மகிழ்வித்து மகிழ்: பகிர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்

ஆரம்பக் காலத்தில் பல தன்னார்வு தொண்டு நிறுவனங்களுக்கு நண்பர்கள் இணைந்து பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கான கல்வி பயில உதவுவது, மருத்துவ வசதியற்று தவித்த நபர்களுக்கு   உதவுவது என்று நண்பர்கள் கூடி இயங்கினோம். ஒருகட்டத்தில் ஊர்கூடி தேர் இழுப்பது போல என்னுடன் கல்லூரியில் பயின்று நல் பணியில் இருக்கும் நண்பர்கள் மற்றும் உதவும் எண்ணத்துடன் இருக்கும் நண்பர்களை ஒன்றிணைத்து கல்வி உதவி, குருதி கொடை வழங்குவது, உணவு வழங்குவது என்று பணியைத் துவங்கினோம்.

2018ஆம் ஆண்டு சித்திரை ஒன்றாம் நாள் “மகிழ்வித்து மகிழ்” என்ற பெயரின் கீழ் உதவும் மாண்புடன் இருக்கும் மனித உள்ளங்களை இணைத்து முறையாக செயல்படத் துவங்கினோம். இயங்குவதற்கு என்று ஒரு உந்துதலை அவை வழங்கிக் கொண்டிருக்கிறது.

சின்ன சின்னதாக நண்பர்களின் மூலமாக வரும் உதவி அழைப்புக்களை ஏற்று குருதி கொடை, கல்வி உதவி என்று செய்து கொண்டே இருந்தோம். பிறகு வாட்ஸ் அஃப் குழுவை உருவாக்கி ஒவ்வொரு மாதமும் 10 ஆம் தேதிக்குள் நண்பர்கள் வட்டத்தில் இருந்து  ஒரு ரூபாயில் இருந்து தொகையைப் பெற்று கல்விக் கட்டணம் கட்டமுடியாமல் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டணத்தைச்  செலுத்துவோம்.  இதில் ஒவ்வொருமாதமும் குழுவில் இருக்கும் ஒரு நபர் உதவி தொகையை சேர்க்க இயங்குவார் இதில் குறிப்பிட தகுந்த விடயம் என்னவென்றால் அந்த குழுவில் இருக்கும் ஒவ்வொரு நபர்களையும் நாங்கள் பார்த்ததுமில்லை ஆனால் ஒவ்வொரு மாதமும் அப்பணி சிறப்பாக நடைபெறும். 

2018 ஆம் ஆண்டு ஈரோடு, சத்தியமங்கலம் பகுதியைச் சார்ந்த அத்தானி என்ற மலைகிராம பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளதை அறிந்து அவர்களுக்கான மருத்துவ உதவி மற்றும் சரிவித உணவு வழங்கினோம் மேலும் சரிவிகித உணவு குறித்த விழிப்புணர்வும் வழங்கினோம்

2018 ஆம் ஆண்டு கஜா புயலால் பாதிக்கபட்ட  மக்களுக்கும் மற்றும் கேரளா வெள்ளத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கான அடிப்படையான மருந்து உணவுப்  பொருட்களை  திரட்டி வழங்கினோம்.

2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா பேரிடரில் பெருவாரியான வேலை இழப்பு பொருளாதார நெருக்கடியில் தவித்த மக்களுக்கு தேவையான மருத்துவ, உணவு உதவிகளையும். விழிப்புணர்வும் ஏற்படுத்தினோம்.

முதன் முதலில்  நீட் நுழைவு தேர்வு வந்த சூழலில் அதற்கான எதிர்ப்பு வலுத்தது. பல மாணவர்கள்  தேர்வெழுத முயன்றார்கள் ஆனால் அவர்களுக்கான தேர்வெழுதும் மையங்கள் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தது உதாரணமாக திருவண்ணாமலையினைச் சார்ந்த மாணவர் ஒருவருக்கான தேர்வெழுதும் மையம் உத்தரபிரதேசத்தில்  இருந்தது. இப்படியாக தமிழகத்தில் இருக்கும் பல மாணவர்களுக்கான தேர்வெழுதும் மையம் பல மாநிலங்களில் இருந்து அந்த அந்த மாநிலத்தில் இருக்கும் நண்பர்களின் உதவி கொண்டு அவர்களை தேர்வுக்கு அனுப்பினோம்.

இத்தனை மரங்கள் அத்தனை மரங்கள் என்று நட்டுவிட்டுக் கடக்காமல் இதுவரையில் 52 மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்தும் வருகிறோம்.

இதுவரையில் 3 பள்ளி மாணவர்கள், 6 கல்லூரி மாணவர்களுக்கான ஒரு கல்வியாண்டின் முழு கல்விக்கட்டணத்தைச் செலுத்திருக்கிறோம் என்பதே வியப்பாகத்தான் இருக்கிறது ஒவ்வொரு ரூபாயாக பலரிடம் இருந்து சேகரித்து  அவற்றை வழங்கியிருக்கிறோம்.

அவசரம் என்று இரத்தக் கொடை கேட்டு வரும் அழைப்பிற்கு அதில் தமிழ்நாடு முழுவதிலும் எங்கிருந்து அழைப்பு வந்தாலும் நண்பர்களின் உதவி கொண்டு இரத்தத் தானம் வழங்கியிருக்கிறோம். இதுவரை ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்களுக்கு நேரடியாக இரத்தத் தானம் வழங்கியிருக்கிறோம்.

ஒவ்வொரு ஆண்டும் தன்னம்பிக்கையுடன் இயங்கிய சாதனைப் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு “மகிழ்  பெண் சாதனையாளர் விருது” வழங்கப்படுகிறது. 

இன்னும் சிறு சிறு துளியாக மகிழ்வித்து மகிழ் உருக்கொண்டிருக்கிறது. நம்மால் முடிந்ததை நாம் பகிர்ந்து உதவுவோம்.


9 thoughts on “மகிழ்வித்து மகிழ்: பகிர்ந்து மகிழ்ந்து வாழ்வோம்

  1. அன்பின் வாழ்த்துக்கள் தம்பி

    நற்படிகள் தொடரட்டும்

  2. Very good,
    மகிழ்வித்து மகிழ்வின் பயணத்தை பார்க்க மிக்க மகிழ்ச்சி, தொடருங்கள் மற்றவர்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்.

  3. Great work !!! 🙌🙌🙌 Keep up the spirit and continue the same 🤝🤝 Wishing you all success 🎉🎉

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *