ஒருஅடிப்படையான தொழில்நுட்பம் என்பது மனித வளர்ச்சிக்காக , மனிதனின் அடிப்படை விஷயங்களான , உணவு , உடை, உறக்கம், இதை விரிவடைய செய்து , நல் மாற்றத்தை உருவாக்க தேவையாக இருந்தது. ஆனால், தற்கால தொழில்நுட்பம் மனிதனை விட , மனித மூளையை விட அதீத செயல்பாடுகளோடுமிரள வைக்கிறது.  சொல்லப் போனால், மனிதனை யோசிக்கக் கூட வைக்காமல் பார்த்துக் கொள்கிறது என்றே சொல்லலாம். தொழில்நுட்பம் நல்லது செய்யத்தான் வளர வேண்டும் என்றே உருவாக்கப்பட்டது.

ஒரு அத்தியாவசிய தேவைக்காக தொடங்கப்பட்ட டெலிபோன், இன்றைய நிலையில் யோசித்து பாருங்கள். ஒரு முக்கிய செய்தியை தொலைவில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க தேவையாக இருந்த ஒரு இயந்திரம், இன்று ஒரு பெரிய மனிதமாற்றத்தை உண்டாக்கி இருக்கிறது. கிட்டத்தட்ட லட்சங்களில் கிடைக்கிறது செல்போன். எத்தனை எத்தனை வசதிகள் அதனுள். உலகமே கைக்குள் இருக்கிறது எனலாம். இது வளர்ச்சிப் பாதையில் எடுத்துக்கொண்டாலுமே இன்று செல்போன்தான் பெரும் எதிரியாக உள்ளது.

கணினி இன்று எத்தனை பேரின் வாழ்வாதாரம். எத்தனை குடும்பங்கள் வெறும் கணினியில் வாழ்வை நகர்துகின்றனர். கொரோனா காலகட்டங்களில் பெருவாரியான மக்கள் தங்களின் வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டபோது, கணினி பல பேர்களின் வாழ்வை கைப்பிடித்துத் தூக்கி நிலை நிறுத்தியது. ஆனால், அதே கணினி இன்று “ChatGpt இருக்கு, மனுசப்பயல் எதுக்கு”என்று அவன் வேலைக்கும் ஆப்பு வைத்திருக்கிறது.

பெண்ணின் வாழ்வில் தொழில்நுட்பம் பெரும் மாற்றத்தை செய்து அவர்களுக்கு விடுதலை தந்திருந்தது. அவர்களின் வேலை பளு குறைய, கிரைண்டர் , மிக்ஸர், வாஷிங் மெஷின் என அனைத்தும் கண்டுபிடிக்கப்பட்டது. எப்போதும் வீட்டு வேலை, வீட்டை கவனிக்கவேண்டிய தேவை என பெண்ணின் வாழ்வே அடுப்படிதான் என்று இருந்த வாழ்வை, “அக்னி சிறகே”எழுந்து வா என்று நிறைய வேலைகளுக்கு விடுதலை கொடுத்து, உன் விருப்ப வேலையை  செய் என சுதந்திரம் தந்தது தொழில்நுட்பம்.

ஆனால், அதே பெண்கள் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி”காப்பி”யைக் கூட Swiggy- யில் ஆர்டர் செய்கிறார்கள் என்றால், யாரை நொந்துக் கொள்வது?

சாக்கடை அள்ளும், மலம் அள்ளும் தொழிலாளர்கள் வாழும் இந்த நாட்டில் தான் சந்திரயான் 3 விண்ணில் செலுத்தி சாதனை செய்து இருக்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறோம். இது சரியா, தவறா என்ற அந்த தலைப்பிற்குள் நுழையாமல் கடப்பதும் ஒரு அரசியலாகிறது. நல்லது கெட்டது என்று பிரிக்காமல் சகலத்திலும் தொழில்நுட்பம் நுழைய வேண்டும்.

தொழில்நுட்பம் என்பது ஒரு கடல், அந்தக் கடலில் நாங்கள் நீந்த பேருதவியாக இருந்த சாதகமான கடல் அலைகளாய், நாங்கள் கேட்டவுடன் கால நேரம் பொருட்படுத்தாது, சைபர் செக்யூரிட்டியினைப்பற்றிஎழுதிய சைபர் புத்தா’ வினோத் ஆறுமுகம் அண்ணன் அவர்களுக்கும், மரபு தமிழர்களிடம் இருந்த மறைந்துப் போன தொழில்நுட்பங்கள் சிலவற்றை நமக்கும்கடத்த எத்தனிக்கும் அண்ணன் வெள் உவன் அவர்களுக்கும், பெண்களின் வளர்ச்சியில் தொழில்நுட்பத்தின் பங்கு எப்படி வகிக்கிறது என்பதை விளக்கிய ஆர்.உதய லட்சுமி அக்காவிற்கும், ஏ. ஐ சூழ் உலகை அழகாய் கண் முன் விரியச் செய்து, சர்வம் ஏ.ஐ.மயம் என்ற தலைப்பில் எழுதிய பத்மா அமர்நாத் அவர்களுக்கும், இன்ஃப்ளூயன்சர் மார்க்கெட்டிங்-  ன்சாதக பாதகங்களையும் அதைப்பற்றிய தெளிவினை அளித்த தோழர்மகிழினி அவர்களுக்கும், இயற்பியல் விதிகளான க்வாண்டம் கோட்பாட்டையும் நனவுநிலை பற்றியும் தெளிவான பட விளக்கங்களுடன் எழுதிய முபீன் சாதிகா அக்கா அவர்களுக்கும், ஆர்டிபிசியல் இண்டலிஜன்ஸ் ஆபத்தானதா? ஆக்கப்பூர்வமானதா?  என்பதைபல புதிய தொழில்நுட்ப எடுத்துக் காட்டுகளுடன் விளக்கிய இராமச்சந்திரன் அண்ணாமலை அண்ணா அவர்களுக்கும், என்ன நோய் என்றே கண்டுபிடிக்க இயலாத காலம் போய் மருத்துவத் துறையில் தொழில்நுட்பத்தின் அளப்பரிய வளர்ச்சியை விவரித்த டாக்டர்.சவிதாகதிரவன் அக்கா அவர்களுக்கும், வளர்ந்த நாடுகளிலும் மற்றும் வளரும் நாடுகளிலும் செயற்கை நுண்ணறிவு (AI)-ன் பங்கும் அவற்றிடையே உள்ள வளர்ச்சி இடைவெளிகளையும் பிக் டேட்டா, இயந்திரக் கற்றல் போன்ற புதிய தொழில்நுட்பம் வாயிலாக அலசிய இர.பிரவீன்குமார் அண்ணன் அவர்களுக்கும்,தொழில்சார் நிறுவனங்களில் தொழில்நுட்பத்தின் பெரும் பங்கினை அன்றாட தொழில்முறையில் அவை அளித்த மாற்றங்களையும்விளக்கிய தோழர் தளபதி சல்மான் அவர்களுக்கும், நவீனத் தொழில்நுட்பத்தில் மரபார்ந்த தொழில்களின் பரிணாமத்தை எடுத்துரைத்த பெ.ரவீந்திரன் அண்ணன் அவர்களுக்கும், மொழியியலில் தொழில்நுட்பத்தின் தாக்கத்தினை குறித்து நேர்காணல் அளித்த அ.தா.பாலசுப்பிரமணியம் அண்ணன் அவர்களுக்கும் எங்கள் அன்பு கலந்த நெஞ்சார்ந்த நன்றிகள்.

எங்கள் தோணிக்குமாலுமியாக இருந்து சரியான திசையில் பயணிக்கச் செய்து பிழை சரி பார்ப்பு செய்த எங்கள் கௌரவ ஆசிரியர் அம்மா சுஜாதா அவர்களுக்கு எங்களது இதயம் கனிந்த நன்றிகள்.

இந்தப் பெருங்கடலை நீந்துவதுஎன்பது, கருவறையில் இருந்த குழந்தையை பத்திரமாக பிரசவிப்பது போன்றது . ஒரு ஒரு முறை இதழ் வெளியிடுவதும் இதழ் ஆசிரியர்களுக்கு குழந்தை பிரசவிப்பது போன்றதே . அத்தகைய பெரும் பொறுப்பினை ஏற்று துடுப்புகளாய் இருந்து இந்த இதழ்க் கட்டுரைகளை பத்திரமாய் கரை சேர்த்த இதழ் ஆசிரியர்களான கு. ஜெயபிரகாஷ் அண்ணன் அவர்களுக்கும், சிறகன்அண்ணன் அவர்களுக்கும், தளபதி சல்மான் அவர்களுக்கும்அன்பு வணக்கம் மற்றும் நன்றிகள்.

இந்தக் கடல் வழிப் பயணத்திற்கான வழிகளை ஒன்றாய் சேகரித்து வைத்த வரைபடத்தினைப்போல, எழுத்தாளர்களின் கட்டுரைகளைச் சேகரித்துக்கொடுத்த சிறப்பாசிரியர் மூ. அருண் குமார் அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள். இந்தப் பெருங்கடல் பயணத்தின் இன்பக் காற்றினை சுவாசிக்க புழுதி உங்களை சில்லென வரவேற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *