திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள்  களக்கையேடு நூல் அறிமுகம்

எனக்கு பறவையைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் பறவையைப் பற்றி தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் வருவதற்கு குமார் அண்ணனும் சிறன்கன் அண்ணனும் ஒரு காரணமாக இருக்கிறார்கள். புறா, மயில், காகா, குயில் என ஒருசில பறவைகளின் பெயர்கள் மட்டும் தான் தெரியும். பார்க்கும் எல்லா பறவையின் பெயர்களும் எனக்கு தெரியாது. அப்படியே தெரிஞ்துக் கொள்ளும் எண்ணமும் ஏற்படவில்லை.  ஆனால் பறவைக்கு பறவை வித்தியாசப்படுவதை அதன் தோற்றம் அதன் வண்ணம் அவை எழுப்பும் ஓசை என இவை எல்லாம் நம்மை கவரும் விதமாக இருக்கிறத அப்படியான சூழலில் தான் அண்ணன் குமார் அவர்களின் “திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் அறிமுகக் களக்கையேடு”  புத்தகம் கிடைத்தது

குமார் அண்ணன் மிகநல்ல ஓவியராக தெரியும் ஆனால் அதன் பின்னால் இருக்கும் உழைப்பும் பயணமும் மிக வியப்பாக இருக்கிறது. திருவண்ணாமலையில் இருக்கும் சில இடங்களைத் தாண்டி எனக்கு தெரியாது .

மனிதர்களும் அவ்வளவாக அறிமுகமற்று தனித்திருக்கும் சூழலில்  இத்தனை வகை பறவைகள் இந்த மாவட்டத்தில் இருக்கிறதா என்ற வியப்பு தான். தற்போதைய தலைமுறைகள் தொழிநுட்பத்தின் பிடியில் இருக்கிறது வீட்டைவிட்டு கணினியைவிட்டு கைபேசியைவிட்டு  வெளி உலகை பார்க்க வைக்க இந்த கையேடு உதவியாக இருக்கும்.

பறவைகள் என்றால் பறவைகள் மட்டும் அல்ல அதனுடன் தொடர்புடைய செடி கொடிகள் புதர்கள் மரங்கள், நீர் நிலைகள் மலைகள் என்று ஒரு உயிர் சூழலை நம் முன் வைக்கிறது .

நூலில் குறிப்பிட்டிருக்கும் பல இடஙகளுக்கு சென்றுவர வேண்டும் அதேபோல் அந்த பறவைகளையும் பார்க்க வேண்டும் என்று தொன்றுகிறது. 254  வகையான பறவைகள் அவற்றின் அறிவியல் பெயர் அவற்றின் வாழ்வியல் அதன் வட்டார பெயர்கள் அதன் ஓவியம் மற்றும் புகைப்படங்கள் என வியப்பாக இருக்கிறது. வாய்புள்ளவர்கள் வாங்கிப்படியுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *