மக்களிடையே மலையாள சினிமா குறித்து கருத்துக்களை பெற்றோம் அவற்றின் தொகுப்பு இவை. இவற்றின் வழியாக மலையாள சினிமா மக்களிடையே எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்று அறியலாம்.
“சிறிய கதையானாலும் நேர்த்தியான திரைக்கதை மூலமாக பொருத்தமான கதாபாத்திரங்கள் வாயிலாக சிறிய படத்தையும் பிரம்மாண்டமாக மாற்றுவது.”
(பாஸ்கர், ஒளிப்படக் கலைஞர், திருவண்ணாமலை)
“எதார்த்தம், கலை, வாழ்வியல்!
வாழ்வியலை அப்படியே வெளிக்கொணர்ந்து நம் முன் காட்சிப்படுத்துவதில் அவர்களை மிஞ்ச ஆளில்லை என்றே தோணுது!”
(சின்னதம்பி வேலு , ஆஸ்திரேலியா)
“அன்று – போஸ்டர்கூட பார்க்க கூசும்
இன்று – படம் பார்க்கலன்னு சொல்லக் கூசும்….”
(விஜயராணி மீனாட்சி, இராஜபாளையம்)
“எளிய சம்பவங்களோடு உணர்வுகளை பிணைந்து உருவாக்குதல்”
“மலையாள படங்களில் காட்சிகள் எளிமையான சூழலில், இயற்கையான சூழலில் படமாக்கபட்டிருக்கும். Low budget படங்களும் சிறந்த கதைக்களத்தை கொண்டிருக்கும். கேரள வாழ்க்கை முறை நம்மை ஈர்க்கும் வகையில் இருப்பதும் ஒரு காரணம். கதையில் வரும் கதாபாத்திரங்கள் நம் வாழ்வில் நடந்த சில நிகழ்வுகளை பிரதிபலிக்கும் போது நாமும் கதையோடு ஒன்றி நகர்வோம்.”
“யதார்த்தமான பிரம்மாண்டம் திரையில் தெரியும்”
–சக்தி தினகரன், திருவண்ணாமலை
“தற்போது ஒரு வருடத்திற்கு தோராயமாக 12 படங்கள் வெளியாகிறது என்றால், நாம் அவற்றில் ஓரிரு படங்கள் தான் நம்மை சார்ந்த படம் என்ற உணர்வுடன் நகரும், இது தமிழ் சினிமாவின் நிலை. இதுவே மலையாள சினிமாவில் வெளிவரும் பெரும்பாலான படங்கள் நம்மையும், நம் வாழ்க்கையுடனும் ஒன்றி இருப்பது போன்ற உணர்வுடன் நகரும். மலையாள படங்கள் எதார்த்தமான சூழலில் இருக்கும். ஒரு வரியில் சொல்லபட்டிருக்கும் பல விஷயங்களை படமாக்குவது சாத்தியாமா என்று எண்ணிப் பார்த்தால் கூட மலையாள சினிமாவில் படங்களாக உருவம் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக “ஜெயஜெயஜெயஹே” ஒரு சின்ன வரியில் சொல்லும் வார்தை தான் ஒரு படத்தின் கருவாக, அழகாக அமைந்திருக்கும். அது போன்று தான் பல கதைகள் வெளிவந்துள்ளன.பெரும்பாலான மலையாள சினிமாக்கள் சின்ன சின்ன கருத்துக்களையும் மிக அழகான பிரதிபலிப்புடன் இருக்கும். இதுவே மலையாள சினிமாவின் பரிணாம வளர்ச்சி.”
“ஒன்லைன் கதைக்கு தேவையான கதாபாத்திரங்களையும் கதை நிகழும் களத்தையும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் கொடுத்துவிடுகிறது மலையாள சினிமா.
சிறு முதலீட்டில் எடுக்கப்படும் பட்ஜெட் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷங்களில் உச்சபட்ச வசூல்களை வாரிக்குவிப்பது மட்டுமல்லாமல், கதைகள் கதையில் வரும் கதாபாத்திரங்கள், இடங்கள் என எல்லாவற்றிலும் நம் மனதையும் அந்த நிகழ்வுகளுக்கு கொண்டு செல்வதில் தான் வெற்றிக்கனியை மலையாள திரைபடங்களுக்கு தந்துகொண்டிருக்கின்றது.
திரைப்படத்தின் கதையும் அதை தாங்கி நிற்கும் கதைக்களமும் மலையாள சினிமாவிற்கு ப்ளஸ் என்றால் கதையில் தோன்றும் கதை மாந்தர்களும், அவர்களுடனே மெல்லிய நடைபோடும் இசையும், காட்சிகளை அளவாக படம்பிடித்து நம்மை ரசிக்க வைக்கும் கேமி்ராக்களும் கூடுதல் ப்ளஸ் என்று தான் சொல்ல வேண்டும்.”
–சுரேஷ் இராஜகோபாலன், திருவண்ணாமலை
“இந்திய திரையுலகில் சிறப்பும் மலையாள திரைகள் தான்…
முரண் நகையாக சீரழிவும் அதுவே…”
“முதலில் பார்க்கும் பொழுது பொறுமையுடன் பார்க்க வேண்டும்; போக போகத்தான் படம் பிடிபடும்”
“ஒரு சின்ன விஷயத்தை எடுத்துகிட்டு சூப்பரா பிரசண்ட் பண்ணுவாங்க
நல்லா இருக்கும் இதெல்லாம் கூட படமா எடுக்க முடியுமானு தோணும்”
“ஹீரோவுக்கு முக்கியதுவம் கொடுக்காம
கதைக்கு முக்கியதுவம் கொடுத்து எடுப்பாங்க”
“காட்சிப்படுத்துதல் அற்புதமா இருக்கும்”
“பெண் பாத்திரத்திற்கு அவ்வளவு முக்கியதுவம் கொடுப்பது.”
“கடவுளின் தேசம் இந்தியாவின் உயரத்தில் இருக்கிறது.”
“அந்த நிலத்தின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் கதைகள் கொண்டது
“அனைத்து திரைப்படங்களும் – பான் இந்தியாவில் உள்ள மற்ற சினிமா துறையை ஒப்பிடும்போது பட்ஜெட் குறைவு மற்றும் வருவாய் அதிகம்
மலையாளத் திரைப்படத்தில் – பெரும்பாலான படங்களில் புதுமுகங்களுக்கு வாய்ப்புகள் அதிகம்
மலையாளத் திரைப்படக் கருத்து எளிமையானது மற்றும் அவை எல்லா வகையான கதைக்களத்தையும் உள்ளடக்கியது ;முழுக்க முழுக்க பெரும் பொழுதுபோக்கு”
–வெற்றி , திருவண்ணாமலை
மண் சார்ந்த யதார்த்த வாழ்வியலை மேற்குத் தொடர்ச்சி மலை, மேற்கு கடற்கரை என இயற்கை அரவணைத்து, புதிய தொழில்நுட்பங்களை கொண்டு காட்சிப்படுத்தும் விதம், இசை, கதை என அனைத்தும் மலையாளம் தவிர்த்து மற்ற மொழி பேசும் மக்களையும் சமகால மலையாள திரைப்படங்களை நாடிச்செல்லும் அளவிற்கு ஓடிடி யுகத்தில் வளர்ந்துள்ளது!!
-அருண் ஷேத்ரன், திருவண்ணாமலை.
பெரும்பாலான மலையாள சினிமா அன்றாட வாழ்வியல், நாவல்கள்,உண்மைச் சம்பவங்கள் என இதை வைத்து தான் கதை நகரும். தமிழ் சினிமாவில் வருவது போல காதல், கமெர்ஷியல் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என செயற்கையான கதைக்களம் அமைக்காது அவர்களின் இயல்பு வாழ்வை சாத்தியப்படுத்தி இருப்பார்கள். நிறைய தமிழில் மலையாள ரீமேக் செய்து இருந்தாலும், அதன் சாரம் மலையாளப் படங்களில் மட்டுமே காணமுடிகிறது.
ஸ்வேதா,திருவண்ணாமலை.
என் பதின்பருவத்தில் மலையாளப்படமென்றால் பலானாதென்பர், சமகாலத்தில் வெளியாகும் படங்கள் எப்பருவத்தினரும் வியந்துபோற்றும் சிறந்த படைப்பாக பவனிவருகிறது.
செல்வகுமார்,ராஜபாளையம்.