கடல் –  உலகச் சூழலியல் மேம்பாட்டின் ஆதாரம்

அடிப்படையில் இயற்கை, பேரிடர்களை நிகழ்த்துவதில்லை; இயற்கையை நாம் அணுகும் விதம்தான் பேரிடர்களுக்குக் காரணமாகிறது. மனிதனின் பேராசையும் இயற்கையின்பால் காட்டும் அலட்சியமும், பேரிடர்களின் முக்கியமான காரணிகள்.

                                                                              -வறீதையா கான்ஸ்தந்தின்                 

“உலகத்தின் குப்பைத்தொட்டி கடல்” இந்த சொல்லை நிறுவும் தன்மையாக சமீபத்தில் கடலில் தேங்கும்  கழிவுகள் குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகள் கடலில் காணப்படுகிறது அதில் பல கடல் வாழ் உயிரினங்கள் சிக்குண்டு இறந்து கரை ஒதுங்குவதையும் நாம் கேள்விபட்டும் பார்த்தும் இருப்போம்.

கடல் என்பது குப்பைகளை கொட்டும் இடமா?  கடல் என்பது உலகளாவிய சூழலின் இன்றியமையாத பகுதி. மில்லியன் கணக்கான பல தனித்தன்மைக் கொண்ட  வகை வகையான உயிரிச் சூழல் வாழுமிடம்.  உலக பொருளாதாரத்தின் ஏற்ற இறக்கத்தை கடல் சார் உணவுகள், மருந்துகள், கடல் சார் வேலைகள் மற்றும் சுற்றுலாத்துறை, கடல் சார்ந்தப் போக்குவரத்துகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கடல் மக்களை இயற்கையுடன் இணைக்கிறது மற்றும் சில பூர்வீக கலாச்சாரங்களுக்கு முக்கியமானதாகவும் கடல் இருக்கிறது.

கடலின் பரப்பளவு, அமைப்பு, ஆழம் போன்ற பலவற்றைக் கணக்கில் கொண்டு கடலைப் பெருங்கடல், (OCEAN), சிறு கடல் (SEA), விரிகுடாக்கடல் (BAY), மற்றும் வளைகுடாக்கடல் (GULF) என நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.  அத்தகைய நாங்கு வகைகளிலும் நம் நாட்டில் இருப்பது  சிறப்பு. மேற்கே அரபிக் கடலும் (ARABIAN SEA), தெற்கே இந்திய மகாகடலும் (INDIAN OCEAN), தென் கிழக்கே மன்னார் வளைகுடாவும் (GULF OF MANNAR), கிழக்கே வங்காள விரிகுடாவும் (BAY OF BENGAL). இக்கடல்கள் வெப்ப மண்டலத்தில் இருப்பதாலும், நல்ல ஆற்றுநீர் சேர்க்கையைப் பெற்றிருப்பதாலும் இங்கு நல்ல மீன்வளம் காணப்படுகின்றது. இதனால் கடலை நம்பி வாழும் மக்கள் நம் நாட்டில் இலட்சக்கணக்கில் உள்ளனர். உலக அளவில் பார்ப்போமானால் 3 மில்லியனுக்கு மேலான மக்கள் கடலை நம்பி வாழ்கின்றனர். 

உலக வங்கி  கடலின் வளங்களின் மூலம் ஈட்டும் பொருளை நீலப் பொருளாதாரம் (Blue economy) என்று வகைப்படுத்தி அவற்றில் கவனம் செலுத்துகின்றன. கடல் பகுதிகளின் நிலையான மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மையில் கவனம் செலுத்தி  மீன்வளத்தை மேம்படுத்துவதற்கும், கடல் மாசுபாட்டை சரி செய்வதற்கும், கடலோர வளங்களை நிர்வகிப்பதற்கும், கடல் ஆரோக்கியத்திலும், சுற்றுலா, கடல் போக்குவரத்து மற்றும் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற முக்கிய துறைகளின் ஈடுபடுவதில்    உலக வங்கி முக்கியமான பங்காற்றுகிறது. உலகப் பொருளாதாரத்திற்கு பெருங்கடல்கள் ஆண்டுதோறும் $1.5 டிரில்லியன் பங்களிக்கின்றன, மேலும் இந்த எண்ணிக்கை 2030-ல் $3 டிரில்லியனாக இருமடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [1] 

கடல் வளங்களை பாதுகாக்கவும் சில வழிமுறைகளை வகுத்து  செயல்படுத்துகின்றன. ஆனால் காலநிலை மாற்றத்தால் கடல் சூழல் பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் பெருங்கடலுக்கு பெரும்பங்கு வகிக்கின்றன.  காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அதிகப்படியான வெப்பத்தில் 90% / மனிதனால் ஏற்படும் CO2 உமிழ்வுகளில் 23% கடல் சூழல் உறிஞ்சுகின்றன.

This is how climate change is impacting the ocean | World Economic ...
  • வெப்பமயமாதல்: வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்கள் / அல்லது பசுமையில்ல வாயுக்கள் சூரியனிடமிருந்து ஆற்றலை ஈர்க்கிறது. கடல் இந்த ஆற்றலின் பெரும்பகுதியை உறிஞ்சி, கடல் நீரை வெப்பமாக்குகிறது. சூடான நீரும் கடல் மட்ட உயர்வுக்கு பெரும் காரணமாகிறது.
  • அமிலமயமாக்கல்: வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடை கடல் உறிஞ்சுவது கடலின்  அமில  காரத்தன்மையை (pH) ஐ மாற்றி, கடல்நீரை அதிக அமிலமாக்குகிறது. வெப்பவிலை மற்றும் அமிலத்தன்மையால் கடல் நீரில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைகிறது.

 இவற்றால் கடல் வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறது அவற்றால் mollusks  மற்றும்  crustaceans வகைமை உயிரினங்கள் சீர்குலைகிறது. கடல் நீரோட்ட மாற்றம் கொள்வதால் மீன்களின்  வளர்சிதை மாற்றங்கள் பாதிக்கின்றன.  இவற்றால் கடலோர மீன்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் மக்கள்  மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படுகின்றனர். 

கடல் என்பது ஆழ்கடல் பகுதி மட்டுமல்ல கடலோரப் பகுதிகளில் வளரும்  தாவரங்கள், கடல் நீரில் வேர்கள், அலைகள் / சதுப்பு நிலங்கள் மற்றும் கடற்பகுதி புல்வெளிகள் போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளுமாகும். இவை  காடுகளை விட ஒரு யூனிட் பரப்பளவில் அதிக கார்பனைப் பிரித்து சேமித்து வைக்கின்றன. 

From Fish to Humans, A Microplastic Invasion May Be Taking a Toll |  Scientific American

சதுப்புநிலங்கள் மீன்வளம் மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தாங்கும் கடலோர சமூகங்களின் திறனை வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. சக்திவாய்ந்த சூறாவளியில், சதுப்புநிலங்கள் கடல் நீர் மட்டத்தை 4 முதல் 16.5 சென்டிமீட்டர்களுக்கு இடையில் குறைத்து, நீர்வரத்து வேகத்தை 29% – 92% வரை குறைக்கும் என்று வங்காளதேசத்தில் புதிய ஆராய்ச்சி மதிப்பிடுகிறது. எனவே, சதுப்புநிலங்களைப் பாதுகாப்பதன் மூலம் சமூகங்கள் உண்மையிலேயே பயனடையலாம். கடல் வெப்பத்தைத் தக்கவைக்கும் சோலார் பேனல் போல செயல்படுகிறது. நிலப் பகுதிகளும் சில சூரிய ஒளியை உறிஞ்சிக் கொள்கின்றன.

கடல் சூரிய கதிர்வீச்சை மட்டும் சேமித்து வைப்பதில்லை – இது உலகம் முழுவதும் வெப்பத்தை விநியோகிக்க உதவுகிறது. நீர் மூலக்கூறுகள் வெப்பமடையும் போது, ​​​​அவை ஆவியாதல் எனப்படும் ஒரு செயல்பாட்டில் காற்றுடன் சுதந்திரமாக பரிமாற்றம் செய்கின்றன. கடல் நீர் தொடர்ந்து ஆவியாகி, சுற்றியுள்ள காற்றின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை அதிகரித்து, மழை மற்றும் புயல்களை உருவாக்குகிறது. நிலத்தில் பெய்யும் அனைத்து மழையும் கடலில் தொடங்குகிறது. வெப்பமண்டலங்களில்  மழை பெய்யவும், வெப்ப உறிஞ்சுதலும்,  கடல் நீர்  ஆவியாதலும்  ஒரு சுழற்சியாக நிகழ்கிறது.

பூமியின் பூமத்திய ரேகைப் பகுதிகளுக்கு வெளியே, வானிலை முறைகள் பெரும்பாலும் கடல் நீரோட்டங்களால் இயக்கப்படுகின்றன. நீரோட்டங்கள் என்பது தொடர்ச்சியான ஓட்டத்தில் கடல் நீரின் இயக்கமாகும், இது பெரும்பாலும் மேற்பரப்பு காற்றால் உருவாக்கப்படுகிறது, ஆனால் ஓரளவு வெப்பநிலை மற்றும் உப்புத்தன்மையால், பூமியின் சுழற்சி மற்றும் அலைகள் ஆகியவற்றால் உருவாக்கப்படுகிறது. பெருங்கடல் நீரோட்டங்கள் ஒரு கன்வேயர் பெல்ட்டைப் போலவே செயல்படுகின்றன, பூமத்திய ரேகையிலிருந்து துருவங்களை நோக்கி வெதுவெதுப்பான நீர் மற்றும் மழைப்பொழிவு மற்றும் துருவங்களிலிருந்து குளிர்ந்த நீரை மீண்டும் வெப்பமண்டலத்திற்கு கொண்டு செல்கின்றன. எனவே, கடல் நீரோட்டங்கள் உலகளாவிய காலநிலையை ஒழுங்குபடுத்துகின்றன, இது பூமியின் மேற்பரப்பை அடையும் சூரியக் கதிர்வீச்சின் சீரற்ற விநியோகத்தை எதிர்க்க உதவுகிறது. கடலில் நீரோட்டங்கள் இல்லாமல்  இருப்பின் வெப்பநிலை மிகவும் தீவிரமானதாக இருக்கும் – பூமத்திய ரேகையில் மிகவும் வெப்பமாகவும், துருவங்களை நோக்கி குளிர்ச்சியாகவும் இருக்கும். 

உலக சூழலியல் இயக்கத்தை கடல் சூழலே நிர்வகிக்கிறது. நிலப்பரப்பில் இருக்கும் மக்கள் கடலை விளிம்பில் இருப்பதாகவும் சுற்றுலாத் தலமாக மட்டும் பார்க்கும் பார்வையில் இருந்து மாற்றம் பெற வேண்டிய நிர்பந்தத்திற்கு வந்திருக்கிறோம். உலக வெப்பநிலை உயர, கடல்  நீர்மட்டமும் உயர்கிறது. அதனால் கடலின் இயற்பியல் / உயிர்வேதியல் பண்புகள் மாற்றம் கொள்கிறது அவற்றுடனே  கடலின் உயிர் சுழற்சி சீர்குலைகிறது. 

வளர்ச்சி என்ற பெயரில் நிகழ்த்தப்படும் மனிதச் செயல்பாடுகளே இத்தகைய சூழலியல் அழுத்தத்திற்கு பெரும் காரணம்.  அதிகப்படியான கார்பனை உமிழும் செயல்பாடுகள் / காடழிப்பு மற்றும் அணு உலைக் கதிர்வீச்சும் கொதிகலனிலிருந்து வெளியேறும் நீர் / ஆலைக் கழிவுகள் கடல் நீரில் கலப்பதலும் ஏற்படும் உயிர்வேதி மாற்றத்தால் நிகழும்  சீரழிவு. அனல்மின் நிலையங்களால்  சிதையும் அலையாத்திக் காடுகள் பவளப்பாறைகளின் சிதைவும் கடல் சூழலை வெகுவாக பாதித்திருக்கிறது. 

கடல் சூழலை பாதுகாக்கவும் மீட்கவும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். சமீபத்தில்  கடலில் கரை ஒதுங்கும் கச்சா எண்ணெய்,  அடர் பாலி சைக்ளிக் ஹைட்ரோ கார்பன் கொண்ட கரிம வேதிமத்தைக் கூட  வாளி கொண்டு அள்ளி அகற்றுகின்றார்கள். நீலப் பொருளாதாரம் என வகைப்படுத்தும் உலக வங்கி இவற்றிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. 

காடு, மலை என தீப்பிடித்து விலங்குகள் கருகி இறக்கும் அபாயம் அவ்வப்போவதாவது ஊடகங்கள் வெளிக் கொண்டுவருகிறது. ஆனால் நடு கடலில் கப்பலில் ஏற்படும் விபத்தில் கடலின் மேற்பரப்பு தீ பிடிக்கும் போது மிகப்பெரிய பாதிப்பை கடல் வாழ் உயிரினங்கள் சந்திக்கின்றன. கடலின் மேற்பரப்பு கடலுயிரிகளுக்கு மிக முக்கியமானவை. இதனால்  உணவுச் சங்கிலியில் உள்ள முதல்நிலை உணவூட்டிகளான பச்சைப்பாசிகள் அழிகிறது, கடலின் மேல் மட்டத்தில் வந்து ஆக்ஸிஸனை சுவாசிக்கும் பெரு உயிரிகளும் பாதிக்கப்படுகிறது. கடலில் நிகழ்வது எதுவும் வெளிவருவதில்லை.  அரசு அரசுசாரா அமைப்புகள் கடலின் சூழலியல் அமைப்பைப் பாதுகாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

 முதலில் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை, சூழல் பாதிக்காத வண்ணம் பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.   ஆரோக்கியமான கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பராமரிக்கவும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மாற்றுவதன் மூலம் ஆற்றல் பயன்பாட்டைக் குறைக்கலாம். ஒவ்வொருவரும் கார்பன் உமிழ்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்கலாம். இது கடல் வெப்பமயமாதல் மற்றும் அமிலமயமாக்கலைக் குறைக்க உதவும். 

கடலும் நிலமும் ஒன்றுடன் ஒன்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பின்னிப்பிணைந்திருக்கிறது. நிலத்தில் ஏற்படுத்தும் பாதிப்புக்கள் கடல் சூழலையும் கடலில் ஏற்படும் பாதிப்புகள் நிலப்பரப்பையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பாதிக்கிறது. கல்வி / ஆய்வுப்புலத்திலிருந்து புதுப்புது தொழில்நுட்ப ரீதியாக பலவற்றை முன்வைத்தாலும் மக்களிடையே இதுகுறித்த விழிப்புணர்வை கொண்டுவர வேண்டும்.  எங்கோ ஒரு நிலப்பரப்பில் பயன்படுத்தப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பொருட்களை கடல் வாழ் உயிரியின் இறந்த உடலில் இருந்து எடுக்கப்படுகிறது. அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுக்கும் கொடையும் செல்வமும் ஆரோக்கியமான இயற்கைச் சூழலே…

  1. https://www.worldbank.org/en/news/feature/2022/02/08/what-you-need-to-know-about-oceans-and-climate-change 
  2. https://www.weforum.org/agenda/2021/05/climate-change-ocean-damage-action/
  3. https://www.whoi.edu/know-your-ocean/ocean-topics/climate-weather/ocean-based-climate-solutions/ocean-alkalinity/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *