திருவண்ணாமலையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து நண்பர்கள் இணைந்து வாரந்தோரும் அவரவர்கள் வாசித்தப் புத்தங்களை முன்வைத்து தொடர் கூட்டங்கள் நடத்தினோம். ஒவ்வொரு வாரமும் பல புத்தகங்கள் சினிமாக்கள் தொடர்பான கருத்துக்களும் அதன்மீதான விவாதங்களும் கூட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியது. அதன் விளைவாக புழுதி அச்சிதழாக வெளிவந்தது. காலத்தின் பல்வேறு மாறுதலுக்கு உட்பட்டு இனி தொடர்ந்து இணைய இதழ்களாக வரவிருக்கிறது.
தென்றலை அழகியல் நோக்குடன் பார்க்கப்படுகிற சூழலில், புழுதி உழைப்பை, இயக்கத்தை வெளிப்படுத்தும் அறிகுறியாக இருக்கிறது. திருவண்ணாமலை நகரிலிருந்து இதழ் இயங்கினாலும் உலகம் முழுவதிலிருந்து கலை, இலக்கியம், அறிவியல், சுற்றுச்சூழல், பொருளாதாரம் என பல தளங்களிலிருந்து படைப்புகளைக் கொண்டுவரும் முயற்சியில் இயங்க உள்ளோம்.
இதுதொடர்பான பல்வேறான விசயங்களையும் விவாதங்களையும் உருவாக்கி பல திறப்புகளை ஏற்படுத்தி தெளிவதற்கான வெளியை
புழுதி இதழ் உருவாக்கும் என்று நம்பிக்கை கொள்கிறோம்.