கல்வி, வெளிநாட்டில் இது ஒரு மிகச் சிறந்த வரம் என்று கூறலாம். இங்கு கல்வி அனைவருக்கும் சமம் என்ற அடிப்படையில் PRIMARY முதல் SECONDARY வரை இலவசமாக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டிலோ கல்வியை ஒரு மிகப்பெரிய வியாபாரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் இந்த கல்வி முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது அது என்னவென்றால், நடைமுறை கல்வி. இது ஒவ்வொரு குழந்தைகளின் திறமையை தனிப்பட்ட முறையில் ஊக்குவிப்பதாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அனைத்து பள்ளிகளும் கல்வி ஆசிரியர்களும் குழந்தைகளின் மனநிலை கருதி செயல்படுகின்றனர். ஆனால் நம் நாட்டில் இருக்கும் கல்வி முறை அனைவருக்கும் தெரிந்தது.
மருத்துவம், சிறப்பு வாய்ந்த மருத்துவம் வெளிநாடுகளில் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மையே. ஆனால் இங்கு விலை மிகுந்ததாக காணப்படுகிறது. அவ்வளவு எளிதாக மருத்துவம் அனைவருக்கும் கிடைப்பதில்லை (பணம் இல்லாதவர்களுக்கு). அப்படி மருத்துவம் கிடைத்தால் அது மிகவும் சிறப்பானதாக இருக்கும். (இங்கு பணம் இருந்தால் சிறப்பான மருத்துவம் கிடைக்கும் ஆனால் நமது நாட்டில் பணம் இருந்தாலும் சிறப்பான மருத்துவம் கிடைப்பதில்லை). சில வெளிநாடுகளில் மருத்துவம் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. உரிய நேரத்தில் மருத்துவம் கிடைப்பதில்லை. அந்த வகையில் நமது நாட்டில் மருத்துவம் முதலுதவி உரிய நேரத்தில் கிடைக்கிறது. இன்னொரு வித்தியாசம் என்னவென்றால் இங்கு அவ்வளவு எளிதில் உடலில் குறைபாடுகள் வருவதில்லை. அதற்கு ஒரு முக்கியமான காரணம் இங்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை அல்லது வருடத்திற்கு ஒருமுறை PRE HEALTH CHECKUP செய்யப்படுகிறது.
பொருளாதாரம், கொரோனாவுக்கு பிறகு வெளிநாட்டில் பொருளாதாரம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் விலைவாசியும் உயர்ந்து காணப்படுகிறது. கொரோனாவிற்கு பிறகு படிப்பதற்கும் குடியேறுவதற்கும் ஒரு மக்களின் தொகையினால் இங்கு வீடுகள் கிடைக்காமல் வீட்டு வாடகைகள் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இப்போதைய பொருளாதாரம் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சேர்க்க வேண்டியதாக இருக்கிறது. இது நமது நாட்டின் நிலைமையைப் போன்று உள்ளது. இதன் காரணமாகவே பலர் தனது தாய் நாட்டிற்கு இரண்டு அல்லது மூன்று வருடத்திற்கு ஒருமுறைதான் செல்கிறார்கள். அதுமட்டுமின்றி குழந்தைகளின் EXTRA CURICULAM திறமைக்காக தனியாக செலவு செய்ய வேண்டியது இருக்கும். அதனால் குடும்பத்தில் குறைந்தபட்சமாக இருவர் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. இது நமது நாட்டிலும் இப்பொழுது கட்டாயமாகி வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இப்பொழுது வேலை இல்லா திண்டாட்டம் பெருகி வருகிறது.
சூழ்நிலை, வெளிநாடு என்றால் இதுதான் முதன்மையாக இருக்கிறது. தூய்மையான காற்று, தூய்மையான தண்ணீர், நன்கு சீரமைக்கப்பட்ட சாலைகள், நன்கு கட்டமைக்கப்பட்ட வீடுகள், பொழுதுபோக்கு இடங்கள், மற்றும் விதி மீறல் இல்லாத போக்குவரத்து. அனைத்து வாகனங்களும் விதிமுறைகளை மிகவும் சரியாக பின்பற்றுகின்றனர். இதனால் உயிர் இழப்புகள் மிக மிகக் குறைவு. இந்த ஒரு விஷயத்தில் நாம் வெளிநாட்டை மிஞ்சுவதற்கு சாத்தியமில்லை. இங்கு ஜாதி, மதம், ஒருவரை ஒருவர் குறை சொல்வது, பொறாமை, மற்றவர்களைப் பற்றி குறை கூறுவது என்ற எதுவும் இங்கு கிடையாது. இங்கு அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் மிகவும் நிம்மதியாக வாழுகின்றனர்.
வெளிநாடுகள் இன்னும் உயர்ந்து நிற்பதற்கும் கட்டுக்கோப்பாக இருப்பதற்கும் காரணம் அங்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான விதிமுறைகள் மட்டுமே. ஆனால் நம் நாட்டில் சுதந்திரம் என்ற பெயரில் சுதந்திரமாக அனைத்து விதிகளையும் கட்டமைப்புகளையும் கலைத்து விட்டோம்.
நமது நாட்டில் கூட்டமாக இருந்தாலும் நம் தனித்தனியாக தான் வாழ்கிறோம். ஆனால் வெளிநாடுகளில் தனியாக தான் இருக்கிறோம் தனியாக தான் வாழ்கிறோம் இது ஒன்றுதான் வித்தியாசம்.
எந்த ஒரு நாட்டிலும் நிறைவு மற்றும் குறைவு எல்லாம் இருக்கும். அதனால் வெளிநாட்டு வாழ்க்கையும் சரி அவர்களின் தாய் நாட்டின் வாழ்க்கையும் சரி இவை இரண்டையும் முடிவு செய்வது அவர்களின் காலம், சூழ்நிலை, வாழ்க்கை மற்றும் மன நிலையைப் பொறுத்தது. என்னதான் வெளிநாட்டில் அனைத்து வகையான வசதிகள் கிடைத்தாலும் கூட ஆனால் ஏதோ மனதில் குறை இருக்க தான் செய்கிறது. வெளிநாட்டில் பெற்றதும் இழந்ததும் எது அதிகம் என்று என்னிடம் நீங்கள் கேட்டால், நான் பெற்றதை விட இழந்தது தான் அதிகம் என்று சொல்வேன். இது எனது பார்வையில்.
சிறப்பு தோழர்