குறிப்பு: ப்ரீத்தி ஸ்ரீனிவாசன்,   19 வயதுக்குட்பட்ட தமிழகப் பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைவியாக அங்கம் வகித்தவர். ஒரு விபத்திலிருந்து மீண்ட பின்னர்,  இவர் சோல்ஃப்ரீ.  என்ற ஒரு அறகட்டளையை நிறுவினார். முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுப்பது மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வை  அளித்துவருகிறார். மேலும் இந்திய இளைஞர்களிடையே விபத்திலிருந்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புகிறார்.  1997ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பென்சில்வேனியா , அப்பர் மெரியன் ஏரியா உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார்.  தனது தந்தையின் வேலை காரணமாக, ப்ரீத்தி வெவ்வேறு கலாச்சாரங்கள் / மரபுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் வாய்ப்பு கிடைத்தது. 

விபத்துக்குப் பிறகு,  சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ சமூகவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். இவர் இசை, கலை, திரைப்படங்கள் மற்றும் இலக்கியம் ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டவர்.

விஜய் டிவியின் “சிகரம் தொட்ட பெண்கள்- ரே ஆஃப் ஹோப் விருது, ரெயின்ட்ராப்ஸின் “2014 ஆம் ஆண்டின் பெண் சாதனையாளர்” விருது, ஃபெமினா “பெண் சக்தி” விருது, 2014 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் மிகவும் செல்வாக்கு மிக்க முதல் 10 பெண்களில் ஒருவராக இவருக்கு ‘திறன் விருது’  வழங்கப்பட்டுள்ளது. சமூகப் பணிகளில் சிறந்து விளங்கியதற்காக சுதேசி பத்திரிகையின் “துருவ விருது”, மாற்றத்தின் முகவர் “2014-15 ஆம் ஆண்டிற்கான மாவட்ட ரோட்டராக்ட் கவுன்சிலின் விருது, தமிழக முதல்வரின் கல்பனா சாவ்லா விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கே: ஆண் / பெண் என்பதைக் கடந்து  உடலே ஒரு சுமையாக இருக்கும் போது இப்படியான முன்னெடுப்பிற்கான காரணம் எவை  அதற்கான  ஆற்றல் எங்கிருந்து பெறுகின்றீர்?

ஆற்றல் என்பதைவிட அது ஒரு வெறி. வெறியை விட it is a dire need. “நம்ம பண்லனா செத்துப் போய்கிட்டே இருப்பாங்க” “விட்டுடணும்னா விட்டுவிடலாம்” அவங்களப் பத்தி கேட்பாரு யாரும் இல்ல. இருந்தாலும் ஒண்ணுமில்ல, இல்லனாலும் ஒண்ணுமில்ல. அவங்க இல்லன்னா சந்தோஷப்படுறவங்க எல்லாம் இங்க நிறைய பேர் இருக்காங்க, இப்போ என்ன சொல்றது “if I let fear control me, if I am not going to be the change I’m the part of the problem.

என் வாழ்க்கையில் இது நடந்திருக்கு,  என் வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கு, அம்மாவுக்கு வயசாகுது இப்போ  என்னோட லெவலே very vulnerable. என் அம்மா இல்லனா, என் வாழ்க்கை என்ன ஆகுமுங்குறது ஒரு கேள்விக்குறியாதான் இருக்கும். ஆனால் I’m the best case scenario. அவுங்க வீட்டுலயே அவங்க தற்கொலைக்கு தள்ளப்படுறாங்க எனும்போது, இந்த பெண்கள் யாரு, இவங்க வாழ்க்கைக்கு மதிப்பே கிடையாதா? ஒரு மிருகமா இருந்தாலும் அந்த மிருகத்த சாவடிக்கக் கூடாதுனு தான் சொல்றோம். அப்போ இவங்கள சாவடிச்சிட்டா அது சரியா?

இப்போ if I’m not going to fight for them, if I’m not going to be the face and voice of this otherwise invisible segment of society that is so unbearably stigmatised and suppressed, then what I’m doing here? நானும் இருந்தேன், நானும் சாப்பிட்டேன், நானும் தூங்குனேன், நானும் வாழ்ந்தேங்குற  வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் இருக்கு? அந்த மாதிரி ஒரு வெறி தான். These people are people just like you and me; they are human beings with intrinsic value and they deserve to have their basic human rights fulfilled. They don’t deserve to be treated like a shame, a burden, a curse and abandoned by society. They don’t deserve to be forced to commit suicide. அந்த மாதிரி அவுங்களோட intrinsic value as a human being என்று பார்தீங்கன்னா நான் மனுஷியா பொறந்ததுக்கு எனக்குன்னு  ஒரு dignity இருக்கு. அந்த dignity-ய எடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அது பெண்ணாக இருக்கட்டும், ஆணாக இருக்கட்டும், குழந்தையாக இருக்கட்டும், ability இருக்கட்டும், ability இல்லாம இருக்கட்டும், LGBTQ-வா இருக்கட்டும் எதுவாக வேண்டுமானால் இருக்கட்டும்.

As a human being you are valuable, just as you are and have the right to dream and have opportunities to fulfill your highest potential. You must have the right to explore your identity in all its facets and the right to lead the life of dignity. அந்த ஒரு dignity எப்போதுல்லாம் போகிறதோ  அப்போது எல்லாம் அந்த ஒரு வெறி யாருக்காச்சும் ஒருத்தருக்கு வரும். அது வந்து, அந்த கடவுள் நமக்கு தர வாய்ப்பு. He has chosen me for that role அவ்வளவு தான்.  இதுக்கான inspiration அப்படின்னா every moment of every day is lived in service of the divine, as a servant, a slave, a mere instrument towards the fulfilment of the Greater Good.

அப்பறம் அந்த மாதிரி ஒரு அசிங்கம்,  நீ எல்லாம் ஏன் உயிரோட இருக்க? நீ செத்துடு அப்படிங்குற ஒரு வார்த்தை கேக்குறது யாருக்குமே அது ஏற்பட கூடாது. Soulfree wishes to save those who may be considered “the true untouchables of India” and fulfill the UN mandate that “No One Is Left behind”. அப்படின்னும் போது, என்னை பொறுத்த வரைக்கும், இந்தியாவில் இன்னைக்கு தீண்ட தகாதவர்கள் அப்படினா இவங்க தான். Person’s with Significant impairments and especially Women with disability cornered and ostracised into a social “Rolelessness”. எங்கயுமே வேண்டாம், நீ படிக்க போறியா வேண்டாம், நீ பொண்ணா வேண்டாம், நீ காதலியா வேண்டாம் , நீ மனைவியா வேண்டாம் , நீ அம்மாவா வேண்டாம். உனக்கு சமூகத்தில எந்த ரோலும் கிடையாது அப்படினா நீ யாரு? நீ தான் தீண்டத்தகாதவங்க.

கே: திருவண்ணாமலையில் துவங்க வேண்டும் என்பதற்கு தும் காரணம் உண்டா?

ஏன் திருவண்ணாமலைன்னா, நாங்க 2000ல திருவண்ணாமலைக்கு வந்தோம். எனக்கு 18வயசுல விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்படுவதற்கு முன்னாடி என் வாழ்க்கை முழுவதுமாக வேறுமாதிரியானது. நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தேன். என் வாழ்க்கையில் கஷ்டம்னா என்னன்னே தெரியாது, அதோட பிம்பம்கூட என் மீது பட்டதில்ல, சத்தியமா அப்படின்னா என்னன்னுகூட தெரியாது.

நான் எங்க அப்பா, அம்மாவுக்கு ஒரே குழந்தை. அதனால எனக்கு ஒண்ணுமில்ல அப்படிங்குற concept-ஏ இல்லாம இருந்தது. நான் ஒலிம்பிக் லெவல் பிட்(fit). ஒரு நிமிஷத்தில் நூறில் இருந்து  ஜிரோவிற்கு வந்துட்டோம்னு பார்க்கும் போது, அதுவும் 18 வயசுல அத ஏத்துக்கற தன்மையில்லை எனும்போது நம்ம என்ன பண்றோம் ஆன்மிகத்துக்கு திரும்புறோம். Am I my body and its achievements? Am I bound by the limitations of my body? Who am I? அப்படினும் போது தான் திருவண்ணாமலையில ரமணமகரிஷி, யோகிராம்  சுரத் குமார் ஆசிரமங்களுக்கு போனேன், யோகிராம்  சுரத் குமார் எங்களுடைய குரு. Our family is associated with them.  எங்க அப்பாவோட அம்மா எல்லாம் திருக்கோவிலூர்ல சுவாமி ஞானனந்தா கிரி அவர்கள் இருக்கும்போதே அந்த ஆசிரமத்திலயே துளசி தீர்த்தம்  தெளிச்சி அவங்க நித்யசூரியாக போய்ட்டாங்க. இனிமேல அவங்களுக்கு பிறப்பே கிடையாது  சொல்லிட்டாங்க… அப்படியான ஒரு குடும்பம் எங்களுடையது.

அப்போதிருந்தே யோகிராம் சுரத்குமார் வந்து ராம்ஜி சாமினு அப்பா சொல்லியிருந்தார். என் அப்பா கல்கத்தாவுல படிச்சாங்க அதனால ஹிந்தி நல்லா தெரியும். பீகார் பக்கமா  வந்தவர்ங்குறதால அவங்க கூட சுலபமாக இணைந்து கொள்ள முடிந்தது.

ஒரு 50 வருட காலம் பந்தமாக இருந்தது. எனக்கு விபத்து ஏற்பட்ட அரை மணி நேரத்தில அவருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. அதற்கு அவர் she  will be alright , she will be alright சொன்னார். அப்போ எங்க அப்பாக்கு ஆத்திரம் வந்து, அதுக்கு அப்புறம் என்ன alrightனு ஒரு ஆய்வு பண்ணி,  நாற்பது விஷயங்களை எழுதிகிட்டு these are all the reasons she will not be alright அப்படினு ஒரு கடிதம் எழுதி, என் அத்தையோட கணவர்கிட்ட கொடுத்து அந்த கடிதத்தை யோகிஜி கிட்ட படிச்சுக் காட்டினார். யோகிஜி அதை மறுபடியும் படிக்க சொல்லிட்டு அவர் சிரித்தார். Nothing is impossible for My Father Who Rules The Cosmos, she will be alright! அப்படினு. அதுக்கு அப்புறம் என் அப்பா சொன்னார் இதற்குப் பிறகு நான் என்ன சொல்வது என்று தெரியல. I Surrender to him. அவரு என்ன சொல்றாரோ அதை நான் செய்கிறேன். At some point he told us to shift to Tiruvannamalai. so in 2000 we moved from -43°F in Chicago to +43°C in Thiruvannamalai. அதுக்கு அப்புறமும்  நிறைய கஷ்டங்கள் வந்தது. எனக்கு உடல்நிலை சரியில்லாம போனது, பிறகு 2007ல் என் அப்பா இறந்து போய்ட்டார். அப்போல்லாம் கூட எனக்கு தோணுனதே இல்லை இப்படி soulfree ஆரம்பிக்கணும்னு. என்னோட வாழ்க்கையில் என் போராட்டமே தாங்கிக்க முடியாம இருந்தது. ஆனா என் அப்பா இறந்து போன நாலு நாளில் எங்க அம்மாக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இப்போ literal-லா படுத்துகிட்டு இருக்கேன்னா என்னை உட்கார வைக்க கூட ஆள் இல்லை. அந்த மாதிரி சூழ்நிலையில் அம்மாவ எப்படி மெட்ராஸ்க்கு சிகிச்சைக்கு கூட்டிட்டுப் போறது , சிகிச்சை பண்றது, பணத்துக்கு என்ன பண்றது. எந்த வருமானமும் இல்ல. வீடு இருக்கு ஆனா என்ன பண்ணுவோம், சாப்பாடு பண்றதுக்கும் support இல்லன்னும் போது என்னோட வாழ்க்கை ரொம்ப கஷ்டமா இருக்கு அப்படிங்குறது நிச்சயம்.

 When we tried to join college, அவங்க நீங்களாம் எதுக்கு படிக்க வரீங்க, Ramp, lift  எதுவும் கிடையாது.  என்னத்துக்கு உங்களுக்கு படிப்புங்குற மாதிரிலாம் கேட்டாங்க. அதுக்குலாம் சண்டை போட்டு அப்புறம் நான் என்னுடைய இளங்கலை படிப்பை Medical sociologyல் முடித்து , முதுகலை படிப்பை psychology-இல் முடித்தேன்.  அந்த முதுகலைப் படிக்கும் போது தான் soulfree துவங்குவதா இருந்தது. அப்போதான் அம்மாக்கு சிகிச்சை முடிந்து நாங்க மூன்று மாதம் சென்னையில் இருந்துட்டு திரும்ப வரோம். அந்த மூன்று மாசத்துல எனக்கு தெரிந்த முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்கள் இறந்து போறாங்க.

நீங்க  இருக்கறதால உங்க அண்ணனை திருமண செய்துகொள்ள யாரும் வரமாட்டேன்கிறாங்க, அதனால நீ விஷம் சாப்பிட்டு செத்துடுன்னு சொல்லிருக்காங்க. அவங்க விஷம் குடித்து இறந்து போறாங்க. அவங்களுக்கு இடுப்புக்கு கீழ தான் செயல்பாடு இல்லை. ஆனா கை விரல் எல்லாம் நன்றாக இருந்தது. அவர்கள் தையல், சமையல் எல்லாம் செய்துட்டு தான் இருந்தார்கள். ஆனால் அதையும் அவர்களை பாரமாக நினைத்து அவர்களை நடத்துகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை அது ஒரு கொலை. என்னுடைய வாழ்க்கை தான் கஷ்டம்னா. இதுலாம் என்ன சொல்றது. என்னுடைய அம்மாக்கு தொடர்ந்து ஏழு மணி நேர சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.  அப்போது என் தந்தையின் நண்பர்கள் என்னிடம் பேசினார்கள். இப்போ உன் அப்பாவும் இல்ல அம்மாக்கும் இப்படி life threatening சிகிச்சை நடத்துகிட்டு இருக்கு. ஒரு நாள் உன் குடும்பம் உன்னைப் பாதுகாக்க இல்லனா, உன்னுடைய வாழ்க்கை என்ன ஆகும்? நீ எங்க போவ, யோசிச்சுப் பார்க்கறியா அப்படினு சொன்னாங்க. எங்க போறதுனு கூகுள் செய்து பார்த்தா இந்த உலக மக்கள் தொகையில  ஐந்து நபருக்கு இந்த நோய் இருக்குன்னா அதுல ஒரு நபர் இந்தியன்.

We are the world’s most populous nation. அந்த 1:5ல 4% of persons with significant impedance. அதாவது இப்போ நீங்க கண்ணாடி போட்டுகிட்டு இருந்தீங்கன்னா நீங்க மாற்றுத்திறனாளியா?  உங்க கண்ணுல குறைபாடு அவ்வளவு தான். அந்த மாதிரி significant wheel chair users, அவங்களால வாழ்க்கையில் துணை இல்லாம வாழமுடியாதுனு இருக்குற அந்த 4%ல இருக்குறவங்களுக்கு ஒரு போக்கிடமே கிடையாது. அவங்களால  பணம் கொடுக்க முடியும் என்றாலும்  வாழ மரியாதையான இடம் கிடையாது. அரசாங்கமோ, அரசாங்கத்திற்கு வெளியவோ என்று  பார்து என்ன பண்ணப்போறோம்ங்கறது  இவர்களுக்கு ஒரு பெரும் கேள்வியாக தான் இருக்கு. அப்போதான் அம்மா சொன்னாங்க  “நீ ஆரம்பி எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு” என்று. சிரித்துகொண்டே அம்மாக்கு எதாச்சும் லூசாகிடிச்சா. என்னால என்னையே  பார்த்துக்க முடியலையாம், என் தட்டுல சாப்பாடு வச்சா எடுத்து சாப்பிட முடியல? நான் எப்படி நாலு பேரை பார்த்துக்கப் போறேன். என்னால என்ன பண்ண முடியும்? எனக்கு இந்த பொய் எல்லாம் சொல்லத் தெரியாது. நம்ம இந்தியாவில் நேர்மையா இருக்குறவங்களுக்கு தான் நிறைய பிரச்சனைலாம் வரும்.

நாம் இந்த கணக்கு வழக்குயெல்லாம் பார்க்க மாட்டோம், சட்ட திட்டம்லாம் தெரியாது, இப்படி இருக்கும் போது நம்ம எப்படி நிர்வாகத்த நடத்த முடியும்? என்று என் அம்மாவிடம் நான் சொல்லி இந்த முயற்சி வேண்டாம்னு முடிவு பண்ணினேன். நான் இந்த உலகத்தையே சின்னதா பண்ணிகிட்டு என் நண்பர்கள், யாருகிட்டயும் தொடர்பு வைத்துகொள்ளவில்லை இந்த மாதிரி ஒரு சூழ்நிலை இருக்கும் போது அவ்வளவு சின்ன வட்டத்திலயே மூணு மாசத்துல ரெண்டு பெண்கள் இறக்குறாங்க. அதுவும் எனக்கு தெரிந்த இரண்டு பெண்கள். அப்படினா இந்தியா முழுவதும் என்ன ஆகுறது? எத்தனை பேரு இறந்து போவாங்க? அதுக்கான ஆதாரப்பூர்வ ஆவணமே இல்லை.

முதுகுத்தண்டு பாதிப்பை அரசாங்கம் ஒரு தனித்தன்மை உடைய மாற்றுத்திறனாளி விஷயமாகவே ஏத்துக்கல. அப்போ தமிழ்நாட்டுல ஒரு வருஷதுக்கு எவ்வளவு பேர் முதுகுத்தண்டு பாதிப்புக்கு உள்ளாகுறாங்கன்னு கேட்டா தெரியாது. இவங்கள்ள மருத்துவமனைல இருந்து வெளிய போய் எத்தனை பேர் உயிரோட இருக்காங்க? எத்தனை பேர் செத்து போய்டுறாங்கனு தெரியாது, அவங்களுக்கு மறுவாழ்வு பயிற்சி கிடைக்குதானு கேட்டா? தெரியாது. அரசாங்கத்திலும் எந்த மறுவாழ்வு பயிற்சியும் இல்ல, இதுக்கு அரசாங்க காப்பீட்டுத் திட்டத்துலயும் இடம் இல்ல, அப்போ அவங்க எங்க போவாங்க. ஒரு நாளைக்கு இவங்க சிகிச்சைக்கு ஐந்தாயிரத்துல இருந்து பதினெட்டாயிரம் வரைக்கும் வாங்குறாங்க. இவ்வளவு யாரல கட்டமுடியும்?

இந்த மாதிரி சூழ்நிலையில இருக்கிற மக்கள் எப்படி வெளியில் வர முடியும் அப்படிங்குற நிலையிலதான் நான் soulfree-யை 23rd August 2013 அன்று ஆரம்பிச்சேன். it was Registered as a public charitable trust.

“கற்பனையா கூட நான் நினைச்சிப்பேன். என்னை ஜெயில்ல போடுவாங்களா! அப்படிப் போட்டாலும் அங்க கூட என்னை பார்த்துக்க ரெண்டு பேரு வெச்சி பார்த்துப்பாங்களா ? இலவசமா நமக்கு ரெண்டு கேரிங் ஆளுங்க கிடைச்சிடுறாங்க”( என்று வெடித்துச் சிரித்தார்.)

கே: சோல் ஃப்ரீ இந்த பெயருக்கான காரணம்?

நிறைய பேரு கேப்பாங்க இது என்னது Tollfreeயா மேடம்.  ஆமாங்க freeயா தான் தருவோம். அந்த மாதிரி இன்னும் நிறைய பேர் எனக்கு சோளப்பொறி என்றெல்லாம் சொல்லுவாங்க!!

 SOULFREEனா ஆத்மாக்கு எப்போதுமே பிறப்பும் கிடையாது, இறப்பும் கிடையாது. அது எப்பவுமே FREEஆ தான் இருக்கு அப்படிங்குறது தான் நம்முடைய நம்பிக்கை. ஆனா அந்த ஆத்மா உடலுக்குள் இருக்குற வரைக்கும் அதுல அடங்கி இருக்குற வரைக்கும் அதோட limitations அது ஏத்துக்குது. உன்னால உன்னோட உடல ஒரு குட்டி விரலை கூட அசைக்க முடியல, ஒரு கொசு வருதுனா அத தள்ளிவிட முடியல, தலைல அரிச்சதுனா சொறிஞ்சிக்க முடியல. அந்த மாதிரி ஒரு சூழ்நிலை இருக்கும் போது அந்த ஆத்மா அணு அணுவா சாகுது.

 முக்கியமா தினமும் நீ எல்லாம் ஏன் இருக்க? நீ தண்டச்சோறு, நீ எல்லாம் உயிரோட இருக்கிறதுக்கே லாயக்கில்ல, நீ செத்துடலாம்னு அணு அணுவா சித்திரவதை பண்ணும் போது அந்த ஆத்மா உள்ளே அணு அணுவா சாகுது. அப்படினும் போது Every soul deserves the opportunity to be SOULFREE.

சோல்ஃப்ரீனா (SoulFree)  என்ன ?

அந்த ஆத்மாக்கு மூச்சுவிடணும்!

அதுக்கு வாழணும்!

அதோட ஆசைகள் நிறைவேறுவதற்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும்!

அது தான் ‘SOUL FREE’  – “ஆத்ம விடுதலை”

கே: முனைவர் பட்டம் பற்றி?

அது எப்படினா நிறைய இடத்துல என்னை motivational speaker-ஆ கூப்பிடுவாங்க பள்ளி , கல்லூரிகள்ல. அப்போ மயிலம் பொறியியல் கல்லூரில நடந்த ஒரு நிகழ்வு. திருவண்ணாமலையில்     இருக்குறதுலயே ரொம்ப பின் தங்கிய இடம். அதனால ஒரு guidance councilor-ஆ நீங்க வந்து பேசுங்க எங்க பசங்ககிட்ட. ஒரு தேர்வுல தோல்வி அடைச்சிட்டாங்கன்னா அவங்க தற்கொலைக்கு முயற்சி செய்யுறாங்க. அது நாங்க சொன்னாலும் கேக்க மாட்றாங்க. ஆனா நீங்க சொன்னா கேப்பாங்கனு என்ன அழைச்சாங்க. சரி நான் வறேன்னு போனா அங்க இருக்க guide உங்கள மாதிரி மக்களெல்லாம் PhD பண்ணவேண்டாமா, நீங்க எல்லாம் எல்லோருக்கும் முன்மாதிரி அப்படினுலாம் சொன்னாங்க. ஆனா நான் “எனக்கு வயசு ஆகிடுச்சு எதுக்கு இதுலாம்னு சொல்லிட்டேன்”. ஆனா எங்க அம்மாக்கு அது ஒரு விதையா மனசுல விதைத்துடுச்சி. “நீ சின்ன வயசுலயே டாக்டர் ஆகணும்னு நினைச்சேன். இப்போ இந்த மாதிரி டாக்டராச்சும் ஆகிடு. அதுனாலையாச்சும் PhD பண்ணிடு” அப்படினு சொன்னாங்க அம்மா.

அம்மா சொல்லி அத எப்படி பண்ணாம இருக்குறதுனு IITல போடலாம், ஆனால் அங்க கண்டிப்பா நம்மள சேத்துக்க மாட்டாங்கன்னு போட்டதுல,  both the entrance exam and vivaல ஓகே பண்ணியாச்சு. But actually that was the beginning of the battle. என்ன ஆகிருக்குன்னா the Government of India disability and so-called lenience அப்படின்னு சொல்லி they said that you can join the PhD without passing the NET exam. The NET (National Eligibility Test) exam is one of the most competitive exam like NEET, JEE. For that there is no syllabus in english. anything that has ever been written in the english language it’s part of the syllabus. அந்த மாதிரி என்ன ஆகிடுச்சினா அரசாங்கத்தில் PhD சேரும் போது fellowship கிடைக்கும். I was working full-time when I gained admission into the PhD program. I was told that you cannot join PhD if you are working. If you want to do PhD then you can’t work. You have to resign your job and you have to submit the resignation letter to join PhD. 

அந்த நிலையில நம்ம வேலையும் விட்டுட்டுப் போறோம். உனக்கு fellowship கிடைக்கும்னு தான் போறோம். ஆனா அங்க போய் சேர்ந்த ஒரு மாசத்தில உனக்கு fellowship கிடைக்காது. ஏன் கிடைக்காதுன்னா NET exam clear பண்ணனும். இப்போ நீ மாற்றுத்திறனாளியா இருக்க ஐந்து வருடம் PhD பண்ணப்போற ஒரு financial support இல்லன்னா எப்படி பண்ணுவ.   அது அரசாங்கம் பார்க்கல. நீ NET exam எழுதுனாதான் பணம் கிடைக்கும். ஆனா leniency அப்படினு சொல்லி NET exam இல்லாம Entrance la admission குடுத்து என்ன பிரயோஜனம். இதுக்கு அவங்க உனக்கு எந்த சலுகையும் பண்ணமாட்டோம். நீ எல்லா தேர்வும் எழுதிட்டு  தேர்ச்சி அடைஞ்சிட்டு வந்தா தான் எல்லாம் கிடைக்கும். இல்லனா எதுவும் கிடைக்காதுன்னு சொல்லிட்டுப் போலாம். இல்ல நெசமாவே நீங்க lenience னு Entrance குடுத்தா financial support கொடுக்கணும். I guess they never looked at this deeply because this scenario is unprecedented, something that has never happened before. As a woman with a significant impairment, who is doing my PhD full-time, எனக்கு சம்பளமும் போய் நான் இன்னொரு முழுநேரம் படிக்கணும்னா நான் என்ன பண்ணுவேன் பணத்துக்கு.

எனக்கு 70 வயசுல அம்மா இருக்காங்க. வேற வருமானமே இல்ல இப்போ நான் என்ன பண்றது. Doesn’t the person with disability deserves some support. Normal kids-கே  தர்றாங்க. அப்போ இந்த மாதிரி ஒரு யோசனை இல்லாம சில policiesலாம் இருக்கு. அதுல என்ன பிரச்சனைனா nobody got in before. முதல்முறை நாம உள்ள நுழையும் போது தான் அதோட பிரச்சனைலாம் தெரியுது.

 I’m the first woman with a 90% disability to gain admission into the PhD program of any of the IIT History. IIT வந்து 50 வருஷத்துக்கு மேல போய்க்கிட்டு இருக்கு.  நிறைய centres across India இருக்கு. ஒரு quadriplegic woman கூட இது வரைக்கு PhD சேர்ந்தது கிடையாது. அப்படின்னும் போது இதுவும் ஒரு வரவாறு தானே. இதுக்கு அப்புறம் நிறைய பேரு வர்றத்துக்கு வாய்ப்பு கிடைக்கணும். அதுக்கான துவக்கமும். எனக்கு NET exam இங்க எஸ்.கே.பி கல்லூரில கொடுத்துட்டாங்க. ஆனா தேர்வு அறை முதல் தளத்துல இருக்கு. இப்போ என்னை மேல தூக்கிட்டுப் போணும். ஆனா  அங்க ஒரு store roomல ஒரு கேமரா வச்சி, ஒரு pedeastal fan வச்சி, special-ஆ எனக்குன்னு அந்த ஜூலை சூடு தாங்க ஒரு பக்கெட்டு, ஒரு துண்டு நினைத்து நினைத்து போட்டுகிறதுக்கு. அப்படிதான் அந்தத் தேர்வை எழுதி முடிச்சேன்.

 அந்தத் தேர்வை எழுதிட்டு எங்க அம்மாகிட்ட வந்து சொன்னேன். உனக்கு என் மேல ரொம்ப நம்பிக்கை இருக்குமா. ஆனா இந்தத் தேர்வை நான் பாஸ் பண்ணவே மாட்டேன் அப்படினு .ஆனா ஏதோ ஒரு கடவுள் கிருபைல என்ன பாஸ் பண்ண வச்சிட்டாரு அதனால எனக்கு மரியாதையான அந்த ஐந்து வருஷம் i was a junior research fellow எனக்கு வந்து senior research fellow ஆனேன்.

என்னப் பொறுத்தவரைக்கும் பெற்றோர்களின் பங்கு மிகப்பெரியது. நான் எல்லா தப்பையும் குழந்தைங்க மேல சொல்லவே மாட்டேன். குழந்தைங்களுக்கு mindfull parenting இருக்க மாட்டேங்குது. அவங்களுக்கு ஒரு முன்மாதிரியே இருக்க மாட்டேங்குது. இப்போ நிஜமாவே நான் சொன்ன மாதிரி சினிமால இருக்குற ஹீரோஸ கொண்டாடி உனக்கு என்னப் பயன்.

 உன்னோட value system என்ன? if you are not part in that value system it will not. நான் வந்து just a teenager when i had to go Germany and the US, where i had to face racism. Where some people said “why do people like you come into our country இதுலாம் எதிர்கொள்ளணும்னா  உங்களுக்கான  ஒரு  பலமான அடையாளம் தேவை. என்னோட பெற்றோர்கள் எப்பவும் என்னோட நெருங்கிய நண்பர்கள். எங்களோட அந்த ஆன்மிகம் தான் எங்களோட அடித்தளமாக இருந்தது. இன்னைக்குமே எந்த இடத்துலயும் எனக்கு அன்பு கிடைக்காம இருந்ததே கிடையாது. அது தான் அடிப்படையான இழப்பு இப்போது இருக்கும் குழந்தைகளுக்கு. they don’t have unconditional love from any one, they are not taught values from any where.

 இப்போ எங்க பள்ளில ஹிஸ்டரி மிஸ் கேக்குறாங்க. யாருலாம் ஹிஸ்டரி படிக்குறது வேஸ்ட்னு நினைக்குறீங்க. நம்ம பண்ற தப்ப திருப்பி திருப்பி தான் பண்ணிகிட்டு இருக்கோம். அப்படினாக்கா நான் கை தூக்கி yes i think it’s waste of time, because we don’t have learnt any thing from history அப்படினு ஒரு ஐந்தாம் வகுப்பு குழந்தையால சொல்ல முடிஞ்சது. ஏன்னா எங்க ஆசிரியர்கள் பார்த்து பயந்தது  இல்ல. ஏன்னா எங்களுடைய ஆசிரியர்கள் எங்க நண்பர்களாக இருந்தார்கள். அந்த மாதிரி பள்ளி இந்தியாவுல சிறந்த பள்ளி. அந்த பள்ளியில ஐந்தாம் வகுப்பு வரைக்கும் சீருடைகளே கிடையாது. தேர்வுகள் கிடையாது. அந்த பள்ளியில மாணவர் சேர்க்கையே அந்த பள்ளில படிச்ச முன்னாள் மாணவர்களோட குழந்தைகளுக்கு தான் கிடைக்கும். அவங்க எப்படி சொல்லுவாங்கனா ஐந்தாம் வகுப்புக்குள்ள உங்க குழந்தைங்க அடுத்த குழந்தைங்கள முந்தணும்னு நினைச்சிங்கனா எங்க பள்ளிக்கு வராதீங்க ஏன்னா நாங்க பேனா கூட புடிக்க சொல்லித் தரமாட்டோம். ;

 அந்த குழந்தைங்க குழந்தைகளா இருக்கணும்னு நினைக்குறோம்னு அந்த பள்ளி சொல்லும். அங்க திடீருனு மிஸ் ஒரு டப்பால பேப்பர் கிழிச்சி போடுவாங்க. ஒவ்வொருத்தரும் அந்த பேப்பரை எடுத்துகிட்டு வெளிய போய் அந்த பேப்பரை என்னனு பாக்கணும். அதுல current affairsஆ இருக்கலாம், real incident-ஆ இருக்கலாம் எதுவாக வேண்டும்னாலும் இருக்கலாம். நேத்து வந்த சினிமாவா இருக்கலாம். love, haters , இந்த மாசம் பிப்ரவரி 14 நீங்க என்ன நினைக்குறீங்க அப்படினு கூட இருக்கலாம். Anything you get one minute to prepare and you have to speak for one minute அப்படிதான் பள்ளி. நீ புத்தகத்துல இருந்து என்ன கத்துக்குறங்கறதே actual-ஆ புத்தகத்துல என்ன இருக்கோ அத அப்படியே மனப்பாடம் செஞ்சி எழுதி இருந்தனா உனக்கு மனப்பாடம்  பண்ணி அத வாந்தி எடுக்க தெரியும்னு எனக்குத் தெரியும். ஆனா நீ அதுல இருந்து என்ன புரிஞ்சிகிட்டு இருக்கணும்தான் எனக்குத் தெரியணும். அத exact-ஆ copy paste  பண்றணா நீ B, B- க்கு கீழ தான் மதிப்பெண் வரும்.

Original-ஆ எழுதுனாதான் மதிப்பெண். இந்த chatgpt பாத்து i don’t belive in chatgpt i belive in originality only then you are human நீ copy paste  பண்றதுக்கு உனக்கு மூளைன்னு ஒண்ணு கொடுத்துருக்கவே வேண்டாமே. I believe that  we  need to be original. இப்போ வந்து எப்படி caculator  இல்லாம நமக்கு கணக்குப் போட தெரியலயோ, போன் நம்பர் எதுவும் மனப்பாடமா தெரியலயோ  அது மாதிரி நாளை எழுதவே தெரியாம போய்டும் because it kills our originality, it kills our creativity. I don’t think and believe that artificial technology  and intelligence is a great threat to humanity.

இத வந்து ஜாக்கிரதையா கையாளணும் மற்றும்  DNA Manipulation. If we are not careful about this two things அந்த cloning மாதிரி விஷயம்லாம் பண்றது வந்து the human race is beings to believe it is God then we are going to be interable.

கே: Soulfreeயின் செயல்கள் குறித்து

Soulfree  is a not profit charitable trust.  It is Of the disabled, By the disabled, For the disabled. ஒரு மாற்றுத்திறனாளியா, மாற்றுத்திறனாளிகளுக்காக, மாற்றுத்திறனாளிகள வச்சி we give  first priority even in our employment to  persons with disability so positively abledனு நாங்க பெயர் வைக்கிறோம். Positively abled-னா எப்படினா I believe labels எல்லாதுக்கும் ஒரு label ஆண், பெண் எல்லாமே ஒரு label தான் அப்போ positive ability-ங்குறது எல்லார் உள்ளேயும் இருக்கு. நீ அடிமுட்டாள் அப்படின்னு சொல்லபடுற நபர் உள்ளேயும் ஒரு positive ability  இருக்கு. அதிபுத்திசாலின்னு சொல்ற நபர் உள்ளே positive ability இல்லாமையும் இருக்கலாம் இல்லயா. எடுத்துக்காட்டுக்கு நான் ஒரு கதை சொல்றேன்.  ஒரு அமெரிக்கன் அதிகாரி சொன்னாரு he was part of the American disability act பண்ணவரு அவரு பெயர் செனடெட் டாம் ஆக்கின். அவரோட சகோதரர் செவி திறன் குறைபாடு உள்ளவர். அவர் ஒரு Bakery-யில் வேலை செய்து கொண்டிருந்தாரு. அப்போ யாராச்சும் ஒருவர் வந்து இது இது வேணும்னு நாலு பண்ணு(Bun), ரெண்டு கேக்(cake) அப்படினு எழுதி கொடுக்கணும்.  அங்க ஒருத்தர் உனக்கு இந்த வேலை புடிச்சி இருக்கா அப்படினு எழுதி கொடுக்குறாரு அதுக்கு அவர் இல்லவே இல்ல எனக்கு boreஆ வருது அப்படினு சொல்றாரு.

அதுக்கு அந்த நபர் அப்போ நீ உன் விடுமுறை நாள் அன்னைக்கு என்கூட நீ வரியா அப்படினு கேட்டாரு. இவரும் வர்றேனு சொல்லிட்டு. இவரை ஒரு பெரிய தொழிற்சாலைக்கு கூட்டிகிட்டுப் போறாரு அந்த தொழிற்சாலைல அப்படி ஒரு சத்தம். நம்ம காதுல Headphones, Air Budsலாம் போட்டுகிட்டு போனாலும் ஒரு மணி நேரத்துல வெளிய வந்து கொஞ்ச நேரம் சத்தம் இல்லாத இடத்துல இருந்துட்டு மறுபடியும் உள்ள போகணும். இப்போ இவரு உள்ள போனா casualஆ வேலை செய்யுறாரு எல்லா வேலையும் நல்லா கத்துக்கிட்டாரு, ஒரு மாசம் கழிஞ்சு இவரோட நண்பர்களையும் இங்க வேலைக்கு சேர்ந்து அந்த தொழிற்சாலைல வேலை செய்யுறாங்க.

இப்போ இந்த தொழிற்சாலைல நம்ம மாற்றுத்திறனாளியா இல்ல அவங்க மாற்றுத்திறனாளியா. உன்னால காதுல Headphones, Air Budsலாம் போடாம உள்ளயே போக முடியாது. அப்பவும் உனக்கு அங்க வேலை செய்யமுடியல. ஆனா அவங்க casualஆ போறாங்க வேலை செய்யுறாங்க வர்ராங்க.  இதுல யாரு மாற்றுத்திறனாளி?

So many times disability becomes , because of  in condition. I become disablement  when in that societyல மாடிப்படி தான் இருக்கு. rampயே கிடையாது. நீ எங்கயுமே வெளிய போக முடியாது அப்படினா it is socially caused disablement. நீ positively able-னா நீங்க ஒரு இடத்துல சரளமா ஹிந்தில பேசுறீங்கனா you may not know then  you are linguistically challenged. Every body is disabled with some point  நம்ம பிறக்கிறதே மாற்றுத்திறனாளியாதான் பிறக்கிறோம். நமக்கு நாலு வருஷம் ஆகுது நமக்கு கண்ணு சரியா தெரிஞ்சி நம்ம நின்னு, நடந்து, மலம் போறது கட்டுப்படுத்திக்கவே நாலு வருஷம் ஆகிடுது. We are born  disable and we will die disable இதுக்கு நடுவுல நான் நல்லா இருக்கேன்னு அப்படீன்னு ஒரு ஆணவம் தேவையா. அப்போ நம்ம கண்ணாடி போட்டு கிட்டு இருக்கோம்னா நம்ம மாற்றுத்திறனாளி, கார்ல ஏறுறோம்னா மாற்றுத்திறனாளி. ஏன் ஏறுறே நடந்தே போயேன்.

 
நாலு சக்கர வண்டியில தான நீ போற. என்னோடதும் நாலு சக்கர  வண்டி தான் அப்போ when we are more or less disable why can’t we create inclusive an  society  that is universively  inclusive for everyone. நீ ஸ்கூலுக்கு  போறனா ஸ்கூலுக்குப் போ, படிக்க போறனா போ. இப்போ எனக்கு என்னன்னா எங்கள மாதிரி இருக்குறவங்களுக்கு boxing பண்றோம்னு ஒரு boxing ringல போய் கைய ரெண்டுத்தையும் பின்னால கட்டிப் போட்டா எப்படி boxing பண்ண முடியும். அவுத்துவிட்டு தான் பாறேன். When you revile you will know the potential இல்லயா so that is creating an even same thing. That is what called equity not equality. Everybody is not   born equal so you have to make equitable. அப்டினா என்ன, யாருக்கு எந்த வசதி பண்ணனுமோ அந்த வசதி வேணும். கண்ணு தெரியாதவங்களுக்கு கண்ணாடி கொடுத்தா தான் அவங்களால படிக்க முடியும். அதே மாதிரி நடக்க முடியாதவனுக்கு wheelchair கொடுத்தாத் தான் அவனால நகர முடியும். அந்த மாதிரி சின்னச் சின்ன வசதிகள் தகும். Ramps and lifts கால் உடைந்து இருந்தாலும் தேவைப்படலாம். Why not it make universally  available அவ்வளவு தானே கேட்கிறோம். எங்க கைகளையும் அவிழ்த்துவிடுங்க நாங்களும் போராடுறோம் நாங்களும் உழைக்கிறோம். மரியாதையான வாழ்க்கை வாழ்றதுக்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கனு தான் கேக்குறோம். எங்களுக்கு யாருக்கும் பாவம் தேவை கிடையாது, பரிதாபம் தேவை கிடையாது we want to lead dignified life we want to proof our self as valuable citizens of the country.

கே: நீங்கள் புரிந்து கொண்ட ஆன்மீகம் பற்றியும் பேரன்டிங் பற்றியும் உங்களின் பார்வை ? ?

நாம் உண்மையான ஆன்மீகத்தை புரிஞ்சிக்கவே இல்லை. because நமக்கு அந்த value system கிடைக்கவே இல்ல. எப்போ சின்ன வயசுல குட்டிக் குழந்தை எங்கயோ முட்டிகிறது. அதுக்கு முட்டில அடிப்பட்டு அழுதா தரையை அடிப்பாங்க அப்பா அம்மா. ஹே குழந்தைய அடிச்சியா நீ . What is the nonsense ஒண்ணுமே பண்ணாத தரையை போய்ட்டு முட்டிண்டு நீங்க வந்து தரைய அடிக்குறீங்க. எங்க என்ன சொல்லி தர்றது. அந்த குழந்தைக்கு யாராச்சும் உன்ன hurt பண்ணா திரும்பி நீ அவங்கள hurt பண்ணு அது அவங்களோட தப்பு உன்னோட தப்பு எதும் இல்ல whats is that ? எனக்கு எப்படி சொல்லி தந்ததுனா உனக்கு ஒரு விஷயம் வேணும் அது உனக்கு கிடைக்கலன்னா உனக்கு அதுக்கானத் தகுதிய நீ வளர்த்துகல. உன்னோட தகுதிய வளர்த்துகுனா அது தானா உன்ன வந்து சேரும். So what is your value system , what is the  hygiene , what is the purity, you are maintaining inside you. நாலு வயசு குழந்தை பாய் போட்டுப் படுத்துக்கணும்னா அந்த இடத்தப் பெறுக்கி சுத்தம் செஞ்சிட்டு படுத்துபேனாம். எனக்கு எங்க அப்பா அம்மா சொல்லி தரல. குழந்தைங்க நம்ம அம்மா அப்பா என்ன பண்றாங்க, பேசுறாங்கனு பார்த்து பண்ணுமே தவிர, நம்ம சொல்லி தரத்த பண்ணாது.  நீ உன் மனைவியப் போட்டு அடிச்சி தப்பான வார்த்தைல பேசுனா நாளை உன் குழந்தையும் அதையே தான் கத்துக்கும். இது மிகவும் தப்பு. So we need parent to become role models another totally unpopular, undiplomatic thought. Actually parenting is the most difficult job on the planet. Only 10% of the people are having rights to be parents. இப்போ ஆடு மாடு குழந்தை பெத்துக்குற மாதிரி நம்மளும் பெத்துக்கிட்டோம்னா  அம்மா அப்பா வா இருக்க என்ன தகுதி வச்சி இருக்க நீ. அரை டசன் பெத்துப் போட்டுகிட்டே இருக்க. உன்னோட பொழுதுபோக்குக்கு அது ஒண்ணு தான் கிடைச்சது. எனக்கு சத்தியமா ஏன் மனுஷன் குழந்தைப் பெத்துகுறானு  புரியவே இல்ல. அது பொறந்த நாள இருந்து கஷ்டம் ஒண்டிதான் தருது. எனக்குன்னு ஒரு குறிப்பிட்ட வழி , குறிப்பிட்ட கொள்கை அப்படினு வளந்தோம்னா  குழந்தைங்களா இருந்தா அதைப் பண்ணவே முடியாது unless your have will to sacrifice your life , your wishes which also our people don’t do இப்போ நம்ம போய்த்தான் வேலை செஞ்சி தான் ஆகணும்னு. ஏன் போய் வேலை செய்யணும். கல்யாணம் பண்ணிக்கத் தான் ஆகணும்னு. ஏன்  பண்ணனும் எல்லாரும் கல்யாணம் பண்ணித்தான் ஆகனுமா? புரியல எனக்கு. கல்யாணம் பண்ணிக்கலனா உனக்கு ஏதோ பிரச்சனைனே சொல்லிடுவாங்க. I don’t believe parenthood is for everyone. அந்த மாதிரி தப்பான parenting அந்த முதல் எட்டு வருஷம் psychology நான் படிச்சதால நீ முதல் எட்டு வருஷம் என்ன கத்துக்கறியோ அது தான் உன்னோட வாழ்க்கையில வரும் அந்த நிலைல நாம தப்பா கத்துக்கொடுத்துட்டோம்னா அவங்க பெரியாளாகி i’m especial seeing this in child abuse அந்த சின்னச் சின்ன பொண்ணுங்க நாலு வயசுல , ஐந்து வயசுல who have been by men’s. அவங்க வாழ்க்கை முழுக்க என்ன சித்திரவதை படுறாங்கன்னு நம்மலாலே சொல்லவே முடியல. நிறைய தப்பு நடக்குது. சொந்த பொண்ணையே சீரழிக்குற தகப்பன்கள்.  What kind of society gives birth to this kind of people. என்ன அப்பா அவன்? மனுஷனா அவன்? தான் பெத்த குழந்தைய இப்படி பண்றானா என்னனு எனக்குப் புரியவே இல்ல. அந்த நிர்பயா வழக்கு இன்னைக்கு நான் யோசிச்சனாலும் வயித்தலாம் கலக்குது. But it became History அதைப் பத்தி யாருக்கும் கவலை இல்லை. ஒரு பெண் அவளுக்குள்ள  அந்த  பேருந்தோட ஜாக்கிய வச்சி சீரழிக்கப் படுறான்னா அங்கலாம் என்ன மாதிரியான ஆண்கள். அதவிட எந்த மாதிரியான சமுகம் இந்த மாதிரியான ஆண்களை உருவாக்குகிறது. இதுலாம் நாம் யோசித்து பார்த்தோம்னா. Do we have a society deserving for this children. இத வந்து அரசாங்கம் நாம் இருவர் நமக்கு ஒருவர் அந்த மாதிரி இல்ல as a society we need to really நம்ம கொஞ்சம் introspect பண்ணி நாம யாரு என்னனு பாத்து அதுக்கு ஏத்த மாதிரி குழந்தைங்கள் பெத்து வளர்கலன்னா we are going to very very scaring situation on our future. Because violence in every way is very dangerous. நான் வந்து எனக்கு உன்னப் புடிக்கல, நீ வராத அப்படினு சொல்லிட்டேனா நீ மூஞ்சில ஆசிட் அடிச்சிடுவ அப்போ என்ன இது? அந்த மாதிரி  சமுகம் இது. என்னப் பொறுத்தவரை இந்த ஆண்கள்  பள்ளி,  பெண்கள் பள்ளியே நான் ஏத்துக்கல குழந்தைங்க வளரதே ஒண்ணா வளரட்டும். . ஒரு வீட்டுல 14,15வயசு வரைக்கு ஒன்னா வளராங்க, ஒரே பெட்லதான் உறங்குவாங்க. இப்படி வளரும் போது ஒரு பையனால பெண்ணுக்கு எதிரா யோசிக்க முடியாது. நான் ஒரு கிரிக்கெட் வீராங்கனை கோடைக்கால விடுமுறைல விளையாட்டு மைதானத்துல 300 பசங்க இருப்பாங்க நான் ஒரு ஆள் மட்டும் பெண். அந்த 30 பையனும் என்ன யாரும் தப்பா பார்த்தது இல்ல. எனக்குத் தெரியும். அது நான் நடந்துக்குற விதத்துலயும் இருக்கு. ஆனா அந்த காலமே போய்டுச்சி இப்போ. இந்த மாதிரி நிறைய விஷயத்தை நம்ம கல்வி முறைல இருந்தே பார்க்கணும். இப்போ முதுகுத்தண்டு பாதிப்புங்குறது பல இடத்துல ஏற்படுது உயர்ந்த இடத்துல இருந்து கட்டிட  வேலை செய்யும் போது தவறி விழுறது, மரத்துல இருந்து விழுறது, எங்க 70% முதுகுத்தண்டு பிரச்சனை போக்குவரத்து விபத்துல தான் நடக்குது. இத்தனையோ நிமிஷத்துக்கு ஒரு முறை நடக்குது. இப்போ இங்க யாருக்கும் சரியான ஓட்டுனர் பயிற்சி இருக்குறது இல்ல. அமெரிக்கா மாதிரியான நாடுலலாம் ஒன்பதாம் வகுப்புல இருந்தே அதற்கான வகுப்புகள் சொல்லித்தரப்படுது. ஒரு வண்டிக்கு பின்னாடி இடைவெளி இல்லாம போய்கிட்டு இருக்கீங்க. இப்போ அந்த வண்டி சட்டுனு பிரேக் அடிச்சா நீங்க என்ன பண்ணுவீங்க அந்த வண்டி மேல தான் மோதுவீங்க விபத்து ஏற்படும்.  எந்த அளவுக்கு இருக்கோமோ அந்த அளவுக்கு இடைவெளி விட்டுப் போகணும் அப்படினு அவங்களுக்குத் தெரியாது. இதனால படிக்கும் போதே அதுக்கான சரியான பயிற்சி சொல்லி தரவேண்டும். இந்த மாதிரி நிறைய இருக்கும். இப்போ நீங்க ஸ்கூல படிக்கும் போது முதலுதவி எப்படினு தெரியுமா. எனக்கு அல்ஜீப்ரா தெரியும், ஜாமென்ட்ரி தெரியும் ஆனா பக்கத்த்துல இருக்கிறவங்க மயங்கி விழுந்துட்டா என்ன பண்ணனும்னு தெரியல. அது மாதிரி ஒரு விபத்துல ஒருத்தருக்கு எப்படி முதலுதவி பண்ணனும்னு சொல்லித் தரணும். பெரும்பாலான முதுகுதண்டுப் பிரச்னை விபத்தில் சரியான முதலுதவி பண்ண தெரியாம விபத்துக்குள்ளானவங்கள தூக்கும் போது ஆகுது. இதுலாம் நமக்கு சொல்லி தரணும் இதுலாம் நமக்குத் தெரியவே தெரியாது. ஒரு சின்ன துண்டை வச்சி முதுகெலும்ப சரி செய்யலாம். இதுலாம் ஸ்கூல்ல சொல்லித்தரணும் because we learn so many things we don’t use, we don’t learn. என்னோட நம்பிக்கை இந்த சமூகத்துக்கு நாலு தூண்  தான். It should be service based, should not be commercial base.

1) education 2)devotional 3) medical system 4) law and order. இந்த நாலுல ஊழல் வந்துடுச்சினா அந்த சமுக பலவீனம் அடைச்சிடும். இந்த நாலுமே இப்போ எப்படி இருக்கு???

இது இருக்கா இல்லையாங்குறது கோழி முட்டை கதை தான் கோழில இருந்து முட்டை வந்துச்சா இல்ல முட்டைல இருந்து கோழி வந்துச்சானு..

எங்க நம்ம  தொலைந்து போறோமோ அங்க தான் நிறைய நிறைய தப்பான பாதைல தான் போறோம். அதுக்கு தான் நமக்குள்ளேயே ஒரு ஒளி வேணும் அதுக்கு எதிர்த்துப் போக. இதுலாம் எங்க இருந்துனு பார்த்தா மறுபடியும் பெற்றோர், ஆசிரியர்கள், சூழல்னு போகும்.

எனக்குப் பாட்டு கேட்க ரொம்பப் புடிக்கும் நான் ஒரு அல்ப சந்தோஷி. I’m a foodie, i love foods ,good foods for a certain time. எனக்கு அப்படியே வெளியில வாசல்ல போய் அங்க காத்தடிக்குறத பார்ப்பேன். இங்க  மயில் வந்து சாப்பிடும் அதை பார்க்கிறது. அப்படி சின்ன சின்ன விஷயத்துல ரொம்ப சந்தோஷப்படுவேன். பெரிய சந்தோஷம்னா எங்க அம்மாவ எப்போ சந்தோஷப்படுத்த முடியுதோ அது தான் பெரிய சந்தோஷம்.

அப்புறம் நம்ம மையத்துக்கு படுத்த படுக்கையா வரவங்க  ஊன்கோல் வச்சி நடந்து என்ன விட மேலா  நின்னு மேடம் நான் ஊருக்கு போய்ட்டுவரேன் சொல்லும் போது. அப்படி நாங்க செப்டம்பர் மாதம் 5,6,7 ஆண்டுக்கு ஒரு முறை ‘மாத்தியோசினு’ விழா வைப்போம். இவங்கலாம் திரும்பி வருவாங்க நான் இப்போ இவளோ சம்பாதிக்கிறேன்னுல்லாம்னு  சொல்லும் போது, இதலாம் என்ன பணம் கொடுத்தா உன்னால இந்த மனநிம்மதி கிடைக்கும். அப்படித்தான் அந்த கிப்ட் பாக்ஸ் பண்ணோம். அதுக்கு கால் பண்ணி நிறைய பேரு இது எனக்கு என் தாய் வீட்டு சீதனம் மாதிரி வருது. போஸ்ட் ஆபிஸ்ல இருந்து எங்களுக்கு ஒரு பொருள் தராங்கன்னா அது சோல்ஃப்ரீ கிட்ட இருந்து தான் வருது. அவங்களுக்கு அந்த வருஷத்துக்கான பொருட்களை எல்லாம் கிடைக்கும் போது அவங்க ரொம்ப சந்தோஷம் படுவாங்க. I keep saying life is all about things cannot do

என்னால இது முடியாது, அது முடியாது, அப்படினு என்னால எதுவும் முடியாதுனு முடங்கி போறதவிட என்னால என்ன முடியுமுங்குறத வச்சி நான் என்ன சாதிச்சு காமிக்குறதுங்கறது தான் வாழ்க்கை. it’s about what i choose to do with what i can do. என்னால என்ன பண்ண முடியும் இப்படி உட்காந்து வாயால தோசை தான் சுடமுடியும். வேற என்ன பெரிசா பண்ணிகிட்டு இருக்கேன். ஆனா என்னால ஒரு 3000 பேர்  வாழ்க்கை நல்லா இருக்கு அப்படினு  ஒரு திருப்தி வேற என்ன இருக்கு வாழ்க்கைல

என்னப் பொறுத்தவரைக்கும் பெண் தான் சக்தி. பெண்மை தான் சக்தி இல்லயா? பெண்கள்னு சொல்றப்ப நான் ஆண்கள் கிட்ட தான் பேசுறேன். பெண்களுக்கு எந்த இடத்துல மரியாதை இல்லையோ அந்த சமூகம் நல்லா இருக்காது. ஏன்னா உன்னோட அம்மாவும் , மனைவியும், பொண்ணும் பெண்கள் தான் அவங்கல நீ எவ்வளவு நல்ல வச்சிகிறியோ அப்போதான்  தான், நீ நல்லா இருப்ப. அத மாதிரி பெண்களால் பெண்கள் நிறைய விதத்தில்  அடிபடுறாங்க. ஒரு பெண் எப்போ மாமியாரா ஆகிட்டாலோ why can’t she see bigger pictureனு எனக்கு புரிய மாட்டேங்குது women need to let go, women not to be possessive of their son’s and பெண்களுக்கு நிறைய வகையில் freedom தரணும். ஒரு பெண் குழந்தை  ஓடணும்னு ஆசைப்படுதா ஓட விடுங்க, விளையாடணும்னு ஆசைப்படுதா விளையாடவிடுங்க அதனால அவளுக்கு நல்லா வாழ்க்கை தான் அமையும் அவள யாரும் எதுவும் சொல்லிட மாட்டாங்க. பெண் ஒருமுறை பிறந்துட்டா அவ பெண் தான் அத யாரும் எதும் சொல்லபோறது இல்ல. ஆகையால் அவங்கள சுதந்திரமா வளரவிடுங்க. அவங்க கட்டிப் போடாதீங்க. எந்த இடத்துல நம்ம நம்பிக்கையை தரோமோ அந்த இடத்துல தான் அந்த நம்பிக்கையை கட்டுப்படுத்துவாங்க. நம்ம அவங்கள சந்தேகப்பட்டுக்கிட்டே இருந்தா தப்பான காரியம் தான் பண்ணுவாங்க so i really feel that women, girls should be given to the freedom to be fulfill  their highest potential. எங்க அப்பா என்ன அப்படி தான் வளர்த்தாரு ஆம்பளையா இருந்தா என்ன பொம்பளையா இருந்தா என்ன அதுலாம் ஒண்ணும் வித்தியாசம் கிடையாது. நீ மெக்கானிக் ஆகணும்னு நினைச்சா நான் உனக்கு ஆதரவு தருகிறேன். ஆனா நீ அதை அவ்வளவு ஆசையோட, விருப்பத்தோட நீ பண்ணி  உலகத்தோட சிறத்த மெக்கானிக்கா வரணும். அதுல தான் நீ உன் எண்ணத்தை வைக்கணும் எந்தத் தொழிலா வேணுனாலும் இருக்கலாம் அப்படினு சொல்லுவாரு. அப்படிபட்ட சிறந்த அப்பா எல்லாருக்கும் கிடைக்கவும், அந்த மாதிரி சுதந்திரம் கொடுக்கிற அம்மா எல்லோருக்கும் கிடைக்கணும்னு நான் வேண்டிக்குறேன்.

Freedom and choice அது ரெண்டும் பெண்கள் கிட்ட எங்க இருந்து எடுக்கலையோ, அந்த இடம் தான் நல்லா இருக்கும்னு நான் நினைக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *