குறள் வழி குப்பை மேலாண்மை

“மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண். –குறள் 749”

என்ற குறளில் நமது திருவள்ளுவர் மாணிக்கம் போன்ற தெளிந்த நீர், சமதள நிலம், மலை மற்றும் அடர்ந்த நிழல் தரும் காடு போன்ற வளமான சுற்றுச்சூழல் மனிதர்களை கவசம் போல பாதுகாக்கின்றது எனக் கூறுகிறார். ஆனால் இன்றைய தொழில்மயமாதலினாலும், போக்குவரத்து மற்றும்  கழிவுகளாலும் நமது புவியானது நாளுக்கு நாள் மாசடைந்து கொண்டே வருகிறது.

 இத்தகைய கழிவுகளை நாம் சரியான வழியில் கையாளவில்லை எனில் இது நமது சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்திற்கு மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.  கழிவு மேலாண்மை என்றால் என்ன? கழிவு மேலாண்மை என்பது கழிவுகளை சேகரித்தல்,பிரித்தல், மறுசுழற்சி செய்தல் அழித்தல் அல்லது இயற்கை உரமாக மாற்றுதல் போன்ற முறைகளை உள்ளடக்கியது. சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் கழிவு மேலாண்மை மிகவும் முக்கியமானது. கழிவு மேலாண்மை என்பது மனித ஆரோக்கியம், சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் ஆகியவற்றின்  நல்தன்மையை குறைக்கிறது. 

உலகளாவிய கழிவு மேலாண்மை:

உலகளாவிய கழிவு மேலாண்மை என்பது கழிவுகளைக் கையாளுதல், அகற்றுதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றைக் குறிக்கிறது. இது மனித ஆரோக்கியம் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களை குறைக்க உதவுகிறது. இதில் கழிவுகளை குறைத்தல், மறுசுழற்சி செய்தல், ஆற்றல் மீட்பு மற்றும் பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற பல்வேறு அணுகுமுறைகள் உள்ளன.

      2024 ஆம் ஆண்டு UNEP மற்றும் ISWA வின் மூலமாக உலகளாவிய கழிவு மேலாண்மை கண்ணோட்டம் வெளியிடப்பட்டது.  இதற்கு முன்பாக 2015 ஆம் ஆண்டு இதே கண்ணோட்டம் வெளியிடப்பட்டது.  அப்போதுலிருந்தே, மத்திய, மாநில அரசுகள் கழிவுகளை குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது வெளியிடப்பட்ட அறிக்கையில் உலகம் முழுவதும் சுமார் இரண்டு மில்லியன் டென்களுக்கு நிகரான கழிவுகள் உருவாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மாதிரியான கழிவுகள் பெரும்பாலும் வீடுகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றின் மூலமாகவே உருவாக்கப்படுகின்றது. கழிவுகளின் வகைகள், கழிவுகளை குறைத்தல், மறு பயன்பாடு மற்றும் மறு சுழற்சியினை மையமாகக் கொண்டுள்ளது . 

கழிவுகளின் வகைகள்:

  1. உணவுக்  கழிவுகள். 
  2.  நெகிழிக் கழிவுகள். 
  3. உயிரி மருத்துவக் கழிவுகள் .
  4. கட்டுமானக் கழிவுகள் .
  5. அபாயகரமான கழிவுகள் .
  6. மின்னணுக் கழிவுகள். 

1. உணவுக் கழிவுகள்  மற்றும் நெகிழிக் கழிவுகள் ஆகிய இரண்டுமே சுற்றுச்சூழலுக்கு மிகவும் கெடுதல் விளைவிப்பவதாகவே உள்ளன. பொதுவாக உணவுக் கழிவுகள் எளிதில் மக்கும்  தன்மையுடையவை எனினும், அவை அதிக அளவில் குவிந்தால் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். நெகிழிக் கழிவுகள் எளிதில் மக்காதவைகளாகவும், நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழலில் தங்கி நிலம், நீர் மற்றும் காற்று மாசுபாட்டிற்கு வழி வகுக்கின்றன. நெகிழி கழிவுகளை எரிப்பதால் தீங்கு விளைவிக்கும் வாயுக்கள் வெளியாகி காற்று   மாசுபாட்டை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. கடலில் கலக்கும் நெகிழி கழிவுகள் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை உருவாக்கும். 

2. உயிரி மருத்துவக் கழிவுகள் என்பவை மருத்துவமனைகள்,ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் மனிதர்கள் அல்லது விலங்குகளின் நோய் அறிதல், சிகிச்சை தடுப்பு நடவடிக்கைகள்  அவற்றின் தொடர்புடைய ஆராய்ச்சியின் போது உருவாகும் கழிவுகள் ஆகும். இதன் மூலம் தொற்று நோய் பரவும் வாய்ப்பு உள்ளது. 

3. கட்டுமானக் கழிவுகள் என்பது கட்டிடங்கள், சாலைகள், பாலங்கள் போன்ற கட்டுமானப் பணிகளின் போது உருவாகும் கழிவுகள் ஆகும்‌. கட்டுமான கழிவுகள் திடக்கழிவுகள், அபாயகரமான கழிவுகள் என இரு வகைப்படுத்தப்படுகின்றன. இதில் மரம் ,உலோகம், பிளாஸ்டிக் போன்றவை மறு சுழற்சி செய்யக்கூடியவை ரசாயனங்கள், பெயிண்ட்,  போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் ஃபாளோரோசன் விளக்குகள், பேட்டரிகள் மற்றும் மின் உபகர காரணங்களும் அபாயகரமான கழிவுகளில் அடங்கும். 

4. அபாயகரமான கழிவுகள் என்பது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் ஆகும் இவை இயற்பியல், ரசாயன, உயிரியல் அல்லது கதிரியக்கப் பண்புகளைக் கொண்டிருக்கலாம். மருத்துவமனைகள் ஆய்வகங்கள் மற்றும் பிற சுகாதார நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட கழிவுகள் தீப்பற்றக்கூடிய அல்லது தீயைப் பரப்பும் தன்மை கொண்டவை, பொருட்களை அரிக்கும் தன்மை கொண்டவை. அதாவது அமிலங்கள் மற்றும் காரங்களும் அபாயகரமான கழிவுகளாகவே கருதப்படுகின்றன. 

5. மின்னணுக் கழிவுகள் என்பது பயன்படுத்தப்படாத,பழுதடைந்த அல்லது பழைய மின்னணு சாதனங்களை உள்ளடக்கியது இவை மறுசுழற்சி செய்யப்படாவிட்டால் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் இவை நிலத்தில் மக்காமல் நீண்ட காலம் தங்கி நிலத்தடி நீரை மாசுபடுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுப் பொருட்களையும் வெளியிடுகின்றன. 

6. பேட்டரி கழிவுகள் என்பது பயன்படுத்தப்பட்ட அல்லது பயனற்ற பேட்டரிகள் மற்றும் அவற்றின் கூறுகளைக் குறிக்கிறது. இவை சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதால் இவற்றை முறையே கையாளுவதும் ,  மறுசுழற்சி செய்வதும் முக்கியம்.

ஒவ்வொருவரும் பொறுப்புடன் குப்பையை நிர்வகித்தால், நகரமும் நாடும் சுத்தமாகவும், நலமாகவும் இருக்க முடியும். இது நம் பின் தலைமுறைக்கான ஒரு பொறுப்பு.

“ஊழியார்முன் தூய்மை இயல்பென்னும் நல்லாற்றால்
ஆழியுள் கண்டனையார் மாட்டு. (குறள் 1003)”தூய்மையைக் கடைப்பிடிப்பது ஒரு மனிதனின் இயல்பாக இருக்க வேண்டும். இது அவரது பண்பாட்டையும் பெருமையையும் காட்டும். என்று திருவள்ளுவர் முன்மொழிகிறார்.  ஒரு நபர் தனது சமூகத்தின் தூய்மை, கழிவுகளை சீராக சேகரித்தல், மீளுசுழற்சி செய்யும் பழக்கத்தை ஏற்படுத்துதல்  வேண்டும்.

apj
aruna
gandh
sundar lal
sunitha
vanthana
previous arrow
next arrow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *