ஆட்டிசம்: புரிந்துகொள்வோம், ஏற்றுக்கொள்வோம்!

சமீப காலமாகவே நிறைய குழந்தைகளுக்கு ஒரு சவாலாக இருப்பது ASD னு சுருக்கமா சொல்லப்பட்ட ஆட்டிசம். அதாவது Autism Spectrum Disorder. தமிழ்ல மதியிறுக்கம்னு சொல்வோம். மதின்னா மூளை or mindஆங்கிலத்துல.

இது ஒரு நோயான்னு கேட்டா கண்டிப்பா இல்லை. இது மூளை சார்ந்த பிறப்பிலேயே உருவாகற ஒரு நிலை. எப்படி இய்ல்பிலேயே உடல் வளர்ச்சிகுறைபாடுக்ளோடு ஒரு குழந்தை பிறக்கிறதோ அதேபோல்தான் இதுவும். எப்படி அந்த வளர்ச்சி குறைபாட்டை முழுதாக சரி செய்யமுடியாதோ அது போலத்தான் இந்த ஆட்டிசமும். உடல் குறைபாடுகளை மீறி  எப்படி பல  பயிற்சிகள் மூலம் அந்த குழந்தையை செயல்படவைக்கிறோமோ அதே போல் ஆட்டிசம் பாதித்த குழந்தைகளையும் சரியான பயிற்சிகள் மூலம் சமூகத்தில் செயல்பட வைக்க முடியும்.

இதை எப்படி கண்டறிவது?

குழந்தைகள் வளர்ச்சிக்கென ஒரு ஒரு மைல் ஸ்டோன்ஸ் இருக்கிறது இல்லையா? அந்தந்த பருவத்தில் செய்யவேண்டிய செயல்கள் தாமதமானால் அலெர்ட்டாக இருந்து கொள்வது அவசியம். அதுக்காக தாமதமாக செயல்படும் குழந்தைகள் அத்தனைக்கும் ஆட்டிசம் என்பது அல்ல.

-1.பெயர் சொல்லி அழைத்தால் திரும்பவேண்டும்

2. தன் தேவைகளை வெளிப்படுத்த வேண்டும். அப்படி இல்லாமல் பெற்றோர் கையை பிடித்து அழைத்து சென்று காட்டுவது 

3. ஒரே விளையாட்டை திரும்ப திரும்ப விளையாடுவது

4. ஒரே விதமாக பொருட்களை அமுக்குவது, அதில் மாற்றம் செய்தால் அழுவது அல்லது கத்துவது 

5. நன்றாக பேசிய குழந்தை திடீரென பேசுவதைக் குறைப்பது, மற்றவருடன் கலந்து பழகாமல் தனியாக இருப்பது

6. சில ஒலி, இடம், வெளிச்சம் போன்றவற்றுக்கு அதிக எதிர்வினை ஆற்றுவது 

மேற்குறியவை யாவும் கவனிக்கப்படவேண்டிய ஒரு சில அறிகுறிகள்

சரி இவங்களால மற்ற குழந்தைகளோடு ஓ, சமூக்த்தோடயோ ஒட்டி பழகவே முடியாதான்னு கேட்டா முடியும் . நூறு சதவிகிதம் இல்லேன்னாலும் முறையான பயிற்சிகள் மூலம் அவர்களை சமூகத்தின் ஒரு அங்கமாக மாற்றமுடியும்.

அந்த பயிற்சி யாரால் எல்லாம் கொடுக்கப்படும்? முதல்ல இது போல தன் குழந்தைக்கு குறைபாடு இருக்குன்னு தெரிய வர்றப்போ முதல்ல அணுக வேண்டியது சைல்ட் சைக்காலஜிஸ்ட். அவங்க குழந்தைக்கான  assessment செய்து எந்த எந்த  area ஜி அந்த குழந்தைக்கு உதவி தேவைப்படுகிறதுன்றதை ரிப்போர்ட்டா கொடுப்பாங்க. உதாரணமாக ஓரொரு வார்த்தைகளில் பேசும் குழந்தைக்கு சரியான இடங்களில் பதில் சொல்லதெரியாமலோ இல்லை நாம் கேட்கும் கேள்வியையே பதிலாக சொல்லலாம். அவர்களுக்கு ஸ்பீச் தெரபி தேவைப்படலாம். பெரும்பாலான குழந்தைகளுக்கு fine motor, gross motor, skills problem கண்டிப்பாக இருக்கும் அவர்களுக்கு   ஆக்குபேஷனல் தெரபி தேவைப்படும். அதிக சமாளிக்க முடியாத பிஹேவியர் இருக்கும் குழந்தைகளுக்கு பிஹேவியர் தெரபி தேவைப்படும். கல்வி கற்பதற்கு சிறப்புக் கல்வியாளர் (Special Esucayor) உதவி பெரும்பாலான குழந்தைகளுக்கு தேவைப்படும்.

சரி. சமூகத்தில் இவர்களும் இவர்களை சார்ந்தவர்களும் அதாவது அக்குழந்தைகளின் பெற்றோர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன?

ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் பெற்றோர் க்கு இருக்கும் சமூக மற்றும் மன அழுத்தம் கொஞ்சம் நஞ்சமில்லை. அவர்கள் குடும்பத்திலேயே முக்கியமாக அக்குழந்தையின் தாய்க்கு பொறுப்பும் அழுத்தமும் அதிகம். குடும்பத்திலேயே அவர்களுக்கான மாரல் சப்போர்ட் கிடைக்கறதில்லை. குடும்பத்துக்குள்ளயே சப்போர்ட் கிடைக்காம போராட்டங்களுக்கு இந்த சமூகமும் சேர்ந்து என்ன மாதிரியான அழுத்தம் தருகிறது அப்டீன்னா, சுற்றி இருக்கும் பக்கத்து வீட்டார் தன் குழந்தைகளை அவர்கள் குழந்தையோடு பழக அனுமதிப்பதில்லை. அதோடு இன்னமும் மோசம் அந்த குழந்தை கம்யூனிகேட் செய்ய தெரியாமல் சத்தமிட்டாலோ, அழுதாலோ, 

உடனே  complaint தான். குழந்தை கத்துவது தொல்லையா இருக்கு. அடக்கி வைங்க இல்லேன்னா இருக்குன்னு அந்த சென்டர் இருக்கு இந்த தெரபி இருக்கு போறீங்களா என வரிசையாக புத்திமதி தருவாங்களே தவிர அந்த குழந்தையை புரிஞ்சுக்க முயற்சி பண்றதில்லை. தேவையான சப்போர்ட் அதன் அம்மாவுக்கும் தருவதில்லை. பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் இவர்களுக்கு வீடு வாடகைக்கும் தருவதில்லை. 

பெரூம்பாலும் இந்த குழந்தைகள் எந்த ஒரு நிகழ்வுக்கும் சமூக அழுத்தத்திற்கு பயந்தே அதன் பெற்றோர் எங்கும் அழைத்து செல்வது மில்லை. சாதாரண ஈ காக்கைக்கு இருக்கும் உரிமை சுதந்திரம் கூட இந்த குழந்தைகளுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பதே கசப்பான உண்மை.

இன்னொரு சவால், குழந்தைக்கான சரியான தெரபி. இந்த பெற்றோருடைய தேவையை வைத்து  தெரபி , க்யூர் என்ற பெயரில் பணம் சம்பாரிப்பவர்கள், , ஏமாற்றுபவர்கள். வாழ்க்கையே ஒரே சவாலாக போறப்போ இத்தனை அழுத்தம், அதிக பட்ச சவால் இத்தனையும் தாண்டி தான் இக்குழந்தைகள் சமூகத்தில் உலவ அதன் பெற்றோர் போராடுகின்றனர்.

அவர்களுக்கு கை தூக்கி உதவாவிட்டாலும் அவர்களை உதாசீனப்படுத்தி மேலும் மேலும் அழுத்தம் கொடுக்காமல் இருக்கும் சிறு பங்கை யாவது ஆற்றினால் அதுவே அக்குழந்தைகளுக்கே நாம் செய்யும் பேருதவி

ஆட்டிசம் என்பது நோயல்ல. அது ஒரு Neurons developmental condition. புரிந்து கொண்டு அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள பழகுவோம் . அவர்களுக்கு தேவை நம் பரிதாபமில்லை. அவர்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளும் மனமும், சமூகமும், அவர்களும் வளர்வதற்கான வாய்ப்புகளுமே.

அவர்கள் உலகைப் புரிந்துகொள்ள நம்மாலான சிறிய முயற்சி கூட அவர்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

*****

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Exit mobile version