14.01.2021 அன்று கல்வியாளர் திரு.சீனி.கார்த்திகேயன் அவர்களால் நிறுவப்பட்டு தமிழக அரசின் சமூக கூட்டமைப்பில் முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்பு மகிழம் தமிழ்ச் சங்கம்.
தமிழ் மொழியை, அதன் படைப்பை தமிழக கலைகளை இலக்கியங்களை அடுத்த தலைமுறையினருக்கு கடத்தவும் உலகம் முழுக்க கொண்டு செல்லும் நோக்குடன் செயல்படவே இச்சங்கம் இயங்க துவங்கியது.
முதல் நிகழ்விலே நூற்றுக்கும் மேற்பட்ட பல கல்லூரியை சார்ந்த மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஓவியப் போட்டி, கவிதைப் போட்டிகளை நடத்தி மாணவர்களுக்கான பரிசளிப்பை நிகழ்த்தி அவர்களுக்கான படைப்பு ஆர்வத்தை ஊக்கப்படுத்தினோம்.
கொரோனா பெருந்தொற்றில் இணைய வழியில் தமிழ் தத்துவவியல் சார்ந்த கூட்டமும் மொழிபெயர்ப்பு நூல்கள் குறித்த உரையாடல்களும் நடைபெற்றது. அதன் பிறகு செம்மண் என்ற தலைப்பின் கீழ் தமிழர்களின் தாவர வழக்காறுகள் என்ற புத்தகத்தை முன்வைத்தும் “சார்பாட்டை” திரைப்படத்தை பற்றிய விவாதக் கூட்டமும் நடைபெற்றது.
மாணவர்களை வழி நடத்தும் ஆசிரியர்களுக்கான விழாவாக அசிரியர் தின விழாவை முன்வைத்து “கல்வி சூழலில் மாணவர்கள் , ஆசிரியர்களின் பொருளாதார உளவியல் நெருக்கடிகளின் பிரச்சினைகளை உள்ளடக்கிய பொருண்மையில் பல ஆசிரியர்களிடம் இருந்து கட்டுரை பெறப்பட்டது அவற்றில் தேர்வு செய்யபட்ட முதல் மூன்று பரிசு பெற்ற கட்டுரையாளர்களுக்கு தங்க நாணயமும் கலந்துக் கொண்ட அனைவருக்கும் வெள்ளி நாணயமும் வழங்க பட்டது. மொத்த கட்டுரையையும் தொகுத்து புத்தகமாக வெளியிடப்ட்டது.
அதே நிகழ்வில் சிறந்து விளங்கிய பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்து நல்லாசிரியர் விருதும் கொடுத்து கௌரவப்படுத்தப்பட்டது. தமிழர்களின் மரபார்ந்த மருத்துவ அறிவையும் அனுபவத்திரட்டையும் கொண்ட எழுத்தாளர் முத்து நாகு எழுதிய குப்பமுனி நூல் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சமகால உணவு, வாழ்வியல் மருத்துவச் சூழல் குறித்து மருத்துவர் விக்ரம் குமார் அவர்களும் பேசி சிறப்பித்தார். எழுத்தாளர் முத்துநாகு அவர்களும் மருத்துவ அறிவு / அனுபவத்தை பற்றி ஆராய்ந்து உரையாற்றினார்.
அதன் பிறகு மொழிபெயர்ப்பாளர் சதீஷ் வெங்கடேசன் மொழிபெயர்த்த மலைகலும் எதிரொலித்தன என்ற நூல் வெளியீடும் அறிமுகம்
கவிஞர் நா.பெரியசாமி அவர்கள் எழுதிய கடைசி பெஞ்ச் சிறார் நூலை அறிமுக படுத்தி பேச பள்ளி மாணவர்களும்
இசையமைப்பாளர் நிரஞ்சன் பாபு அவர்கள் இசையமைத்த திருப்புகழ் பாடல் வெளியீடும் நடைபெற்றது.
அதன்பிறகு பத்துக்கு பத்து என்ற தலைப்பின் கீழ் பத்து சிறார் நூல்களை முன்வைத்து பத்து நபர்கள் உரையாற்றினார்.
இக்கூட்டத்தில் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக பங்குபெற்றனர்.
அதன் பிறகு யாவரும் கேளீர் என்ற தலைப்பின் கீழ் மூன்றுநாள் மொழிபெயர்ப்பு பயிலரங்கம் நடைபெற்றது இப்பயிலரங்கினை மூத்த எழுத்தாளர் கமலாலயன்
எழுத்தாளர் கே.வி.ஜெய ஸ்ரீ
எழுத்தாளர் எஸ்.ஜே.சிவசங்கர்
எழுத்தாளர் அசதா
பத்திரிக்கையாளர் அ.தா.பாலசுப்பிரமணியம் ஆகியோர் மூன்றுநாள் பயிலரங்க வகுப்பை நடத்தி மாணவர்களிடமிருந்து படைப்புக்களைக் கொடுத்து மொழிபெயர்க்க சொல்லி அவற்றில் 30 மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர் அவர்களின் படைப்புகள் புத்தகமாக வெளிவரயிருக்கிறது என்பது குறிப்பிட தக்கது.
மேலும் பல முன்னெடுப்புக்களை அதிலும் குறிப்பாக அடுத்த தலைமுறையினர்களின் கையில் கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், அறிவியல் சார்ந்த செயல்களை அறிவை கொண்டு செல்லும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.