கீழடி பற்றின செய்திகள் உண்மையில் நம் மூதாதையர்கள் வாழ்ந்த காலம் அவர்களது உணவு,உடை,பண்பாடு, கலாச்சாரம் என விரியும் வாழ்க்கைமுறையை முதன் முறையாக ஒரு தொடக்கப்புள்ளியாக இந்த இளையோர் நாவலான ஆதனின் பொம்மையில் அறிகிறேன்.
சிந்துசமவெளி நாகரீகம் ,சிந்தசமவெளியின் வீழ்ச்சி இந்த இரண்டுக்கும் மத்தியில் என் மனம் இருவேறு கோணங்களில் நான் இதை பதிவு செய்ய விழைகிறேன்.
1.மூதாதையர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது?
2.சிந்துசமவெளி நாகரீகத்தின் வீழ்ச்சியை எப்படி அவர்கள் கடந்திருப்பாரென்றும் வியக்கிறேன்.
நாம் வாழ்க்கைக்கு நம்மை தகவமைத்துக் கொள்வதென்பது வேறு,
காலத்தின் கட்டாயத்தால் யுவதிகளாக… வாழ்ந்த வாழ்க்கையை அறவே மறந்து உயிர்பிழைத்தல் என்ற நோக்கில் காலமிடும் கட்டளையின் பேரில் தகவமைத்துக் கொள்வது ஒரு பகிரதப் பிரயர்தனமாகத்தான் இருக்க முடியும்.
கதைசொல்லியின் கற்பனைகளில் வியந்ததும் அதனூடக சிந்து சமவெளியின் தொன்றுத்தொட்ட 3000 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றை எப்படி கதைசொல்லியால் இப்படி கடத்திவிட முடிந்தது என வியக்கிறேன்.
நிஜத்தில் கேப்டன் பாலுவைப் போல கோடை விடுமுறையில் பாட்டி வீடு செல்லும் எல்லோராலும் ஒரு சிந்து சமவெளி நாகரீகத்தை கண்டறிய முடியாது. செப்பேடுகளும் களிமண்ளும் ஏன் முந்தைய மரப்பாச்சி பொம்மையை எங்களால் ஆதனின் உலகமாக இதுவரை நான் பாவித்ததில்லை.
நான் பாலுவுடனே..இல்லை இல்லை பாலுவாகவே கதை முழுவதும் பயணிக்கிறேன்.
கதைசொல்லியின் வரிகள் “இது நம் கதை நடந்த கதை” என்று சொல்லும்போதே ஏற்பட்ட சிலிர்ப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை.
வார்த்தைகளும் தேடலுக்குட்பட்டதாகவே அமைகிறது உதாரணமாக வேளாண்கோ/கடுந்தேறல்,இளந்தேறல் மற்றும் வேள்பாரியில் நான் கேட்டறிந்த பல வார்த்தைகள்.
தமிழ் இலக்கியம் தன்னகத்தே தேடுதலுக்குறிய பல விந்தையான சொற்களை வைத்திருக்கிறது. அதை வாசகனாக புரிந்து படித்தலென்பதும் ஒரு கடினமாக, அதே சமயம் ஒரு அலாதியான அனுபவமாக அமைந்தது.
ஒரு கற்பனையை எப்படி இவ்வாறாக கையாள்வது அதை எப்படி நேர்த்தியுடன் கொண்டு செல்வது என்பதற்கு நான் இதுவரை கண்டதில் இந்த ஆதனின் பொம்மை ஒரு குறிப்பாக விளங்கக்கூடும்.
தோட்டத்தில் கிடைத்த செப்பேடு ஆதனின் உலகம்மன் பொம்மையாக அங்கிருந்து ஆதன் வெளிப்படுவதும் பாலு அவனைப் வியப்படைதலையும் அவனுடைய தேடலைத் தொடர்ந்து
காக்கைப்பாடினியார் என்னும் மதுமிதாவின் நூலகத்தை பாலு ஆராயும்போது அதில் ஒரு புத்தகம் தலைக் காண்பிப்பதாக ஆதனின் பெயரிலின்று”ஆ” சூழியில் பாலு இழுக்கப்பட்டு ஓர் எறும்பைப் போல அந்த புத்தகத்துல் ஊர்வதை நான் அவ்விடத்தில் என்னை வைத்துப் பார்க்கிறேன்….!
விந்தையிலும்விந்தை நான் இதுவரை என்னை அப்படி ஒரு கண்ணோட்டத்தில் பொருத்திப் பார்தத்தில்லை.
ஒரு பாம்பாக ஆதன் வெளிப்படுவதும் தூக்கத்தில் ஆதன் பாலுவை அந்துவனாக தான் வாழ்ந்த சிந்துசமவெளிக்கே கொண்டு சென்றதும் அவர்களின் அன்றாடம், வர்ணமற்ற மக்களின் வாழ்வியலும்,உணவு,உடை,அணிகலன்,பெண்தெய்வங்கள், பொழுதுபோக்கு,தொழில்,நிலம்,தெருக்கள்,சிந்து நதியமைந்த ஊர் பேர்கள்,அரண்,பொதுப்பெயர்களென விரிகிறது சிந்து சமவெளி என் மனதுள்
தொன்றுத்தொட்ட வாழ்க்கை முறையும்,வேடிக்கைகளும்,கூத்தும் உண்மையில் மெய்சிலிர்க்கிறது
சிந்துக்கொரு மதிரயப் போல, வைகைக்கொரு மதுரையென அமைந்த காலத்தின் சூழற்ச்சியில் மாண்டவர்கள், எத்தனையோ இடம்பெயர்ந்து, குலமறந்து கலந்துப்போனவர்கள் எத்தனையோ ,
வாழ்ந்தவர்கள் வாழ்க்கை சொல்கின்றன, வீழ்ந்தவர்களின் கனவை சிந்துசமவெளி என்றும் பறைசாற்றும்.
சிந்து நதி ஆதனை அன்னையாக பாவித்து விடுவித்ததும். உற்ற நண்பனான புருஷ்ஷை யக்ஞத்தில் வார்த்ததும் சோகத்தின் உச்சம் .
அதிலும் விடுப்பட்ட வார்த்தைகளால் சிந்து வடபுலத்தில் இந்துவாக சொல்வதாக அமைந்த கூற்றும்,ஆதனின் பொம்மை பெளர்ணமியின் வெளிச்சத்தில் மிதந்ததாக முடிவும், இது கதையாகினும் நிஜத்தின் கதையாகவே உணர்கிறேன்.
வைகையாற்றின் பெயர்க்காரணம் ஆன்மீகத்தால் வேறாக இருப்பினும் தான் வாழ்ந்த சிந்து நதிதீரத்தின் தெற்கே ஓடும் நதியாக தான் கை வைத்ததும் தாயாக “வைகை”யை உணர்ந்த சிந்துவும் அதன் நதிக்கரையில் அமைந்த மதிரய் போல மதுரையையும் பாவித்ததும் உளம் தொட்ட வரிகளே!
கீழடியை உலகிற்கு எடுத்துக்காட்டிய பெருமை உயர்திரு அமர்நாத் இராதாகிருஷ்ணன் (இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை) அவர்களுக்கு நன்றிகள் என்றைக்கும் உரித்தாகும்.
குறிப்புக்களாக:
————————-
குறைந்தபட்சம் 3000 ஆண்டுக்கு முந்தைய வரலாற்றைக் கொண்டது தமிழ் மண்
கீழடியில் கிடைத்திருக்கும் தொல் எச்சங்கள் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை.
நாம் அனைவரும் ஆப்பிரிக்கக் கறுப்பு மனிதர்களின் வழித்தோன்றல்களே-65,000ஆண்டுகளுக்கு மனித இனம் ஆப்பிர்காவை விட்டு வெளியேற துவங்குகிறது
மத்திய தரைக்கடல் பகுதிக்கு வந்து தங்கிய அந்த மனிதக் குழு
10,000 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை,
5,000 ஆண்டுகளுக்கு முன் சிந்துசமவெளி,
4,000 ஆண்டுகளுக்கு முன் சிந்துசமவெளியிலிருந்து நாகரிக சமூகமாக தென்னிந்தியாவை நோக்கி இடம்பெயர்ந்தது.
பாலியை பற்றிய கவிதை போன்ற நடையில் அமைந்த இந்த வரிகள் அருமை
“உலகத்தீர் வாருங்கள்!
பாலியெனும் நகருக்கு வாருங்கள்!
உலகத்தை காணலாம்
வேறெங்கும் தேடாதீர்
இதோ உலக மனிதர்கள்
மொழிபெயர்த்தேயத்து புலம்பெயர் மாக்கள்
கலந்து இனிதுறையும் பட்டினத்தைப் பாருங்கள்!
எல்லோரும் என்னுடைய சொந்தங்கள்
இந்தப் பாலியில் வாழ்வது நிகரில்லாதது
யாதும் ஊரே யாவரும் கேளீர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
ஆனால் எல்லோரையும் கேளீராக பாவித்த அந்தப் பாலி இன்று தரைமட்டமாகிவிட்டது”
நேர்த்தியுடனான படங்களுக்கும்,தமிழ் மண்ணின் 3000 கால முன்கொண்டுசேர்த்தமைக்கும் ஆசிரியர் உதயசங்கர் அவர்களுக்கு பேரன்பும் நன்றிகளும்
#கீழடி #ஆதிச்சநல்லூர் #தொல்லியல் #அகழாய்வுக்களங்கள்#ஆரியர்கள் #கருப்பு #வெள்ளை #சாதி #மதம் #வரலாறு #ஆதனின்பொம்மை #சிந்தசமவெளி#சிந்து
பாத்திரங்களின் பெயர்கள்:
————————————–
கேப்டன்பாலு(புலிக்குகை நாவல் நாயகன்),
மதுமிதா(காக்கைப்பாடினியார்)-பாலுவின் மாமன் மகள்
கந்தசாமி -பாலுவின் மாமன்
லட்சுமி-பாலுவின் அத்தை
கதிர்,சுனில்,நாகு,மாரி,கனகு,ஆதன்-நண்பர்கள்
கலம்செய்கோ *இராவதன்-ஆதனின் மாமன்
வெண்ணிலை -ஆதனின் தங்கை
வேளாண்கோ* -விவசாயம் செய்பவர்
குவிரன் ,மாறன்,சிந்து
கோதை,செம்மல்லி-ஆதனின் தாய்
அந்துவன்,வீரா,சூழாமும்,பூதன்,அறிவுடைக்கோதன்,அறிவனும்,பெருமானும்,பசுபதி,புருஷ்,வழுதி,பாண்ட்யா
-ஆதனின் சிந்துசமவெளி நண்பர்கள்
சேயோன்,சுயம்பு-கோ தலைவன்
கோதெய்* – தலைமை பூசாரி
சிற்பக்கோ*-சிற்ப வேலை செய்பவர்
உணவு:
———–
சோறு,அயிரை விரால் மீன்,பலாக்காய் துவரன்.தயிர்,மோர் மிளகாய்,மொந்தன் வாழை மாம்பழம்,தேன்,ஊன்சோறு,அப்பம்,அதிர்ச்சியும்,இனிப்புகள்,தினைமாவு,புட்டும்,பழமும்,கடுந்தேறல்,மானிறைச்சி,இனிப்பக்கடலை,கோதுமைக்கஞ்சி, இறைச்சி
குறிப்பு:(பெயர்கள்)
————————–
புலிக்குகை மர்மம்
விளையாட்டு:
——————–
பாண்டி,தோட்டாக்கள்,பல்லாங்குழி,தாயக்கட்டம்,செஸ்,இறகு பந்து, கிரிக்கெட் (மாதாங்கோவில் தெரு கிரிக்கெட் டீம்),தாயம்,சொக்கட்டான்,சதுரங்கம்,கிட்டிப்புள்,மண்ணாமரம்,காயாபழமா,மாட்டுப்பிடி ,சேவல் சண்டை,ஆட்டுக் கிடா சண்டை
ஊர்கள்:
————-
கீழடி -ஆதிமதுரையம்பதி,கோவில்பட்டி ,கொந்தகை கிராமம்,வைகை,கரூர்,இந்துகுஷ்,தேனி,பழனி,பொருந்தல்
பறவைகள்:
—————–
காகம்,பூணில்குறுவிகள்,குயில்,மைனா
மரங்கள்:
————–
கோணைமரம்,தேங்காய்மரம்,கடம்புமரம்,இலுப்பை,மஞ்சணத்தி
தெருக்கள்:
——————
குயவர் தெரு
தட்டார் தெரு
அங்காடித் தெரு
சிற்பிகள் தெரு
சோற்றுத் தெரு
ஆம்பல்தெரு
தொழில்:
————-
வலைஞர்,குயவர்,மருத்துவர்,கொல்லர்,தச்சர்,வேளாளர்,நகரசூத்தி,நெசவாளர்,வாணியர்,உழவர்கள்,பாணர்கள்,பாணினிகளும்
பூக்கள்:
———-
மல்லிகை,முல்லை,கனகாம்பரம், அந்திமந்தாரை,அரளி,செண்பகம்,தாழை,நந்தியாவட்டம்
கொடிகள்:
—————
சரக்கொன்றை,மணிக்குலை
குடிகள்:
————
மருதநிலைக் குடிகள்,குறிஞ்சிநிலைக் குடிகள்,முல்லைநிலைக் குடிகள்,நெய்தல்நிலைக் குடிகள்,பாலைநிலக் குடிகள்
நதி:
———
வைகை,சிந்து
குலங்கள்:
————–
சுமேரியர்கள், யவனர்கள், கிரேக்கர்கள்,நாடார்கள்,பாரசீகர்,கிரேக்கர்,ஆரியர்கள்,தஸ்யூக்கள்,மிலேச்சர்கள்
சிந்துநதிக்கரையின் :
ஊர்கள்
—————————————–
கொற்கை,தொண்டி,வஞ்சி,நான்மாடக்கூடல்,கடுந்தேறல்/இளந்தேறல்(அங்காடிகள்)பாழி,மதிரய்
மதிரய்,உறையூர்,முசிறி,கீழையூர்,காஞ்சி,பெரும்பேர்,கொந்தகை,ஆதி நல்லூர்,கொடுமணல்,கண்டியூர்,பட்டிணம்,தேனூர்,கீழடி,கீழூர்,மேலூர்,கோப்பை,அரிக்கமேட,கோழியூர்,செம்பூர்
அம்மன் கோயில்:
————————–
அருக்காயி,வீராயி,கொற்கையம்மன்,
வஞ்சியம்மன்,வெயிலுகந்தாள்,காத்தாயி,பேராய்ச்சி,ராக்காச்சி,அங்காளி,உலகம்மன் ,பூவம்மா,சூலியம்மன் ,முளைப்பாரியம்மன்,தாயம்மன்,இயக்கியம்மன்
ஆண் தெய்வங்கள்:
—————————
இந்திரன்,யமன்
ஆட்டம்:
————–
குருதியாட்டம்
அணிகலன்கள்:
———————
மணி மாலைகள்,சூதுபவளம் பதித்த மோதிரம்,முத்து மாலைகள்,சங்கு வளையல்கள்,தண்டட்டிகள்,காது மாட்டிகள்,தலைச்சூடிகள்
மலைகள்:
————–
சிலைமான்,கதிர்காமர்,இமயமலை
பானம்:
———-
சோமபானம்,சுராபானம்
நகரம்:
———-
பாழி
ஆதார நூல்கள்:
———————–
1.ரிக் வேதகால ஆரியர்கள் -ராகுல் சாங்கிரித்தியாயன்
2.வரலாறும் வக்கிரங்களும்-ரொமிலா தாப்பர்
3.சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிடம் அடித்தளம்-ஆர்.பாலகிருஷ்ணன்
4.வேங்கை நங்கூரத்தின் ஜுன் குறிப்புகள்-தமிழ்மகன்
5.ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை-நிவேதிதா லூயிஸ்
6.கீழடி-தொல்லியல் துறை,தமிழ்நாடு
புத்தகம்:ஆதனின் பொம்மை
ரூபாய்:80
பக்கங்கள்:96
பதிப்பகம்:வானம்
ஆசிரியர்: உதயசங்கர்