இந்தப் புத்தகத்தில் “ஏழுநாட்கள்” என்னும் நாவலும் உறூப் எழுதிய”வாடகை வீடுகள்” என்னும் குறுநாவலும் இடம் பெற்றிருக்கிறது .

சிந்தி மொழி எழுத்தாளர் கிருஷ்ணா கட்வானியின் “ஸாத்தின்” என்ற நாவலை தமிழில் மொழிபெயர்த்திருப்பவர்  சுரா.

என்ன தான் கணவன் மனைவியாக இருந்தாலும் மனதளவில் தனித்தனி மனிதர்கள். அது மட்டுமன்றி அவர்களுக்கென்று ஆசாபாசங்களும் உணர்வுகளும் இருக்கும் என்பது கண்கூடு.

ஆனால் நடைமுறையில் கணவன் மனைவி ஆகி விட்டாலே யாராவது ஒருவருக்காக மற்றவர் தன் ஆசைகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு தியாகம் செய்வது என்பதைத்  தான் நாம் பார்த்துக் கொண்டு உள்ளோம் .

இந்தக் கதையில் சுமிதா ,  சரத் இருவரும் நகரத்தில் பெயரும் புகழும் பெற்ற மருத்துவர்கள் . சரத்தின் மருத்துவப் பணியிலும் , வீட்டைப் பராமரிப்பதிலும் சரத்தின் financial விஷயங்களை கவனித்துக் கொள்வதிலும் அவனது  மனைவி சுமிதா பெரும் பங்கு வகிக்கிறாள் .சுமிதாவும் ஒரு மருத்துவரே.

ஒரு pre-planned and properly  scheduled வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

பின் இருவரும் சுமிதாவின் யோசனைப்படி ஒரு வாரம் – ஏழு நாட்கள் நகரத்தின் சந்தடியிலிருந்து விலகி ஒரு மலை வாசஸ்தலத்தில் தங்கியிருந்து புத்துணர்ச்சி பெற்று திரும்பி வருவதாக திட்டம் .

அத்துடன் அந்த ஏழு நாட்களும் இருவரும் தனித்தனி அறைகளில் இருந்து கொள்வதாகவும்,  அவரவருக்குத் தேவையான  விஷயங்களை அவரவரே கவனித்து செய்து கொள்வது எனவும் ஓர் ஒப்பந்தம் போல போட்டு வந்து தங்குகிறார்கள்…

ஓரோர் அத்தியாயத்தையும்  அந்தந்த கதாபாத்திரமே சொல்வது போன்ற கதையமைப்பு…

இதனால் அந்தக் கதாபாத்திரத்தின் மனநிலையும் எண்ணங்களும்  நமக்குத் தெளிவாகப் புரியும் படி உள்ளது …

இருவரும் அவர்களது கடந்த. காலத்தை நினைத்துப் பார்க்கிறார்கள் …

காதல் இல்லாமல் கடந்த காலமா…

ஆம் நாம் எதிர்பார்ப்பது போல் இருவருக்கும் மறைந்து போன….அல்ல ,அல்ல…. மறைக்கப்பட வேண்டிய காதல் நினைவுகள் .. ஆனாலும் இருவருக்குமே ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம்…

ஆணின் மனம் போராட்டம் ஒரு மாதிரி என்றால் பெண்ணின் மனப் போராட்டம் வேறு மாதிரி … இவற்றை தொய்வில்லாமல் அழகாகக் கொண்டு செல்கிறார் ஆசிரியர் .

இவ்வளவு நாட்களும் இருவரும் ஒருவரையொருவர் ஏமாற்றிக் கொண்டு இருந்தது மட்டுமல்லாமல் தங்களைத் தாங்களேயும் ஏமாற்றிக் கொண்டு வந்துள்ளனர் என்பதைப்  புரிந்து கொள்ள இந்த 7 நாட்கள் அவர்களுக்குத் தேவையாக இருந்திருக்கிறது.

கதையை  முழுதுமாகக் கூறினால் சுவாரசியம் குறைந்து. விடும் ….. வாசிக்கும் போது கதையைப் புரிந்துகொண்டால் தான் நன்றாக இருக்கும் . எனக்கு பிடித்திருந்தது கதை .

 

” வாடகை வீடுகள் “

உறூப் .

தமிழில் : சுரா.

இந்தக் கதையும் குடியிருக்க ஒரு நிரந்தரமான வீடு இல்லாதவர்கள் , அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தால் தனித்து இருக்க அறை தேடி வரும் ஆண்கள் குறித்தது .

இதில் கதை நாயகன் ஒரு எழுத்தாளர். அவர் எழுதிய கதைக்கு சன்மானமாக வரவேண்டிய பத்து ரூபாய்க்காகக் காத்துக் கொண்டு இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இவர், ஒரு கதர்சட்டைக்காரர் , ஒரு தலைமையாசியையின் கணவர் என சில கதாபாத்திரங்களுக்குப் பெயர் சூட்டாமலே கதை செல்கிறது.

வீட்டு சொந்தக் காரராக ஒரு பெண் , அவள் கணவன் கணவனின் தந்தை என குறுகிய வட்டம்.

அந்த வாடகை வீட்டில் நடப்பதையே கதையாகச் கொண்டு செல்கிறார்.

எதிர்பார்த்த திருப்பம் தான் … இங்கும் உளவியல் சிந்தனைகள் அதிகம் உள்ளது.

ஒரு பெண்ணை விரும்ப ஆண் என்ன அளவுகோல்   கொண்டிருப்பான் ….  இதனால் எனக்கு இவளைப் பிடித்திருக்கிறது என்று எப்படி எந்த சூழ்நிலையில் நினைக்கிறான் …. ???

 இது எனக்கு ஒரு புதிராகவே இருக்கிறது.

இதுவும் வாசிக்க நன்றாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!