பறவைக்கான புத்தகங்கள்

பறவைகளை பற்றி அறிந்துக் கொள்வதற்கான புத்தங்களின் பட்டியல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில்  விடுபட்டுள்ள புத்தங்களும் இருக்கலாம் அவற்றை நீங்கள் பின்னுட்டத்தில் தெரியப்படுத்தலாம்.

1.புத்தகத்தின் பெயர்: ஊர்ப்புறத்துப் பறவைகள்

  • ஆசிரியர்: கோவை சதாசிவம்
  • பதிப்பகம்: வெளிச்சம் வெளியிடு 
  • புத்தக சிறுகுறிப்பு: நம் ஊரை சுற்றி இருக்கும் பறவைகளை ஒருசேர படிப்பதற்கும் மற்றும் புதிதாக பறவை நோக்குபவர்கள் இந்த புத்தகத்தில் இருந்து தொடங்குவது சிறந்ததாக இருக்கும். மொத்தம் இருபத்து ஐந்து பறவைகள் படங்களுடன் கட்டுரைகள் இருப்பது படித்த உடன் சுலபமாக நினைவில் வைத்துகொள்ள முடியும்.. சிறிய புத்தகம் என்றாலும் பறவைகள் பற்றி மிக அரிதான தகவல்களை அறிந்துகொள்ள உதவுகிறார் ஆசிரியர்.

2.புத்தகத்தின் பெயர்: தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்

  • ஆசிரியர்: ஏ.சண்முகானந்தம், முனைவர் சா.செயக்குமார்
  • பதிப்பகம்: எதிர் வெளியீடு
  • புத்தக சிறுகுறிப்பு: தனிப்பட்ட ஒர் உயிரினம் அல்லது ஒரு பல்லுயிரியச் சூழல் தொகுதியைக் காக்க, அப்பகுதியின் சூழலியல் தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை, இனப்பெருக்கம் இரைதேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பதால், ‘பறவைகள் அல்லது உயிரினக் காப்பிடங்கள் ’என்ற பெயர் பெற்றன. இதன் அடிப்படையிலேயே அழிவுக்குள்ளான உயிரினங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு உலகளவில் பெரும்பாலான நாடுகள் , ‘காப்பிடங்களை உருவாக்கி, அவ்வுயிரினத்தின் வாழ்வை மட்டுமன்றி, அச்சூழலின் பல்லுயிர்ப் பெருக்கத்தையும் பாதுகாத்து வருகின்றன. அப்படிப்பட்ட தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்களை பற்றி விவரிக்குறது இந்த புத்தகம்

3.புத்தகத்தின் பெயர்: பறவைகளும் வேடந்தாங்கலும்

  • ஆசிரியர்: மா.கிருஷ்ணன்
  • பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்
  • புத்தக சிறுகுறிப்பு: எந்தப்பறவையும் உணவு தேடி மட்டும் பறப்பதில்லை. பறப்பது சுகம், பறப்பது கொண்டாட்டம், பறப்பது தியானம், பறப்பது வாழ்க்கை. பறவைகளைப் பற்றி வாசிப்பதோடு நில்லாமல் அவைகளை ஆவணப்படுத்துவதும், காப்பாற்றுவதும் நமது கடமை. நம் வீட்டுக்கருகில் திரியும் பறவைகளைக் கூடப் பார்க்க நேரமில்லையென்றால் சங்கடந்தான். ‘பறவைகளோடு இயைந்து வாழும் மகிழ்ச்சி பெருகும் வாழ்வை அவாவும் உள்ளங்களுக்கு ‘பறவைகளும் வேடந்தாங்கலும்’ புத்தகத்தில் உள்ள மா.கிருஷ்ணனின் எழுத்துகள் நெருக்கமானவையாக அமையும் .

4.புத்தகத்தின் பெயர்: வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள்

  • ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம்
  • பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
  • புத்தக சிறுகுறிப்பு: பறவைகள் மட்டுமின்றி, பலவித பாலூட்டிகள், விலங்குகள், வண்ணத்துப் பூச்சிகள், மீன்கள் எனப் பல உயிரினங்கள் உணவு இருப்பிடம், வாழிடப் பாதிப்பு எனப் பல்வேறு காரணங்களுக்காக இடம்பெயர்ந்தாலும், பறவைகளின் இடம்பெயர்தலே, முழுமையான ‘வலசை’யாக அவதானிக்கப்படுகிறது. சூழலுக்கும், மற்ற உயிரினங்களுக்கும், மனித சமூகத்திற்கும் நன்மை பயப்பதாகவே பறவைகளின் வலசை அமைந்துள்ளது. மனிதனால் இன்னமும் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியாத புதிர்களை உள்ளடக்கியதாகவும் வலசை விளங்குகிறது. வலசைப் பறவைகளின் வாழ்விடச் சிக்கல்கள் பற்றி விவரிக்குறது இந்த புத்தகம்.

5.புத்தகத்தின் பெயர்: பறவைகள் (அறிமுகக் கையேடு)

  • ஆசிரியர்:
  • பதிப்பகம்: க்ரியா வெளியீடு
  • புத்தக சிறுகுறிப்பு: மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த வனஉயிர்ப் புகைப்படக்காரர்கள் எடுத்த புகைப்படங்கள் இடம்பெற்றிருப்பது இந்தக் கையேட்டின் மற்றுமொரு சிறப்பு.

6.புத்தகத்தின் பெயர்: தமிழகத்தின் இரவாடிகள்

  • ஆசிரியர்: ஏ. சண்முகானந்தம்
  • பதிப்பகம்: தடாகம் வெளியீடு
  • புத்தக சிறுகுறிப்பு: பொதுவாக இரவாடிகள் என்று சொல்லப்படும் ஆந்தை, தேவாங்கு, முள்ளம்பன்றி, கூகை போன்றவை சாதாரண மக்களின் பார்வையில் கெட்ட சகுணமாகவும் பார்க்கக்கூடாத உயிரினமாகவும் கருதப்படுகிறது. ஆனால் இரவின் உலகம் மிகவும் வியப்பிற்குரியது. எல்லா உயிரினங்களும் சுற்றுச்சூழல் கண்ணிக்குள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு இரவு பகல்கள் இல்லை. ஒன்று அழிந்தாலும் சமநிலை குலைந்துவிடும். இதைக் கவனமாகக் கொண்டு ஆசிரியர் சண்முகானந்தம் இரவில் வலம்வரும் உயிரினங்கள் அனைத்தையும் புகைப்படங்களுடன் முறையாகத் தொகுத்துள்ளார்.

7.புத்தகத்தின் பெயர்: புள்ளினங்காள் (பெயர் சொல்லும் பறவைகள்)

  • ஆசிரியர்: முனைவர் வெ. கிருபாநந்தினி
  • பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
  • புத்தக சிறுகுறிப்பு: இந்தப் புத்தகம் நம் மண்ணின் பறவைகள் பற்றிய அற்புதமான ஆவணம்,. பறவையியல் அறிஞர்கள் பலரை நமக்கு தெரியாத வரலாற்று சான்றுகளுடன் விவரிக்கும் சுவாரசியமான நடை நம்மை வியக்க வைக்கிறது. பள்ளி – கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

8.புத்தகத்தின் பெயர்: அதோ அந்தப் பறவை போல

  • ஆசிரியர்:  ச.முகமது அலி
  • பதிப்பகம்: வாசல் படைப்பகம்
  • புத்தக சிறுகுறிப்பு: பேராச்சரியங்களும் புதிர்களும் நிறைந்த பறவையியல், முகமது அலி அவர்களின் எழுத்தின் வழியாக முதல்முறையாக நமக்குக் கிடைக்கிறது. ”அதோ அந்தப் பறவை போல…” பறவையியலைப் பயில ஒரு ஒளிரும் மாணிக்கம், பொருளற்ற கூப்பாடுகளிலிருந்து விலகிய அறிவார்ந்த முயற்சிகளின் வெளிச்சம்.

9.புத்தகத்தின் பெயர்: ஆகுபா -ஆந்தை-குரங்கு-பாம்பு உடன் சந்திப்பு

  • ஆசிரியர்:  Dr.வி..விக்ரம் குமார்
  • பதிப்பகம்: கிரௌ நெஸ்ட்
  • புத்தக சிறுகுறிப்பு: ஆ…கு…பா… ஆந்தைகள், குரங்குகள், பாம்புகள்… இவற்றின் முதல் எழுத்து! அலறல்… அலப்பல்… சீறல் ஒலி எழுப்பும் உயிரினங்களைத் தேடி.
    கடந்த ஐந்து வருட பயணங்களில் ஆந்தைகள், குரங்குகள் மற்றும் பாம்புகளோடு கிடைத்த அனுபவ ஆவணம், மேலும் காடுகளில் மகிழ்ந்து திரிந்த போது எதிர்பாராமல் தென்பட்ட ஆ.கு.பா.களை படம் பிடித்த மற்றும் பின் தொடர்ந்த அனுபவங்களை இந்நூலில் காணலாம்.

10.புத்தகத்தின் பெயர்: சிட்டு குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

  • ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்
  • பதிப்பகம்: தடாகம் வெளியீடு
  • புத்தக சிறுகுறிப்பு: செல்போன் டவர்கள் அதிகம் வந்த பிறகுதான் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம் .அது உண்மையா? இல்லை என்று சொல்லும் இந்த புத்தகம் . அதற்கான உண்மையான காரணத்தைப் பட்டியல் போடுகிறது.சிட்டுக் குருவிகளைப் பற்றிய நுணுக்கமான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் அழகிய படங்களுடன் இருக்கின்றன.

11.புத்தகத்தின் பெயர்: இறகுதிர்காலம்

  • ஆசிரியர்: கோவை சதாசிவம்
  • பதிப்பகம்: குறிஞ்சி பதிப்பகம்
  • புத்தக சிறுகுறிப்பு: மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் இக்கட்டுரைகள் ‘பயணங்களிலும், கள அனுபவங்களிலும் வாய்த்தவை. கோவை சதாசிவத்தின் எழுத்துக்களில் வெளிப்படும் உணர்வும், ஆக்கப்பூர்வமான தகவல்களும் அசலானவை. அதனால்தான் வாசிப்போரை மனதளவில் பாதிக்கிறது. மாற்றம் காணத் தூண்டுகிறது.

12.புத்தகத்தின் பெயர்: உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி

  • ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன்
  • பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
  • புத்தக சிறுகுறிப்பு: சாலிம் அலியின் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வுகள், சுவாரசியங்கள் ஒரு கதையின் திருப்பங்களுக்கு நிகரானவை. சாலிம் அலியையும் அவருடைய பணியையும் நாம் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுக்கப்பட்டதே  இந்த நூல்.

13.புத்தகத்தின் பெயர்: இயற்கையைத் தேடும் கண்கள்

  • ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன், குமரன் சதாசிவம்
  • பதிப்பகம்: பயில் பதிப்பகம்
  • புத்தக சிறுகுறிப்பு: நம்மில் பலரும் பார்த்திருக்க வாய்ப்புள்ள சிட்டுக்குருவி, மயிலைப் பற்றி மட்டுமல்லாமல் சோளக்குருவி, செண்பகம், சங்குவளை நாரைகள் போன்ற தமிழக பறவைகளைப் பற்றிக் கூடுதலாக அறிந்துகொள்ளலாம். இயற்கையைத் துப்பறிவதற்கான சிறந்த வழிகாட்டியாக இந்தப் புத்தகம் திகழும்.

14.புத்தகத்தின் பெயர்: காக்கைச் சிறகினிலே

  • பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
  • புத்தக சிறுகுறிப்பு: பறவைகளின் வண்ணமயமான உலகுக்குள் நுழைய வேண்டுமா? இதோ ஒரு கையடக்க வழிகாட்டி! ஒரு பறவை எப்படித் தோன்றுகிறது? எப்படி உண்ணவும் உறங்கவும் பறக்கவும் கற்றுக்கொள்கிறது? எப்படிச் செய்திகளைப் பரிமாறிக்கொள்கிறது? எப்படித் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது? எவ்வாறு கூடு கட்டுகிறது? இறக்கை பறப்பதற்கு மட்டும்தான் உதவுமா? ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு விதமான அலகு இருப்பது ஏன்? பறவைகள் எங்கிருந்து இவ்வளவு அழகிய வண்ணங்களைப் பெறுகின்றன? பிரபஞ்சம், உயிர்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி என்று மிக விரிவான பின்னணியில் பறவைகளின் கதையை விவரிக்கிறது இந்நூல். ஒரே நேரத்தில் அறிவியல் களஞ்சியமாகவும் அழகியல் படைப்பாகவும் இது மிளிர்வதைக் காணலாம். ஒரு பறவையாக இருப்பது என்றால் என்ன என்பதை இவ்வளவு நுணுக்கமாகவும் இவ்வளவு சுவையாகவும் விவரிக்கும் இன்னொரு நூல் தமிழில் வந்ததில்லை. திருச்சி தேசியக் கல்லூரியில் விலங்கியல் துறைத் தலைவராகப் பணிபுரியும் கோகுலாவின் இந்நூல் பறவையியல், சூழலியல், அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் கொண்டவர்களுக்குப் பெரும் திறப்பாக அமையும்.

15. புத்தகத்தின் பெயர்:  கழுகுகளின் காடு

  • பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
  • புத்தக சிறுகுறிப்பு: வன விலங்குகள்மீதும் சூழலியல்மீதும் ஆர்வம் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவசியம் வாசிக்கவேண்டிய புத்தகம். சலசலத்து ஓடும் ஆற்று நீரைக் கண்டு மயங்கி நிற்கும்போது, தொலைவில் ஒரு யானை பிளிறும் சத்தம் கேட்கும். அதை ஊன்றி கவனிக்கும்போது சிறுத்தையின் குரல் உலுக்கும். சில நிமிடங்களில் ஏதோ ஒரு விலங்கு நீர் அருந்த வரும். ஆந்தைகள் அலறும். காட்டெருமை எதையோ துரத்திக்கொண்டு ஓடும். வானத்தில் ஒரு கழுகு வட்டமிடத் தொடங்கும். வனம் ஒரு புதையல். வனம் ஓர் அற்புதம். வனம் நம் வாழ்வின், நம் சிந்தனையின், நம் கனவின் தவிர்க்கவியலாத ஒரு பகுதி. அந்த வண்ணமயமான பகுதியை எளிமையாகவும் அழகாகவும் அறிமுகப்படுத்தும் நூல் இது. காட்டுயிர் சார்ந்த ஆய்வுகளிலும் களப்பணிகளிலும் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வரும் சந்துரு தனது பயண அனுபவங்களின் ஊடாகத் தான் கண்டதையும் கேட்டதையும் கற்றதையும் கதை போல் இதில் பதிவு செய்திருக்கிறார். கழுகுகளின் உலகை இவ்வளவு நெருக்கமாகச் சென்று ஆராயும் இன்னொரு புத்தகம் தமிழில் இல்லை.

16.புத்தகத்தின் பெயர்: திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் அறிமுகக் களக்கையேடு

  • பதிப்பகம்:தி போரெஸ்ட் வெ
  • புத்தக சிறுகுறிப்பு: திருவண்ணாமலைக்கு நான் முதன்முதலில் சென்றது 4 டிசம்பர் 2009இல். இயற்கை பாதுகாப்பு, இயற்கைக் கல்வி, மாற்றுக் கல்வி முதலிய செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் ‘தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட் (The Forest Way Trust)’ அமைப்பின் கோவிந்தா, லீலா, சிவக்குமார், அருண் மற்றும் அவர்களது குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதுதான் வாய்த்தது. அருணகிரி பூங்காவில், அவர்கள் பராமரிக்கும் அந்தப் பகுதியில் இயற்கையாக வளரும் மரக்கன்றுகளின் நாற்றுப்பண்ணையைக் கண்டேன். திருவண்ணாமலை ‘சீசன்’ நேரத்தில் குறிப்பாக அங்கு வருவோர்களால் செயற்கையாகவும், விபத்தாகவும் ஏற்படும் தீயை அணைக்கும் தன்னார்வலர்களையும் அங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பூங்காவில் திருவண்ணாமலைப் பகுதியில் பொதுவாகத் தென்படும் பல பாலூட்டிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மேலும் பல இயற்கையின் விந்தைகளை (அத்திப்பழத்தின் உள்ளே வாழும் அத்திக் குளவியின் வாழ்வியல் விளக்கும் ஓவியங்கள் போன்ற) கடப்பா கல்லில் வரையப்பட்டிருந்ததை வியப்புடன் பார்த்து ரசித்தேன். இவை அனைத்தும் இந்தக் குழுவில் ஒருவரான ஓவியரும், பறவை ஆர்வலருமான சிவக்குமார் தீட்டியவை. பின்னர், மாற்றுக் கல்வியை (Alternative Education) அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வரும் “மருதம் பண்ணைப் பள்ளிக்குச் (Marudam Farm School)” சென்றேன். அங்கு மரத்தின் மீது ஏறும், மண்ணில் விளையாடும், தான் சாப்பிட்ட தட்டை அரப்புத்தூள் கொண்டு தானே கழுவி வைக்கும் மாணவர்களையும் கண்டேன். அன்று கோவிந்தா, சிவக்குமாருடன் அப்பகுதியில் உள்ள பறவைகளைப் பார்த்ததும், ஒரு சிறிய குளத்தில் பல வகையான தட்டான்களையும், ஊசித்தட்டான்களையும் பார்த்து ரசித்ததும் இன்றும் நினைவில் உள்ளன.

2 thoughts on “பறவைக்கான புத்தகங்கள்

  1. Congratulations on publishing your first article !!! I m proud of you man…another face of ARUN SHAYTHRAN🔥🤞. meticulous collection of birds…👏👏👏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *