“குப்பை மேலாண்மை செயல்பாடுகளே நம் எதிர்கால தலைமுறைக்கு நாம் விட்டுச்செல்லும் ஆகப்பெரிய சொத்து”
குப்பை என்பது வெறும் கழிவல்ல. அது ஒரு சமூகத்தின் வாழ்வியல், நுகர்வியல், நிர்வாகம், மற்றும் அரசியல் சூழலின் பிரதிபலிப்பாகும். “புழுதி” இணைய இதழின் இந்தச் சிறப்பிதழ், அந்த மறைக்கப்பட்ட, பெரும்பாலும் வெறுக்கப்படும் பிம்பத்துக்குள் ஒரு பயணத்தை மேற்கொள்கிறது. அதிநவீன தொழில்நுட்பத்தின் பங்களிப்பையும் பேசுகிறது.
நகரங்களும் நகர்ப்புறங்களும் வேகமாக விரிந்து கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில், கழிவுப்பொருட்களின் அளவுக்கேற்ப துறைசார்ந்த நடவடிக்கைகள் கவனப்படுத்தவும். தினசரி நம் வீடுகளில் உருவாகும் வீண்வளங்கள், தொழில்துறையின் உதிரிச்செறிகள், மாறிக்கொண்டிருக்கும் வணிகப் பழக்கவழக்கங்கள் — இவை அனைத்தும் இணைந்து ஒரு சுற்றுச்சூழல் அவசரநிலையை உருவாக்குகின்றன.
இந்தச் சிறப்பிதழ் மூலமாக, நம் சமூகத்தில் குப்பை தொடர்பான பரப்பிய தவறான புரிதல்களை மீட்டுப் பார்க்கும் முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது. இது வெறும் ஒழுங்குமுறை குறைபாடுகள் பற்றிய விமர்சனம் அல்ல. இது ஒரு நாகரிக பார்வையின் சோதனை.
பங்களிப்பாளர் கட்டுரைகள் நவீன குப்பை நிர்வாகத்தின் பல பரிமாணங்களைத் தீவிரமாக ஆய்வு செய்கின்றன:
நகரங்கள் எவ்வாறு குப்பை நிர்வாகத்தில் சீரற்ற முறைகளை பின்பற்றுகின்றன என்பதை ஒரு கட்டுரை விசாரிக்கிறது. மீள்சுழற்சி தொழில்நுட்பங்கள் எவ்வாறு பொதுமக்களின் வாழ்க்கையில் நிலைத்த மாற்றங்கள் / குப்பை சேகரிப்பாளர்களின் சமூக நிலை மற்றும் மரியாதை அவர்களின் வாழ்வியல் அவர்களின் அனுபவங்களைக் கொண்டு ஒரு ஆழமான உரையாடலையும் இடம் பெற்றிருக்கிறது , பிளாஸ்டிக் உற்பத்தி, அதன் அரசியல் பின்னணி மற்றும் உலகளாவிய நிர்வாகத் திட்டங்களைப் பார்வையும் என இவ்விதழுல் அடக்கம்.
இவ்விதழின் செழிமைக்கு பங்களித்த கட்டுரையாளர்கள் அனைவருக்கும் நன்றி. கள், எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் சிறுகதையை வெளியிட அனுமதியளித்த டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் அவர்களுக்கும் எங்களின் நன்றியும் அன்பும்.
கவிஞர் வேல்கண்ணன், ஆசிரியர் சுஜாதா, கவிஞர் கனி விஜய், தளபதி சல்மான் என இவ்விதழுக்கான பணிகளில் மும்பரமாக இயங்கிய புழுதி நண்பர்கள் அனைவருக்கும் எனது அன்பு.
இனி வாசகர்களின் கருத்திர்காக காத்திருக்கிறோம்
அன்புடன்
பேரா.பிரவீன்குமார்