அமெரிக்காவில் தமிழர்களின் வாழ்க்கை.

அமெரிக்கா வாழ்க்கைப் பத்தி பேசணும் அப்படின்னு சொன்னா எல்லாருமே நான் வந்து ஒரு வருஷத்தில் திருப்பி ஊருக்கு போயிடுவோம் வந்து ரெண்டு வருஷத்துல கொஞ்சம் சம்பாதித்து ஊருக்கு போய்டலாம் அப்படின்ற மாதிரி எண்ணிக்கையில வந்தவங்க தான். இன்னைக்கும் இதே வசனத்தை சொல்ற நிறைய பேரு நான் கேட்டுட்டு இருக்கேன், அவங்களுக்கெல்லாம் நான் சொல்றது நீங்க இத சொல்ற முதல் ஆள் கிடையாது என்று. அமெரிக்காவுல எல்லாமே வித்தியாசமானதுங்க. இங்க வெயில், மழையாகட்டும் வானிலை ஆகட்டும் ரெண்டு மூலையில் இருக்கும். நம்ம ஊர்ல மாதிரி எப்பயும் ஒரே மாதிரி வானிலை இருக்காது. அதிகமான மழை, அதிகமான புயல், அதிகமான வெள்ளம் சில நேரங்களில் இங்கு நிறைய அடுத்த நடந்துட்டு இருக்கு.

வேலைவாய்ப்புகள் எடுத்தோம்னா எல்லை இல்லாமல்,  அளவு இல்லாமல் கடல் போன்று, வானத்தைப்போன்று வேலை வாய்ப்புகள் கண்டிப்பாக உள்ளது. சிறந்த திறமைக்கு சரியான வேலை வாய்ப்பு உள்ளதா என்று கேட்டீர்கள் என்றால் கண்டிப்பாக அது உள்ளது. அதனால்தான் மைக்ரோசாப்ட் சிஇஓ ஆக இருக்கட்டும் கூகுள் சிஇஓ ஆக இருக்கட்டும் அனைவருமே நம் இந்திய நாட்டிலிருந்து வந்தவர்களே.

அதுக்கேத்த மாதிரி டென்ஷனும் இருக்கும், சுமைகளும் நிறையவே உள்ளது. நேரம் வித்தியாசமாகட்டும் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் அல்லது பகல் இரவு ஆகட்டும் இல்லையென்றால் ரோட்டில் நடந்து செல்வது கூட அனைத்துமே இந்தியாவை நம்ம கம்பேர் பண்ணுனா எல்லாமே வித்தியாசமானது அமெரிக்காவில். அமெரிக்காவிற்கு வந்ததனால் பெற்றது பல இழந்தது பல பல. முக்கியமாக ஊர்ல நடக்கிற உறவினர்களுடைய விழாக்களுக்கும், பொது விழாக்களுக்கும் அங்கு நடக்கிற தீபாவளி பொங்கல் மற்றும் இந்திய பண்டிகைகளை கொண்டாடுவது அனைத்தையும் நாங்கள் இழந்து கொண்டிருக்கிறோம். அதுமட்டுமில்லாமல் பெற்றோர்களை பார்ப்பதும், உடன் பிறந்தவர்களைப் பார்ப்பதும் அவர்கள் கூட சிறிதுநேரம் செலவிடுவது மிகவும் கடினமானது சில சமயத்தில் இது முடியாமல் கூட போய்க் கொண்டிருக்கிறது. முடிவாக சொல்ல வேண்டுமானால் நம் இடத்தில் எல்லாமே இருக்கிறது போல் தோன்றும் ஆனால் மிக முக்கியமாக எதையோ இழக்கிறோம் என்பது மனதில் உறுத்திகொண்டே இருக்கும். எதையோ இழக்க வேண்டும் என்று சொன்னது நம் சொந்த ஊர் ஆன தமிழ்நாடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *