அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்…

புழுதி இணைய இதழின் இரண்டாம் இதழ் பறவைகள் சிறப்பிதழாக கொண்டுவந்திருக்கிறோம்.கடந்த எட்டு ஆண்டுகளாக பறவை நோக்குதல், அதனோடு சேர்ந்த சூழலியல்,காட்டுயிர் ஒளிப்படம் என இயங்கிக்கொண்டிருக்கும் என்னை என் இயங்குதல் சார்ந்து பெரிதும் மதிக்கக்கூடியவர் எனது நெருங்கிய நண்பன் ஜெயபிரகாஷ்.புழுதி இணைய இதழின் முதல் இதழ் வெகுசிறப்பாக பரவலாக சென்று சேர்ந்திருந்தது எங்களுக்கு மிகப்பெரும் உந்துசக்தியாக அமைந்திருந்தது.அதன் தொடர்ச்சியாக ஜெபி தீர்க்கமாக சொன்னது,நண்பா அடுத்த இதழ் பறவைகள் சிறப்பிதழ்,நீதான் சிறப்பாக கொண்டுவரவேண்டும் என்கிற அன்புக்கட்டளை.

சூழலியலில் பல கூறுகள் உண்டெங்கிலும் புள்ளினங்களின் பங்கு மிகச்சிறப்பு வாய்ந்ததாகும்.அதுசார்ந்து இயங்கும் அன்பர்கள் பலர் உள்ளனர்.ஆனால் பரவலாக அறியப்படாத பல அன்பர்கள் பறவைகள் சார்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களிடத்திலிருந்து கட்டுரைகளை பெற்று இந்த இதழை கொண்டுவரலாம் என்கிற என்னுடைய எண்ணம் முழுவதுமாக நிறைவேறியுள்ளது என்றே கூறவேண்டும்.இதில் நான் என்றால் நான் மட்டுமல்ல நண்பன் ஜெபியும் தான்.

இவ்விதழில் மொத்தமாக 14 பேருடைய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.ஒவ்வொன்றும் அதற்கே உரிய சிறப்பு வாய்ந்ததாக வரப்பெற்றுள்ளது.பறவைகளின் பங்கு சூழலியல் எத்தகையது?ஏன் பறவையியலை அறிந்துகொள்ள வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில் இந்த இதழில் கிடைப்பதற்கான பணிகளை செய்திருக்கிறோம் என்று நம்புகிறேன்.

“You don’t need to be a trained zoologist to enjoy birds”.

“Familiarity with common local birds is a great advantage because once you have acquired that basic knowledge it is much easier to spot the uncommon”.

மாஸ்டர் சாலீம் அலியின் மேற்குறிப்பிட்டிருக்கும் இரண்டு சொற்றொடர்களை நான் எப்போதும் முன் மாதிரியாக எடுத்துக்கொள்வதுண்டு.முதலாவதாக நாம் பறவைகளை அறிந்துகொள்ள ஒரு தேர்ந்த விலங்கியலாளராகவோ உயிரியலாளராகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.இரண்டாவதாக எவ்வளவு அதிகமாக நம்மைச்சுற்றியிருக்கும் பறவைகளைப் பற்றி நாம் அறிந்து வைத்துள்ளோம் என்பது.இதன் வழியாகவே இந்த சிறப்பிதழை நாம் அணுகியுள்ளோம்.
நிச்சயமாக இணைய இதழ் உலகில்,சூழலியல் எழுத்துலகில் இம்முயற்சி சிறு அசைவையேனும் ஏற்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு இவ்விதழை வெளியிடுகிறோம்.

இந்த பறவைகள் சிறப்பிதழில் கட்டுரைகளை வழங்கிய அன்பர்களுக்கும், புழுதி இணைய இதழை பராமரிப்பும் மெருகூட்டுதலும் செய்யும் அன்புத்தம்பி தளபதி சல்மான் அவர்களுக்கும், கட்டுரைகளை சரிபார்த்துக்கொடுத்த சுஜாதா அம்மா அவர்களுக்கும் இந்நேரத்தில் என் அன்பும் நன்றியும்.

சிறகன்

2 thoughts on “அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்…

  1. புழுதி
    பறவைகள் சிறப்பிதழ் படித்தேன்
    இதழ் வடிவமைப்பு, அதில்
    இடம்பெற்றிருக்கின்ற கட்டுரைகள்
    நமது ஓவியரின் நேர்காணல்
    என அனைத்தும் மிகச் சிறப்பாக
    உள்ளது. மிகவும் மகிழ்ச்சி
    வாழ்த்துகள் தோழர்களே ❤️💐

  2. இணைய இதழின் லிங்க் கிடைக்குமா தோழர்… வேலாயுதம் தமிழ் சேனல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *