குழந்தையின் கேள்விகளுக்கு பதிலளிப்பதே மழலை கல்வி

பள்ளி கல்வி, கல்லூரி கல்வி என்ற படிநிலைகளின் பார்வையும் அதற்கான தேடலில் இருந்து பெற்ற அனுபவங்களை கடந்து. இன்று ஒரு குழந்தையின் அம்மாவாக இருந்து பார்க்கும் போது அவற்றை எல்லாம் விட்டு குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தைக்கு கற்றலுக்கான சூழலை நாம் எப்படி உருவாக்குகிறோம் என்ற கேள்வி மிக அழுத்தமாக எழுகிறது.

  • வீட்டில் இருவரும் பணிக்குச் செல்லும் சூழலால் குழந்தையிடம் சரியாக நேரம் ஒதுக்காமல் இருப்பது.
  • அழுது அடம்பிடித்தால் உடனே கைபேசியில் ஒரு வீடியோவை வைத்து குழந்தையிடம் கொடுப்பது.
  • கூட்டுக் குடும்பம் இல்லாமல் தனிக்குடும்பத்தில் இருப்பதால் அதிக மனிதர்களிடம் பழக்காமல் தனித்து அறையில் வைத்து விடுவது.

மேற்சொன்ன பலகாரணங்கள் பலவற்றை தற்போதைய குடும்ப சமூகம் சந்தித்துக் கொண்டிருக்கிறத்து. இதனால் குழந்தைகள் தான் பாதிக்கப் படுகின்றனர். குழந்தைகளிடம் நேரம் ஒதுக்கும் பெற்றோர்களும், விளையாட இடமும் சூழலும் கிடைக்கும் குழந்தைகள், இவை எதும் கிடைக்காத சூழலில் வளரும் குழந்தைகளிடமும் இருக்கும் வித்தியாசத்தை உணரமுடிகிறது. 

இந்த நிலையில் தான் ப்ளே ஸ்கூல் மழலைப்பள்ளி  அல்லது கிண்டர் கார்டனில் குழந்தகளை சேர்க்கின்றனர். குழந்தைகள் கற்க பல குழந்தைகளுடன் இணைந்து விளையாட  சூழல் அமைவதாக நான் கருதுகிறேன். ஆனால் கல்வி நிறுவனங்கள் இந்த சூழலை வைத்து பணம் சம்பாதிப்பதாக ஒரு தரப்பு பார்வையும் எழுகிறது. எப்படி இருப்பினும் என் மகளோடு சேர்ந்து நானும் கற்க துவங்கினேன். தற்போதைய  சமூகப் பொருளாதார சூழல் அழுத்தம் மழலைப் பள்ளியை நோக்கி நகர்த்துகிறது என்றே நான் கருதுகிறேன். மழலைப் பள்ளி கல்வி மற்றும் குழந்தைகளின் வளர்ச்சியில் முக்கியமான பங்கினை வகிக்கிறது. இது குழந்தைகளின் ஆரம்பகால பருவக் கல்வி நடைமுறைகளுக்கான அடித்தளமாக  அமைய வாய்ப்புள்ளது. அதேசமயம் இதில் சில முரண்களும் இருக்கிறது  என்பதையும் அறிய வேண்டும். இரண்டையும் ஒவ்வொன்றாகப் பார்ப்போம். குழந்தைகளின் மொழித் திறன், எண்ணத்திறன், மற்றும் அடிப்படை அறிவு வளர்ச்சிக்கு இச்சூழல் அடித்தளமாக அமையலாம்,  குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் கலந்துகொண்டு, ஒத்துழைப்பு, நட்பு பகிர்வு போன்ற சமூகப் பழக்கங்களை கற்றுக்கொள்கின்றனர். தனிநபர் நம்பிக்கை மற்றும் திறமைகள் மேம்பட உதவவும், கூட்டாக இயங்கும் சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறு வயதிலேயே கைத்திறன்கள் (Fine Motor Skills) மற்றும் உடல் இயக்கத் திறன்கள் (Gross Motor Skills) மேம்படும்.  புதிய சூழலை உள்வாங்கி, அதனுடன் பொருந்தும் திறமையை வளர்க்கின்றனர். தற்போதைய உலகில் குழந்தைகளுக்கு முறையான தொழில்நுட்ப மற்றும் அறிவியல் அடிப்படைகளை அறிய மழலைப் பள்ளிகள் வழிகாட்டலாம்.  இது அவர்களின் ஆளுமையை வடிவமைக்க உதவுகிறது.  பாடல்கள், கதைகள், மற்றும் உரையாடல் மூலம் பேசும் திறனை வளர்க்கிறது. 

கற்கள், மண் ஆகிய வற்றுடன் இணைந்து விளையாடி, கலைப்பணிகளின் மூலம் கணிதம் மற்றும் அறிவியல் பற்றிய ஆர்வத்தை தூண்டவும், ஒரே வயதுடைய மற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, அனுபவங்களைப் பகிர்வது, குழு செயல்பாடுகளில் ஈடுபடுவது மூலம் நண்பர்களை உருவாக்குவது. சமூக  உறவு மதிப்புக்களை கற்றுக்கொள்வது.  கேளிக்கைகள் மற்றும் விளையாட்டுகளின் மூலம் கவனமுடன் கற்றல் நடைபெற்று வெற்றி/ தோல்வி ஆகிய இரண்டு நிலையையும் கையாலளும் அனுபவத்தை கையளிப்பது. கட்டமைப்பு இல்லாத படிப்பின் முறை குழந்தைகளின் சுதந்திர சிந்தனையை ஊக்குவிக்கிறது. வாசிக்கும் பழக்கம், எழுத்துத் திறன்,  சுற்றுச்சூழலை அறிவது, கணித அடிப்படைகளை மழலைப் பள்ளிகள் ஊக்குவிக்க வேண்டும். கையெழுத்து மற்றும் பொருட்களை கவனமாகக் கையாளும் திறன்களை உருவாக்குவது. குழந்தை-பெற்றோர் உறவை வலுப்படுத்துவதற்கான முன்னெடுப்புக்களை நிகழ்துவது, குழந்தையின் ஆரம்பப் பருவத்தில் அவர்களின் திறன்கள் என்ன என்பதை பெற்றோர்கள்  அவசியம் அறியும் இச்சூழலை அமைத்துத்தர வேண்டும். மழலை பள்ளி என்பது குழந்தையின் முழுமையான மேம்பாட்டுக்கான முதல் படியாகும். இதன் மூலம் குழந்தைகளின் மனதையும், அறிவையும், உடலையும் ஆழமாகத் தொட்டு, நன்கு துவக்கமளிக்கிறது.

குழந்தைகள் தன்னிச்சையாக கற்றுக்கொள்ளக்கூடிய சூழல்களை உருவாக்குவதே அவற்றின் முக்கிய நோக்கமாக அமைய வேண்டும். விளையாட்டுகள், கற்றலின் முக்கியமான அங்கமாக பார்க்கப்பட வேண்டும். குழந்தைகள் தங்களின் சுற்றியுள்ள உலகத்தை விளையாட்டின் மூலம் ஆராய்ந்தே கற்றுக்கொள்கின்றனர்.  குழந்தைகளின் பன்முக திறன்களை (Multiple Intelligences) கண்டறிந்து அவற்றை வளர்க்கும் ஒரு மையமாக செயல்பட வேண்டும்.

உலக அளவில் கல்வியாளர்கள் கல்வித் துறையில் முக்கியமான மாற்றங்களையும், புதுமைகளையும் உருவாக்கும் நோக்குடன் ஆய்வுகள், தத்துவங்கள், மற்றும் செயல்முறைகளின் மூலம் கல்வி முறைக்கு வழங்கி இருக்கின்றனர், அவர்கள் மழலையர் கல்வி குறித்து சொல்லிய சிலவற்றை பார்ப்போம்.

  • “The first six years of a child’s life are the most crucial for their development.” 

by Maria Montessori

  • “Play is the work of childhood.” by Jean Piaget
  • “Kindergarten is a garden for children where they can grow and flourish naturally.” by Friedrich Froebel
  • “Children have multiple intelligences, and early education must nurture all these forms.” by Howard Gardner
  • “The play and learning environment at an early age shapes a child’s personality and future interactions.” by Erik Erikson
  • “A child learns best in an environment where curiosity is encouraged.” by Sugata Mitra

இவர்களின் கூற்றுக்களை விளக்கமாக அவற்றை ஆராய்ந்தால் மழலை கல்வியின் முக்கியத்துவத்தை அறியமுடிகிறது. அதேசமயம் மழலைப் பள்ளிகள் குறித்தான எதிர்மறையான பார்வையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. அவற்றின் உன்மைத்தன்மையையும் நாம் ஆராய வேண்டியிருக்கிரது மழலைப் பள்ளிகள் ஒரு கட்டுப்பாடான சூழலை ஏற்படுத்துவதால், குழந்தைகளின் இயல்பான ஆர்வமும் சுதந்திரமும் அடக்கப்படும் என சிலர் கூறுகிறார்கள். குழந்தைகள் சிறந்த முறையில் விளையாடிக் கற்றுக்கொள்ளும் வயதில் அவர்கள் கட்டமைக்கப்பட்ட பாடத்திட்டங்களில் கட்டுப்படுத்தப்படுகின்றனர், மழலைப் பள்ளிகளில் சில இடங்களில் கல்வி முறை தவறாக முறைகேடாக இருக்கும், இதில் குழந்தைகள் குறைந்த வயதிலேயே அதிகமன அழுத்தத்தைச் சந்திக்க நேரிடுகிறது. பாடங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கு தடையாக அமையலாம். கற்றல் தேவைகள் அவர்கள் வயதிற்கு அதிகமான முறைமைகளில் மையமாக இருப்பது மன அழுத்தத்திற்குச் காரணமாகிறது. பல மழலைப் பள்ளிகளில் சுற்றுப்புறச் சூழல் அல்லது ஏற்பாடுகள் குழந்தைகளுக்குப் போதுமான பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் அளிக்காதிருப்பது, தரமற்ற ஆசிரியர்கள் அல்லது சரியான பயிற்சி இல்லாத பணியாளர்கள் கொண்டு இயங்கப்படுவது. தனியார் மழலைப் பள்ளிகளின் உயர்ந்த கட்டணம் பெற்றோருக்கு சுமையாக இருப்பது. சிறந்த பள்ளிகள் அதிக செலவாக இருப்பதால், சமூகத்தில் பணக்கார மற்றும் வறுமைக்கோட்டின் இடையே மேலும் விரிசல் ஏற்படுகிறது. மழலைப் பள்ளியில் பொதுவாக உருவாக்கப்படும் பாடத்திட்டங்கள் எல்லா குழந்தைகளுக்கும் பொருத்தமாக இருக்காது. குழந்தைகளின் வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகளை போதிய அளவில் கவனிக்காது. சில குழந்தைகளுக்கு இந்தக் கட்டமைப்பு மனஉளைச்சலாக இருக்கும். குறிப்பாக அதிக மாணவர்கள் சேர்க்கப்படும் சூழல்களில், குழந்தைகள் தனிப்பட்ட கவனத்தைப் பெற முடியாமல் போகலாம்.  வீட்டில் பெற்றோர்களின் நேரடி கவனமும் அன்பும் குழந்தையின் மனப்பூர்வ வளர்ச்சிக்கு தேவையானவை அவை தடைபடுவது. குடும்ப சூழல், பள்ளி கட்டமைப்புகளைவிட சிறந்தது என சிலர் கருதுகிறார்கள். மழலைப் பள்ளி எதிர்கருத்துகள் முக்கியமானவை, ஏனெனில் அவை நமக்கு கல்வி முறையின் குறைகளை சுட்டிக்காட்டுகிறது. இந்த விமர்சனங்கள் மூலம் மழலைப் பள்ளிகளை மேலும் மேம்படுத்தவும், குழந்தைகளின் விருப்பங்களுக்கு ஏற்ப அமைக்கவும் முயற்சிக்கலாம்.
நல்ல கல்வி முறையுடன் கூடிய பாசமுள்ள சூழல் அமைப்பு குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையானது என்பதை மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *