இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஜனநாயக மற்றும் சோசியலிச கருத்துகளால் கவரப்பட்ட தொலைநோக்கு பார்வை கொண்ட முற்போக்கான இளைஞர் அமைப்பு என்கிற வகையில் ஜனநாயகப்பூர்வமான முற்போக்கான சமூக அமைப்பை உருவாக்கிடவும் ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் போராடக்கூடிய வலுவான இளைஞர் இயக்கத்தைக் கட்டி எழுப்பும் வகையில் இந்த நாட்டில் உள்ள இளம் ஆண்களையும் இளம் பெண்களையும் இந்தியா முழுமையிலும் நன்கு கட்டமைக்கப்பட்ட இளைஞர் அமைப்பின் கீழ் திரட்டும் கடமையை ஏற்றுக் கொள்கிறது.

இளைஞர்களின் சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளில் அதாவது மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மத்திய தர வர்க்கம் ஆகியவற்றைச் சேர்ந்த 14 முதல் 40 வரை வயதுக்குட்பட்ட அனைவரும் இளைஞர்கள் ஆவார்கள் இந்த நாட்டின் மக்கள் தொகையில் அவர்களே  பெரும் பகுதி ஆவர் இளைஞர்களே இச்சமூகத்தின் வேகமும் உற்சாகமும் கொண்ட ஆற்றல் மிக்க பிரிவினர் ஆவர் ஒரு நாட்டின் எதிர்காலம் என்பது சமூகத்தின் இந்தப்  பிரிவினரின் மேம்பாட்டை  பொறுத்து  அமையும் ஆனால் தங்களது ஆற்றலை பயன்படுத்தி இச் சமூகத்தினை முன்னேற்றச் செல்வதற்கான உரிமைகளும் வாய்ப்புகளும் பிரிவினருக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

1925 இல் விஞ்ஞான சோசியல் அரச கருத்துகளால் கவரப்பட்ட மாவீரன் பகவத் செய்தால் நவஜவான் பாரத் சபா உருவாக்கப்பட்டது சைமன் கமிஷனை காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்வதற்கு முன்பே நவஜவான் பாரத் சபா தான் மிகத் தெளிவாக உறுதியான தனது எதிர்ப்பை தெரிவித்தது பகத்சிங் மற்றும் அவர்கள் தோழர்களுக்கு எதிரான நீதிமன்ற விசாரணைகளும் அவர்களின் உயிர் தியாகமும் இந்த நாட்டின் பெரும் பகுதி இளைஞர்கள் மற்றும் மக்கள் மத்தியில் காலனி ஆதிக்கத்தை உறுதியுடன் போர் குணத்துடன் எதிர்க்க வேண்டும் என்று கிளர்ந்து எழச் செய்தது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இளைஞருடைய பங்களிப்பு இருந்து பெரும்படியாக அனைத்து இளைஞர்களுக்கும் கொண்டு சென்ற மாவீரன் பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோரை 1931 மார்ச் 23ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் தூக்கிலிடப்பட்டார்கள்.

இந்த நாடு எப்படிப்பட்ட சுதந்திரத்தை அடைய வேண்டும் என்பதில் அன்றைய இளைஞரான பகத்சிங் தெளிவாக இருந்தார்.”பாலுக்கு அழாத குழந்தை கல்விக்கு ஏங்காத மாணவன் வேலை தேடி அலையாத இளைஞன் பஞ்சமில்லாத என் தேசத்து மக்கள் இதுவே எனது சுதந்திர இந்தியா என பகவத்சிங் சூளுரை செய்தார்.

அதேபோல அவர் தன்னுடைய உறவினிடத்தில் சொல்லுகிற போது “இந்த சுதந்திரப் போராட்டம் எங்களால் துவங்கியதும் இல்லை.. எங்கள் வாழ்நாளோடு முடியப்போவதும் இல்லை ..

நாளை மெழுகுவர்த்தி ஒளி மங்கி உருகுவதைப் போல எங்கள் மூவரின் உயிரும் பிரிந்து விடும் ஆனால் எங்களுக்கு பின்னால் ஆயிரம் ஆயிரம் லட்சம் லட்சம் கோடி கோடியாய் இளைஞர்கள் படையெடுப்பார்கள் என மாவீரன் பகவத் சிங் பேசியிருந்தார். இதுவே அனைத்து இளைஞர்கள் மத்தியில் விடுதலை உணர்வை ஊட்டிய வாசகங்களாக அமைந்தது.

அமைப்பு உருவாக்கம்…

ஒருங்கிணைந்த இடதுசாரி மாணவர் இயக்கம் தான் 1936 ஆம் ஆண்டில் அகில இந்திய மாணவர் இளைஞர் இயக்கத்தை கட்டுவதற்கான திசை வழியை காட்டியது இந்த இயக்கம் பல்வேறு அரசியல் பிரிவுகளை சார்ந்த மாணவர்களையும் இளைஞர்களையும் தன்னுடைய பதாகையின் கீழ் அணிதிரட்டியதோடு பாசிசம் உலகின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக முன்னுக்கு வந்ததும் இரண்டாம் உலக யுத்தம் வெடித்தது இந்த காலகட்டத்தில் தான் உலகம் முழுவதும் பாசிச  எதிர்ப்பு தீவிரப்பட்டிருந்ததோடு தேச விடுதலை போராட்டங்களும் தீவிரமடைந்தன. அந்த காலகட்டத்தில் தான் நம் நாட்டு இளைஞர்களை முற்போக்கு தத்துவங்கள் மற்றும் இடவசதி கருத்துக்களால் ஈர்த்தன,  சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் இளைஞர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்கள் உருவாக்கி பெருமைமிகு பங்காற்றியதின் விளைவாக மனிதத் தன்மையற்ற சித்திரவதைகளை நெஞ்சு உறுதியுடன் எதிர்கொண்டதோடு ஈடு இணையற்ற தியாகங்களை புரிந்தனர்.

1945 இல் துவங்கப்பட்ட உலக ஜனநாயக இளைஞர் சங்கமானது நமது நாட்டின் முற்போக்கு ஜனநாயக மதச்சார்பற்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு மனோபாவம் கொண்ட இளைஞர்களுக்கு தத்துவார்த்த ரீதியான இயங்கு சக்தியை கொடுத்தது. இதன் காரணமாகவே தேபகா, புன்னப்புரா வயலார், வடக்கு மலபார், தெலுங்கானா , மற்றும் திரிபுரா போன்ற பகுதிகளில் குறிப்பிட்டதக்க போராட்டம் நடைபெற்றது.

இந்திய ஆளும் வர்க்கம் குணாதிசயம் குறித்து விவாதங்கள் விரைவாகவே இளைஞர் இயக்கத்தை ஆட்கொண்டது. ஒரு பிரிவினர் இந்திய அரசு முற்போக்கானது அது வேலையின்மை மற்றும் கல்வி அறிவின்மை ஆகியவற்றை ஒழித்து கட்டி நம்மை சோசலிசத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என் தமிழர் இது காங்கிரசுக்கு ஆதரவு நிலைப்பாட்டாக இருந்தது. மற்றொரு (பிரிவினர் பின்னாளில் DYFI துவங்கியவர்கள்) நடைபெற்று வரும் கூர்மையான விமர்சனங்களை ஆட்சிக்கு எதிரான தன்னுடைய நிலைப்பாட்டை எதிர்த்து போராடி வந்தனர்.

இந்த தத்துவ விவாதங்களின் விளைவாக பல்வேறு மாநில அளவிலான வாலிபர் அமைப்புகள் தோன்ற வழி வகுத்தன. மேற்கு வங்கம் அஸ்ஸாம் திரிபுரா கர்நாடகாவில் ஜனநாயக வாலிபர் சங்கம் கேரளா சோசியலிஸ்ட் வாலிபர் சங்கம் உத்தரபிரதேசம் பஞ்சாப் ராஜஸ்தானில் நவஜவான் சபா தமிழ்நாட்டில் சோசியலிஸ்ட் வாலிபர் முன்னணி ஆந்திர பிரதேசத்தில் பிரஜா தந்திர யுக சங்கம் இன்னும் பல இவற்றில் குறிப்பிடத்தக்கவையாகும்.

சுதந்திர போராட்ட வீரர்கள் சிவவர்மா,கிசோரிலால் மற்றும் பல சுதந்திர போராட்ட வீரர்கள் இணைந்து மேற்கொண்ட பல்வேறு முற்போக்கு இளைஞர் அமைப்புகளை ஒருங்கிணைந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உருவாக்கப்பட்டது.1980 நவம்பர் 1-3 வரை பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் நடைபெற்ற முதல் அகில இந்திய மாநாடு நடைபெற்றது.கிசோரிலால் முதல் வெண்கொடியை ஏற்றி வைத்தார்.

அன்று முதல் டி ஒய் எஃப் ஐ இளைஞர்களை திரட்டியும் தொடர்ந்து இந்தியாவிலேயே மிகப்பெரிய இளைஞர் அமைப்பாக உருவெடுத்துள்ளது. டி ஒய் எஃப் ஐ கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான கோரிக்கை உறுதியாக முன்னெடுத்து செல்கிறது. எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை என்கிற முழக்கத்தை முன் வைத்தது. இந்தப் போராட்டப் பாதையின் விளைவாக இதுவரையில் நூற்றுக்கணக்கான நமது தோழர்கள் பிற்போக்கு இலகுவாத ஆளும் வர்க்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் . அசாம் பஞ்சாப் மேற்குவங்கம் திரிபுரா மற்றும் தமிழ்நாடு இன்னும் பல இடங்களில் பிற்போக்குவாத சத்துகளின் தாக்குதலுக்கு DYFI இலக்காகி உள்ளது.

நோக்கம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மேம்பாட்டுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் போராட உறுதி ஏற்றுக்கொள்ளும் அனைத்து இளம் ஆண்களையும் இளம் பெண்களையும் உள்ளடக்கிய பரந்துபட்ட ஒருங்கிணைந்த இளைஞர் இயக்கத்தை இந்தியாவில் கட்டி எழுப்பும் தனது நோக்கத்தை பிரகடனப் படுத்திக் கொள்கிறது. இளம் சமூகத்தினர் பிரிக்க முடியாத பகுதிகளாக உள்ளனர் இவர்களின் மேம்பாடும் நல்வாழ்வும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை குறிப்பாக இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையாக இருக்கும் உழைப்பாளி மக்களின் மேம்பாட்டையும் சார்ந்து உள்ளது என்பதை தெளிவாக உணர்த்த வேண்டி உள்ளது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் கல்வி என்கிற இந்திய இளைஞர்களின் அடிப்படைக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு போராட உறுதியாக உள்ளது இது வேலையின்மை எனும் கொடுமைக்கு எதிரான போராட்டங்களை நடத்திடவும் வேலை கிடைக்கும் வரை வேலை இல்லா கால நிவாரணத்திற்கான பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் வேலை உரிமையை இந்திய அமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமையாக சேர்த்திட வலியுறுத்தியும் கிளர்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இளைஞர்கள் மத்தியில் கலாச்சார மற்றும் விளையாட்டு நடவடிக்கைகளை கொண்டு செல்லுதல் உடற்பயிற்சி கூடங்கள் நூலகங்கள் எழுத்தறிவு மற்றும் கலாச்சார நிறுவனங்களின் மூலம் மேற்கொள்ளவும் பட்டிமன்றங்கள் விவாதங்கள் கருத்தரங்கம் ஆய்வரங்கம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும் டி ஒய் எஃப் ஐ அறைகூவல் விடுகிறது இது விளையாட்டு நிகழ்ச்சிகளையும் போட்டிகளையும் நடத்தி அவற்றில் அதிகபட்ச இளைஞர்களின்  பங்கேற்பை ஊக்குவிப்பதோடு ஒரு தேசிய இளைஞர் கொள்கையை உருவாக்கி  வலியுறுத்தி வருகிறது. மேல்நிலைக் கல்வி வரை எல்லோருக்கும் இலவச கட்டாய கல்வி அறிமுகப்படுத்துவோம் அனைவரும் எளிதில் பயன்பெறும் வகையிலான ஜனநாயக ரீதியான கல்வி முறையை உருவாக்கப் போராடி வருகிறது.

அமைப்பு…

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (democratic youth federation of India)

14-40 வயது வரையிலான இளைஞர்கள் அமைப்பில் உறுப்பினராக இணையலாம்.உறுப்பினர் கட்டணம் ரூ.2 மட்டுமே வருடத்திற்கு ஒருமுறை சந்தாவை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

அமைப்பின் கட்டமைப்பு

 • அகில இந்திய மாநாடு
 • மத்திய நிர்வாகக்குழு
 • மத்திய செயற்குழு
 • மாநில மாநாடு
 • மாநிலச் செயற்குழு
 • மாநிலக்குழு
 • மாவட்டக்குழு
 • மாவட்ட செயற்குழு
 • வட்ட, வட்டார, நகர இடைக்குழுக்கள் என உள்ளது.

மேற்கண்ட படிநிலைகள் அனைத்து மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெற்ற வேலை அறிக்கை எதிர்கால திட்டமிடல் அறிக்கை வைத்து விவாதித்து மாநாடு நடத்தி நிர்வாகிகளை அந்தந்த படிநிலை மாநாட்டில் அகில இந்திய குழு மாநில குழு மாவட்ட குழு என தேர்வு செய்யும்.

உபக்குழுக்கள்…

 • மலைவாழ் இளைஞர் சங்கம்
 • இளம்பெண்கள் உபக்குழு
 • இரத்ததானம் கழகம்
 • விளையாட்டு கழகம்
 • கலை மற்றும் பண்பாட்டு கழகம் 

நடைப்பெற்ற முக்கிய பணிகள்

ஏப்ரல் மாதம் 2022 முதல் மே 1 வரை இளைஞர்களுக்கு வேலை கொடு என்கிற ஒற்றை புள்ளியில் நான்கு முனைகளிலிருந்து சென்னை கோவை கன்னியாகுமரி பாண்டிச்சேரி ஆகிய 3000 கிமீ கடும் வெயிலில் 1000க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கம் தோழர்கள் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டனர்.திருவண்ணாமலை மாவட்டத்தில் 198 கிமீ 50 தோழர்கள் திருச்சி நோக்கி சைக்கிள் பிரச்சாரம் இயக்கம் நடத்தினார்கள்.உள் மாவட்டங்களில் உள்ள வளத்தை பயன்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்கிட வேண்டும் என கோரிக்கை வைத்தது.

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என நடத்திய போராட்ட ம் பல இடங்களில் கைது செய்யப்பட்ட ஏற்பாடும் உண்டு நமது மாவட்டத்தில் 175 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைத்த சம்பவம் உண்டு.

நெல்லையில் போலீஸ் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இரண்டு மரணம் எதிராக பிரசாத் போலீசை தடை செய்ய வேண்டும் காவல்துறையில் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் நடத்திய போராட்டங்களில் வாலிபர் சங்கம் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர்.

செய்யார் சிப்காட் வருவதற்கும்,செங்கத்தில் சிப்காட் பணி துவங்குவதற்கும் அடிப்படை வாலிபர் சங்கம் கோரிக்கை மிகமுக்கியமானது.

செங்கம் அம்மாபாளையம் ஆவின் குளிரூட்டம் நிலையம்,குப்பநத்தம் அணை போன்றவை நமது அமைப்பின் முக்கிய கோரிக்கை ஆகும்.

கல்வி நிலையங்கள்…

நீட் தேர்வு,புதிய கல்விக் கொள்கைக்கு  எதிரான பலக்கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது.அரசு பள்ளிகளை பாதுகாப்பது.மாணவர்களின் நலன் குறித்து தொடர்ந்து களத்தில் நிற்கும் வாலிபர் சங்கம்.திருவண்ணாமலை மருத்துவக்கல்லூரி,அரசு வேளாண்கல்லூரி,செங்கம் பாலிடெக்னிக் கல்லூரி, கலசபாக்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி உருவாவதில் நமது அமைப்பின் வலுவான  கோரிக்கையின் பின்னால் நடந்தவை.தற்போது செங்கத்தில் அரசு கலைக் கல்லூரி உருவாக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் அதற்கான போராட்டம் முன்னெடுக்க உள்ளோம்.

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியில் இடைத்தரகர்களால் 500 இடங்கள் விற்கப்பட்டது என நாம் வைத்த 5 நாட்கள் தொடர் போராட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியது 136 மாணவர் சேர்க்கை திரும்ப நடைபெற்றது.

தற்போது நாம் போராடியதால் அரசு கலைக்கல்லூரி சேர்க்கை “சிங்கல் விண்டோ சிஸ்டம் போல் நடக்கிறது.

இரத்ததானம் முகாம்

அனைத்து தாலுக்கா தோறும் இரத்ததானம் முகாம்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தி வருகிறது.கடந்த வருடம் 100யூனிட் இரத்ததானம் முகாம் திருவண்ணாமலை வாசவி மண்டபத்தில் நடைபெற்றது.நடிகர் பூராமு பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.தினந்தோறும் மாவட்ட முழுவதும் ஏதாவது ஒரு வகையில் இரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.நமது மாவட்டத்தில் மட்டும் கடந்த 1வருடத்தில் 200 யூனிட் இரத்தம் கொடுத்த அமைப்பாக உள்ளது.மாவட்ட‌ஆட்சியர் இடத்தில் கூட விருது பெற்றுள்ளோம்.

இதன் நோக்கம் போதையில்லா இளைஞர்களை உருவாக்க மற்றும் உயிரை காப்பாற்ற வேண்டும்.

போதைக்கெதிரான கையெழுத்து இயக்கம்..

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன்னெடுத்த  போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் ஆறு மாத காலம் தமிழகத்தில் நடைபெற்றது நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசன் சூர்யா கார்த்திக் விஜய் சேதுபதி சரத்குமார் விஷால் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இயக்கத்தை துவக்கி வைத்தனர் அதேபோல பல முன்னணி இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என கையெழுத்திட்டுத் துவக்கி வைத்தனர் பத்திரிகையாளர்கள் செய்தியாளர்கள் கவிஞர்கள் கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பட்ட மக்கள் கையெழுத்து இயக்கத்தில்  ஈடுபட்டனர் நமது மாவட்டத்தில் 9 இடங்களில் அனைத்து தாலுகாவிலும் நடைபெற்றது காவல்துறை வருவாய் துறை கல்வித்துறை என பொதுமக்கள் மத்தியிலும் கையெழுத்துக்கள் பரவலாக சென்றன இதனுடைய நிறைவு  நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்றது இந்த நிகழ்வில் அகில இந்திய தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஹீம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விசிக தலைவர் தொல் திருமாவளவன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் அரசு தரப்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் மா சுப்பிரமணியம் நடிகர்கள் இயக்குனர்கள் பத்திரிகையாளர்கள் பங்கேற்று அந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாகச் செய்தனர் இந்திய தேசத்தில் இப்படி ஒரு நிகழ்வை வாலிபர் சங்கம் முன்னெடுத்தது என அரசு தரப்பிலும் பாராட்டப்பட்டது.

கோரிக்கை போராட்டம்..

வாலிபர் சங்கம் பலகட்ட கோரிக்கை போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது குடிநீர் பிரச்சினை தெருவிளக்கு பிரச்சனை சாலை பிரச்சனை சுகாதார மருத்துவமனை பிரச்சனை அதேபோல லஞ்சம் ஊழலுக்கு எதிரான விளிம்பு நிலை மக்கள் மீதான அடக்கு முறைக்கு எதிரான சாதிய மதவாத எதிர்ப்பு போராட்டங்கள் என தொடர்ந்து வாலிபர் அமைப்பு போராடி வருகிறது உதாரணம் வேங்கை வயலில் மலம் நீர் தொட்டியில் கலந்ததை  எதிர்த்து நடத்திய மாநிலம் முழுவதும் போராட்டம் சாதி கொடுமைகளுக்கு எதிராக நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் ஆணவ படுகொலைக்கு எதிராக சட்டம் இயற்ற சொல்லி நடைபெற்ற போராட்டங்கள் எண்ணில் அடங்காதவை.

விலைவாசி உயர்வு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு  பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதற்கு எதிராக நடத்திய போராட்டங்கள் வாலிபர் சங்கத்தினுடைய மற்றும் ஒரு முன்னெடுப்புகள்.

டெல்லி சலோ…

கடந்த நவம்பர் மாதம் டெல்லியில் டெல்லி செல்லோ என்கிற கோரிக்கை எங்களுக்கு வேலை கொடு என்று பாராளுமன்ற முற்றுகையிட்டு  போராட்டத்தை முன்னெடுத்தோம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டெல்லி பாராளுமன்றத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் நமது மாவட்டத்தில் இருந்தும் பத்துக்கு மேற்பட்ட தோழர்கள் போராட்டத்தில் பங்கேற்றோம். டெல்லி பாராளுமன்ற முற்றுகை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒரு வகையில் அரசு அதிகாரங்களுக்கு எதிராக வேலையின்மைக்கு எதிராக கல்வி தனியார்மயமாவதற்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது.

கல்விக்குழு…

மாதந்தோறும் வாலிபர் சங்கம் ஏதாவது வகையில் ஒரு புத்தகம் அறிமுகம் செய்வது அதேபோல வாலிபர் சங்க தத்துவார்த்த மாத இதழான இளைஞர் முழக்கம் வைத்து கட்டுரைகளை பாதிப்பது வாசிப்பு தளத்தில் மாணவர்களையும்  இளைஞர்களையும் உலக நாவல்கள் தொடங்கி உள்ளூர் வரலாறு வரை வாசிக்க வைப்பது தொடர்ந்து கல்வி குழு செய்து வருகிறது.

பொங்கல் விளையாட்டு விழா..

வருடா வருடம் சமத்துவ பொங்கல் என்கிற அடிப்படையிலும் மாணவர்களையும் இளைஞர்களையும் இணைத்து விளையாட்டு போட்டிகள் நடத்துவது சமத்துவ பொங்கல் வைப்பது என நமது மாவட்டத்தை 50க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த வருடம் திட்டமிட்டு இருக்கிறோம் கடந்த காலங்களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தியது தொடர்ந்து நடத்தி வருகிறோம். சாதியாய் மதமாய் பிரிந்து கிடக்கிற இந்த சூழ்நிலையில் பொங்கல் விளையாட்டு விழா மிகவும் அத்தியாவசியமாகிறது.

நமது மாவட்டத்தில் வாலிபர் சங்கம்.

நமது மாவட்டத்தில் வாலிபர் சங்கம் சுமார் 20000 இளைஞர்களை கொண்டு இயங்கி வருகிறது அனைத்து தாலுகாவிலும் தனது அமைப்பை விரிவுபடுத்தி உள்ளது நூற்றுக்கு மேற்பட்ட கிளைகள் இயங்கி வருகிறது. மாவட்ட தலைமை அலுவலகம் திருவண்ணாமலை வேங்கிக்கால் அருகே இயங்கி வருகிறது 21 பேர் மாவட்ட குழுவில் பணியாற்றி வருகிறோம் மாவட்ட செயலாளர் மாவட்ட தலைவர் மாவட்ட பொருளாளர் என கட்டமைப்புடன் பணியாற்றி வருகிறோம். தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட தலைவர் செயலாளர் பொருளாளர் மூவருமே வழக்கறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதந்தோறும் மாவட்ட கூட்டங்கள் மற்றும் வட்டார அளவிலான கூட்டங்கள் கிளை அளவிலான கூட்டங்கள் நடத்தி பொது பிரச்சனைகளை கையில் எடுத்து போராட்டம் நடத்தி கோரிக்கைகளில்  வெற்றி பெற்றும் வருகின்றனர்.

 சோசியலிசமே இறுதி லட்சியம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்.

கல்வியும் வேலையும் அடிப்படை உரிமை என சட்டத்தில் இணைக்க வேண்டும் எல்லோருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு 40 ஆண்டுகளை கடந்து வாலிபர் சங்கம் சமரசம் இன்றி களத்தில் போராடி வருகிறது இந்த தேசத்திற்காக உறுதுணையாக நிற்கிறது.

சி.எம். பிரகாஷ்,மாவட்ட செயலாளர்,திருவண்ணாமலை மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *