எனக்கு திருமணம் ஆகி 12 ஆண்டுகளாகிவிட்டது. இப்போது யோசித்துப் பார்த்தால் கூட அந்த பயணம் ஒரு “ROLLER COASTER RIDE” போல தான் தோன்றுகிறது. திருமணத்திற்கு முன்பு வரை நானும் எங்கள் குடும்பமும் அவ்வுளவாக வெளியூர் பயணம் செய்ததில்லை. அதற்கான சூழல் பெரிதாக அமைந்ததில்லை. குறிப்பிட்டுக் கூறினால் ஒன்றிரண்டு கோயில்களுக்குச் சென்றதாக நினைவில் உள்ளது.
எனது வாழ்க்கையை இரண்டு பாகங்களாய் பிரித்திடலாம். ஒன்று திருமணத்திற்கு முன்பகுதி, மற்றொன்று திருமணத்திற்கு பின், என இரண்டும் சேர்ந்ததுதான் என் வாழ்க்கை.
நான் பள்ளி, கல்லூரிக்கு ஆட்டேவில் மட்டுமே சென்றுள்ளேன். அப்போதெல்லாம் இரயிலில் கூட பயணித்ததே இல்லை. திருமணத்திற்குப் பிறகு நாடுவிட்டு நாடாக சென்று கொண்டிருக்கிறேன். இன்று அவற்றையெல்லாம் நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது.
திருமணம் ஆனதும் நான் சென்ற முதல் நாடு சிங்கப்பூர். அங்கு செல்வதற்கு முன்பு ஒருவிதமான பிரம்மிப்பும் ஆர்வமும் என்னை சூழ்ந்திருந்தது. அதுவரைக்கும் சிங்கப்பூர் பற்றி என் அக்கா சொல்லி கேள்விப்பட்டுருக்கிறேன். என் அக்காவும் அங்கே தான் குடியேறியுள்ளனர். ஒரு பக்கம், அக்காவை பார்க்கப் போகிறோம் என்ற சந்தோசமும் மறுபக்கம் கணவரை சில மாதம் கழித்து திரும்ப பார்க்கப் போகிறோம் என்ற ஆசையும் என இரண்டும் கலந்த ஒரு உணர்வுடன் முதன்முதலில் வெளிநாடு செல்லவிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பும் உடன் சேர்ந்திருந்தது.
என் கணவர் திருமணம் முடிந்து சீக்கிரமே வேலையில் சேர, சில நாட்களில் சிங்கப்பூர் கிளம்பிவிட்டார். நானும், என் மாமனார், மாமியாருடன் கிளம்புவதற்கு தயார் ஆனோம். முதன்முதலாக ஊரை விட்டுப் போகிறோம், முடிந்த வரைக்கும் தேவையானதை எடுத்துக்கொண்டு போகலாம் என பொருட்களை எல்லாம் எடை போட ஆரம்பித்தோம். சரியாக எல்லாம் எடை போட்டு தயாரானோம், ஊருக்கு செல்ல முதலில் நாங்கள் சென்றது சென்னைக்கு. எங்களுடைய முதல் பயணமே மறக்க முடியாத ஒன்று, அதை இப்போது நினைத்தால் கூட சிரிப்பு தான் வருகிறது.
ஊருக்கு கிளம்பும் நாளும் வந்துவிட்டது, காலை முதல்முறையாக விமானத்துல போகிறோம் மூன்று மணிநேரத்திற்கு முன்னர் விமான நிலையத்தில் இருக்க வேண்டும். ஆகவே சீக்கிரம் காலையில் புறப்பட விமான நிலையம் போனோம். பாதுகாப்பு (security police) டிக்கெட் பார்த்துட்டு உள்ளே அனுப்ப, நேரா செக்-இன் செய்ற இடத்துக்கு போனா உங்கள பிளைட் நைட் பிளைட் இன்னும் செக் இன் ஓபன் ஆகலனு சொன்னதும் அதிர்ந்து போனோம். அப்போது தான் தெரிஞ்சது, டிக்கெட்டில் இருக்கும் AM/PM-மை கூட ஒழுங்காக பார்க்காமல் கிளம்பிட்டோம்னு. இப்போ என்ன செய்றதுன்னு ஒரே குழப்பம், வேற வழி இல்லாம் அங்கேயே (ஏப்போர்ட்) இருந்துவிட, திரும்ப நைட் பிளைட்டில் கிளம்பிட்டோம், சிங்கப்பூருக்கு போனது டூரிஸ்ட்டு (tourist) Visa தான். டூரிஸ்ட்டு விசா 30 நாள் வரை கிடைக்கும், 30 நாள் பிறகு நாம் மற்றொரு 30 நாள் வரை புதுப்பித்துக் கொள்ளலாம். நைட் பிளைட்ல 1 மணிக்கு கிளம்பி நாங்கள் சிங்கப்பூர் சென்றடைந்தது மறுநாள் காலையில் தான்.
சிங்கப்பூர் ஒரு அழகான ஊர், சுற்றி பார்க்க பல இடங்கள், மக்கள் பரபரப்பாக செல்வதை எப்போதும் பார்க்க முடிந்தது, மிகவும் பாதுகாப்பான நாடு என்பதை உணர முடிந்தது. எங்களுடைய விசா காலம் முடிவடையவே மற்றோரு 30 நாள் புதுப்பிக்க முடிந்தது.
என்னோட DEPENDENT VISA PROCESS-ல் இருந்தது. அது நேரம் எடுக்கவே இன்னும் 30 நாள் வேண்டும் என்றால் பக்கத்திலிருக்கும் நாட்டுக்கு போகும் யோசனையினை அங்குள்ள நண்பர்கள் கூறவே, மலேசியா செல்வதை உறுதி செய்தோம். மலேசியா சென்று சிங்கப்பூர் வரும்போது இவ்வளவு பெரிய பிரச்சனையுடன் திரும்புவோம் என்று சிறிதும் என்னவில்லை. மலேசியா IMMIGRATION பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. SINGAPORE TOURIST VISAவில் இருக்குற நீங்க எதுக்கு மலேசியாவிற்கு வரனும் என்கிறார் IMMIGRATION ஆஃபிசரின் கேள்வி, நாங்க எவ்வளவு விளக்கியும் அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். எவ்வளவு காரணம் சொல்லியும் எங்களை மலேசியாவிற்கு உள்ளே அனுமதிக்கவில்லை. நீங்கள் மலேசியா வந்துவிட்டு திரும்ப சிங்கப்பூர் செல்லுவதற்கான நோக்கம் என்ன அதுவும் TOURIST VISA முடிவடையும் காலகட்டத்தில், நீங்கள் உங்கள் தாய்நாடு (இந்தியா) செல்வதே சரி என்றார்கள். ஆனால் எங்கள் நண்பர்கள் சொன்னதோ இது சகஜமா எல்லாரும் VISA EXTENSIONக்கு செய்றது தான்னு, நீண்ட விவாதத்திற்கு பிறகு IMMIGRATION OFFICER கேட்டது பணம்! உங்களை ஒவ்வொருவரும் இவ்வளவு பணம் கொடுத்தால் உள்ளே அனுப்புறேன்னு சொல்லி ஒவ்வொருவரும் பணத்தை உங்க PASSPORTகுள்ள வைச்சி குடுங்கன்னு சொன்னா எங்களுக்கு என்ன செய்றதுனு தெரியல, திரும்ப சிங்கப்பூருக்கும் செல்ல இயலாத நிலை அவருக்கு பணம் கொடுத்து மலேசியாவிற்குள் நுழைந்தோம்.
அங்கே ஊர் சுற்றிவிட்டு மீண்டும் சிங்கப்பூர் நுழையும் போது காத்திருந்தது அதிர்ச்சி. எங்களோட விசா முடியும் தருவாயில் இருந்ததால் மீண்டும் ஒரு நாட்டுக்குள் நுழையும் போது மறுபடியும் விசா AUTOMATIC-ஆக புதுபிக்கப்படும்னு நினைச்சோம். ஆனால் அதை சிங்கப்பூர் IMMIGRATION ஏற்க மறுத்தது. நாங்கள் ILLEGAL ஆக ENTER ஆகிறோம்னு என்று சொல்லி எங்கள் அனைவற்றையும் தனி அறையில் ஒக்கார வைச்சிடாங்க. EXTENDED TOURIST VISA முடியும் போது மீண்டும் RENEWAL செய்ய நம் நாட்டிலிருந்து APPLY பண்ணனும்னு சொல்லி, எங்களிடம் சொல்லிடாங்க. அப்புறம் என்ன செய்றதுனு தெரியாம எங்களால உடனே போக முடியாதுனு சொல்லவே, அங்கே இருந்த தமிழ் பொண்ணு எங்களுக்காக கொஞ்சம் பேசவே ஒரு சில நாட்கள் சிங்கப்பூரில் தங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அப்பாடா வேற எதுவும் பெரிசா நம்பள PUNISH பண்ணலனு நிம்மதியோட அங்க இருந்து கிளம்பினோம். பின்பு சில நாட்களில் எனக்கு DEPENDENT VISA வரவே தப்பிசோம்டா என இருந்தது.
ஒரு வருடம் சில மாதங்கள் சிங்கப்பூரில் இருந்த பின் நாங்கள் சென்ற அடுத்த நாடு ஆஸ்திரேலியா, இம்முறை மூவராக ஆஸ்திரேலியா VISA எடுக்கனும்மா TB TEST எடுக்க சொல்வார்கள், முதல் முறையாக MEDICAL TEST எடுக்க சென்னைக்கு செல்ல நானும் என் குழந்தையோடு சென்றேன். AUSTRALIA VISA APPLY செய்யும் போது MEDICAL மற்றும் இதர DOCUMENTS இரண்டையும் இணைக்க ஒரு UNIQUE FILE NUMBER CREATE செய்யப்படும், அதன்படி நான் PREGNANT ஆக இருக்கும் போது APPLY செய்ய, அப்போது நீங்கள் குழந்தை பிறந்த பிறகே உங்களுக்கு TB TEST எல்லாம் செய்ய முடியும் அதுவரை நீங்கள் MEDICAL TEST எதுவும் செய்ய அனுமதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. ஆனால் UNIQUE NUMBER CREATE செய்து வைத்திருந்தனர். பின்பு குழந்தையுடன் இணைந்து மற்றொரு UNIQUE FILE NUMBER GENERATE செய்து விட்டனர். அப்போது வந்தது அடுத்தபிரச்சனை. இப்போது இரு UNIQUE ID எனக்கு இருக்கவே என்னுடைய MEDICAL REPORT இணைப்பதில் அங்கு உள்ளவர்களுக்கு சிரமம் நேர்ந்தது. நானும் என்னுடைய சூழ்நிலையை அங்கு உள்ளவர்களுக்கு எடுத்துரைக்க மேலும், கீழுமாக நடக்க வேண்டி இருந்தது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஒப்பிடும் போது நிறைய வித்தியாசம் காண முடிந்தது. சிங்கப்பூரில் பெரும்பாலும் APARTMENT வாழ்க்கை தான். ஆனால் ஆஸ்திரேலியாவில் பெரிய வீடு, சுற்றி BACKYARD காண முடிந்தது. ஆஸ்திரேலியாவில் ஒன்றறை ஆண்டு காலம் அங்கு இருக்க முடிந்தது. அதன் பிறகு நாங்க பயணம் செஞ்சது அடுத்த நாடு ஹாங்காங். அங்கு அவ்வளவாக விசா பிரச்சனை இல்லை.
ஹாங்காங்கிலும் ஒன்றிரண்டு வருடம் இருக்க முடிந்தது. அங்கிருந்து நாங்க சைனா செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு அமெரிக்கா செல்ல விசா எடுக்க முயன்றுகொண்டிருந்தேன். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. அமெரிக்கா விசா பெறும் முறை அதிலும் அந்த விசா இன்டர்வியூவ் எல்லாம் புதிதாக இருந்தது. இங்கு வந்த பிறகு மிச்சிகன், டெக்ஸாஸ், சவுத் டகோட்டா பின் மீண்டும் டெக்ஸாஸ் அமெரிக்காவில் மாகாணங்களாக பயணித்தேன்.
இவற்றில் எத்தனை வருடம் எத்தனை காலகட்டத்தை கடந்து நிறைய விடயத்தை நான் கத்துக்கிட்டேன். எல்லாருக்கும் நம்ம வெளிநாடு போகணும்னு ஆசை எல்லாருக்கும் பெருவாரியாக இருக்கதான். அவை எளிதான விடயம் என்று தோன்றலாம். ஆனால் அதில் உள்ள சவால்கள் நமக்கு வந்தால்தான் புரியம். ஒருநாடுவிட்டு இன்னொரு நாடு செல்வது எளிது என்று தோன்றும். முன்பெல்லாம் ஆனால் ஒவ்வொரு முறை நாம் வந்து போகும்போதும் புதுசாக முதல் முறை போகுற மாதிரி ஒரு பதட்டமும் பயமும் எப்போதுமே இருக்கும். இன்றைக்கு வரைக்கும் அவை இருக்கிறது. இத்தனை வருடங்களில் கற்றுக் கொண்டவை மிக அதிகம். பள்ளிப் பருவத்தில் இரயில் பயணம்கூட செய்ததில்லை. தற்போது தனியாக நாடு நாடாக செல்கிறேன். தனியாக சென்று விசா பதிவு செய்கிறேன். பலருக்கு நான் வழிகாட்டி யோசனை வழங்குகிறேன் என்றால் மிகவும் வியப்பாக தான் இருக்கிறது. முதன்முதலில் டிக்கெட்டில் காலையா? மாலையா? என்று நேரம் சரியாக பார்க்காமல் மாலை பிளைட்டுக்கு அதிகாலையே சென்ற நான் தான், இப்போது பயணத்திற்கான முன் தயாரிப்புகளில் கவனமாக நேர்த்தியாக நகர்கிறேன் என்றால் காலமும் சூழலும் மனிதர்களும் எனக்கு பலவற்றை கற்றுத் தந்திருக்கிறது
இக்கரைக்கு அக்கரை பச்சை ஆமாம் அங்க இருந்து பார்க்கும்போது இங்கே உள்ள வாழ்க்கை எளிதாக தோன்றலாம். ஆனால் இங்கே வந்தபிறகு தான் இவ்வளவு விசா பிரச்சனைகள் சவால்களை சந்திக்கும்போது, அங்கேயே அதாவது இந்தியாவிலேயே நம்மிடம் யார் வந்து விசா கேட்பார். ஒரு இந்திய பிரஜையை அப்படின்னு சில நேரம் தோணும் சொல்றதுக்கு வார்த்தை இல்ல மத்த நாட்டுல இருக்கிறவங்களுக்கு தான் அது புரியும். முதன்முதலில் இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு செல்லும்போது ஏற்பட்ட அனுபவம் இவை அதன் பிறகு கணவரின் பணிநிமிர்த்தமாக பல நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறேன். ஆனாலும் முதல் பயண அனுபவம் இன்னும் மனதில் அப்படியே இருக்கிறது.
இந்த பயணங்கள் எல்லாம் பல உறவுகளை கொடுத்திருக்கிறது. பல அனுபவங்களையும் கொடுத்திருக்கிறது. எங்கு சென்றாலும் நம் ஊர், உறவுகள், விழாக்கள் சார்ந்து ஏக்கம் இல்லாமலும் இல்லை.