
(கவிஞர் தாமரை பாரதியின் இங்குலிகம் கவிதைத் தொகுப்பினை முன் வைத்து)
தூய்மையென்பது மிக லேசானது தான். அதைக் கையாளத் தெரிந்தவரையில் லேசா, கனமா எனப் பொருள் தரத் தொடங்குகின்றது. ஒரு மனித உடல் பிறப்பு முதல் மறைவு வரை இத்தூய்மையோடு இணைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஒரு தனி உடல் கொள்ளும் தூய்மை தான் சமூகத்தூய்மையையும், தூய்மை செய்யும் மாந்தர்களையும் அரவணைத்துக்கொள்ளும். வெறும், வாய் உதிர்க்கும் அன்புச் சொல்லன்றி, சிறு சிறு செயலால் தூய்மையொன்று செய்யப்படும் போது அது தேவையான, சமூகத் தூய்மையாக அதை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கான சுமையில் சிறு நீக்கம் பெறுதலாக அமையும். ஒரு இயற்கையென்பது கட்டற்ற பெரும் நிறுவனம். அதில், எல்லாவிதமான தேடல்களும், போதாமைகளும் சுட்டிக்காட்டப்படும். ஆதாரமான வாழ்க்கையில், நம் பொறுப்புகள் சுழன்று கொண்டேயிருக்கும். அதில், அனைவர்க்குமான பொறுப்பாக, அடையாளமாக, தூய்மையென்ற “கூர்நோக்குச் சொல்லொன்று” அடைக்கலமாகியுள்ளது.
இவ்விடத்தில் சில கேள்விகளை முன் வைக்கலாம்.
1. நீங்கள் இருக்கும் இடத்தில் ஒரு பிளாஸ்டிக்கை மிக எளிமையாகக் கடந்து சென்றதுண்டா?
2. சாலையோரங்களில் குப்பை வீசும் பழக்கமுண்டா?
3. பொது இடங்களின் தூய்மைக்கு சிறு பங்களிப்பு செய்ய நினைத்ததுண்டா?
4. வீட்டுக்குப்பைகளை மிக எளிதாக தெருவோரம் வீசியதுண்டா?
5. தாராளமாக வைத்ததுண்டா? அன்றாடக் குப்பைகளை வீட்டில் சேர்த்து
6. பொது இடக் கழிவறைகளை சரியான படி பயன்படுத்துகிறோமா?
இவ்வாறாக இன்னும் பல கேள்விகள் எழலாம். பதில் ஆம் என்பதை விட இனிமேல் செய்யக் கூடாதென்ற ஒரு சிறு உணர்வு மனதில் தோன்றினால் அதுவே, பாதியளவு தூய்மைக்குச் செய்யும் பெரும் கனக்குறைப்பெனலாம்.
இங்குச் சரி, தவறு, ஆம், இல்லைபென்பதை விட கூச்ச உணர்வின்றி நீ நான் நாம் என்ற சமூகக் கூட்டிணைவோடு சக மாந்தர்களோடுக் கைக் குலுக்கும் போது பொருத்தமான சமூகத்தூய்மைச் சாத்தியமாகின்றது.
தூய்மையென்பதே,
குப்பை என்ற ஒன்றிலிருந்து, தான் தன்னைப் பளிச்சிட வைத்துக் கொள்கின்றது. தூய்மைப்படுத்தப்படும் ஒரு நகரும் நிறுவனம். இதுபோல பற்பல நகரும் நிறுவன உடல்கள் சுமந்த, கைக்கொண்ட அனைத்தையும், நீக்குவதற்கு ஒரு நகரும் நிறுவன உடலே வருகின்றது. அவ்வுடல் வருவது தேர் போன்ற குப்பை வண்டியில் உலா காணுதல் பவனி வருதல். புறப்பாடு ஆகுதல். பார்க்கப்போனால், இந்த உடலே தினம் தினம்
அதனாலயே,
குப்பை வண்டியில் / பவனி தூய்மையாளன் என அறுதியிட முடிந்தது. வருகிறான் / நகரத்
தினமும் பவனி வரும் அந்நகரத் தூய்மையாளன் தான் செய்வதை சிறிய பணி என நினைக்கக் கூடும். ஆனால் அது விஷயமில்லை. பல நகரும் உடல்களுக்கான ஆசுவாச மூச்சு விடச் செய்யும் மிகப்பெரும் ஆதரவுப் பணி அது. நமக்கான பாதிப்பு எதுவுமே வராத வரை சமூகத்தில் நடக்கும் எந்தச் சம்பவமுமே வெறும் வேடிக்கை மட்டுமே. குப்பையும், குப்பை வண்டியும் கணக்கற்ற நகரும் நிறுவன உடல்களின் பெரும் உரிமை. பெரும் மதிப்பு சஞ்சலமற்ற மனநிலையில்,
உண்ணும் கைகளைக் கொண்டு தினம் தினம் அள்ளுதல் வெறும் மனமும், சொல் அல்ல. நிகழ்த்தப்படும் பெருஞ்செயல். பக்குவமான சகிப்புத்தன்மையும் அதன் இயக்க ஊக்கிகள் என்பதாலேயே,
“இம்மாநகரின் அசுத்தமெல்லாம் இம்மாநகரின் கழிவுகளெல்லாம் அவன் உண்ணும் கரங்களால் தான் தினம் தினம் அள்ளப்படுகின்றன” எனும் அடிகளால் சொல்லமுடிகின்றது.
தவிர, அவைகள் குப்பைகள் அல்ல. ஆண்டாண்டுக்காலமாக மாந்தர்களின் அடையாளமாக ஓடிக் கொண்டேயிருக்கும் புது நீர் போல, புதிதான தொன்றை வரவேற்பது போல, கை நனைத்து மூழ்கி மிதந்து வரும் பூக்கூட்டத்தைக் கைகளால் அப்புறப்படுத்தி ஒரு மனித உடல் நீரில் மிதந்து செல்லல் போல, பெரும் பண்பாட்டு நிகழ்வொன்றாக,
“புதுவெள்ளத்தில் மிதக்கும் பூக்கள்
அள்ளப்படுவது போல”
எனக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. நீர்க்கான உரிமை மறுக்கப்பட்டு, திறந்து விடும் போது எத்தனை மகிழ்வுக் கிடைக்குமே அத்தனையான மகிழ்வு குப்பை வண்டியில் குப்பை ஏற்றப்படும் போது மனித உடல் அடைகின்றது.நிறைய சமாதானங்களும், விடாப்பிடியான கேட்டுக் கொள்ளலும் புது நீரில் ஓடும் வெள்ளம் போல மனித உடல் தருவித்துக் கொள்ளும்.
இப்போதெல்லாம் தெருமுக்கில் குப்பையைக் கொட்டுவதை சகல வசதிகளோடு தூக்கி வீசுகின்றார்கள். எந்தளவு தூய்மை, சுகாதாரம் என வாய் கத்திப் பேசுகின்றோமோ, அதே அளவு இருக்கின்ற குப்பைக் கூடைகளில் சுகாதாரமான முறையில் குப்பைகளைக் கொட்டுவது மிக அவசியம். என்றுமே, குப்பைத் தொட்டிகள் நம்மோடு விவாதம் புரியவில்லை. பேசுவதே இல்லை. மௌனித்து நிற்கின்றது. மௌனத்தை கொண்டே தூய்மையாளர்கள் கூடைகளைக் உடைமையாகக் கிளறுவதை,
நேற்றிரவு முழுதும் நடந்த சண்டைக்கான / அறிகுறிகள் கொட்டப்பட்டன / பேராபத்தையும் பெருங்கோபத்தையும் தூண்டும் சொற்களைச் சிவப்பு நிறக் கூடையில் கொட்டியிருந்தனர் தூய்மையாளன் மௌனமாக அச்சண்டையை மீண்டும் கிளறினான். /
சொல்லப்போனால், குப்கைளில் தான் பலப்பல மனித உடல்களின் அந்தரங்கங்கள் புன்னகைக்கின்றன. அதிகமானோரின் செயல்கள் குரல்
அடைத்துப்போன காட்டுமிராண்டித்தனமான வன்மங்களைக் குப்பைக் கூடைகளில் போட்டுக் கடக்கின்றார்கள்.
ஆனால்,
“தரம் பிரிக்கும் போது அவற்றைப் பார்க்கும் போது, மௌனப் புன்னகையால் கண்களை நிறைத்துக் கொண்டு ஒரு உளவியலறிஞர் ஆவதை,
“ஓர் உளவியலறிஞரைப் போல
மௌனப் புன்னகை புரிகிறான்”
என்ற அடிகளும், அது மட்டுமல்ல அதனைத் தொடர்ந்து வரும்,
அவனுக்குத் தெரியாத / எந்த வீட்டில் எத்தனைக் கதவுகள் /எந்த வீட்டில் எத்தனை ஜன்னல்கள் என…
என்றடிகளும் ஏளனமாய் அன்றாடங்களைக் கடந்து போவோருக்கான நச்சென்ற தலைக்குட்டுகள்.
நகரங்களை ஸ்மார்ட் ஆக மாற்றுவதில் குப்பைகளுக்குப் பெரும் பங்குண்டு. தூய்மையற்ற ஒரு சாலையைக் கடப்பதென்பது கண்கட்டி நடப்பது போல. குப்பைகளைத் தான் தோன்றித்தனமாக வீசுபவர்களை யாரும் தண்டிப்பதில்லை. மாறாக, குப்பைகளை அள்ளுதல் என்றொரு சித்திரம் யார் கண்ணிலும் நிலையாகத் தென்படுவதில்லை. தூய்மைப் பணியாளர்கள் அதற்காகவே படைக்கப்பட்டவர்கள் அல்லர். சக மனிதர்கள் குறித்தான. மலினமான எண்ணங்களைக் களைதல் மிகத் தேவையானதொன்று நமக்கு நாமே சில விதிகளை வகுத்துக் கொள்வது நன்று. மாநகரக் குப்பைகளைப் புதையலாகக் காணத் தரும் மனிதன் எத்தகைய மனிதன்….
தின இருப்பு அம்மனித உடலை எவ்வளவு தேவையற்ற மனநிலையிலிருந்து அப்புறப்படுத்துகிறது. என்ன மாதிரியான பக்குவத்தை அள்ளித் தருகின்றது…
இதோ, அந்த அடிகள் புலப்படுத்தும்.
“மாநகரத்தில் புதையலைக்
கண்ட பயணியாக
குவியல் குவியலாகக்
கிடக்கும் குப்பைகளைப்
பிரிக்கின்றான்”
மாறாக, இக்குப்பைகளைச் சேகரிப்பதால் எம்மரியாதையும் கேட்கவில்லை. தன்னைக் கீழாகக் காணவில்லை. அருவருப்பு, மன உளைச்சல் எதுவுமே இல்லை. அவர்களுக்குச் சமூகத்தின் மீதான பெரும் பங்களிப்பினை இவ்வாறாகத் தர முடிகின்றதில் அலாதி இன்பம் காண்கின்றனர்.அவர்களுக்கு எப்போதுமே குற்றவுணர்வு இல்லை. அதிகாரக் கண்கள் கண்காணிக்கும் என்ற அச்சமில்லை. அவர்கள் ஒரு நகரத்தின் சோர்வை நீக்கி, சாலையோடு கைக்குலுக்கி தோழமையாகிறார்கள்.
எனவே தான்,
“ஒரு போதும்
மரியாதையைக் கோரியதில்லை
அவமானங்களுக்கு எதிராகப்
பேசியதில்லை
அவருவருப்பென்று எதையும்
தவிர்த்ததில்லை
கோபங்
கொண்டதில்லை
சினமெழுந்தாலும்
சிரிக்க மறந்ததில்லை”
என்றவாறு அவர்களால் இருப்பினைத் தக்கவைத்துக் கொள்ள முடிகின்றது.
இங்குக் கலை என்பது என்ன?
எந்த ஒரு செயலிலும் ஆழ்ந்து போதல் அல்லது மனப்பிடித்தமாகி உறவாடலெனலாம்.
தூய்மைப் பணியாளர்களும் அதைத் தான் செய்கின்றார்கள். அவர்கள் யாருடனும் அடம் கொள்ளவில்லை. கொந்தளிப்பில்லா மனப்பிடித்தமோடு குப்பைகளின் பின் செல்கின்றார்கள். ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மனித உடல்களை ஆறுதலடையச் செய்யும் அவர்களின் ஆழ்ந்த செயல் குப்பைகளை நீக்குதல். அவர்களுக்குக் குப்பை ஒரு கலை. அதனை மௌனப்புன்னகையோடு தனதாக்கிக் கொள்கின்றார்கள்.
“அவர்கள் மௌனத்தைக் கலப்பதையும், பேசுவதிலிருந்து வெளியேறுதைைலயும் தனக்கானக் கலையாக்கிக் கொள்கிறார்கள்” என்ற அடிகளே அதனை உணர்த்தும்.
அவ்வளவே….





