வாழ்த்தல் சீரற்றதுதான்

பறவை பரவலாக ஒரு வகையில் இயற்கையான ஒரு சுதந்திரத்தின் குறியீடாக இன்றளவிலும்  பேசப்படும் ஒரு உயிர்.  இயலாதவற்றின் மீது குறிப்பாக சில நிமிட சுதந்திரத்தின் மீது ஒரு ஆசை மனிதனுக்கு அதனை சார்ந்ததே பறக்கும் பறவைகள் மீதான அபிப்பிராயம் பெரும்பாலானோரின்  கண்ணோட்டமும். 

இந்த ஆஸ்ட்ரிஜ் தெரியுமா ஆஸ்ட்ரிச்…. இந்த வசனத்துக்கு பொருத்தமாக 2001ல் வெளியிடப்பட்ட ஒரு ஆவணப்படம்“விங்டு மைக்ரேசன்” ஸ்சாக் பெரான் என்பவரால் இயக்கப்பட்ட இப்படம் பலவித விமர்சனங்களுக்கு உள்ளாகியது.   உலகின் ஏழுகண்டங்களையும் சுமார் 40 நாடுகளையும் கடந்து குளிர்காலங்களில் இடம்பெயரும் பல்வேறுபட்ட பறவைகளின் பயணத்தையும் அவை மேற்கொள்ளும் பல்வேறு விதமான இடையூறுகளையும் சுமார் நான்கு வருடங்களாக பின்தொடர்ந்து காட்சிபடுத்தியுள்ளனர்.

பறவைகளை கொண்டாடி காப்பாற்றி நிலைநாட்டுவதே கடமை எனும் மனித மனபோக்காளிகளை   புறந்தள்ளி (முழுமையாக இல்லை) எடுக்கப்பட்ட ஒரு முயற்சி.

 தன்னால் புரிந்துகொள்ளப்படமுடியாத பல்வேறு உயிர்களை காவியப்படுத்துவதும் காப்பாற்றுவதும் நம்மிடையே ஒரு இயல்பான இடத்தைப்பெற்றுள்ளது. முதன்மைப்படுத்திக்கொண்டு மேன்மையாக வெளிப்படுத்திக்க வேண்டு மென்பது மனித குலத்தின் மாண்பாம், படத்தின் ஆரம்ப காட்சி ஒரு சிறுவனால் வலையில் சிக்கிக்கொண்ட வாத்தொன்று விடுவிக்கப்படுகிறது. அது ஒரு தொடர்ச்சியாக படத்தின் இறுதி வரையும் கொண்டு செல்லப்படுகிறது (மனிதன் வரும் அனைத்து காச்சிகளையும் தவிர்த்திருக்கலாம்). 

வாழ்க்கை அவ்வளவு குரூரத்தையும் தாங்கித்தான் வருகிறது என்பது மறுக்கப்படமுடியாத நிதர்சனம். எவ்வளவுதான் காவியப்படுத்தி வாழ்ந்தாலும் வாழ்க்கை கடினமானதுதான் என்பதை சீரற்ற காட்சிகளாக படமாக்கப்பட்டுள்ளது. அப்படி காட்சிபடுத்தப்பட்ட கணங்கள் அழகானவை நிறைய கதைகள் பேசுபவை சில கனத்தும், சில உடலற்றவை போல பறந்துபோகும்படியான உணர்வையும் தருபவை. பெரும்பாலும் பேசப்பட்ட ஆரம்ப காட்சி சிறுவனின் உதவியில்லை இதோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது பிறந்தவுடன் கொல்வது குரூரம் இல்லையா? அது இன்னொரு குஞ்சின் முட்டையாக இல்லாமல் கூட இருக்கலாம் அதன் ஓட்டையே அது கீழே தள்ளியிருக்கலாம் அல்லது முழுமையாக வசப்படாத காட்சிகளில்   நான் கற்பனையே கலந்திருக்கலாம் யாருக்கு தெரியும். இதன்மீதான தெளிவான காட்சி இல்லை எனவே எதுவும் சாத்தியம்தான். 

 பெரும்பாலும் பறவைகளின் தொலைதூர பயணங்கள் எப்பொழுதும் தனித்திருப்பதில்லை. இருப்பினும் தவிர்க்கமுடியாத நிசப்சத்தையும் அழைக்கா வெறுமையையயும் நொடிப்பொழுதில் தந்துசெல்லும் வல்லியது. பயணத்தில் தவிர்க்கமுடியாததும் அவையே. வெறுமையும், கைவிடப்படுதலும், தனிமைப்படுத்தப்பட்டு இறத்தலும் அதில் முக்கிய அலங்காரங்கள் தவிர்க்கமுடியாதவை. எப்படி இருக்கும் தெரியுமா? மிகவும் அமைதியுடன் அழகாக. இப்படி.

தண்ணீரில் ஏற்ப்படுத்தப்பட்ட அதிர்வலைகளுக்கும் இறப்பிற்கும் எல்லா உயிர்க்கும் எந்த சம்மந்தமும் கிடையாது தொடுதலில் அதிர்தல்போல் உடனே அடங்கிவிடும் தன்மையது. அக்கணம் தோன்றுவது அழிவதற்குமட்டுமே  பிடித்து வைத்து அழகுபார்க்க பறக்கும் பறவைக்கு தேவையும் இல்லை அவை பொழுதுபோக்காளிகளும் இல்லை பிடித்துவைத்தும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

450 பேர் கொண்ட குழு, பல்வேறுபட்ட புகைப்பட இயந்திரங்கள் பயன்படுத்தி  உருவாக்கியுள்ளனர் சிறுகுறு விமானங்கள் பலூன்கள் போன்ற பறவை ஆர்வலர்களுக்கு மென்மையான வியப்பூட்டும் காட்சிகள் பல. குரூரங்களையும் கொலைகளையும் சேர்த்து. கண்டங்களை தாண்டும் ஒவ்வொரு பறவையும் வேறெந்த உயிரினத்தைக்காட்டிலும் அதிகமாக மனிதனின் சங்கடங்களையும் பார்த்து  செல்கின்றன. 

  பறவைகளின் இடம்பெயரும் பாதையில், பயணம், காதல், புணர்ச்சி, அடுத்த தலைமுறை அதற்கு உணவளித்தல் பாதுகாத்தல் மறுபடி அதன் கதை சுழற்சியில். இதிலும் எந்த சாகசங்களும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்று வாழ்வியலையும் உணர்வலைகளையும் கடத்துவதாக ஓர் உணர்வு. 

இங்கு அழகு இன்னொரு உயிரை ஈன்ற இயலா சமூகத்துக்குரியது, ஈன்றப்பெறுபவர்களுக்கு இல்லையென்றாலும் ஒன்றும் பெரிதாக ஆகிவிடாது. ஒரு காட்சி அதில் ஒரு பென்குயின் தன் பெற்றோர்களின் கண்முன்னே இழுத்துச்செல்லபட்டு கண்முன்னே கதற பிய்த்து தின்னப்படுகிறது, தின்னும் பறவை தன் குஞ்சுக்கு உணவளித்து காப்பாற்ற வேண்டும் என்ன செய்வது இருப்பினும் இயலாமை எவ்வளவு அலாதியானது அல்லவா. அங்குணரப்படும் இயலாமையோ ஹே ராம் படத்தில் கமலின் முதல் மனைவி கொல்லப்படகனநேரம். 

இயற்கையில் இழப்புகளும் இயலாமையும் எவ்வளவு எளிதாக விழுந்துசெல்கின்றது. தன்னால் முடிந்த தானியங்களை உணவளிக்கும் பாட்டியியை மறுத்து ஓடும் அதே பறவைகள் வறட்சி காலத்தில் மட்டும் நெருங்கி உணவெடுக்கும் பண்பை எதில் சேர்க்க?  தேவையிலான தைரியத்திலா! உயிர்பிழைக்கும் பசியிலா!. இங்கு பயத்தை தயக்கத்தை பசி தின்றுவிட்டதில்லையா. மனிதன் மட்டும் இதில் எங்கு வேறுபட்டுவிட்டான்.  ஆரம்பத்தில் குருவி குஞ்சும், சேற்றில் மாட்டிய சக பயனாளியை தனியே விடுத்து போகும் பறவை கூட்டமும், உயர பறந்துகொண்டிருந்த பறவகளை சுட்டு வீழ்த்தும் வேட்டையாளர்களின் மனமும், வேறொரு குழந்தையை கொன்று தன் குழந்தைக்கு உணவளிக்கும் பெற்றோரின் உயர்ந்த அறமும், பிடிபட்ட கூட்டிலிருந்து தன்னைத்தானே விடுவித்துக்கொண்டு பறந்து செல்லும் கிளியின் அப்போதைய சுதந்திரமும், வெவ்வேறு இன பறவைகள் ஒன்றாக  இணக்கமாக பார்க்கும் காட்சியும் ஏனோ ஒரே கோட்டில் நிற்கின்றன. 

பிரதிபலிக்கும் ஆட்டங்களும், கனநேர சுதந்திர இறக்கைகளும், தனிமையும் இறப்பும் இயலாமையும் அற்புதமானவையோ உனக்கு மட்டும் நடப்பவையில்லை என்பதையா? அனைத்தும் தனித்தியங்கிகொண்டுதான் இருக்கிறன மனிதனைத் தவிர.

 எல்லாம் பிழைப்புக்காகத்தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *