உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் ஒரு சூட்கேசுடன் நின்றுகொண்டிருந்தேன். என் மாமா வெளிநாடு பயணம் செல்லப் போகிறார் “கேம் துபாய்” என்று சொல்வார்கள் நான் அவரிடம் அது என்ன மாமா என்று கேட்டேன், அதற்கு அவர் வெளிநாட்டில் வேலை செய்பவர்களை அப்படித்தான் சொல்வார்கள் என்றார். அப்போது எனக்கு வயது 22 இருக்கும் சினிமாவில் ஒரு இயக்குனராக ஆகிவிடலாம் என்ற பேராசையில் கனவுகளுடன் சுத்திக் கொண்டிருந்தேன். சென்னை பஸ் வந்தது அதில் இருவரும் அமர்ந்து கொண்டோம். மாமா ஒரு விதமான கவலையோடு இருந்தார். வெளிநாட்டு வாழ்க்கை பற்றி சொல்லும்போது அவர் கண்களில் கண்ணீர் தேங்கியது. பேசிக்கொண்டே ஜன்னல் ஓரம் சாய்ந்து உறங்கினார். மீனம்பாக்கம் ஏர்போர்ட் வந்தடைந்தோம், நானும் அவரை பிரியாவிடை கொடுத்து அனுப்பினேன். எனக்கு 500 ரூபாய் கொடுத்து, பார்த்து போ என்று கண்ணீர் ததும்ப அனுப்பி வைத்தார். என்னை மீறி என் கண்களில் தண்ணீர் தேங்கிக் கொண்டிருந்தபோது முடிவெடுத்தேன் “வெளிநாட்டு வாழ்க்கை வேண்டாம் எக்காரணத்தைக் கொண்டும் போகக்கூடாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்”. ஒரு ஆண்டுகாலம் பகுதி நேரமாக மெக்கானிக் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தேன். அன்பு அண்ணனிடம் இருந்து அழைப்பு வந்தது அன்று எனக்கு தெரியாது வாழ்க்கையின் “திருப்புமுனை” என்பார்களே அது அந்த நாள்தான், சினிமா என்று ஆரம்பித்தார் பின்பு அதனை நிறுத்தி எனது பேக்ரவுண்ட் என்ன என்று கேட்டார் நான் என்னை பற்றி சொன்னேன். நாங்கள் “மிடில் கிளாஸ் ஃபேமிலி” அண்ணே பெருசா சொல்ல ஒன்னும் இல்ல, வாடகை வீடுதான்! இன்றைய தேதிக்கு கஷ்டப்படுற நீ எப்படி சர்வே பண்ண முடியும் என்றார். அது இல்லாமல் பத்து பேர் போனால் ஒருத்தர் தான் ஜெயிப்பான் அந்த ஒருத்தன் நீயா இருந்தா எங்களுக்கு சந்தோஷம். உடனே என் மனம் பழைய சினிமா படம் பாணியில் ஏன் அந்த ஒருத்தன நானாக இருக்கக்கூடாது என தோன்றியது. ஆனால் நடைமுறையில் அது உறுதி இல்லாத ஒன்று பின்பு அவர் சொன்னார். நல்லா திங்க் பண்ணு ஒரு டிசிஷன் எடு என்று அனுப்பி வைத்தார் . வீட்டிற்கு ஒரு குழப்பத்தோடு வந்தேன் அப்போது என் தந்தை கோபமாக சேரில் அமர்ந்திருந்தார். அம்மா கீழே உட்கார்ந்து இருந்தார். கண்ணில் கண்ணீர் தேங்க சொன்னர் அவருக்கு வேலை போய்விட்டது என்று. என் அப்பா சூப்பர் மார்க்கெட்டில் ஒரு கண்காணிப்பாளர் ஒரு நாள் சம்பளம் 250 ரூபாய் மட்டுமே அதற்கும் துண்டு விழுந்து விட்டது. தற்போது மூவரும் என்ன செய்வது என்று யோசித்த தருணம் அப்போது ராஜி என்ற 28 வயது நபர் அப்பாவின் இடத்துக்கு அருகில் சொந்தமான டீக்கடை நடத்துபவர் பயங்கரமான உழைப்பாளி என்னிடமும் நன்றாக பேசுபவர் அவர் கையில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் தந்து அடுத்த நாலு மாதம் ஃபேமிலி ரன் பண்ணுங்க பிறகு வேற எதனா ஹெல்ப் நான் சொல்லுங்க பண்றேன் கவலைப்படாதீங்க என்று ஆறுதல் கூறினார், அதோடு பணத்தை தம்பி வெளிநாடு போய் வேலை செய்து சம்பாதித்து அனுப்பும்போது திருப்பி தரவும் என்று சொன்னார். அன்று இரவு முழுக்க யோசித்தேன் காலை 2 பேர் கால் செய்தேன். ஒன்று அன்பு அண்ணன் மற்றொருவர் என் மாமா கேமு துபாய் விசா இருந்தால் அனுப்புங்கள் என்றேன் 24, 2017 ஜூலை மாதம் என்னுடன் என் சிச்சா ஹயாத் பாஷாவும் கேம்ப் விடுமுறை நாட்களில் உடன்னிருந்தார். என்னை வழி அனுப்ப வந்தார். அவர் தனது அனுபவங்களை கூறினார். சென்னை மீனம்பாக்கம் வந்தடைந்தோம். அவரை பிரியா விடை கொடுத்து உள்ளே சென்றேன். விமானத்திற்காக காத்திருந்தேன். ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் பணிப்பெண்கள் அழைத்தார்கள். விமானம் புறப்பட்ட தருணம் எனது மாமா சொன்ன விடயத்தை எண்ணி கொண்டிருந்தேன். அவர் சொன்னார் அவருக்கு தெரிந்த ஒரு மலையாளி நண்பர் ஹோட்டல் வைத்திருக்கிறார் அவர் கடையில் நீ பகுதிநேரமாக வேலை செய்து கொண்டே, உன் படிப்புக்கான வேலையை நீ தேடிக் கொள்ள வேண்டும் என்றார். அந்த எண்ணத்திலே விமானம் அபுதாபியில் தரை இறங்கியது. அமீரகத்தின் தலைநகரம் அபுதாபி என் கண்களுக்கு பள பள என தெரிந்தது. வேற்று கிரகத்தில் இருப்பது போல தோன்றியது. விமானநிலையத்தின் வெளியில் எனது மாமாவும் அவர் நண்பர் ஹாஜியும் இருந்தார். மணி இரவு ஒன்பது இருக்கும், நேராக ஹாஜி அவர்களின் அறைக்கு சென்றோம். புது இடம், புதுநாடு, புது மனிதர்கள் தூக்கம் சற்று தாமதமாக வந்தது வாழ்க்கைப் பற்றிய கவலையும் மனதிற்குள் சுழன்றது. காலை பொழுது விடிந்தது, மாமா அந்த மலையாளி நண்பருக்கு போன் செய்தார். அப்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அவர் மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்படிருந்தது பிறகு என்ன செய்வது என்று தெரியவில்லை. மாமாவும் நானும் பெரும் குழப்பத்தில் இருந்தோம். 50 முறைக்கு மேல் தொடர்பு கொண்டும் அவரின் அழைப்பு கிடைக்கவில்லை. அன்றைய தினம் அப்படியாக கடந்தது பின்பு எனது பெரிய மாமாவின் மருமகனிடம் தஞ்சம் அடைந்தேன். ஒரு மூன்று நாட்கள் அவர் இருந்த ஒரு பாலைவனத்தின் நடுவிலிருந்த ஒரு மெக்கானிக் ஷாப் செட் அந்த செட்டில் உள்ளே ஒரு அறையில் மூன்று நாட்கள் கழித்தேன். அந்த மலையாள நண்பரின் அழைப்பு வரவில்லை. பின்பு எனது மாமாவுடன் வேலை செய்யும் நண்பரிடம் ஒரு மாதம் அவகாசம் கேட்டு என்னை அவர்களுடன் தங்க்கவைத்தார். நானும் சார்ஜா வந்தடைந்தேன் இப்போது நான் ஒருவகை அழுத்தத்திற்கு உள்ளானேன். ஏனென்றால் நான் அதிக நாட்கள் இந்த அறையில் தங்க இயலாது. வேலை தேட ஆரம்பித்தேன். பல நிறுவனங்களுக்கு ஈமெயில் செய்தேன். எவற்றில் இருந்தும் பதில் கிடைக்கவில்லை. எனது நண்பன் ரிஸ்வான் சிறிய வயது காலத்து நண்பன் அவன் தான் அறையில் தங்கியிருந்த அவருடைய நண்பர் சித்திக் அவரிடம் எனது ரெஸ்யூம் தந்துஉதவி பண்ணுங்க என்று கொடுத்தான். பின்னர் அந்த கம்பெனியில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது இன்டர்வியூ முடித்தபின் “விவில் கால் யூ” என்றார்கள் அதன் அர்த்தம் தெரியாதவன் அல்ல நான். “வேலையில்லை போயிட்டு வா” என்று அர்த்தம். மறுநாள் எனது மாமாவிற்கு ஒரு அழைப்பு வந்தது அந்த மலையாளியிடம் கோபமாக பேச ஆரம்பித்தார், அந்த மலையாள நண்பரோ தன் தாய்க்கு உடம்பு சரியில்லை அதான் திடீரென்று கிளம்பியதாக சொன்னதும் மாமா சற்று ஆறுதலடைந்தார், பின்பு அந்த மலையாளி நாளைக்கு அபுதாபிக்கு கூட்டிட்டு வந்திரு என்று சொன்னார். நாளை ரெடியா இரு நாம போவோம் உன் ரெஸியும் எடுத்து வச்சுக்கோ என்றார் வந்து பதட்டத்தோடு யோசித்தேன். ரிஸ்வான் சொன்னது ஞாபகம் வந்தது ஹோட்டல் வேலையில் போயிட்டா அப்புறம் உன் வாழ்க்கை அப்படியே போயிடும் என்றான், நான் என்ன செய்வது? எந்த வேலை என்றாலும் போவேன் என்று தானே வந்தேன் நமக்கு கடவுள் எழுதியது இது தான் என்று தூங்கினேன் கண்ணு திறந்து கொண்டே கண்ணீர் தேம்ப எனது தாயின் காதிலுள்ள தோடுகளை அடகு வைத்து தான் வந்தேன் முடிவெடுத்தேன் காலை கிளம்பலாம் என்று காலை பொழுது விடிந்தது எனது மாமாவிடம் அழைப்பு வந்தது தான் பில்டிங் கீழே இருக்கிறேன் எல்லா பொருட்களை எடுத்துக்கொண்டு வா சரி என்று கிளம்பினேன் மீண்டும் ஒரு கால் வந்தது என்னுடைய மாமாவிடம் இருந்து அல்ல . அது என் வாழ்க்கையின் மிக முக்கியமான அழைப்பு என்று எனக்கு தெரியாது.. அந்த அழைப்பு நான் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்று வந்த இன்டர்வியூ கம்பெனியில் இருந்து வந்து ஆஃபர் லெட்டர் வாங்கிக்கோங்க என்று எனக்கு நம்ப முடியவில்லை நான் அவர்களிடம் கேன் யூ செக் மை புல் நேம் அண்ட் அவர்களோ எஸ் யு ஆர் தி ஒன் இம்ரான் பாஷா என்றால் சந்தோஷத்தின் உச்சம் அந்த நாள் பின்பு என் மாமாவிடம் சொன்னேன் அவரும் பெரும் மூச்சு விட்டார். வாழ்க்கையின் தொடக்கம் ஆரம்பித்தன, நாட்கள் கடந்தன 11 மாதங்கள் ஆனது ஒரு மாதம் விடுமுறைக்காக மிக சந்தோஷத்தோடு கிளம்பினேன். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் காலை 6மணிக்கு விமான இறங்க ஐந்து நிமிடத்திற்கு முன்பு சென்னை கடற்கரை மின் விளக்குகளை பார்த்ததும் என் மனதில் சொல்லில் அடங்காத மகிழ்ச்சியுடன் விமானம் தரையிறங்கியது ஆனால் நான் சந்தோஷத்தில் பறந்து கொண்டு இருந்தேன். என்னை அழைப்பதற்காக என் தந்தையும் அம்மாவும் மாமா பையன் 19 வயது அபுதாகிர் வந்தார்கள் என்னை கட்டி அணைத்து முத்தம் தந்தாள் என் தாய் அப்பொழுது என் தாய் காதில் தோடுகளை கவனித்தேன் ஆம் நகை மூட்டு விட்டேன் என்று பெருமிதத்தோடு காரில் ஏறினேன். அப்போது எனது மாமா மகன் அபுதாகிர் கேட்டான் அப்பா பெட்டியில் இருக்கிற மாதிரி உங்க பெட்டியிலும் இருக்கும் கேம்ப் துபாய் அப்படின்னா என்ன என்று கேட்க சிறு புன்னகையுடன் நான் நம் வாழ்க்கையில் நாம் எது வேண்டாம் சொல்கிறோமோ வாழ்க்கையே அதையே தந்த அழகு பார்க்கும். அதற்கு அவன் புரியவில்லை என்றான் நல்லது என்று புன்னகையுடன் முற்றுப் புள்ளி வைத்தேன்.