
அனைவருக்கும் தைத்திருநாள் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துகள். புழுதியின் பத்தாவது சிறப்பிதழாக கல்விச் சிறப்பிதழ் வெளிவந்திருப்பதில் மகிழ்கிறோம்.
ஒவ்வொரு இதழும் ஒவ்வொரு பொருண்மையை உள்ளடக்கியதாக வெளிவரும். அந்தவகையில் இம்முறை கல்வி.
கல்வி குறித்தான பார்வையை, சமகால போக்குகளை பல்வேறு தரப்பிலிருந்து பெறும் முயற்சியில் ஈடுபட்டோம். திட்டமிட்டதில் ஒரு சதவிதத்தைக் கூட நாங்கள் எட்டவில்லை என்ற உணர்வே மிஞ்சுகிறது. ஆனாலும் கல்வி குறித்த பார்வையை / தம் எண்ணத்தை புதிதாக பலர் இவ்விதழில் பதிவு செய்திருக்கின்றனர்.
இவ்விதழில் பங்களிப்பை வழங்கிய மேனாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ், ஆய்வு மாணவி ஏ.சரண்யா, முனைவர் ஏர் மகாராசன், பேரா. த.சத்யபிரியா, தளபதி சல்மான்,கவிஞர் நான் ராம், எழுத்தாளர் பஞ்சு மிட்டாய் பிரபு, முனைவர் மான்விழி ரஞ்சித், எழுத்தாளர் விழியன், வழக்கறிஞர்கள் கீதா தேவராஜன் & திவாகரன், முனைவர் வேல. நெடுஞ்செழியன், கவிஞர் கனி விஜய், ஆசிரியர் உ.கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் கமலாலயன், எழுத்தாளர் விஜயராணி மீனாட்சி, எழுத்தாளர் பத்மா அமர்நாத், முத்துகுமரன், முனைவர் நந்தினி ஜெயபாரதி, முனைவர் சின்னத்தம்பி வேலு, பேரா. இரா.பிரவீன்குமார், தீ.பத்மஜோதி, புஷ்பா, பால லட்சுமணன் இசையமைப்பாளர் நிரஞ்சன் மற்றும் இவ்விதழக்கு நேரம் ஒதுக்கி நேர்காணல் வழங்கிய மேனாள் நீதிபதி, நீதியரசர் கே.சந்துரு அவர்களுக்கும் எழுத்தாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களுக்கும் எங்களின் அன்பும் நன்றியும்..
கல்விச் சிறப்பிதழின் உருவாக்கத்திற்கு பெரும் பங்காற்றிய ஆசிரியர் சுஜாதா, சிறகன், தளபதி சல்மான், கவிஞர் வேல் கண்ணன், எழுத்தாளர் பத்மா அமர்நாத், சலாவூதின் இவர்கள் அனைவருக்கும் எனது அன்பும் நன்றியும்…
கு.ஜெயபிரகாஷ்
ஆசிரியர் புழுதி இணைய இதழ் & பதிப்பகம்
திருவண்ணாமலை