பழங்குடிப் பெண்கள்

சங்க இலக்கியத்தில் மாதவிடாய்:

சங்க இலக்கியத்தில் பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் மாதவிடாய் என்னும் செய்பாடு குறித்து பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவரே முதன்முதலில் பதிவுச் செய்துள்ளார்.

புறநாறூற்றில் பாடல் எண் 299 –ல் இச்செயற்பாடு குறித்த கருத்துப் பாடல் புலவரால் நொச்சித் திணையில் குதிரை மறம் என்னும் துறையில் பாடப்பட்டுள்ளது.

”பருத்திவேலிச்சீறூர்மன்னை

உழுத்துஅதர்உண்டஒய்நடைப்புரவி

கடல்மண்டுதோணியின்படைமுகம்போழ

நெய்ம்மிதிஅருந்தியகொய்சவல்எருத்தின்

தண்ணடைமன்னர், தாருடைப்புரவி

அணங்குஉடைமுருகன்கோட்டத்துக்

கலம்தோடாமகளிரின்,இகழ்ந்துநின்றவவே”(299)

இப்பாடலில் பெண்களின் அகச்செயற்பாடான மாதவிடாய் நிகழ்வினை ஆண்களின் புறச்செய்களுக்கு ஒப்புமையா கூறப்பட்டுள்ளது.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் முருகன் கோவிலினுள் நுழையாமல் எப்படி ஒதுங்கி நிற்கின்றனரோ அதேபோன்று பகையரசனின் குதிரைகள் விலகி நிற்கின்றன என்று மேற்கண்ட பாடலில் உரையை விளக்குகின்றார். இப்பாடலில் கலந்தோடா மகளிர் என்று பெண்களைச் சுட்டிக்காட்டி ஆண்மையச் சிந்தனையையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன.

சமுகத்தை இலக்கியத்தின் வழிதான் அறிந்துக் கொள்முடியும் .சங்ககாலத்தில் மாதவிடாய் குறித்து இப்படி ஒரு கருத்து நிலவுகின்ற வேளையில் மற்றோரு புறம் பெண்ணின் பருவமாற்றத்தை குறிக்கும் மாதவிடாய் உற்பத்தியின் வடிவமாக பார்க்கப்பட்ட நிலையை நாட்டுப்புற இலக்கியங்கள் கூறுகின்றன.

சான்றாக. நா.வா.  தனது நூலில் “முதன் முதலில் பூப்பெய்தியதிலிருந்து மாதவிடாய் நிற்கும்  காலம்வரை, பெண் செழிப்பின் சின்னம் அதற்கு முன்னும் பின்னுமவள் கருவுயிர்த்து, இனச்செழிப்புக்குக் காரணமாவதில் மாயசக்தி உடையது. செழிப்புக்கு அறிகுறி என்ற கருத்துப் புராதன, மக்களுக்கு ஏற்பட்டது. இன்னும் நாகரிகமடையாத தொல்குடிமக்களுக்கு இந்தநம்பிக்கை உள்ளது. மாதவிடாய் பருவத்திலுள்ள பெண்களை விதைமுளைக்கும் வயலைச் சுற்றிவரச் செய்தல் விதை வளர்ந்து நல்ல பயன்தரும் என்று அவர்கள் நம்புகிறார்கள், இதற்கு அடிப்படையான காரணம் மனிதனது பிறப்புக்கு ஆண் பெண் உறவு காரணமாவது போல உலகில் எல்லாம் தோன்றுவதற்கு உடலில் நிகழ்ச்சிகள் காரணம் என்ற நம்பிக்கையும், பிரகிருதியின் செழிப்பை பெண்ணின் செழிப்புச் சக்தி வளர்க்கும் என்ற நம்பிக்கையுமே ” நா.வா பக்.110 தமிழர் வரலாறும் பண்பாடும்

என்று பெண்ணின் மாதவிடாய் தாய்வழி சமூகத்தில் உற்பத்தியின் ஒரு செயல்பாடு என்று நினைத்து செயல்பட்டு வந்துள்ளது. இன்றும் இத்தொல் குடிகளாக வாழ்ந்து வருகின்ற சமூகத்தில் மாதவிடாய் என்பது உடலில் மாதம் தோறும் ஏற்படும் மாற்றம் என்ற கருத்து நிலையே உள்ளது என்பதை கள ஆய்வில் காணமுடிகின்றது.

பக்தி இலக்கியத்தில் மாதவிடாய்

          ஆனால் இச்சமூகத்தில் மாதவிடாய் என்பது அருவருக்கதக்க புழுவினும் கொடிய நிகழ்ச்சியாக காணப்படுகிறது.குறிப்பாக “விலங்கு பிற இயற்கையை வெறுமனே பயன்படுத்திக் கொண்டு,தான் அங்கே இருப்பதன் மூலமாக மட்டுமே இயற்கையில் மாற்றங்களைக் கொண்டுவருகிறது. மனிதனோ தான் ஏற்படுத்தும் மாற்றங்களின் மூலமாக இயற்கையைத் தனது குறிக்கோள்களுக்குப் பணியாற்றும்படி செய்கிறான், அதைத்தன் வசப்படுத்துகிறான்.மனிதன் எந்தச் சூழலிலும் ஒரு பாலியல் விலங்கு தான் ஒரு கைப்பொருளாகப் பயன்படுத்தும் நிலைக்கு மாற்றப்பட்டத்தைக் மேற்குறித்த கருத்து மூலம் நம்மால் அறியமுடிகிறது.(க.பஞ்சகம் ப.40)

இப்படி தனக்கேற்றாற் போல பெண் பேசா மடந்தயாக மாற்றி அவர்கள் பெண் உடல்குறித்தும் அவளின் உடலில் நிகழும் மாற்றம் குறித்தும் சாடி எழுதுகின்ற நிலையை சித்தர் மற்றும் பக்தி மரபில் பெண் என்பவள் மீது வெறுப்பு நிலையில் பாலியல் இன்பம் சிற்றின்பமென்று “இறைவனின்”திருவடியே பேரின்பம் அதை நாடிச் செல்க என்று எழுதினார் என்பதை பின்வருமாறு காணலாம்.

” நாறும் குறுதிச் சல்தாரை

தோல் புரை நாள்தொறும் சீ

ஊறும் மலக்குழி காமத்

துவாரம் ஒளித்திரும்புண்

தேறும் தனுப்பொளப்பு அந்தரங்

கத்துடன் சிற்றின்பம் விட்டு

ஏறும் பதந்தரு வாய்திருக்

காளத்தி ஈச்சுரனே”

பாட்டினத்தார்பாடல் (செவ்வாய்,நவம்பர்,2,2010)

பெண் மோக பித்தர்களுக்கு

பெண்ணின் வளமிக்க ஒரு செயல்பாட்டால் அவளை வளம் இழக்க செய்து ஒதுக்கிய நிலையில் தொல்குடி மக்கள் “மாதவிடாய்” என்ற செயல்பாட்டை வளமிக்க ஒரு பொருளாகக் கருதினர். பின்னாளில் செயற்பாடு அப்பெண்களின் அன்றாட வாழ்நாளில் நிகழும் ஒருமுறையாக மாறிவிட்டது .

பணியா பழங்குடி: 

அந்நாளில் ஏற்படும் உடற்சோர்வை இப்பெண்கள் பொருட்படுத்துவதே இல்லை,கேராளாவில் வாழுகின்ற பணியா பழங்குடி இனத்தைச் சார்ந்த பெண் தனது மாதவிடாய் காலத்தில் சுத்தமான தண்ணீரை எடுக்க சுமார் 2.கி.மீதூரம் கடகக்கும் பொழுது,மாதவிடாயை நிர்வாகிக்க அவர்கள் துணி துண்டுகளைப் பயன்படுத்துகின்றனர். மழைக் காலங்களில் ஆடைகளை உலர்த்துவது கடினம், இதனால் அவர்கள் சொறி மற்றும் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றார்கள் என்று  சமுக ஆய்வார்கள் கூறுகின்றனர்.(குழந்தைகள் பாதுகாப்பு நலன் மற்றும் நல்வாழ்வு பக்- 185-194) டி.எஸ்.சரண்யா, ஷயனாதேப்

பளியர் பழங்குடி

”மாதவிடாய்’ தொடங்கும் பருவநிலையை பூப்பெய்தல் என்கின்றனர். அனைத்து பழங்குடியினரும் சிறப்பாகச் செய்யும் சடங்கு பூப்புச் சடங்கு, தங்கள் இனத்திற்குண்டான மரபுக் கூறுகளோடு இன்றும் இச்சடங்கு பழங்குடியினரிடம் காணமுடிகிறது.இச்சடங்கு பளியர்களிடம் நடைபெறுகிறது. பெண்கள் ஆண்கள் என அனைவரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

இப்பழங்குடிகள் பழனி மலையை வசிப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் கல்வி கற்க வேண்டுமென்றால் மலையின் அடிவாரத்திற்கு வரவேண்டும், அதனால் இப்பழங்குடிகள் “மாதவிடாய் காலங்களில் பெண் குழந்தைகளைக் கல்வி கற்க பள்ளிக்களுக்கு அனுப்புவது இல்லை. காரணம் கேட்டால் ஒன்று இரத்த வாடைக்கு விலங்குகள் அடித்துக் கொன்றுவிடும் என்றும் மற்றொன்று பேய், பிசாசுகள் பெண்பிள்ளைகளை பிடித்துக் கொள்ளும்  என்கிறார்கள். பதினைந்து பதினாறு வயதிலேயே  திருமணமும் செய்கின்றனர்.

இப்பழங்குடிகள் மட்டுமல்லாமல் மலையாளிப் பழங்குடிப் பெண்களும் இக்கருத்தையே பதிவுச் செய்கின்றனர்.

இருளர் பழங்குடிகள்

இப்பழங்குடிகள் நீலகிரி மற்றும் வடஆற்காடு மாவட்டத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளுர் போன்றப் பகுதிகளில் வாழுகின்றனர். இப்பழங்குடிகள் வாழ வசதி இல்லாமல் குளக்கரை ஓரங்களிலும்,ஏரிகளின் ஓரங்களிலும் வாழுகின்றனர்.

இருளப் பழங்குடிகள் “மாதவிடாய் என்பது வளமையின் செயல்பாடு என்பதை நன்கு உணர்ந்தவர்கள் இப்பெண்கள் கரும்பு வெட்டுதல், கலையெடுத்தல், மரம் வெட்டுதல், போன்ற தொழிலுக்கு செல்லும் பொழுது சொல்ல இயலாத துன்பத்தை அடைகின்றார்கள். இத்துன்பத்தோடு இவர்களை மாதவிடாய் காலங்களில் கன்னிக் கோவிலுக்குள் அனுமதிப்பது இல்லை. கள ஆய்வில் வளமையின் சடங்காக் கண்ட செயற்பாடு, நாமகாரர் பார்த்துவிட்டால் நாற்று நட அனுமதிக்க மாட்டார்கள் என்று தன் மாதவிடாய் இரத்தப் போக்கை மறைக்க விரலை அறுத்து பணிபுரிந்துப் பெண்களைப் பார்க்கமுடிந்தது.

முடிவுகள்

தற்போது அனைத்துப் பழங்குடி பெண்களும் கோவிலுக்குள்ளே செல்வது கிடையாது, இம்மாதவிடாய் என்பது உடல் உறுப்பின் ஒரு செயல்பாடு என்றாலும் இதைக் காரணம் காட்டி பழங்குடிப் பெண்கள் மட்டும் அல்ல அனைத்து சமூகப் பெண்களும் படும் துயரம் அதிகம்.இரத்த போக்கு எனும் மாதவிடாய் மாதம் ஒருமுறைதான் வரும் ஆனால் அதை வைத்து இச்சமூகம் தரும் வலியோ ஒவ்வொரு நாளும் பலபெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

பெண்ணானவள் பேதைய் அல்ல

பெண்ணின் உறுப்புகள் போதை அல்ல

அவளின் மாதவிடாய் 

ஒரு பொருட்டும் அல்ல

அவளுக்கு வழிவிட உனக்கு 

ஒரு தடையும் அல்ல

அடிமை சங்கிலியில் பூட்ட 

பெண் ஒரு விலங்கும் அல்ல.

முதலில் பெண்களுக்கே மாதாவிடாய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில் இச்சமூகம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *