நவீன தொழிலின் நுட்பமும் தொழில் முனைப்பும்

“All humans are Born Entrepreneurs” 

-Muhammad Yunus.

 தினம் தினம் பிறக்கிறது இந்தக் குழந்தை. இக்குழந்தையோ தனது பல நுட்பமான செயல்களால் இன்றைய நடைமுறை உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அப்படியாக இக்குழந்தையின் நுட்பமான செயல்களின் உதவியோடு இங்கு நாம் தினந்தோறும் நடைமுறை தொழில், வியாபாரங்களில் பல கடினமான விஷயங்களையும் எளிமையாக முடித்துவிட முடிகிறது. பொதுவாக நம் தொழிலில் நாம் அன்றாடம் நடக்கும் வியாபாரம், பணப்புழக்கம், வாடிக்கையாளர்கள் என பலவற்றை கவனித்து தொழிலை  நடைமுறைபடுத்தி வந்தோம். 

நாம் ஒரு கடையை நடத்த வேண்டுமானால் குறைந்த பட்சம் 5*5 சதுரடியளவிலாவது ஒரு இடம் தேவை என்பது கட்டாயம். ஆனால் தற்போதைய தொழில்நுட்பத்தில் அதற்கான கட்டாயத் தேவை இல்லை என்ற சூழலுக்கு மாறி இருக்கிறது. நம் பண்டைய தொழில் முறையில் ஒரு கடை வைக்க வேண்டுமானால் முன்பு கூறியது போல இடம், பொருட்கள், கடைக்கான வேலை ஆட்கள் , கணக்குகளை சரிபாக்க ஒரு குமாஸ்தா என ஒரு சிறுகூட்டு தொகையிலான நபர்கள் தேவைப்பட்டனர். இப்படியாக நாம் பண்டைய முறையில் தொழில் செய்து வந்தோம். அந்த தொழில் முறையில் நாம் பல சிக்கலான விஷயங்களுடன் காலம் கடக்கக் கடக்க இதில் இருந்து சிறிது மெருகேற்றம் பெற்று கணினியின் பயன்பாடு, செயலிகளின் பயன்பாடு என வேலை பளுவினையும்  நேரத்தையும் குறைத்திருக்கிறது. மேலுல் நம் தொழிலின் அடுத்த கட்டம் என்னவென்ற நிலை என்னவென்ற  நினைப்புகள் அற்ற முறையில் நடந்து கொண்டிருந்த பன்டையகால தொழில்முறையில் கைப்பேசி தொழில்நுட்பத்தால் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வீட்டில் இருந்தபடியே கடைக்காரருக்குப் புலனத்தி(what’s app)-ல் ஒரு தகவலாகவோ அல்லது குறுஞ்செய்தியாகவோ அனுப்பிவிட்டால் கடைக்காரர்கள் அதை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே அனுப்பிவிடுகின்றனர். 

இப்படியாக ஒரு தொழில்  வளர்ச்சியும் வியாபாரமும் பெருகுகின்றது. காலப்போக்கில் தொழில்நுட்பத்தின் அபார வளரச்சி பல விதமான வடிவங்களில் முன்னேற்றம் கண்டது. வணிக ரீதியாக தொழில்நுட்பம் ஒரு தொழிலுக்கான பல வரையறைகளை முறியடித்து ஒரு தொழிலை யார் எங்கிருந்து வேண்டுமானாலும் செய்துக் கொள்ளலாம் என்ற நிலையில் உருவம் பெற்றது. அந்த உருவம் தான் இணையதள வணிகம் இதில் செய்யப்படும் தொழிலும் முறையும் மிகவும் எளிமையாகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. இன்றைய வேகக் கட்டுப்பாடு இன்றி இயங்கி கொண்டிருக்கும் உலகத்தில், நாம் ஒரு பொருளை கடைக்கு நேரடியாக சென்று வாங்குவது என்பது அன்றைய நாளின் மிகப்பெரிய ஒரு பணியாக கருதப்படுகிறது. இந்த சூழலில் இணையதள வணிகம் அன்றாட வியாபாரத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த இணையதள வணிகம் என்பது இன்றைய சமூகத்தில் பெண்களின் பங்களிப்பைப் பெருவாரியாக அதிகரித்துள்ளது. வீட்டில் இருக்கும் பல பெண்கள் தாங்களே ஒரு கூட்டாக இணைந்தோ, தனித் தனியாகவோ தங்களின் தொழில்களை தாங்களே எந்த தயக்கமும் இன்றி செய்து வருகின்றார்கள். முன்பெல்லாம் வேலையின் காரணமாக  குடும்பத்தை விட்டு வெளியூர்களில் வசிப்பவர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் நண்பர்கள், உறவினர்கள் என்று யாருக்கேனும்  ஒரு பொருளை பரிசளிக்க வேண்டுமெற்றால் அவர்களை நேரில் பார்க்கும் பொழுது தான் தரமுடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இன்றைய நிலையில் ஒருவர் மற்றொருவருக்கு எந்த இடத்திலிருந்தும் வாங்கித் தர முடிகிறது.இந்த  தொழில் நுட்பம் இன்றைய வணிகத் துறையில் பல நவீன மாற்றங்களையும் , பரிமாணங்களும் தினம் தினம் வரவுகளாக தந்துக் கொண்டே இருக்கின்றன.

நவீன தொழில்நுட்பம், தொழில்முனைப்பு என்ற எண்ணம் கொண்டவர்களின் கைகளுக்கு செல்லும் போது அந்தகைய தொழில்நுட்பத்தின் பயனாக ஒரு புதிய பொருள் அல்லது அதன் விளைப் பொருள் சமூகத்திற்கு கிடைக்கும். 

இவற்றால் சமூகப் பொருளாதராம் உயரும். 

பொதுவாக தொழில்நுட்பச் சிந்தனைகள் வெறும் Document தன்மையுடனே நின்றுவிடுகிறது. Theory, Hypothesis என்ற வடிவங்களுடனே நின்றுவிடாமல் அவை பல கோணங்களில் இருந்து வெளிவந்து பயன்பாட்டிற்கு வரவேண்டியிருக்கிறது. 

அப்படி வந்தவைகள் தான் நாம் இன்று அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பல  சாதனங்களைச் சொல்லாம். இவற்றில் சிந்தனையுடன் நின்றுவிட்ட தொழில்நுட்ப சிந்தனைகள், சிந்தித்து விவாதித்து கைவிடப்பட்ட தொழில்நுட்ப சிந்தனைகள் அல்லது பரிசோதனையில் கைவிடப்பட்ட தொழில்நுட்ப சிந்தனைகள் என்று வகைப்படுத்தலாம். 
நடைமுறைச் சிக்கல்களைக் களைத்து பயன்பாடிற்கு வந்த பல தொழில்நுட்பங்கள் அதற்கான நோக்கங்களைக் கடந்து முற்றிலும் வேறு ஒரு பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். தொழில்நுட்பச் சிந்தனையும் தொழில் முனைப்பு எண்ணமும் இணையும் போது அவற்றை முழுமையாக செறிவாக்கி வெளிக் கொண்டுவர முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *