மகிழ்வாக்குவோம் மாதவிடாய் நாட்களை

மாதவிடாய் காலத்தில் தோன்றும் மனஅழுத்தம்

அந்த மூன்று நாட்கள் என எளிதாக சொல்லிவிடலாம் ஆனால் பல பெண்களுக்கு உடலளவிலும், மனதளவிலும் நரகமாகவே கழிகிறது.

எளிதான விசயங்கள் கூட அந்நேரத்தில் பெரிய பூதாகரமாக கையாளத் தோன்றும் கடினத்தை இந்த மாதவிடாய் தருகிறது. 

பெண்களின் மாதாந்திர மாதவிடாய் சுழற்சி நாட்களில், சில ஹார்மோன்களின் அளவுகள் உயரும் மற்றும் குறையும்.  இந்த ஹார்மோன் அளவுகள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும்  பாதிப்பை செய்கிறது. உடல் ரீதியாக 

தசை பிடிப்புகள், முதுகுவலி, சோர்வு, அதீத அசௌகரியம் போன்றவை ஏற்படுகின்றன.

 இன்னும் சிலருக்கு வலி மிகவும் மோசமாக அமைந்துவிடுகிறது. இதனால்  ஒவ்வொரு மாதமும் வேலை அல்லது கல்வி நாட்களை அவர்கள் இழக்கிறார்கள்.மேலும்  கடுமையான இரத்தப்போக்கு அனுபவிக்கிறார்கள், அது அவர்களை அதீதமாக சோர்வடையச் செய்கிறது. 

மாதவிடாய் காலத்தில் தோன்றும் மனப்பிரச்சனைகள்:

“கோபம், எரிச்சல்.

கவலை மற்றும் பீதி

*மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணங்கள்.

*கவனம் செலுத்துவதில் சிரமம்.சோர்வு மற்றும் குறைந்த ஆற்றல்.

 “பசி அல்லது  பசியற்ற உணர்வு,தலைவலி,தூக்கமின்மை.

பிரச்சனைகள் எதிர்கொள்ளும் முறைகள்: 

 தற்போதைய நவீன அறிவியல் யுகத்தில் மாதவிடாய் சுழற்சியை துல்லியமாக கணிக்கும் இணையக் காலண்டர் ஆப்கள் வந்துவிட்டது. அதில் மாதவிடாய் நிகழ்ந்த முதல் தருணத்தின் தேதியைக் குறித்தால் போதும் அடுத்த சுழற்சியின் தோராயமானத் தேதியை நமக்கு நினைவூட்டும். இதனால் சில முன்னேற்பாடுகளையும் திட்டமிடலையும் நம்மால்  வகுக்க முடியும்.

*மனது தடுமாறுகையில் அறிவின் துணைக்கொண்டு மீண்டும்  எழ முடியும் என்பது தானே  மனிதக்கோட்பாடு அதன் படி மாதவிடாய் சுழற்சியில் நேரும் உளவியல் குறைபாடுகளை தெரிந்துக்கொண்டு அதன்படி செயல்படலாம்.

*இரத்தப் போக்கு காலத்தில் வளர் இளம்பெண் குழந்தைகள் அதிக மன உளைச்சல் அடைகிறார்கள் பெண் ஆசிரியர்கள் இது பற்றி மாணவிகளிடம் பேசலாம்.

*பெண்கள் தங்கள் கைப்பைகளில்,மாணவிகள் தமது ஸ்கூல் பேக் மற்றும் ஆசிரியர்களும் தங்கள் வசம் நாப்கின் பேடுகளை கைவசம் வைத்திருந்து அவசரக்காலங்களில் பெண்களோடு ஒருவருக்கொருவர் பகிர்வதை பழக்கமாக்கலாம். 

*ஆண்களும் வீட்டுப்பெண்களின் மன உளைச்சல் காரணமறிந்து கொஞ்சம் அனுசரித்துச் செல்வதன் மூலம் பெண்களும் மனதளவில் உடலளவில் நிம்மதி கொள்ள முடியும்

*பிரச்சனைக்கான தீர்வைத் தேடி வெவ்வேறு விதத்தில்  யோசிக்கும் போதும் அழுத்தம் குறையும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. 

*வலிகளை சந்திக்க நேர்கையில் மட்டுமே  “நம்மால்  சமாளிக்க முடியும்’ எனும் நேர்மறை எண்ணங்களை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.மன அழுத்தத்தைக்கூட நம் மனதின் வலிமையால் திடமான ஆற்றலாகவும் மாற்றிவிட முடியும்.

*பிரச்சனைகள் எதிர்கொள்ள நேரும் போது தீர்வுக்கான திட்டமிடலை வகுக்கத் தொடங்க வேண்டும் 

*மனது தடுமாறுகையில் அறிவின் துணைக்கொண்டு மீண்டும்  எழ முடியும் என்பதே மனிதக்கோட்பாடு 

2 thoughts on “மகிழ்வாக்குவோம் மாதவிடாய் நாட்களை

  1. continuously i used too reawd smasller posts that as well clear thrir motive, annd
    that iis also hapoening with this articdle which I am rreading now.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *