ஏரினும் நன்றாம் எருவிடுதல்

1400 வருடங்களாக வவ்வால் மற்றும் கடற்பறவைகளின் எச்சங்களை எருவாக பயன்படுத்திய மரபு பெருவில்(peru) இருந்திருகிறது.. 

சில ஐரோப்பிய மாகாணங்களிலும் இந்த வகை எருக்களை மக்கள் கையாண்டிருக்கிறார்கள்..காலப்போக்கில் 19 ஆம் நூற்றாண்டில் இவைகள் பொட்டலங்களாக விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது அமெரிக்கா, ஆஃப்ரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக மக்களை கொண்டு சென்று, பயிர்த் தொழிலை பழகியிருக்கிறார்கள் அமெரிக்க ஆண்டைகள்.. 

அதற்கு பின்பு தான் வேளாண்மையில் இரசாயன உரம், பூச்சிக்கொல்லி போன்ற வியாபாரம் தொடங்கியிருகிறது.. 

1856  ல் அமெரிக்கா “Guano Island Act” என்றொரு சட்ட வரைவைக் கொண்டு வருகிறது, அதன் மூலம் 94 தீவுகளை தனதாக்கிக் கொண்டு அங்கே கிடைக்கும் உயிரினக் கழிவுகளை, உலகம் முழுவதும் வணிகம் செய்திருக்கிறார்கள்..

இதனை GUANO IMPERIALISM என்று ஆய்வாளர்கள் கூறுவார்கள். 

Whenever any citizen of the United States discovers a deposit of guano on any island, rock, or key, not within the lawful jurisdiction of any other Government, and not occupied by the citizens of any other Government, and takes peaceable possession thereof, and occupies the same, such island, rock, or key may, at the discretion of the President, be considered as appertaining to the United States.

— Section 1 of the Guano Islands Act

Ref : from hands to tutor, black rice books by Judith Ann Carney 

இதைக் குறித்து ஏன் தெரிஞ்சிக்கனும்னு யோசிக்கிறீங்களா?

இந்தாங்க அதோடு தொடர்புடைய சில அனுபவங்களும் ஆய்வுகளும். 

Marx – Metabolic Rift – Mulching – Virtual soil

மார்க்ஸ் பிறந்தநாள்மான்னு காலையில மனைவிகிட்ட பேசத் துவங்கினேன் அந்தப் பேச்சு பல்வேறு கதைகளுக்கு இட்டுச் சென்றது, இன்னைக்கு என்ன எழுதலாம்னு கேட்டேன், நீயும் 360 டிகிரி படிச்சிகிட்டே தான் இருக்க, மார்க்ஸ் பத்தி நாலஞ்சி தான் எழுதி இருக்க இதுவரைக்கும் தொடாத ஏரியாவா எழுதுன்னு சொன்னா.

சரிமான்னு சொல்லிட்டு யோசனைக்கு போய்ட்டேன், கொஞ்சம் நேரம் கழிச்சி விவசாயமும் மார்க்ஸும் தான் எழுதனும்னு தோனுதுன்னு சொன்னேன் சரி அப்படியே எழுதுன்னு சொன்னா, இதுவரை வாசித்த யோசித்த அனைத்தையும் மனதில் ரீவைண்ட் செய்துகொண்டே சில மணி நேரம் ஓடிவிட்டது. 

கல்வி மருத்துவம் விவசாயம்னு வரும் போது மட்டும ஒவ்வொரு வார்த்தைகளையும் யோசித்துப் பேச வேண்டுமென எனக்கு நானே சொல்லிக் கொள்வேன். 

எங்கிருந்து யோசனை தொடங்கியது, வானகத்தில் ஒரு நாள் இரவு ஏதோ ஒரு விவாதம் குழுவாக அங்கே மார்க்ஸ், கமியூனிசம், தற்சார்பு என விடிய விடிய உரையாடல் உரையாடல் முடிவில் நான் பேசும் போது வானகம் குமார் அண்ணா முன்னரே சொன்னது தான் மூளையில் அடித்த ஆணி போல நச்சின்னு பதிஞ்சி இருந்தது, ” யூரியாக்கு சப்சிடி கேக்குறது இல்ல மார்க்ஸியம், என் நெலத்துல எதைப் போடனும்னு நான் முடிவு பண்ணனும் கம்பெனிக்காரன் முடிவு பண்ணக் கூடாதுன்னு” அவர் சொன்னதை சொல்லி அந்த உரையாடலை முடித்தேன்.

அப்போது அது நிறைவான பதிலாக இருந்தாலும் தேடுதல் கூடிக் கொண்டே போனது, மார்க்ஸை வாசித்து எழுதுபவர்கள் பலரை தொடர்ச்சியாக கவனித்தேன், குறிப்பாக சூழலியல் மற்றும் வேளாண்மையில். John Bellamy foster, Ian Angus, தொடங்கி மார்க்ஸ் குறிப்பிட்ட Lucretius, Ibn AL Nafis, Liebig, Vernadsky, ஒரு சுத்து சுத்தினேன் முழுதாக வாசிக்கவில்லையென்றாலும் ஓரளவுக்கு வாசித்தேன். 

ஒரு முறை நான் மட்டும் தனியாக விவசாயம் குறித்து வகுப்பு எடுக்கச் சென்றேன், வானகத்தில் கிடைத்த பாடம் மார்க்ஸ் மற்றுமுள்ள அறிஞர்கள் எல்லாரும் சேர்ந்து கொண்டு பேயாட்டம் ஆடிவிட்டார்கள் என் மனதில்.

மூடாக்கு (Mulching) என்பதை மூச்சிக்கு ஒருமுறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் நம்மாழ்வாரும், குமார் அண்ணாவும், அதை நான்காக பிரித்துக் கொள்வார்கள். 

1. mulching act as temperature regulators ie., thermostat. Thermodynamics.

2. Mulching as organic manure, Carbon cycle.

3. Mulching become food for microorganisms which supplies nitrogen to the plants, regulates nitrogen cycle.

4. Mulching reduces water supply, it stores and perculate water slowly and  perpetuate the process of hydrological cycle.

இதைத்தான் மூச்சிவிடாமல் பேசிக் கொண்டே இருப்பார், குறுக்கிடாமல் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருப்பேன், இதைத் தொடர்ந்து தான் வேளாண் அரசியல் வகுப்பே நடக்கும்.

இதுல ஒரு ஏரியா தான் நைட்ரோஜன் சைக்கிள் அது தான் “மேல்மட்டத்தின் கழிவு கீழ் மட்டத்துக்கு உணவுன்னு” நம்மாழ்வார் பேசினாரு, அதே தான் மார்க்ஸ் வேற மாதிரி பேசி இருந்தாரு, மார்க்ஸ் எங்க இருந்து எடுத்தாருன்னு தேடினா இங்கிலாந்து ஐயர்லாந்தை காலனியாதிக்கம் செஞ்ச போது, அவங்க ஐயர்லாந்தின் உணவை மட்டும் திருடல ஐயர்லாந்தின் மண்வளத்தையும் சேத்தே தான் திருடினாங்கன்னு மார்க்ஸ் பதிவு பண்ணும் போது தான் மண்டை கிறுக்கு கூடியது மேலும் வாசித்து நான் அதை content map செய்து சுருக்கமா “virtual soil” னு மனசுல பதிய வச்சிகிட்டேன். 

ஒரு இடத்துல soil metabolism பத்தி எழுதுறாரு அது Liebig கிட்ட இருந்தும் பல பல்வேறு பயோ கெமிஸ்ட், மைக்ரோ பயாலஜிஸ்ட் கிட்ட இருந்தும் எடுக்குறாரு, அந்த சமயத்துல ஏங்கல்ஸ் லிபே கிட்ட இருந்து ஒரு பாச்சல் மேல போய் soil metabolism என்பது வெறும் வேதியல் நிகழ்வல்ல, அது Biochemistry – Microbiology – Geology மூணும் சம்பந்தபட்டதுன்னு அடுத்த புது விசயத்தை மார்க்ஸ்க்கு அறிமுகம் செய்றாரு. 

Soil Metabolism Metabolic Rift எனும் புது கருத்துருவாக்கம் செய்றாங்க. இதுல Geology பகுதி தான் agriculture is location specific practices ந்னு புரிஞ்சிக்க முடிஞ்சது. 

இந்த Metabolic Rift க்கு காரணம் வேதி உரங்கள்னு தீர்கமா எழுதுறாங்க. பல்வேறு நாட்டு அறிஞர்கள் கிட்ட இருந்த ஆய்வுகளை வாங்கி, மண் தன்னோட வளத்தை இழந்து உயிரிழந்து நிக்கப் போகுது அதுக்கு காரணம் capitalistic model of agriculture, அதாவது கம்பெனி விவசாயம், வேதி உரங்கள் மண்ணை மலடாக்கும்னு ஆணித்தரமா எழுதி வைக்கிறார் மார்க்ஸ். interdependency on chemical fertilizer மண்ணை உயிரில்லாம செஞ்சிடும் அதைத் தான் வணிகம் உலகம் செய்யப் போகுதுன்னு முடிக்கிறாரு மார்க்ஸ். 

மீண்டும் பின்னாடி போவோம், இந்த நைட்ரோஜன் ஒன்ன மட்டும் வச்சி நடக்குற அரசியல் கூத்தும் வணிகமும் பலர் தொண்ட தண்ணி தீர கத்தியாச்சி, ஆனா காஞ்சி போன இலை தழை, மரம், மட்டை, சாணி, குப்பைய போட்டாலே மண் தான் இழந்தை சிலவற்றை மீட்டுருவாக்கம் செஞ்சிக்கும், ஆனா இந்த வேளாண் குடிமக்களை NPK அரசியல்ல சிக்க வச்சி கடன்காரனா மாத்தினதுமில்லாம, பூமிக்கு அடியில இருந்த மொத்த தண்ணியும் உறிஞ்சி மேல உளத்திட்டோம் அது வெறும் metabolism மட்டுமில்ல அதுல carbon, nitrogen, hydro, thermo cycle எல்லாமே உடஞ்சி போச்சி, விளைவு குளோபல் வார்மிங், உரக்கம்பெனி பில்லினியர் ஆனான், விவசாயி தற்கொலை பண்ணிகிட்டு செத்தான் வரைக்கும் இந்த மூடாக்கு (mulching) எனக்கு பாடமா எடுத்தது இருக்கு.

நாம பொருளை ஏற்றுமதி செய்யல அதுல மறஞ்சி இருக்க வளங்களை ஏற்றுமதி செய்யுறோம்னு மார்க்ஸ் சொல்றாரு, மறை நீர் போல மறை மண்ணும், மறை மலையும், மறை காடுகளும் நாம ஏற்றுமதி செஞ்சிகிட்டு தான் இருக்கோம், எல்லா நாடுகளும் இதில் அடக்கம் தான்.

உயிரியல் பன்மையத்துல “மேல்மட்டத்தின் கழிவு கீழ் மட்டத்தின் உணவுன்னு” முதல் முதலில் அழுத்தமா சொன்னவன் மார்க்ஸ் தான். அதோட நகல் தான் நாம எடுத்து பேசிகிட்டு இருக்கோம். 

இப்போ தலைப்பை படிங்க… ஏரினும் நன்றாம் எருவிடுதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *