 மடங்கு அதிகமாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

பருவநிலை மாற்றத்தால் தண்ணீர் கிடைப்பது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. அடிக்கடி ஏற்படும் வறட்சி, அதிகரித்த ஆவியாதல் மற்றும் மழைப்பொழிவு முறைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நீரோட்டமானது ஏற்கனவே நீர்ப்பற்றாக்குறையை அனுபவிக்கும். துணை வெப்பமண்டலங்கள் போன்ற பகுதிகளில் நீர் இருப்பை பாதிக்கிறது. 2025 ஆம் ஆண்டில், உலகின் 5 பில்லியன் மக்கள் இருப்பார்கள், தற்போதைய 1.7 பில்லியன் மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள்.

பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து நிறுத்தி இழந்த வருமானத்தை ஈடுசெய்ய அவர்களை வேலைக்கு வைப்பது போன்றவை நிகழும். இவை வளரும் நாடுகளின் அடுத்த தலைமுறையின் கல்வியை பாதிக்கும். 

காலநிலை மாற்றம் என்பது மக்களின் வாழ்வாதாரத்தின் மீதான தாக்கங்களினால் வாழ்வாதாரத்தை இழப்பதன் காரணமாக  இடப்பெயர்வின் மூலம் 2050 வாக்கில், 216 மில்லியன் காலநிலை அகதிகள் ஆறு உலகப் பிராந்தியங்களில் இடம்பெயர்வார்கள், முதல் மூன்று இடங்கள். துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் (86 மில்லியன்), கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் (49 மில்லியன்), தெற்காசியா (40 மில்லியன்).

வறுமையை ஒழிப்பது மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது தனித்தனியாகச் செய்ய முடியாது – இவை இரண்டும் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகக் கையாளப்பட்டால் மிக எளிதாகும். வளரும் நாடுகள், உள்ளடக்கிய மற்றும் காலநிலை-அறிவூட்டப்பட்ட வளர்ச்சிக் கொள்கைகள் மூலம் வறுமையின் மீதான குறுகிய கால காலநிலை மாற்ற தாக்கங்களைக் குறைப்பதற்கும், பின்னடைவைக் கட்டியெழுப்புவதற்கும் வாய்ப்பளிக்கிறது. ஆனால் நகர்ப்புற போக்குவரத்து, ஆற்றல் உள்கட்டமைப்பு அல்லது காடழிப்பு போன்ற கார்பன்-உமிழ்வு நிகழ்வதை வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும்.

இதற்கான தீர்வுகள் உள்ளனவா என்று பார்த்தால் முழுவதுமாக சரிசெய்ய சிறிது சிறிதாக பலவற்றை முதலில் பழக்கத்திற்கு கொண்டுவர வேண்டும். குறிப்பாக, கிராமப்புற பொருளாதாரங்களின் கட்டமைப்பு மாற்றத்தை விரைவுபடுத்த வேண்டும், இதனால் குறைவான விவசாயத் தொழிலாளர்கள் அதிக வெப்பநிலைக்கு ஆளாக நேரிடும், மேலும் இதுபோன்ற சூழ்நிலைகளில் குறைந்த உடல் உழைப்பு செலவழிக்கப்பட வேண்டும். திறன் மேம்பாடு, நிலையான நிறுவனங்களுக்கான சூழலை மேம்படுத்துதல், உள்கட்டமைப்பில் பொது முதலீடு மற்றும் உலக வர்த்தகத்தில் வளரும் நாடுகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியமான கொள்கை நடவடிக்கையாக கருதப்படும்.

சுற்றுச்சூழலின் அவசியத்தையும் மீட்டிக்கக் கூடிய ஆற்றல்வளங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும்,  இயற்கை வளங்களை பாதுகாக்கும் உணர்வையும் அடுத்த தலைமுறைக்கு உணர்த்திட வேண்டும்.

 தரவுகள்:

  • Poverty and climate change : reducing the vulnerability of the poor through adaptation. Abeygunawardena, Piya; Vyas, Yogesh; Knill, Philipp; Foy, Tim; Harrold, Melissa; Steele, Paul; Tanner, Thomas; Hirsch, Danielle; Oosterman, Maresa; Rooimans, Jaap; Debois, Marc; Lamin, Maria; Liptow, Holger; Mausolf, Elisabeth; Verheyen, Roda; Agrawala, Shardul; Caspary, Georg; Paris, Ramy; Kashyap, Arun; Sharma, Arun; Mathur, Ajay; Sharma, Mahesh; Sperling, Frank.  Washington, D.C. : World Bank Group. 
  • www.weforum.org/agenda/2023/01/climate-crisis-poor-davos2023.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *