இது உண்மையிலேயே ஒரு தேசிய நிறுவனம்: இந்தியதேசியகாங்கிரஸ்

இயக்கத்தின் ஆரம்பம்:

உலகில் உள்ள எந்த ஒரு இயக்கமும், மக்கள் மத்தியில் வேர் ஊன்றி, வளர்ச்சி பெற, ஒரு கருத்தியல் அவசியம்.  அப்படியாக,  இன்று pan – India என்ற சொல்லுக்கு ஏற்றவாறு, டிசம்பர் 28, 1885ல் உருவான ஒரு பெரும் இயக்கம் தான்  “அகில இந்திய தேசிய காங்கிரஸ்”.  காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாறு, 

ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற பிரிட்டிஷ் அரசு ஊழியரால்,  இந்தக் கட்சி உருவாக்கப்பட்டது. 

இந்தியாவின் அனைத்து மாகாணங்கள் மற்றும் பிரசிடென்சிகளில் இருந்து மொத்தம் 72 பிரதிநிதிகள் கட்சியை உருவாக்க ஒன்றிணைந்தனர். 1885 இல், டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை இதன் முதல் கூட்டம், பம்பாயில் நடைபெற்றது. படித்த மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து, அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே, இக்கட்சி நிறுவப்பட்டது.  முதலில்,  இந்திய தேசிய ஒன்றியம் (Indian National Union) என்று இயக்கத்திற்குப் பெயர் இடப்பட்டது. பின்,  தாதா பாய் நௌரோஜி அவர்கள், ‘ஒன்றியம்’  என்ற சொல்லை நீக்கி, ‘காங்கிரஸ்’ என்று சொல்லைச் சேர்த்தார். 

https://gumlet.vikatan.com/vikatan%2F2019-05%2F0b576718-c9a2-46c9-8e57-2b900d53e139%2Fcongress_2_.jpg?auto=format%2Ccompress&w=1200

காங்கிரஸ் கட்சி ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே,  அசுர வளர்ச்சி அடைந்தது. காங்கிரஸின் பதினொன்றாவது அமர்வில் 1894இல் 1163ஆக இருந்த பிரதிநிதிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டு 1584 ஆக உயர்ந்தது. 1901 கல்கத்தா காங்கிரஸ் மேடையில் தான்,  மகாத்மா காந்தி முதன்முறையாகத் தோன்றினார்.  

தென்னாப்பிரிக்காவில்  வழக்கறிஞராக இருந்த காந்திஜி, நாட்டில் இனப் பாகுபாடு மற்றும் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை ஆதரிக்குமாறு, காங்கிரஸை வலியுறுத்தினார்.

செப்டம்பர் 20, 1932 அன்று, காந்திஜி, ஹரிஜனங்களுக்காகக் குரல் கொடுத்தார்.  பின், அவருக்கும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்காருக்கும் இடையே ஏற்பட்ட உடன்படிக்கை படி, ஹரிஜனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடஒதுக்கீட்டைப் பெற்றனர். 

போலீஸ் அச்சுறுத்தலை மீறி,  ஏப்ரல் 1932இல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் பண்டிட் மதன் மோகன் மாளவியா, வழியிலேயே  கைது செய்யப்பட்டார். 

மார்ச் 12, 1930 அன்று, காந்திஜி சபர்மதியில் உள்ள தனது இல்லத்தில் இருந்து,  1882 உப்புச் சட்டத்தை எதிர்த்து, தண்டி அணிவகுப்பை (உப்புச் சத்தியாகிரகம்) தொடங்கினார். 

மார்ச் 22, 1942 முதல்,  சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ், இரண்டாம் உலகப் போரில் பிரிட்டனுக்கு, இந்தியர்களின் ஆதரவைக் கோரி காங்கிரஸுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.   காங்கிரஸ்,  உடனடி மற்றும் முழுமையான அதிகார மாற்றத்தை முன்வைத்தது.  

ஏப்ரல் 11, ஆங்கிலேயர்கள் கோரிக்கையை ஏற்காததால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இரண்டாம் உலகப் போரில் இந்தியா பங்கேற்பதாக கவர்னர் ஜெனரலின் ஒருதலைப்பட்சமான அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, 

காங்கிரஸ் அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர்.  “வெள்ளையனே வெளியேறு” இயக்கம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின் கடைசிக் கட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. 

கிராந்தி மைதானத்தில் தொடங்கி,  இந்த இயக்கம், நாடு முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது.  1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை, இப்போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்தது. 

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பண்டிதர் ஜவகர்லால் நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூலை 18, 1947 இல், இந்திய சுதந்திரச் சட்டத்தை,  ஜூன் 1947 இல் மவுண்ட்பேட்டன் பிரபு வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில், பிரிட்டானியர்களின் அதிகாரங்களை இந்தியாவிற்கு மாற்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆகஸ்ட் 29, 1947 அன்று, அரசியலமைப்புச் சபை, இந்தியாவிற்கான அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, வரைவுக் குழுவை அமைத்தது. டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், அதன் தலைவராகச் செயல்பட்டார்.

மகாத்மா காந்தி ஜனவரி 30, 1948 அன்று ஒரு பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது மத வெறியரான நாதுராம் கோட்சேவால் படுகொலை செய்யப்பட்டார்.   தேசமே துக்கத்தில் மூழ்கியபோது, ​​”நம் வாழ்விலிருந்து ஒளி மறைந்து விட்டது” என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு கூறினார்.

Fake news: The story of the film still that many believe depicts ...

நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். ஒரு பிரதமருக்கான நீண்ட காலமாக இருப்பினும்,  ஒரு நாட்டின் வரலாற்றில் மிகக் குறுகிய அத்தியாயம்.  இந்த 17 ஆண்டுகளில், பொருளாதாரத்தைக் குறித்து, நவீன யுகத்திற்கு நாட்டை முன்னேற்றிச் செல்ல, மாபெரும் பொதுத்துறை அமைப்புகள் உருவாயின.

சுதந்திர இந்தியாவின் முதல் பல்நோக்குத் திட்டமாக,  ஜூலை 7, 1948 அன்று Damodar Valley Corporation தாமோதர் நீர்ப்பாசனத் திட்டம்  உருவாக்கப்பட்டது.   இந்தத் திட்டம் 1953 ஆம் ஆண்டு முதல் மின்சாரத்தை  வழங்கி வருவதுடன்,  கிழக்கு இந்தியாவின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்களித்தது.

பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு ஜூலை 9, 1951 அன்று, முதல் ஐந்தாண்டு திட்டத்தைத் தாக்கல் செய்தார். மொத்த திட்டமிடப்பட்ட பட்ஜெட் ரூ. 2069 கோடி, ஏழு பரந்த பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டது.  நீர்ப்பாசனம்,  எரிசக்தி, 

விவசாயம்,  சமூக மேம்பாடு, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புக்கு அதிக ஒதுக்கீடு கிடைத்தது.

பக்ரா நங்கல், ஹிராகுட் மற்றும் நாகார்ஜுன சாகர் ஆகிய 3 பெரிய பொதுத்துறை நீர்மின் அணைகளுக்கு இந்த திட்டம் வழிவகுத்தது.  பக்ரா நங்கல் அணை 10 மில்லியன் ஏக்கர் விவசாய நிலங்களுக்கு, பாசனம் அளிக்கிறது மற்றும் 1500 MV உற்பத்தி செய்கிறது.  

இந்த முதல் நடவடிக்கை, சோவியத் யூனியனில் கூட ஒப்பிடக்கூடிய இணைகள் எதுவும் இல்லை.  நேருவின் திட்டம், மற்றவர்களை விட,  இரண்டு மடங்கு அதிக அளவில் இருந்தது. முதலாவதாக, உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை இங்கே இந்தியாவில் உருவாக்க வேண்டும் என்று விரும்பினார்.  அமெரிக்கப் பயணத்தின் போது, ​​ அமெரிக்கப் பல்கலைக் கழகங்கள் அந்நாட்டுக்குத் தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞான ரீதியில் எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கின்றன என்பதை ஆராய்ந்தார்.  

அதன் விளைவாக, ஆகஸ்ட் 18, 1951 இல், இந்தியாவின் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத், முதல் இந்திய தொழில்நுட்பக் கழகத்தை (IIT) காரக்பூரில் திறந்து வைத்தார். தொடர்ந்து, பம்பாய் (1958),  மெட்ராஸ் (1959),  கான்பூர் (1959) மற்றும்  டெல்லி (1961) ஆகிய ஐந்து முக்கிய இடங்களில், இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க வழிவகுத்தார். அடுத்து, இந்திய மேலாண்மைக் கழகங்கள் (Indian Institute of Management), இந்திய சுரங்கப் பள்ளி (Indian School of Mines),  வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள் (Agricultural Universities),  அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (All India Institute of Medical Sciences) போன்ற அரசு நிதியுதவி பெறும் நிறுவனங்கள் நேருவால் உருவாக்கப்பட்டவை. 

  • விக்ரம் சாராபாய் – இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டம்
  • சர் சி.வி.  ராமன் – இந்திய அறிவியல் கழகம்
  • ஹோமி ஜே. பாபா – பாபா அணு ஆராய்ச்சி மையம்
  • சதீஷ் தவான் – இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
  • எஸ். எஸ். பட்நாகர் – அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் போன்ற முதன்மையான அறிவியல் நிறுவனங்களை காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்தது.

மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்ததால், அதிக எண்ணிக்கையிலான மருத்துவப் பயிற்சியாளர்களைக் கொண்டு வருவதும் அவசியமானது.  1946ல் 15ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 1965ல் 81 ஆகவும், 1965ம் ஆண்டுக்குள் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 1200ல் இருந்து 10,000 ஆகவும் உயர்ந்தது.

இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 489 இடங்களில் 364 இடங்களைக் கைப்பற்றி காங்கிரஸ் கட்சி அமோக பெரும்பான்மையைப் பெற்றது.  மே 13, 1952 இல், சுதந்திர இந்தியாவின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் உருவாக்கப்பட்டது. பண்டிதர் ஜவஹர் லால் நேரு பிரதமராகவும், 14 உறுப்பினர்கள் அமைச்சரவையில் அங்கம் வகித்தனர்.

காமராஜர் ஏப்ரல் 13, 1954 அன்று சென்னையின் முதலமைச்சராகப் பதவியேற்றார். சுதந்திரத்திற்குப் பின் மெட்ராஸ் மாநிலத்தின் (தற்போது தமிழ்நாடு) வரலாற்றில் “பொற்காலம்” என்று வர்ணிக்கப்பட்டது, காங்கிரஸின் தலைமையிலான இவருடைய ஆட்சியில் தான். ராஜாஜியின் ஆட்சிக் காலத்தில்,  நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி,  கிட்டத்தட்ட 6000 பள்ளிகள் மூடப்பட்டன.  மேலும் பரம்பரை அடிப்படையிலான தொழிற்கல்வித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது மாணவர்கள் தங்கள் குடும்பங்களின் பாரம்பரிய சாதித் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டும்.  

இந்தத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.  இதனால் ராஜாஜி தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.  அதைத் தொடர்ந்து காமராஜரை முதல்வராக காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது.

காமராஜர், மூடப்பட்ட 6,000 பள்ளிகளை மீண்டும் திறந்ததுடன், 12,000 புதிய பள்ளிகளையும் திறந்தார். 300க்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்திலும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. 

காமராஜர் பதினோராம் வகுப்பு வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வியை அறிமுகப்படுத்தியதன் மூலம்,  மாநிலத்தில் கல்வியறிவின்மையை ஒழிக்க முற்பட்டார்.  மாணவர்களிடையே சாதி, மத, வகுப்பு வேறுபாட்டைக் களைய, சீருடைகளை அறிமுகப்படுத்தினார். காமராஜரால் தொடங்கப்பட்ட, மிகப் புரட்சிகரமான திட்டம்,  மதிய உணவுத் திட்டமாகும். இதன் மூலம் ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுக்கு, பஞ்சாயத்து மற்றும் அரசு நடத்தும் பள்ளிகளில் ஒரு வேளை உணவு வழங்கப்பட்டது. 6 முதல் 11 வயது வரையிலான பள்ளி செல்லும் குழந்தைகளின் சதவீதம் 45% லிருந்து 75% ஆக அதிகரித்து.  தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதத்தை 7% இலிருந்து 38% ஆக உயர்த்தியது காமராஜரின் ஆட்சி.  இந்தியாவில் வேறு எந்தவொரு அரசாங்கமும் செய்திராத மாபெரும் புரட்சி இது. 

காமராஜர் காலத்தில் பெரிய நீர்ப்பாசனங்கள்  அமைக்கப்பட்டன. பவானி, மணிமுத்தாறு, ஆரணி, வைகை, அமராவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, பரம்பிக்குளம், நெய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் மற்றும் பாசனக் கால்வாய்கள் கட்டப்பட்டன.  

1957-61 இல் சிறு நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ்  1,628 தொட்டிகள் வண்டல் மண் அகற்றப்பட்டன, 2,000 கிணறுகள் வடிகால்களுடன் தோண்டப்பட்டன.  விவசாயிகளுக்கு 25% மானியத்துடன் நீண்ட காலக் கடன்கள் வழங்கப்பட்டன.  மேலும், வறண்ட நிலம் வைத்திருந்த விவசாயிகளுக்கு தவணை முறையில் ஆயில் என்ஜின்கள் மற்றும் மின்சார பம்பு செட்டுகள் வழங்கப்பட்டன. 

காங்கிரஸ் தலைமையிலான, காமராஜரின் ஆட்சிக் காலத்தில்,  பல கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட தொழில்கள் மற்றும் தொழிற்சாலைகள் :

  • நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், 
  • திருச்சியில் பிஹெச்இஎல், 
  • மணலி சுத்திகரிப்பு நிலையம், 
  • ஊட்டியில் ஹிந்துஸ்தான் ரா போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை, 
  • சென்னையில் அறுவை சிகிச்சை கருவிகள் தொழிற்சாலை, 
  • சென்னையில் ரயில்வே கோச் தொழிற்சாலை ஆகியவை நிறுவப்பட்டன.   காகிதம், சர்க்கரை, இரசாயனங்கள் மற்றும் சிமெண்ட் போன்ற தொழில்கள் அந்தக் காலகட்டத்தில் வளர்ந்தன.

காங்கிரஸ் தலைமையில், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர். ராஜேந்திர பிரசாத், பிப்ரவரி 4, 1959 அன்று (Bilai Steel Plant) பிலாய் எஃகு ஆலையைத் திறந்து வைத்தார்.  இந்தியாவின் எஃகுத் தண்டவாளங்கள், அகலமான எஃகுத் தகடுகள் மற்றும் பிற எஃகுத் தயாரிப்புகளை உற்பத்தி செய்யத் தொடங்கினர்.

விண்வெளி ஆராய்ச்சியின் அவசியத்தை அங்கீகரித்து 1962 ஆம் ஆண்டு டாக்டர். விக்ரம் சாராபாயின் பரிந்துரையின் பேரில் ஜவஹர்லால் நேருவின் கீழ் அமைக்கப்பட்ட இஸ்ரோ, விண்வெளி ஆராய்ச்சிக்கான இந்திய தேசியக் குழு (INCOSPAR) உருவாக்கப்பட்டது.  INCOSPAR வளர்ந்து, பின், 1969 இல் ISRO ஆனது.

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு, 1964 ஆம் ஆண்டு மே 27 ஆம் தேதி தனது 74 வது வயதில் காலமானார். அவரது ஆட்சிக்காலம் நாட்டின் வரலாற்றில், மிகவும் புகழ்பெற்ற அத்தியாயங்களில் ஒன்றாகும்.  ஒரு வலுவான ஜனநாயக நிறுவனங்களின் பாரம்பரியத்தையும், மதச்சார்பின்மை மற்றும் சோசலிசத்தின் மதிப்புகளின் அடிப்படையிலான, ஒரு அரசமைப்பை விட்டுச் சென்றார்.

லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 அன்று பிரதமராகப் பொறுப்பேற்றார். இந்தியா-பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஜனவரி 10, 1966 அன்று தாஷ்கண்ட் பிரகடனத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டன.  மறுநாள் மாரடைப்பால் சாஸ்திரிஜி காலமானார். ஜனவரி 24. 1966 அன்று ஸ்ரீமதி இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்றார்.  

ஜூன் 1967 இல் AICC கூட்டத்தில், வங்கி நிறுவனங்களின் சமூகக் கட்டுப்பாட்டைக் கோரும் தனது பத்து அம்சத் திட்டத்தை இந்திராஜி வெளியிட்டார். 

  • பொதுக் காப்பீடு தேசியமயமாக்கல்;  
  • ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை தேசியமயமாக்குதல்;  
  • உணவு தானிய பொது விநியோகம்;  
  • ஏகபோகங்கள் மீதான தடைகள் மற்றும் 
  • பொருளாதார சக்தியை மேம்படுத்துதல்;  
  • நகர்ப்புற வருமானம் அதிகரித்தல், 
  • சொத்து மீதான வரம்புகள்;  
  • நில சீர்திருத்தத்தைச் சிறப்பாக செயல்படுத்துதல்;  
  • அத்துடன், பிரபுத்துவ சலுகைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டன.

ஏழைகளுக்கு வங்கித் துறையின் கதவுகளைத் திறக்க, 14 பெரிய தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன.  

1979 ஆம் ஆண்டில், இந்த வங்கிகளின் மொத்த கிளைகளின் எண்ணிக்கை 1969 இல் 8,262 இல் இருந்து 30,202 ஆக அதிகரித்ததன் மூலம் இதன் வெற்றியை, நம்மால் அளவிட முடியும். இந்திரா அம்மையாரின் தலைமையின் கீழ்,  இந்திய அரசியலமைப்பில் 42 வது திருத்தத்தை கொண்டு வந்தது, நம் நாட்டின் முகவுரையையே மாற்றியது.   இந்தியாவை “இறையாண்மை, சோசலிஸ்ட், மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு” என்று விவரித்தது.  முந்தைய பதிப்பில் ‘சோசலிஸ்ட்’  மற்றும் ‘மதச்சார்பற்ற’ எனும்  வார்த்தைகள் கிடையாது.  அக்டோபர் 31, 1984 அன்று காலை 9:20 மணியளவில், இந்திரா காந்தி தனது சொந்த பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.  தேசமே சோகத்தில் மூழ்கியது. 

இந்திரா அம்மையாரின் மறைவுக்கு பிறகு  ஸ்ரீ ராஜீவ் காந்தி பிரதமராகப் பதவியேற்றார். ஏப்ரல் 01, 1986 இல், ராஜீவ் காந்தி அவர்களால்  (MTNL) எம்டிஎன்எல் நிறுவப்பட்டது. தொலைத்தொடர்புப் புரட்சியின் தொடக்கத்தை, நம் தேசம் உணர ஆரம்பித்து.   1987 ஆம் ஆண்டில், அவர் சாம் பிட்ரோடாவை தனது தலைமை தொழில்நுட்ப ஆலோசகராக நியமித்தார். 

New Delhi: Congress President Sonia Gandhi reads out the Preamble to the Constitution as party leaders Manmohan Singh, Rahul Gandhi and other opposition leaders look on during a protest, at Parliament premises in New Delhi, Tuesday, Nov. 26, 2019. (PTI Photo/Kamal Singh) (PTI11_26_2019_000085B)

நாடு முழுவதும் பொது அழைப்பு அலுவலகங்களை (PCOs) அமைப்பதற்கு வழி செய்தார்.  சிறு தொழில் முனைவோருக்கு அரசு, தொலைபேசி வசதிகளை வழங்கியது.  2004 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் 1.52 மில்லியன் பிசிஓக்கள் இருந்தன, முன் எப்போதும் இல்லாத வகையில் இந்தியாவை, இச்சேவை, இணைத்தது. 

மே, 1986 இல், ராஜீவ் காந்தி அவர்களால்,  ‘ஜவஹர் நவோதயா வித்யாலயா’ அமைப்பு நிறுவப்பட்டது.  ஒரு புதிய தேசியக் கல்விக் கொள்கையாக “வேறுபாடுகளை நீக்கி, கல்வி வாய்ப்பை சமப்படுத்துவதற்கும்” குறிப்பாக எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை  வழங்கியது. 

நாடு முழுவதும் ஆரம்பப் பள்ளிகளை மேம்படுத்த “ஆபரேஷன் கரும்பலகை” செயலாக்கம் பெற்றது.   1985 இல் உருவாக்கப்பட்ட ‘இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் நாடெங்கிலும் திறந்த பல்கலைக்கழக அமைப்பை விரிவுபடுத்தியது.  

மே 21, 1991 அன்று ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.  அதன் பின்னர், திரு பி.வி. நரசிம்ம ராவ் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன் சிங், நிதி அமைச்சரானார்.   1991 இல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த போது, தேசம் கடுமையான பண  நெருக்கடியை எதிர்கொண்டது.  

IMF உடனான பிணை எடுப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக,  இந்தியா தனது தங்கத்தை அடகு வைக்க வேண்டியிருந்தது.  

ஜூலை 24, 1991 அன்று, நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன் சிங், இந்தியப் பொருளாதாரத்தைத் தளர்த்தி, நாட்டை வலுவான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். கட்சியின் தலைமைப் பொறுப்பை திருமதி  சோனியா காந்தி பொறுப்பேற்றுக் கொண்டார். 

திருமதி சோனியா காந்தி பச்மாரியில் ஒரு  கூட்டத்தை நடத்தினார். அதில், பஞ்சாயத்து ராஜ்கான 14 அம்சத் திட்டத்தையும், விவசாயத்திற்கு 8 அம்சத் திட்டத்தையும் கட்சி உருவாக்கியது. 

டாக்டர் மன்மோகன் சிங் 22 மே 2004 அன்று இந்தியப் பிரதமராகப் பதவியேற்றார். தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (NREGA) ஆகஸ்ட் 23, 2005 இல் ஒரு சட்டமாக மாறியது. வேலை தேடும் ஒவ்வொரு இந்தியருக்கும் 100 நாட்கள் உத்தரவாதமான வேலைவாய்ப்பைச் சட்டம் வழங்குகிறது.  

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.  அக்டோபர் 2, 2009 அன்று மகாத்மா காந்தியின் நினைவாக இத்திட்டம் MNREGA என மறுபெயரிடப்பட்டது. அனைவருக்கும் தரமான மருத்துவ சேவையை உறுதி செய்வதற்கான ஒரு திட்டமாக, தேசிய ஊரக சுகாதார இயக்கம் (NRHM) காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கத்தால் தொடங்கப்பட்டது. 

  இந்தத் திட்டம், உள்ளூர்வாசிகளுக்கு அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களாக (ASHA) பயிற்சி அளித்தல் மற்றும் ‘ஜனனி சுரக்ஷ யோஜனா’  உள்ளிட்ட சுகாதாரப் பாதுகாப்பு வழங்கலுக்கான பல புதிய வழிமுறைகளை முன்மொழிந்தது.

பிப்ரவரி 29, 2008இல், நாடு முழுவதும் உள்ள 4.30 கோடிக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் வாங்கிய ரூ.72,000 கோடி கடன்களைத் தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் தலைமையிலான UPA அரசு அறிவித்தது.   பெரும்பாலான இந்திய மாநிலங்களில், சிறு மற்றும் குறு விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையில் 70% முதல் 94% வரை இருந்தது.

UPA அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று, அமெரிக்காவுடனான ஒரு முக்கிய அணுசக்தி ஒப்பந்தத்தை கையெழுத்திட்டு உறுதி செய்தது. நாட்டின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அணுசக்தி முக்கியமானது. இன்று, பொருளாதாரம், போக்குவரத்து, மருத்துவம், கல்வி, சுகாதாரம், தொழில் நுட்பம், தொழிற்சாலை, நீர்ப்பாசனம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு, என்று, திரும்பிப் பார்க்கும் திசைகளிலெல்லாம், நாம் அடைந்த வளர்ச்சிக்கு வித்திட்டது காங்கிரஸ் கட்சியின் அரசுதான்.   “நீங்கள் சமூக சுதந்திரத்தை அடையாத வரை, சட்டத்தின்  மூலம் வழங்கப்படும்  சுதந்திரத்தால், உங்களுக்கு எந்த பயனும் இல்லை.” – பாபாசாகேப் டாக்டர் பி.ஆர் அம்பேத்கர்

“நாம் அரசியல் சுதந்திரத்தை அடைந்துவிட்டோம். ஆனால் நமது புரட்சி இன்னும் முழுமையடையவில்லை. வாழ்வதற்கும், மகிழ்ச்சியைத் தொடருவதற்குமான உத்தரவாதம் இல்லாத அரசியல் சுதந்திரத்தை, பொருளாதார முன்னேற்றம் மட்டுமே கொண்டு வர முடியும். எனவே, நமது மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ள அனைத்தையும் அகற்றுவது தான்  நமது உடனடிப் பணியாகும். திரு ஜவஹர்லால் நேரு.

“வளர்ச்சி என்பது தொழிற்சாலைகள், அணைகள் மற்றும் சாலைகள் அல்ல.  வளர்ச்சி என்பது மக்களைப் பற்றியது.  மக்களின் பொருளாதார, கலாச்சார மற்றும் ஆன்மீக நிறைவு தான்  நம் குறிக்கோள்.  தனி  மனித வளர்ச்சி, மிக உயர்ந்த மதிப்புடையது.” – திரு  ராஜீவ் காந்தி 

” அதிக அளவிலான இளைஞர்கள், பெண்கள், ஆதிவாசிகள் பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் இருக்க வேண்டும். இளைஞர்கள் அரசியலில் சேர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.  இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்காமல் நாம் வளர்ச்சி அடைய முடியாது.  அதிக இளைஞர்கள் மற்றும் பெண்கள் சட்டமியற்றுபவர்களாக இருந்தால் மட்டுமே நமது நாடு வேகமாக முன்னேறும்.” – திரு  ராகுல் காந்தி 

A delegation of leaders from Bundelkhand region led by Shri Rahul Gandhi calling on the Prime Minister, Dr. Manmohan Singh, in New Delhi on July 28, 2009.

“இது உண்மையிலேயே ஒரு தேசிய நிறுவனம்.  காங்கிரஸ் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரையோ அல்லது ஒருசாராரின் நலன்களையோ காப்பதற்காக ஏற்பட்டதல்ல” என்று சொன்னவர் மகாத்மா காந்தி அவர்கள். 

இன்றைய காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் நிலையில் சரிவு ஏற்பட, இதுவே காரணம். சிறு குழுக்களாகப் பிரிந்து, தனக்கான அரசியல் அமைப்பை நிறுவிக்கொள்ளும் இன்றைய சமுதாயத்தில், காங்கிரஸின் ‘அனைவரையும் ஒன்றிணைந்த செயல்பாடு’ தத்தளிக்கிறது. 

காங்கிரஸில் மட்டுமே தேசியவாதிகள், மதவாதிகள், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள், போராளிகள், என அனைவரும் ஒன்றாகப் பயணித்தனர்… ஒன்றிணைந்து நாட்டைத் தலை நிமிர வைத்தனர். 
இனி இது சாத்தியமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *